privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சி.ஆர்.ஐ முதலாளி திருமண விழா - தொழிலாளிகள் முற்றுகை

சி.ஆர்.ஐ முதலாளி திருமண விழா – தொழிலாளிகள் முற்றுகை

-

சி‌.ஆர்‌.ஐ நிறுவனத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி துளிர்த்ததும் அதையொட்டிய வளர்ச்சியும் ஒரு சிறப்பான வரலாறு.

சி.ஆர்.ஐ கிளைச்செயலர் குமாரவேல்
சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் தொழிலாளி வர்க்கத்தின் இயல்பான குணங்களான தன்மானமும் சுயமரியாதையும் நிரம்பப் பெற்றவர்கள் (சி.ஆர்.ஐ கிளைச்செயலர் குமாரவேல்)

சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் தொழிலாளி வர்க்கத்தின் இயல்பான குணங்களான தன்மானமும் சுயமரியாதையும் நிரம்பப் பெற்றவர்கள். சௌந்திரராஜனின் முதலாளித்துவ கொடுங்கோன்மையின் முன்பு தமது உரிமைகளை மீட்டுக் கொள்ள வழி தேடி தவித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்களுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறிமுகம்.

இப்போது கிளை நிர்வாகிகளாக இருக்கும் தோழர்கள் அப்போது முன்னணியாளர்களாக வந்து, நமது சங்கத்துக்கு ஒரு நேர்காணல் வைக்க விரும்பினர். அந்த நேர்காணலில் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களின் எதிர்பார்ப்புகளையும் மீறிய நமது பதிலில்தான் அவர்கள் கண்டு கொண்டனர் இது தான் நமது தாய் மடி என. அப்படி ஒரு இணைவு தான் இத்துணை நாள் போராட்டத்துக்கும் அடியுரமாக இருக்கிறது.

துவக்கம் தான் அப்படி என்றால் அதையொட்டிய வளர்ச்சியும் மிகவும் கடுமையான போராட்டங்களின் ஊடாகவே இருந்தது.

சி.ஆர்.ஐ தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்க உணர்வால் உந்தப்பட்டிருக்கிறார்கள்.

சங்கம் துவங்கிய காரணத்தினாலேயே தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை நிறுத்தம் செய்தது; சங்கம் துவங்கிய ஆண்டிலிருந்து சி‌.ஆர்‌.ஐ யின் இதர யூனிட் தொழிலாளர்களுக்கு 30% போனஸ். சங்கம் இருக்கும் சின்னவேடம்பட்டி கிளைக்கு மட்டும் 8.33% போனஸ்.

“ஏன் இங்கு மட்டும் குறைந்த போனஸ்” எனக் கேட்டால் “நட்டம்” என்கிறார்கள் வாய் கூசாமல்.

“எங்கே காட்டுங்கள் உங்கள் வரவு செலவு கணக்கை” என கேட்டால், ஒரு வெள்ளைத் தாளில் மளிகைக் கடை கணக்கை போல நான்கு எண்களை போட்டு, நட்டம் என்கின்றனர்.

சி.ஆர்.ஐ முதலாளித்துவ பயங்கரவாதம்
சங்கம் துவங்கிய காரணத்தினாலேயே தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை நிறுத்தம் செய்தது; சங்கம் துவங்கிய ஆண்டிலிருந்து சி‌.ஆர்‌.ஐ யின் இதர யூனிட் தொழிலாளர்களுக்கு 30% போனஸ். சங்கம் இருக்கும் சின்னவேடம்பட்டி கிளைக்கு மட்டும் 8.33% போனஸ்.

உடனே நமது சங்கத்தின் சார்பில் சி‌.ஆர்‌.ஐ பேலன்ஸ் சீட்டை எடுத்து தாக்கல் செய்தோம். எரிச்சலடைந்த நிர்வாகமும் தர்ம சங்கடமான நிலைமைக்கு உள்ளான தொழிலாளர் நல அதிகாரிகளும் பூசி மெழுகினர். அப்போதும், “போனஸ் தர முடியாது” என்றே சாதித்தது நிர்வாகம்.

