Sunday, July 21, 2024
முகப்புஅரசியல்ஊடகம்மேகி நூடுல்ஸ் – பிரச்சினை காரீயமா ? முதலாளிகளின் காரியமா ?

மேகி நூடுல்ஸ் – பிரச்சினை காரீயமா ? முதலாளிகளின் காரியமா ?

-

32 இரண்டு ஆண்டுகளாக இந்தியக் குழந்தைகளின் இரைப்பையையும் பெற்றோரின் பணப்பையையும் விளம்பரங்களின் உதவியுடன் சுரண்டி வருகிறது பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே. இதன் ‘பிரபலமான’ உணவுத்தயாரிப்பான மேகி நூடுல்ஸ், அளவுக்கு அதிகமான அஜினோமோட்டோவாலும் காரீயம் கலந்திருப்பதாலும் நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டு வருகிறது.

மேகி விவகாரம்
“நரகல்ல சீனி போட்டாக் கூட நகரத்தில வித்துறும்”

இதில் ‘பிரபலமான’ எனும் சொல்லிற்கு விளக்கமாக அன்றைக்கே 23-ம் புலிகேசி “நமது மக்கள் ஆட்டு மூத்திரத்தை சுத்த இளநீர் என்று விளம்பரப்படுத்தினாலும் வாங்கிக் குடிப்பார்கள்” என்று அர்த்தம் கொடுத்திருந்தார்.

அல்லது கிராமங்களில் கிழவிகள் இன்னும் சொலவடையாக “நரகல்ல சீனி போட்டாக் கூட நகரத்தில வித்துறும்” என்று யதார்த்தமாக நுகர்வுக்கலாச்சாரத்தைத் தோலுரித்ததுண்டு.

இதில் முத்தாய்ப்பாக இரண்டு விசயங்கள் இன்றைக்கு நாடெங்கிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

1. மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் மேகி போன்ற பொருட்களை தடை செய் அல்லது கடும் சோதனை செய் என்று ஓட்டுக்கட்சிகள், என்ஜிஓக்கள், பொதுமக்கள், ஆளும் வர்க்க ஊடகங்கள் அனைவரும் கருத்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். மேகியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டிவிட்டதாக அம்மாவைப் புகழ்ந்தும் மேற்கு வங்கத்து தீதியை காய்ச்சியும் கார்ட்டூனில் காவடி ஆடியிருக்கிறது ‘தமிழ் இந்து’ நாளிதழ்.

2. மறுபுறம், மேகி விளம்பரத்தில் நடித்த நடிகர்களின் மீது வழக்குப்போட வேண்டும் என்று ஆதரவாகவும் எதிராகவும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது.

முன்கூட்டியே ஒன்றைக் கராறாக சொல்லிவிடுகிறோம். நெஸ்லேவின் மேகி நூடுல்சைப் பொறுத்தவரை அஜினோமோட்டோ மட்டுமே பிரச்சனை அல்ல. கார்ப்பரேட்டுகளின் விளம்பரங்களால் கல்லா கட்டும் ஊடகங்களும் பிரச்சனையை உடல்நிலை, விழிப்புணர்வு தாண்டி போகவிடாமல் பொதுப்புத்தியை வடிவமைத்து வருகிறது.

மேகி விவகாரம்
நெஸ்லேவின் மேகி நூடுல்சைப் பொறுத்தவரை அஜினோமோட்டோ மட்டுமே பிரச்சனை அல்ல

மற்றபடி நடிகர்கள் பிரச்சனையை புலிகேசி தவிர வேறு யாரும் சிறப்பாகச் சொல்ல முடியாது. வெள்ளைக்காரன் ‘மா’மன்னனிடம் அக்கமாலா மற்றும் கப்சி விளம்பரப்படுத்துவதற்காக ‘நமது உள்ளூர் நாடக நடிகர்களை பயன்படுத்தப்போகிறோம்’ என்று சொன்னதற்கு மறுமொழியாக எமது புலிகேசி ‘கிராதகா!’ என்று பாராட்டுவார். இதைத் தாண்டி ஒரே ஒரு வாதம் மட்டும் எஞ்சியிருக்கிறது.

‘நடிகர்களுக்கு மேகி நூடுல்ஸ் பற்றி எப்படி மன்னா தெரியும்?’ ஆகையால் ‘எப்படி தண்டிக்க முடியும்?’ என்று வெள்ளந்தியாக நடித்துக் கொண்டு பத்திரிக்கைகள் கருத்துக்கணிப்புகள் நடத்துகின்றன. ஆனால் இத்துணை நிமிடத்திற்கு கோகோ-கோலாவை வாயில் வைத்து கொப்புளிப்பதற்கென்றே சச்சினும் ஹிருத்திக் ரோசனும் ஐஸ்வர்யாவும் கோடிக் கணக்கில் வாங்கிக் கொள்கிறார்கள் எனும் செய்தி இவர்களின் தொழில் ரகசியத்தை புட்டு புட்டு வைக்கின்றன. மாகி நூடில்சை வாங்கச் சொல்லி இவர்கள் மக்களிடம் வைப்பது சுகாதாரம், உடல் நலத்தை முன் வைத்தல்ல; தமது பிரபலத்தையே விற்கிறார்கள்.

இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் உதவும் கரங்கள் அமைப்பை நடத்தும் வித்யாகர், ‘எய்ட்ஸ் குழந்தையை தூக்கி அணைக்க வேண்டும்’ என்று உலக அழகி ஐஸ்வர்யா ராயிடம் கேட்ட போது உலக அழகியோ தனது மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு பதில் சொல்வதாக சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். உயிருள்ள ஒரு குழந்தையை தூக்குவதற்கே இவர்கள் இப்படி எச்சரிக்கையாக இருக்கும் போது அனைத்து குழந்தைகளும் உண்ணும் நூடில்சு குறித்து யாரிடம் கேட்டார்கள்? கேட்டால் அரசு அனுமதித்து விட்டதே என்று கூறலாம். எனில் எய்ட்ஸ் குழந்தைகைள வாரி அணைத்து முத்தமிடலாம் என்றும் அரசுதானே  கூறியிருக்கிறது?