இதையொட்டி ஏ‌.சி‌.எல் இல் தொழிற்தாவா எழுப்பினால் அங்கு வருவதே கிடையாது. ஏ‌.சி‌.எல் டி‌.சி‌.எல் போன்ற அமைப்புகளே முதலாளிகளுக்காக தொழிலாளிகளிடம் பஞ்சாயத்து செய்யும் அலுவலகம் என்ற உண்மை ஒரு புறமிருக்க அப்படி ஒரு இடத்துக்கு வந்து நம்மிடம் கேள்வி கேட்பதே கூடாது என்ற எண்ணத்தில், இருக்கிறார் சி‌.ஆர்‌.ஐ முதலாளி சௌந்திரராஜன்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காலணி கிடையாது, சீருடை கிடையாது, 480 நாள் அல்ல பல வருடங்கள் வேலை செய்தாலும் நிரந்தரம் கிடையாது. இவ்வளவையும் விட, சங்கம் துவங்கியதன் அடையாளமாய் கொடிக்கம்பமும் அறிவிப்பு பலகையும் வைக்க அனுமதி கேட்டால் சரவணம்பட்டி காவல் துறை மூலம் அனுமதி மறுக்கிறார். அதையும் மீறி நாம் வைத்த கொடிக்கம்பத்தையும் அறிவிப்பு பலகையையும் இரண்டு முறை ஆள் வைத்து திருடிக் கொண்டு போகும் அளவுக்கு மகா மட்டரகமான மன நிலையில் இருக்கிறார் சி‌.ஆர்‌.ஐ முதலாளி சௌந்திரராஜன். மூன்றாவது முறை கொடிக் கம்பத்தை நட்டு காவலுக்கு ஆள் வைத்த பின்பு தான் அடங்கினார்.

இதற்கிடையில், “சங்கத்தை கலைத்து விடுங்கள் கல்வி உதவித் தொகை கிடைக்கும்”, “சங்கத்தை கலைத்து விடுங்கள் போனஸ் கிடைக்கும்” என்கிற ரீதியில் அல்லக்கைகள் மூலம் பிரச்சாரமும் வீரியமாக செய்கிறார். என்ன செய்தும் தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைக்க அவரால் முடியவில்லை.

இப்படி தெள்ளவாரிகள் மன நிலையில் சிந்தித்து முடிவெடுக்கும் சௌந்திரராஜன் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்குவது, H1N1 வைரசுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் என பரோபகாரி நாடகமும் ஆடுகிறார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

26-03-2015 அன்று கதவடைப்பு என அறிவித்த போது எண்ணிப் பார்த்திருக்க மாட்டார் இந்த நிகழ்வு இப்படி விஸ்வரூபம் எடுக்குமென்று. “இது சட்டவிரோதமான கதவடைப்பு” என ஏ‌.சி‌.எல் சொல்லியும் கதவை திறக்கவில்லை, சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சொல்லியும் திறக்கவில்லை, தாசில்தார் ரவி சொல்லியும் கதவை திறக்கவில்லை. அதனால்தான், தொழிலாளிகள் போராட்டம் என்று துவங்குகிறார்கள்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
“இது சட்டவிரோதமான கதவடைப்பு” என ஏ‌.சி‌.எல் சொல்லியும் கதவை திறக்கவில்லை, சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சொல்லியும் திறக்கவில்லை, தாசில்தார் ரவி சொல்லியும் கதவை திறக்கவில்லை. அதனால்தான், தொழிலாளிகள் போராட்டம் என்று துவங்குகிறார்கள்.

முதலில் பதினைந்து நாட்கள் கதவடைப்பு என்று கூறிய நிர்வாகம் பின்னர் கால வரையற்ற கதவடைப்பு என மாற்றியது. இதற்கிடையில் காண்ட்ராக்ட் மூலம் தரமற்ற பம்ப்புகளை உற்பத்தி செய்து சி‌.ஆர்‌.ஐ என முத்திரை குத்தி விற்கும் வேலையையும் செய்தது.

இருபது வருடம் அனுபவமுள்ள தொழிலாளிகளை வெளியில் தள்ளி விட்டு தரமில்லாத பம்புகளை உற்பத்தி செய்து விற்பதை அம்பலப்படுத்தும் நோக்கில் “போலி சி‌.ஆர்‌.ஐ பம்ப்புகளை புறக்கணியுங்கள்” என பிரச்சாரம் மேற்கொண்டனர் தொழிலாளிகள். சின்னவேடம்பட்டியை சுற்றியுள்ள சுமார் 25 கிராமங்களை இலக்கு வைத்து தினசரி மக்களிடம் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பது, ஏ‌.சி‌.எல், டி‌.சி‌.எல் இலும் விடாமல் போராடுவது, உயர் நீதி மன்றத்தில் வழக்கு என சட்டப் பூர்வமான சகல வழிமுறைகளையும் செய்தாயிற்று. உப்பு சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் முன்னிலை வகிக்கும் கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கலெக்டர் அலுவலக முற்றுகையின் போது தொழிலாளர்தம் துணைவியார்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். மாவட்ட ஆட்சியரின் முதலாளி வர்க்க பாசமே அதற்கு காரணம்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
முதலில் கதவடைப்பு என்று கூறிய சௌந்திரராஜன் இப்போது உற்பத்தி நிறுத்தம் என்ற புதுக் கதையை கிளப்புகிறார்.