மேகி விவகாரம்
‘நடிகர்களுக்கு மேகி நூடுல்ஸ் பற்றி எப்படி மன்னா தெரியும்?’ ஆகையால் ‘எப்படி தண்டிக்க முடியும்?’

விளம்பரங்களைப் பொறுத்தவரை எச்சிக்காசு பொறுக்கும் நடிகர்கள் எத்துணை காரியவாதிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

இது ஒருபுறமிருக்க மேகியின் அடிநாதப் பிரச்சனை என்ன?

மேகி விசயத்தை முதலாளிகள் மிகுந்த கவலையோடும் அதிர்ச்சியோடும் நோக்குகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் அதன் சந்தை படுத்து விட்டது. மக்களிடம் கொள்ளை இலாபம் அடிக்கும் முதலாளித்துவத்துக்கு இலாபத்தைப் பெருக்குவதற்கு புதுப்புது சந்தைகள் கண்டிப்பாக தேவை.

சந்தையில் பணம் புழங்காவிட்டால் அது முதலாளித்துவத்திற்கு மிகப்பெரும் கேடு! 2008-ல் உலகப்பொருளாதார பெருமந்தம் அனைத்து நாடுகளையும் தாக்கிய பொழுது (ஒவ்வொரு சில பல வருடத்திற்கும் பொருளாதார பெருமந்தம் என்பது முதலாளித்துவ இழவுக்கதையாகவே இருக்கிறது!) முதலாளிகள் புதிய சந்தைகளை உருவாக்குவதற்கு நாடுகளின் அரசாங்கங்களையே நம்பியிருந்தனர். இதில் இந்தியா, சந்தைக்கான தேவையை நிறைவேற்றும் பொருட்டு நிதிமூலதன விரிவாக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

நெருக்கடி தருணத்தில் சந்தையை ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்த வேண்டுமானால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். அதற்காகவே வட்டிவிகிதம் குறைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இப்படி இந்திய சந்தை முற்றி நிற்கும் நெருக்கடியில் தான் நெஸ்லே நிறுவனத்தின் மேகி விவகாரம் அஜினோமோட்டோவாக வந்து நிற்கிறது.

மேகி விவகாரம்
இந்திய சந்தை முற்றி நிற்கும் நெருக்கடியில் தான் நெஸ்லே நிறுவனத்தின் மேகி விவகாரம் அஜினோமோட்டோவாக வந்து நிற்கிறது.

முதலாளித்துவத்தை ஆதரிக்கிற அறிவுஜிவிகள் மேகி விவகாரத்தைப் பார்த்து பல்லைக் கடிக்கிறார்கள். உதாரணத்திற்கு தீரஸ் நைய்யார், “மேகி விவகாரம் சந்தைக்கு எந்தவிதத்திலும் ஆரோக்கியமானதல்ல” என்கிறார். விசயமறியாத நடுத்தர வர்க்கம் உடல்நலப் பிரச்சனையாக மேகி விசயத்தை பார்க்கிறது.

பிரபலமான பிராண்ட் நுகர்வோரிடமிருந்து அம்பலப்பட்டு நிற்பது சந்தை நெருக்கடிக்கு உவப்பானதல்ல. இன்றைக்கு நெஸ்லே மாட்டியது போல் நாளைக்கு ஒவ்வொரு நிறுவனமும் மாட்டினால் சந்தையின் நிலைமை என்னவாகும் என்று பிரச்சனையின் மையத்தை சரியாகவே தொட்டுச் செல்கிறார்கள் முதலாளித்துவ அறிவு ஜீவிகள்!

மேகி விவகாரம் வெளியே வருவதற்கு முன்னமே அரசு இதில் தலையிட்டு தடுத்திருந்தால் இன்றைக்கு பிரச்சனை கையை மீறிப்போயிருக்காது என்று அங்கலாய்க்கிறார்கள். முதலாளித்துவமே வளர்ச்சி என்று செல்போனையும், பிளாஸ்மா டிவியையும் வைத்து முடிவு செய்பவர்களுக்கு இந்த வாதம் கண்டிப்பாக அதிர்ச்சியளித்திருக்க வேண்டும்.

‘தொழில் துறையில் அரசு தலையிடவே கூடாது, பொதுத்துறையை தனியார்மயமாக்க வேண்டும், லைசன்ஸ் ராஜ் ஒழிக’ என்று லா பாயிண்டுகள் பேசியவர்கள் இன்று அரசு ‘தலையிட்டு’ தடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள். எதை ஐயா தடுத்திருக்க வேண்டும்? விளம்பரத்திற்கு செலவழிக்கும் தொகையில் ஐந்து சதவீதத்தைக் கூட தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு நெஸ்லே ஒதுக்கவில்லை. இவ்வளவு ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் அரசு கூறியிருந்தால் எங்கள் தொழில் உரிமையில் எப்படி தலையிடலாம் என்றல்லவா கத்தியிருப்பார்கள்?

இன்றைக்கு மேகி விவாகரத்தால் சந்தையில் நெஸ்லேவின் பங்குகள் மூன்று சதவீதக்கும் மேல் விழுந்திருக்கின்றன. இதே போன்று ஒவ்வொரு நிறுவனமும் நுகர்வோர் எதிர்ப்புக்கு உள்ளானால் இந்திய சந்தைக்கு பெரும் ஆபத்து என்கின்றனர். சக முதலாளிகளோ இன்னும் ஆக்ரோசமாக நெஸ்லேவின் முட்டாள் தனத்தைக் கண்டிக்கின்றனர். அதாவது நெஸ்லே தனது பொருளை வாபஸ் வாங்குவதாக அறிவித்திருக்க கூடாதாம்.

அதற்கு சான்றாக மெக்டோனல்டை உதாரணம் காட்டுகின்றனர். மெக்டோனல்ட் உணவு விடுதியில் தெருவோர சிறுவன் கழுத்தைப் பிடித்து வெளித்தள்ளப்பட்ட பொழுது வந்த எதிர்ப்பினால் பிராண்ட் பாதிக்கவில்லை என்று மூர்க்கமாக பேட்டியளிக்கின்றனர். இவர்களின் மனநிலை என்ன சொல்கிறதென்றால் அற உணர்ச்சி அல்லது விழுமியங்கள் மீது அடிவிழுந்தாலும் கூட அதை துடைத்து விட்டு சந்தையில் நிற்க முடியும். ஆனால் முட்டாள் நெஸ்லே இதைக் கூட பயன்படுத்தவில்லையென்று கையைப் பிசைகிறார்கள்.

ஆனால் நெஸ்லே இதைத்தான் வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறது. தனது பொருட்களில் தரக்குறைவு எதுவுமில்லை, தற்போது நுகர்வோருக்கு குழப்பம் ஏற்பட்டிருப்பதால் மேகியை திரும்ப பெறுகிறோம், எதிர்காலத்தில் இப்போதைய சேர்மானங்களோடு மாகி வெளிவரும் என்றே நெஸ்லே ஊடகங்களில் பேசிவருகிறது.

கூட்டிக் கழித்தால் என்ன வருகிறது? மக்களின் வாழ்க்கை, ஆரோக்கியத்திற்கும் பிராண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது சந்தைக்கு மட்டுமே கட்டுப்பட்டது. எத்தனை பேர் இறந்தாலும் சந்தையில் இருந்து பிராண்டை திரும்ப பெறவே கூடாது. இதுதான் முதலாளித்துவம் கூறும் அறம்.

முதலாளித்துவ அறிஞர்களின் திட்டப்படி, இது வெற்றிகரமான உணவுப் பாதுகாப்பு பிரச்சனையாக மடைமாற்றப்பட்டிருக்கிறது. நெஸ்லே இதை ஊதிவிட்டு விரைவிலேயே வரும். அதிக பட்சம் நுகர்வோர் சட்டத்தைப் பயன்படுத்தி ரூ 5000 அபராதம் விதிக்கப்படலாம். மற்றபடி தனது பிராண்டு பாதிப்புக்குள்ளானதை அடுத்து மீண்டும் தூக்கி நிறுத்த நட்சத்திரங்களை பெரும் செலவில் இருத்தும். தேவைப்பட்டால் நீங்கள் மதிக்கும் அறிஞர் பெருமக்களோ இல்லை அமைச்சர் பெருமக்களோ கூட அதை செவ்வனே செய்யலாம். அடுத்து நெஸ்லேவை எதிர்த்து எழுதுபவர்கள் மீது வழக்கு போட்டு அச்சுறுத்தலாம்.

ஆக மேகி பிரச்சினையை வெறும் உடல் நலம் குறித்த முன்னெச்செரிக்கை முத்தண்ணா பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது.

445 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவிட்ட நெஸ்லே நிறுவனம் 19 கோடி ரூபாய் மட்டும் தரக்கட்டுப்பாட்டிற்கு செலவழித்திருக்கிறது. இதை வைத்துப் பார்த்தாலும்  மேகி விவகாரம் உணவுப் பாதுகாப்பு குறித்த பிரச்சனையல்ல. மாறாக மக்களை பணையம் வைத்து முதலாளித்துவ பயங்கரவாதம் நடத்தும் அப்பட்டமான இலாபம்-சுரண்டல் குறித்த பிரச்சனை.

நெஸ்லே உணவுத்துறைக்கு வருவதற்கு முன், குறுந்தொழில்கள் பட்டியலில் இருந்து பல சுயேச்சையான உழைப்புத் தொழில்களையும் சிறு குறு முதலாளிகளைக் இந்திய அரசு கொன்றிருக்கிறது. இதற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரசு இரண்டு கட்சிகளுமே காரணம்.

இன்றைக்கு இந்தப்பட்டியலில் மோடி அரசு மேலும் இருபது தொழில்களான ஊறுகாய், ரொட்டி, கடுகு எண்ணெய், கடலை எண்ணை, வீட்டு உபயோக மரப்பொருள்கள், பதிவேடுகள், நோட்டு புத்தகங்கள், மெழுகுவர்த்தி, சலவை சோப், தீக்குச்சி, பட்டாசு, ஊதுவத்தி, கண்ணாடி வளையல், ஸ்டீல் அலமாரி, ரோலிங் ஷட்டர் தயாரிப்பு, ஸ்டீல் சேர், ஸ்டீல் டேபிள், ஸ்டீல் பர்னிச்சர், பூட்டு, எவர்சில்வர் பாத்திரம், வீட்டு உபயோக அலுமனியப் பாத்திரம் என ஏகபோக முதலாளிகளுக்கு திறந்துவிட்டிருக்கிறது.

மேக் இன் இண்டியா, மேகி நூடுல்சை சமைத்த கதை இது தான்!

இது தெரியாத நம்மில் பலரும் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறோம் ‘அஜினோமோட்டோ உடம்புக்கு கெடுதி என்று’.

உண்மை என்ன? அஜினோமோட்டோ எனும் கெடுதியை சந்தைப்படுத்தி காசு பார்த்து விட்டு அதை நியாயப்படுத்தும் முதலாளித்துவம் எனும் கெடுதியை குறிபார்த்து அடிக்காமல் நாம் நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை வழங்கிவிட முடியாது.

– இளங்கோ

மேகி நூடுல்ஸ் – பன்னாட்டு நிறுவன உணவுப் பொருட்களுக்கு எதிராக திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆர்ப்பாட்டம்

குறிப்புகள் எடுக்கப் பயன்பட்டவை

 1. மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில் சில சிறப்பியல்புகள்-லெனின்-கீழைக்காற்று வெளியீட்டகம்
 2. Reliance Retail removes 11 instant noodle brands from stores
 3. Maggi lessons for India
 4. Nestle India: Rs 19 crore for quality testing, Rs 445 crore for ads
 5. மேகி விற்பனை அதிகரிக்கக் காரணம் சோம்பல் மிகு தாய்மார்களே: பாஜக எம்.எல்.ஏ.
 6. மத்திய அரசின் அறிவிப்பு குறுந்தொழில்களைப் பாதிக்குமா?