முதலில் கதவடைப்பு என்று கூறிய சௌந்திரராஜன் இப்போது உற்பத்தி நிறுத்தம் என்ற புதுக் கதையை கிளப்புகிறார். “இது சட்டவிரோதமான கதவடைப்பு” என உயர்நீதி மன்றத்தில் நாம் நிலை நாட்டிய பின்பு, இதையும் பிரச்சாரமாக கொண்டு சென்ற போது தான் சௌந்திரராஜன் மகள் திருமணம் என்ற தகவல் கிடைத்தது.

சௌந்திரராஜனின் குடியிருக்கும் பகுதிக்கே சென்று அவர் வீடு உள்பட அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்திலும் பிரச்சாரம் செய்யும் போதுதான் நமது ஆதரவாளர் ஒருவர் அந்தத் திருமண வரவேற்பு அழைப்பிதழை நமக்கு கொடுத்தார். முகூர்த்தம் அவரது பூர்வீக கிராமத்தில் நடைபெறும் தகவலையும் தெரிவித்தார்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
அந்தக் கிராமத்துக்கும் சென்று அந்த சிறிய கிராமம் முழுவதையும் நமக்கு ஆதரவாக மாற்றி விட்டு வந்தோம். திருமணத்தன்று அங்கு அந்தப் பகுதி முழுக்க சுவரொட்டிகள் ஒட்டிவிட்டும் வந்தோம்.

அந்தக் கிராமத்துக்கும் சென்று அந்த சிறிய கிராமம் முழுவதையும் நமக்கு ஆதரவாக மாற்றி விட்டு வந்தோம். திருமணத்தன்று அங்கு அந்தப் பகுதி முழுக்க சுவரொட்டிகள் ஒட்டிவிட்டும் வந்தோம். சூலூர் அருகே உள்ள அந்த பட்டணம் கிராம மக்கள் பெருவாரியாக நமக்கு ஆதரவு தந்தனர்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
“சௌந்திரராஜனால் கொலை செய்யப்பட்ட சி‌.ஆர்‌.ஐ கம்பெனியை பாடை கட்டி, சங்கு ஊதி சேகண்டி அடித்து தூக்கும் போராட்டம்”

அடுத்து, திருமண வரவேற்பு மிக பிரமாண்டமாக கோவை கொடிசியாவில் 12-06-2015 நடைபெற இருப்பதை அறிந்து அங்கு சென்று,  “சௌந்திரராஜனால் கொலை செய்யப்பட்ட சி‌.ஆர்‌.ஐ கம்பெனியை பாடை கட்டி, சங்கு ஊதி சேகண்டி அடித்து தூக்கும் போராட்டம்” என அறிவித்து போஸ்டர் ஒட்டினோம். அது வரை இரட்டை வேடம் பூண்டு நயவஞ்சக நாடகம் ஆடி வந்த கோவை காவல் துறை தனது உண்மையான சுயரூபத்தை ஆளும் வர்க்க அடியாள் என்பதை அப்பட்டமாக காட்ட துவங்கியது.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்இந்த போஸ்டருக்கு மறு நாள் பேச்சு வார்த்தைக்கு என்று தோழர் குமாரவேல் உட்பட சி‌.ஆர்‌.ஐ நிர்வாகிகள் ஐந்து பேரை அழைத்த பீளமேடு காவல்துறை யாருக்குமே தகவல் தெரிவிக்காமல் நயவஞ்சகமாக இரவோடு இரவாக அவர்களை சிறையில் தள்ளியது.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
தோழர் குமாரவேல்

அதற்கு அடுத்த நாள் சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் மணிவர்மன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமியை அவரது வீட்டுக்கே காலை எட்டு மணிக்கு வந்து கைது செய்தார். காரணம் என்னவெனில், கடந்த மாதம் (22-05-2015) ஜெயலலிதா பதவியேற்பை கண்டித்தும் பார்ப்பன உச்சிக் குடுமி மன்றத்தை விமர்சித்தும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரினால் இந்த மாதம் 11 -ம் தேதி சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகிறதாம். இப்படி சட்ட ஒழுங்கு பாதிப்பை தடுக்கும் பொருட்டு புகார் கொடுத்தது அதே ஸ்டேசனின் சப் இன்ஸ்பெக்டர் வாசுகியாம். அந்த போஸ்டரில் இருக்கும் எண் தோழர் விளவை இராமசாமியினுடையது அதனால் அவரை கைது செய்கிறோம் என விளக்கமளித்தனர்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி.

காலை எட்டு மணிக்கு இவர் கைதான அடுத்த அரை மணி நேரத்தில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சோதி சி‌.ஆர்‌.ஐ போராட்டப் பந்தலுக்கு சென்று “12ஆம் தேதி போராட்டம் நடத்த மாட்டோம்னு உத்திரவாதம் கொடுங்க. உங்களை யாரையும் கைது செய்ய மாட்டேன். இல்லையென்றால் கைது செய்வேன்” என வெளிப்படையாக மிரட்டியுள்ளார்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
தொழிலாளர்களின் உறுதி உணவால் அல்ல உணர்வால்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் வந்து இரு தோழர்களை கைதும் செய்துவிட்டார். அவர்கள் மீதான வழக்கு, “சி‌.ஆர்‌.ஐ கம்பெனிக்குள் வேலைக்கு செல்வோரை தடுத்தார்கள்” என்று.

தோழர் விளவை இராமசாமி மற்றும் சி‌.ஆர்‌.ஐ நிர்வாகிகள் கைதை கண்டித்து ஒட்டப்பட்ட நூற்றுக்கணக்கான போஸ்டர்களை 30 பேரை அமர்த்தி உளவுத் துறை போலீசின் தலைமையில் விடியற்காலையிலேயே கிழித்தது போலீஸ்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
நூற்றுக்கணக்கான போஸ்டர்களை 30 பேரை அமர்த்தி உளவுத் துறை போலீசின் தலைமையில் விடியற்காலையிலேயே கிழித்தது போலீஸ்.

அந்த போஸ்டரில் உள்ள மாவட்ட செயலர் தோழர் திலீப்பின் எண்ணை எடுத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு அவரை கைது செய்ய பல முறை ஆள் அனுப்பிக் கொண்டிருக்கிறது காவல் துறை. இது போக சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் பலரையும் வீடு வீடாக சென்று மிரட்டிக் கொண்டிருக்கிறது.

100 சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் உட்பட இந்த மாவட்ட மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிரான முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சேவகம் புரிகிறது இந்த காவல் துறை.

10-ம் தேதி காலை கைது செய்யப்பட்ட தோழர் விளவை இராமசாமிக்கும் 12-ம் தேதி மாலை ஜாமீன் கிடைத்து விட்டது. ஆனால் இதற்கு தயாராக இருந்த காவல் துறை சிறைக்குள்ளேயே பிடிவாரண்ட் போட்டு தோழர் விளவை இராமசாமி மீது மேலும் 10 பிரிவுகளிலும் சி‌.ஆர்‌.ஐ நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்து வெளியே வரவிடாமல் நேரடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறைக்குள் அனுப்பியது.

இதற்கிடையில் 12-ம் தேதி மாலையில் நூற்றுக்கணக்கான போலீசாருடன் 3 அடுக்கு பாதுகாப்பில் சௌந்திரராஜனின் மகள் திருமண வரவேற்பு பயத்துடனும் பாதுகாப்புடனும் நடந்தேறியது. அங்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்தால் துவங்கும் முன்பே கைது செய்யப்படுவோம் என்பதை உணர்ந்த, பெருவாரியான மக்கள் பார்வையில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சி.ஆர்.ஐ கிளை துணைத்தலைவர் தோழர் ராமசாமி தலைமையில் சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் குடும்பத்தோடு சுமார் 85 பேர் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் உள்ள பெரும்பான்மை போலீசு கொடிசியாவில் குவிந்திருக்க ஆர்ப்பாட்டம் இடத்துக்கு வருவதற்கு அரை மணிநேரம் ஆகி இருகிறது.

போலீசு உடன் தொழிலாளர்களும் பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆண்கள் 48 பேரும், பெண்கள் 28, குழந்தைகள் 8 பேர் கைது செய்யப்பட்டு அண்ணாமலை அரங்கத்தில் அடைக்கப்பட்டனர்.

“யாரும் பெயர் கொடுக்க மாட்டோம், டீ உணவு அருந்த மாட்டோம். தாசில்தாரை வரச் சொல்லுங்கள்” என கட்டளையிட்ட பிறகு இரவு ஒன்பது மணிக்கு அவசர அவசரமாக வந்தார் தாசில்தார். பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திக்கித் திணறி, “வருகிற 22-ம் தேதி பேச்சு வார்த்தையில் கண்டிப்பாக ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறேன்” என உத்திரவாதம் கூறிச் சென்றுள்ளார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

‘ரெண்டு மாதம் பட்டினி போட்டால் நம்ம வழிக்கு வந்துருவானுக… அப்புறம் 1 லட்சமோ ரெண்டு லட்சமோ கொடுத்து அனுப்பிரலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்த சௌந்திரராஜனின் எண்ணத்திற்கு தொழிலாளர்கள் செருப்படி கொடுத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா விடுதலை எப்படி நீதித்துறையை அம்மணமாக்கியாதோ அது போல கோவை மாவட்ட மக்களையும் தொழிலாளி வர்க்கத்தையும் அரசு முதலாளி போலீசு என்ற மாயையிலிருந்து மீட்டெடுக்கும் பணியை இந்த சி‌ஆர்‌ஐ போராட்டம் நிச்சயம் செய்யும்; செய்து கொண்டும் இருக்கிறது..

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க