 

 1. மிக சிறந்த கட்டுரை.. ஆனாலும் சில தேவை இல்லாத உவமானங்கள்.

  //முதலாளித்துவமே வளர்ச்சி என்று செல்போனையும், பிளாஸ்மா டிவியையும் வைத்து முடிவு செய்பவர்களுக்கு இந்த வாதம் கண்டிப்பாக அதிர்ச்சியளித்திருக்க வேண்டும்.//

  இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. முதலாளித்துவம் என்பது மின்னணு மற்றும் மோட்டார் தொடர்புடைய துறைகளோடு தங்களுடைய உற்பத்தி எல்லையை நிறுத்திக் கொள்ள வேண்டும். மாறாக உணவு,கல்வி,மருத்துவம், பொது சுகாதாரம் போன்ற சேவை சார்ந்த துறைகளில் முக்கை நுழைத்தால் இப்படித் தான் நடக்கும். மற்றப்படி சோனியிலோ, நோக்கியவிலோ, L.G, சாம்சங் அல்லது யமஹா, ஹோண்டா, B.M.W, Benz, Audi போன்றவற்றில் குறையேதும் இல்லையே. மேற்சொன்ன ப்ராண்ட் அனைத்திலும் சேவையும், உற்பத்தியும் மிக தரமாகவே இருக்கின்றது.

 2. பேரம் படிந்ததும் எல்லாம் சரியாகிவிடும். மீண்டும் ‘மாகி’ மக்களின் ஆரோக்கிய உணவாகிவிடும். எல்லாம் தலையெழுத்து..

 3. மேகி மற்றும் இதர நூடுல்ஸ்களுக்கான inputsகளான வெங்காயம், தண்ணீர் போன்றவைகளில் இருந்து lead மற்றும் இதர நச்சுக்கள் வந்துள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கினறன. தரக்கட்டுபாட்டில் இதை முற்றாக கண்டு பிடிப்பது கடினம். வெங்காயம் டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படும் போது.. ; வெங்காயம், முன்சிபால் குடிநீர் போன்றவைகளை ஆய்வு செய்தால் இதை விட அதிக நச்சு உள்ளது தெரிய வரும். மேகியை தடை செய்வதால் பிரச்சனை முடிய போவதில்லை.

  இதை பற்றி அரசின் துறை அதிகாரி சொன்னது :

  The source of the heavy metal lead in Maggi noodles is most likely soil, say Food Safety officials who investigated the issue.

  “The lead content was found to be higher in the tastemaker of the product, which contains onions, than in the rest of the product, which led to the inference that the presence of heavy metal in the soil in which these were grown must have led to its presence in the food item,” Y.S. Malik, Chief Executive Officer, Food Safety and Standards Authority of India (FSSAI), told The Hindu.

  Rarely tested

  Mr. Malik said food samples reported for adulteration in the FSSAI’s Annual Report for 2014-15 were mostly milk, milk products, edible oil and water. Processed food was rarely tested in government laboratories. Asked if that would not leave consumers in the dark about whether it was safe, he said: “The FSSAI has been functional for merely four years, though the Food Safety and Standards Act was passed in 2006, and as per Section 26, there is huge responsibility on the shoulders of food business operators for self-compliance. If FSSAI starts cracking down on the enforcement front, there will be the allegation of running another inspector raj on our part.”

  Rup Lal, general secretary, Indian Network for Soil Contamination and Research, and Professor of Molecular Biology, Delhi University, said the lack of efficient environmental regulation to stop the release of toxic industrial effluents into waterbodies was one of the primary reasons heavy metals such as lead had found their way into the food chain.

  B.D. Tripathy, Professor at Banaras Hindu University, said that in the course of a study conducted at the Centre for Environmental Science and Technology, sewage generated from Varanasi was found to be high in lead, cadmium, chromium and nickel content due to its mixing with effluents coming from thousands of small-scale industries there. “The sewage mixed with untreated effluents was released into the Ganga without treatment,” he said. “Even when this effluent mixed river water was treated, the heavy metal presence in it was not removed, and this was later used to irrigate crop fields where wheat, vegetables and other such items were grown.” The findings of Mr. Tripathy’s research were admitted as evidence in the Allahabad High Court which held the Dinapur sewage treatment plant as responsible for toxifying the river water.

  “Once heavy metals present in polluted river water enter the soil, it results in crops growing in them absorbing these metals. After entering the food chain by way of consumption, the toxic element magnifies in concentration within the body of the organism through a process known as biological magnification,” he said.

  Mr. Tripathy compared the present controversy surrounding Maggi with that of Coca Cola earlier, in which pesticide were found in 2003. “Even in that case the presence of pesticide was from the water used to manufacture the cold drink.”

  Although consumed in small quantities, the human body can develop a resistance to the heavy metal; if present in large concentrations the metal can cause considerable harm.

  http://www.thehindu.com/news/national/soil-may-be-the-culprit-officials/article7287375.ece

 4. //முதலாளித்துவமே வளர்ச்சி என்று செல்போனையும், பிளாஸ்மா டிவியையும் வைத்து முடிவு செய்பவர்களுக்கு இந்த வாதம் கண்டிப்பாக அதிர்ச்சியளித்திருக்க வேண்டும்.//

  90களுக்கு பிறகு உருவான ‘வளர்ச்சி’ வறுமை அளவை எத்தனை குறைத்துள்ளது, தலித் எழுச்சியை எப்படி (பெரியார் அம்பேத்கார் வாழ்ந்த காலங்களில் சாத்தியமாகததை) சாத்தியமாக்கியுள்ளது என்பதை பற்றி சமீபத்திய பதிவு :

  “முதலாளித்துவ வளர்ச்சியும், தலித் எழுச்சியும்”
  http://nellikkani.blogspot.in/2015/06/blog-post.html

 5. அதியமான்,

  ///மேகி மற்றும் இதர நூடுல்ஸ்களுக்கான inputsகளான வெங்காயம், தண்ணீர் போன்றவைகளில் இருந்து lead மற்றும் இதர நச்சுக்கள் வந்துள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கினறன. தரக்கட்டுபாட்டில் இதை முற்றாக கண்டு பிடிப்பது கடினம். வெங்காயம் டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படும் போது.. ; வெங்காயம், முன்சிபால் குடிநீர் போன்றவைகளை ஆய்வு செய்தால் இதை விட அதிக நச்சு உள்ளது தெரிய வரும். மேகியை தடை செய்வதால் பிரச்சனை முடிய போவதில்லை.///
  – என்று சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

  inputsகளான வெங்காயம், தண்ணீர் போன்றவைகளில் இருந்து lead மற்றும் இதர நச்சுக்கள் வந்துள்ளதால் நெஸ்லேயின் மீது தவறு எதுவும் இல்லை என்கிறீர்களா?
  அல்லது, அரசு தரும் தண்ணீரிலும், வெங்காயத்திலும் இதை விட அதிக நச்சு உள்ளது, அதனால் தண்ணீரையும், விவசாயத்தையும் கார்ப்பரேட்களிடம் ஒப்படைப்பது சரி என்கிறீர்களா?

  கட்டுரையில் நீங்கள் பதில் சொல்ல வேண்டியது இது தான். இது உங்கள் கண்களுக்கு படவில்லையா?>>
  ///‘தொழில் துறையில் அரசு தலையிடவே கூடாது, பொதுத்துறையை தனியார்மயமாக்க வேண்டும், லைசன்ஸ் ராஜ் ஒழிக’ என்று லா பாயிண்டுகள் பேசியவர்கள் இன்று அரசு ‘தலையிட்டு’ தடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள். எதை ஐயா தடுத்திருக்க வேண்டும்? விளம்பரத்திற்கு செலவழிக்கும் தொகையில் ஐந்து சதவீதத்தைக் கூட தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு நெஸ்லே ஒதுக்கவில்லை. இவ்வளவு ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் அரசு கூறியிருந்தால் எங்கள் தொழில் உரிமையில் எப்படி தலையிடலாம் என்றல்லவா கத்தியிருப்பார்கள்?///

 6. //தொழில் துறையில் அரசு தலையிடவே கூடாது, பொதுத்துறையை தனியார்மயமாக்க வேண்டும், லைசன்ஸ் ராஜ் ஒழிக’/// ஆம். அரசு தலையிட கூடாது என்றால் விதிமுறைகளை சரியாக வகுத்து அமல்படுத்த கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஒரு கால்பந்து ஆட்டத்தில் விதிமுறைகளே கூடாது என்றால் என்னவாகும் ? அல்லது விதிமுறைகளை நடுவர் செயல்படுத்த தவறினால் என்ன ஆகும் ? அல்லது விளையாடுபவர்கள் நடுவருக்கு லஞ்சம் கொடுத்து தவறாக ‘தலையிட’ வைத்தால் என்ன ஆகும் ? இதை ஓத்த நிகழ்வுகள் இந்தியாவில் நடந்தன / நடக்கின்றன. அதற்க்காக ஆட்டமே தவறு, ஆட்ட முறையே தவறு என்று சொல்வதை ஒத்தது உங்களின் பார்வை. விதிமுறைகள் சரியாக செயல்படுத்த்தபடும் நாடுகளை ஒப்பிட வேண்டும்.

  ///நெஸ்லேயின் மீது தவறு எதுவும் இல்லை என்கிறீர்களா?///
  இல்லை. நெஸ்லே மட்டும் தவறு செய்ததை போல் பில்டம் இந்த கட்டுரையில். ஆயிரக்கணாக்கான டன்கள் வெங்காயத்தில் காரியத்தை கண்டெடுப்பது கடினம் என்று சொல்ல வந்தேன்.

  ///அல்லது, அரசு தரும் தண்ணீரிலும், வெங்காயத்திலும் இதை விட அதிக நச்சு உள்ளது, அதனால் தண்ணீரையும், விவசாயத்தையும் கார்ப்பரேட்களிடம் ஒப்படைப்பது சரி என்கிறீர்களா?///

  இப்படி ‘விளங்கி’ கொள்வதால் தான் நீங்க விளாங்காம போகறீங்க !! அந்த ஆங்கில பதிவில் வாரணாசி அருகே ஒரு நகர முன்சிப்பல் effluent treatment plantஇன் செயல்பாடு பற்றி தெளிவாக விளக்கம் இருந்தும், அதை பற்றி பேசாமல் வெத்து கோசங்கள்.

  தண்ணீர் விநியொகம் அரசு தான் செய்கிறது, செய்ய வேண்டும். விவசாயத்தில் மேல்நாடுகள் போல் கார்ப்பரேட்டுகளை அனுமதிக்காமல் தடுத்ததால் தான் இங்கு பல சிக்கல்கள். 1947க்கு பிறகு நில உச்ச வரம்பு சட்டங்கள் நிலங்களை சிறு துண்டுகளாக சிதறடித்தன. தனியார் துறை முற்றாக முடக்கபட்டதால் பொருளாதாரமும் முடக்கபட்டு, வளர்ந்த நாடுகள் போல் விவசாயத்தில் இருந்து படிப்படியாக மக்கள் உற்பத்தி துறைக்கும், பிறகு சேவை துறைகும் மாறிய வரலாற்று முறை இங்கு தடுக்கபட்டதால் பெரும் சிக்கல். சோசியலிச நாடுகளிலும் மேற்குலக நாடுகள் போல் படிப்படியாக மக்கள் விவசாயத்த்தில் இருந்து தொழில்துறைக்கு மாறினார்கள். 5 சத மக்களே இன்று விவசாயத்தில், பெரும் பண்ணைகளில் அபாரமாக விளைச்சலை எடுக்கிறார்கள். இதை பற்றி பல முறை விரிவாக எழுதுயிருக்கிறேன்…

 7. ///பொதுத்துறையை தனியார்மயமாக்க வேண்டும்///

  பொதுதுறை என்றால் எவை என்ற தெளிவு முதலில் வேண்டும். கல்வி, சுகாதாரம், ரயில்வே போன்ற ‘பொது துறைகள்’ அரசு தான் நடத்த வேண்டும். 90களுக்கு பிறகு பல பத்துமடங்கு நிதி ஒதுக்குதலை அதிகரித்தும், விளைவுகள் சரியாக இல்லாதற்க்கு நீங்க தான் ‘விளக்கம்’ அளிக்க வேண்டும். தனியார் துறை பெரும் அளவில் வரி செலுத்தி, அரசின் நிதி ஆதாரத்தை பல மடங்கு பெருக்கி விட்டார்கள். அதை ஒழுங்காக செலவு செய்ய வேண்டிய கடமை ‘இடதுசாரிகள்’ நிரம்பிய, தொழிற்சங்களின் ஆதிக்கத்தில் உள்ள அரசு எந்திரம் தான்.

  ஆனால் இரும்பு உற்பத்தி, ஹோட்டல் தொழில், நூல் உற்பத்தி போன்ற துறைகளில் பொது துறை செயல்படும் லட்சணம் பற்றி தெரிந்ததால் தான் அவை தனியார்மயமப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை. many of them are white elephants which suck enromous amount of govt funds and are corrupt like hell. மே.வங்கத்தில் 70களில் துவக்கபட்ட ஒரு பொது துறை உர தொழிற்சாலை
  ஒரு கிலோ உரத்தை கூட பல பத்து வருடங்களாக உற்பத்தி செய்யவில்லை. ஆனால் சம்பளாம், போனஸ், லீவ், ப்ரோமசன் எல்லாம் நார்மலாக நடந்த கதை பற்றி ஒரு நாவலே எழுதலாம்.

  பார்க்கவும் :

  பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி..
  http://nellikkani.blogspot.in/2008/07/blog-post.html

 8. @Adhiyaman,OK,Nesle is not solely responsible for the presence of lead in Maggie.But what about its collective responsibility?Why it has not spent even a fraction of its advertisement expenditure on its testing lab?Any culprit cannot point at another offender to escape.And one wrong will not justify another wrong.
  What do you suggest in Indian agriculture?Do you suggest corporate farming?If small/marginal farmers are displaced from agriculture,their cheap labour can be exploited by capitalists.That is what is aimed through the Land Acquisition Ordinance.

 9. Too late to allow corporate farming now. things have become so bad and untenable and with nearly 60% of population dependent on farming.. the natural process of migration from farming to manufacturing should have been allowed to progress but we blocked it and u have no qualms or views about this… The left was responsible for this mess yet blames the others for it.

  and the percentage alloted for ad vs safety is a wrong comparision. Is this ratio very different in India when compared to the other 115 nations where Neslte has its ops ?

  • You say that it is too late to allow corporate farming.But it seems that corporate farming is prevalent in Gujarat.The small/marginal farmers affected by corporate farming there were not rehabilitated.Can you explain the “natural process of migration from farming to manufacturing” and how it will be “natural”when the farmer who do not know any other job except farming will at best be an unskilled labourer only.How he will “progress”in his life after the migration with his wages as unskilled labourer?The left are protecting the farmers and farm labourers.Do you know how many thousands of agricultural labourers will be affected by the land pooling of Chandrababu Naidu for his ambitious construction of capital city Amaravathi in 38000 acres of fertile land being taken away from farmers?
   Indian people are affected by Maggie noodles and we need not talk about the ratio of advertisement and safety in other countries.Your query and argument betrays your “special”interest in the welfare of Nestle.You do not worry about the health of your own people.

 10. ///You do not worry about the health of your own people.///

  Sooriyan, your hypocrisy shows in these kind of cheap statements. IF you really care for the health of people, first you must start talking about how lead and other dangerous sustances get into the food chain as described in the above hindu post. About untreated effluents and the apathy. You refuse to argue about the core point yet, ride a high moral horse…

  and you will never understand the PROCESS which happend in all developed nations (incl former USSR) where bulk of population shifted from farming to manufacturing to services. That process had been distorted and blocked in India and now it is too late to re start the same.

  ///How he will “progress”in his life after the migration with his wages as unskilled labourer?/// yeah, this question should be asked to ‘leftists’ like you who kept our economy stagnant and poor until the 90s with closed economic policies. You shamelessly cheered on in those decades and long term results are still abounding. You were part of the causes and yet you ask rhetoric questions. Do you know anything about what i talking about ? yet you get personal Like ‘i don’t care for people’s health’ ; Do give me all this bull shit.

 11. ///Can you explain the “natural process of migration from farming to manufacturing” and how it will be “natural”when the farmer who do not know any other job except farming will at best be an unskilled labourer only.How he will “progress”in his life after the migration with his wages as unskilled labourer?T///

  How did this transformation occur over a 100 years in developed nations and USSR ? why don’t analyse how this happened there ? Simply by allowing the manufacturing private sector (and all other private sectors) to thrive with no license control raj would have created billions of new jobs. First low or no skill jobs will be created. and slowly over the decades we can rise to high skilled jobs. That is the HISTORY of S.Korea, Taiwan, Ireland, Germany, etc.

  So what do you suggest then ? maintain status quo ? do you have any viable solution. you guys are capable of blame game only.

  • @Adhiyaman Instead of answering my questions,you started talking about bull shits.That means you do not have any answer for my questions.I am not telling the following facts.These facts are being told by none other than your friend S.Gurumoorthi.For the past 20 years,the formal sector (including big industrialists and hospitality industry),availed capital,credit etc both domestic and foreign to the tune of 54 lakh crore.But has created employment for just 20 lakhs people in India.On the other hand,the SME sector,which was denied credit facilities created employment for crores of youth in India.KEDPAVAN KENAIYANAAGA IRUNDHAAL KEPPAYIL NEY VADIYUM.
   According to you,unless pollution is completely eliminated,no one should question the multinationals selling polluted products.This view is nothing but escapism.When everything is polluted in India,why on earth,these multinationals manufacture their products here.Just to exploit the poor Indians?Coke was found to contain pesticides a decade back.Why Coke is still in India?To sell our own polluted water in bottles?
   First of all,stop bullying people asking questions to you.For your information,I am a senior citizen.Learn good manners before talking anything here.

 12. Sooriyan,

  Gurnumurthy is not my ‘friend’ ; so don’t bull shit again. and he is a slightly nuts and paranoid, in my opinion !! :))

  India failed to follow the ‘normal’ route followed in all developed nations when they deveoped from agrarian economies into manufacturing economies over the decades. this is crux of my argument which you continue to ignore. LAnd ceiling acts, license raj, closed economic polices followed from 1947 to until recent years crippled this transition.
  Can you ever argue into this details ? no, you will not and yet keep talking around this.

  ///According to you,unless pollution is completely eliminated,no one should question the multinationals selling polluted products// No, this is your idiotic interpretation. I said blaming MNCs while IGNORING the effects of untreated sewage and effluents from small units will NOT solve the problem. You are incapable of rational argument. And yes, you endorse lots of bull shit by your friends like Tamil here and hence you deserve some rebuttal of the same kind. So there.

  • @Adhiyaman,So you will call names of those people who do not toe your line of thinking.But,remember one thing.You cannot force all people to accept your view.Gurumoorthi may not be your friend.Leave the person.What is your answer for his allegations?Prove him wrong if you can.Right after liberalization only,after getting all concessions and preferential treatment from Govt and financial institutions,this sector failed to produce results.This sector failed to honour its commitments to the society because they have diverted all that money in purchasing assets abroad.
   What is that “normal”route.If the people have to migrate from agriculture to manufacturing now,it will take a decade to get the requisite skills.With much focus on creating contract labourers instead of regular labourers,they may not acquire skills even after a decade.Even after acquiring the skills,where is the guarantee that they would be absorbed as permanent employees?.The future is bleak with all those amendments to Indian Labour Acts.
   According to you all those divergent views are just bull shits.I really appreciate your novel way of escaping from arguments.Vinavu readers have got one more opportunity to understand your depth of knowledge and your pretensions.Good bye.

   • ///If the people have to migrate from agriculture to manufacturing now,it will take a decade to get the requisite skills./// no, not all jobs in manufacturing require this much time. How did powerloom sector expand so much in rural Salem and Namakkal and Karur districts in the 70s and 80s ? It hardly takes a few weeks to train a raw hand from agri or any other sector.

    And you keep ignoring the factor that this process happened causally in ALL developed nations and former socialistic nations. We made a mess of it here. The cumulative and long term effects of these past follies in manifesting today in farmers distress, etc.

    ///So you will call names of those people who do not toe your line of thinking./// No.
    I don;t call names simply over difference of opinions (like your comrades here do often)
    When you get personal, calling me a ‘freind’ of S.Gurumurthy, when I do not endorse his kind of idealogy / hinduthuva nor economics, then why not call this bull shit ? What the hell do you know about me ? and why the hell do you refer to my persona. This is bull shit of the worst kind which arises from arrogance.

    What happened in India in the 50s and 60s and 70s ? Private sector was thrortlled and land reforms destroyed large and viable farms. The process of migration and evolution got distorted.

  • The wealth used to make a nation developed is not created from thin air. That is taken from somewhere else, if you see these two parts(one taken wealth and developed and the other under-developed), which shall give you a whole picture, Then you can easily conclude, why some nations are poor and why some are rich.
   Example: OPEC countries, UK and most of the European union countries.
   The wealth eroded out from commonwealth countries made UK richer developed country. Ambani’s wealth is taken from crores of Indian’s pocket.

   You may not able to show single use case to prove something against this.

   In this issue too, you can see, how maggie generated wealth and how it is helping its home country as developed nation and how it is going to cost Poor Indians few thousand crores of medical expenses.
   The other option of removing traces of all heavy metals, pesticides shall cost Nestle lot and it may not help their home country to sustain as a developed nation.

 13. ///The wealth eroded out from commonwealth countries made UK richer developed country. ///

  yeah, old socialistic theory. then how did newly industrialed nations like S.Korea, Japan, Taiwan, Malaysia prosper post WW 2 (1945) ? How did German mircale of rebulding a totally war destroyed economy occur in the 50s ? How did Chilean miracle occur post 70s ?

  Value creation is a complex process and Marxism cannot explain this fully. But it is impossible to argue with those who have no flexible viewpoints.

  • இந்தியர்கள் வாங்கும் ஒவ்வொரு சாம்சங் கைபேசியும் தென் கொரியாவின் வளத்தை அதிகரிக்கிறது. இது போன்றே இதர நாடுகளின் வளர்ச்சியும் இன்னொரு இடத்தில் இருந்தே எடுக்கப் பட்டது. அது எவ்வளவு தூரம் நேர்மையானது என்பதே ஆராயபடவேண்டியது.
   வளர்ச்சி == (நேரடி )இயற்கை வளங்களை மனித வளத்தை விற்பது அல்லது (மறைமுகம்)அவைகளை பயன் படுத்தி உருவாகும் பொருட்களை விற்பது.
   மற்றவை இந்தநிகழ்விற்க்கு கொடுக்கப் படும் மேற்பூச்சே ஆகும்.

   • தென் கொரியாவில் இந்தியாவின் மைக்ரோமேக்சைப் பயன்படுத்த ஏதும் தடை உள்ளதா? நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்றோமே, அதனால் இந்தியா வளம் பெறுகிறதே? ஏற்றுமதி இவ்வளவு செய்தால்தான் அது நேர்மையானது என வரையறுக்க முடியுமா?

    • எனது பதில் வளம் என்பது அடுத்தவர்களிடம் இருந்து எடுக்கப் பட்டது என்பதை புரிந்து கொள்ள கொடுக்கப் பட்ட உதாரணம்.
     உங்கள் கேள்வியின் நோக்கம் புரியவில்லை.
     may be what we are exporting, how it is helping mankind can give more insight to classify, whether an activity is good or not good.

 14. MAdhav,

  30 year old Mark Zuckerberg now owns billions of dollars in a short span by founding and expanding Facebook. Did he steal his wealth by exploting his workers ? Or did he CREATE value thru his skills and hard work ?

  According to Das Capital, the net surplus value in a system is
  constant (and will vary with the variation of the workers population
  only) ; But in reality the ‘surplus’ within many systems have
  increased exponentially while the workers population had not grown
  proportionately. Hence how did this exponential growth of total
  surplus value occur ?

  Any worker turned entrepreneur (there are many) would vouch for the
  fact that it is the entrepreneurial ability that makes the vital
  difference in the performance of the firm. All these worker turned
  entrepreneurs had started their lives as workers, working along
  millions of similarly placed workers. But some of them managed to save
  and / or get into partnerships with co-workers to start small firms
  which ultimately grew into giants. All the corporate giants in this
  world were once tiny start ups fired by the sheer enthusiasm and
  determination of those pioneers. Can anyone name any company which is
  continuously existing in its present size and form for many centuries
  ? Petrochemical giants, pharma majors, automobile majors, IT majors,
  companies like Walmart, CNN, Dell, Sony, Apple, Virgin Atlantic, etc :
  all were founded by pioneering individuals with nothing but their bare
  hands. Their legal heirs had expanded these companies into giants over
  the decades.

  • 30 year old Mark Zuckerberg now owns billions of dollars in a short span by founding and expanding Facebook. Did he steal his wealth by exploiting his workers ? Or did he CREATE value thru his skills and hard work ?

   His wealth = sum(of all facebook user’s time spend on facebook) * market demand (that is other companies interest on the information about all users).

   Sir, He is stealing user time and convert that into wealth.

   I hope you shall extrapolate this further and understand.

   • //He is stealing user time and convert that into wealth.//

    What was happening to that wealth when facebook did not exist?
    Who was owning that wealth?
    How that wealth was being utilized?

    Who stopped you from utilizing that wealth?

    இட்லி அதிகம் ஆகணும்னா மாவு குறையணும் என்க்நிற அளவில் தான் இவர்களால் சிந்திக்க முடியும்.
    It is not Zero sum game.

    • With the time spend on facebook, we could be visiting friends house, playing with kids, doing some gardening…. (I mentioned few good things). Over millions owned the time as minutes to hours.
     you can share what you were doing earlier with that time, which you are spending on facebook.

     Very much similar paradigm is “IPL and Lalit Modi”.

     A quote from a guru “One of the best ways to understand how extrinsic realities govern is to consider the Law of the Farm. In agriculture, we can easily see and agree that natural laws and principles govern the work and determine the harvest. But in social and corporate cultures, we somehow think we can dismiss natural processes, cheat the system, and still win the day. And there’s a great deal of evidence that seems to support that belief. ”

     Fancy terms like Out of the box thinking, lateral thinking, 360 degree thinking, proactive thinking, etc are part of the second breed.

     Law of nature shall support only this “இட்லி அதிகம் ஆகணும்னா மாவு குறையணும்”, nothing else.

     • போய் கார்டன் பண்ணுங்க சார் யார் தடுத்தா , கழுத்து மேல கத்தி வெச்சா யோச பண்ண சொல்றான் ? திருடிட்டான்னு சொல்றீங்க ?

      ஜுகேர்பெர்க் தொழிலாளியா இருந்தா ப்ரோலடேரிஎட் நல்லவன்
      தொழில் ஆரம்பிச்சா , காபிடளிஸ்ட் கெட்டவன் , இவருடைய நேரத்தை திருடரானாம்

      Labor theory of value பத்தி சொல்றீங்க , அந்த காலத்திலேயே ஷம் பீடர் தொவச்சு தொங்க போட்டுட்டாரு

 15. மாதவ்,
  பேஸ்புக்கே உருவாக்கப்பட்டிருக்கக்கூடாது என்கிறீர்களா? அல்லது அது அட்வர்டைஸ் பண்ணக்கூடாது.. ஃப்ரீ சர்வீஸ் தரணும்ங்கறீங்களா? இரண்டில் எது? அல்லது ரெண்டுமல்லாத வேறொன்றா?

  • மார்க் தன்னுடைய தனிப்பட்ட திறமைகளினால் “நமது நேரத்தை” “அவரது” காசாக்க தெரிந்து உள்ளார், எனும் புரிதல் நமக்கு வேண்டும்.
   மதமே போதை என ஆன பின் பேஸ்புக் எல்லாம் எம்மாத்திரம்.

   • கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மொக்கையா பொதுவாக ஒரு ஸ்டேட் மெண்ட்,தத்துவம் விட்டிட்டு ஒரே ஓட்டம் 🙂

    • ராமன் இந்த கேள்விகளுக்கு நேரடியான பதில் கூறுவதில் எந்த தயக்கமும் இல்லை; இது ஒரு உரையாடல்; முடிபான பதில்களினால் முட்டு சந்தை தான் அடைய முடியும்; எந்த விதத்திலும் யாருக்கும் பயன் இல்லை; எனது பதில் நேரடியாக சரி தவறு என இருமைகளால் ஆனது அல்ல; I was adding another dimension to the topic.

   • ///மதமே போதை என ஆன பின் பேஸ்புக் எல்லாம் எம்மாத்திரம்.///

    அப்படியா சேதி. :))

    உடனே மார்க்கிடம் சொல்லி வினவு அண்ட் கோ உறுப்பினர்களை முகநூலில் இருந்து நீக்க ஏற்ப்பாடு செய்றேன் !! :)) ஏன் வீணா ’திருடனிடம்’ நீங்க ஏமாறனும் ? அவரை திட்டனும் ?

    முகநூல் நிர்வாகத்தில் உயர்மட்ட நிலையில் உள்ள ’முதலாளித்துவ நண்பரிடம்’ சொல்லி உடனடியா நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்க இப்படி எல்லாம் திருடன் என்று திட்டறாங்க என்று எடுத்துறைக்க வேண்டும். ஓகே !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க