privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் - பென்னாகரம் மாணவர்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் – பென்னாகரம் மாணவர்கள் போராட்டம்

-

CRP, LITWIND, DALMIA ஆலைகளின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக தெருமுனைக்கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இயங்கி வருகின்றன சி.ஆர்.பி, லைட்விண்ட், டால்மியா ஆலைகள்.

இவ்வாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமை படுமோசமானது. அக்கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாத தொழிலாளர்கள் சங்கம் துவங்க வேண்டும் என முடிவெடுத்தனர். எந்த சங்கம் துவங்க வேண்டும் என யோசித்த போது புரட்சிகர சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை துவங்கலாம் என தொழிலாளர்கள் தெரிவு செய்தனர். ஏனேனில் மற்ற பிழைப்புவாத சங்கங்கள் அனைத்தும் தொழிலாளிகளை பேரம் பேசி விற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த அனுபவத்தில் அறிந்து வைத்திருந்தனர்.

சங்கம் துவங்கினால் முதலாளிகள் சும்மா இருப்பார்களா?. உடனே, “கூப்பிடு பிழைப்புவாத சங்கங்களை” என டால்மியாவில் LPF சங்கத்தையும், CRP-யில் அண்ணா தொழிற்சங்கத்தையும், LITWIND-ல் INTUC தொழிற்சங்கத்தையும் முதலாளிகள் துவங்கினர்.

இதன் தொடர்ச்சியாக தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக வேலையை விட்டு தூக்குவது, சஸ்பெண்ட் செய்வது, தொலைதூர பகுதிகளுக்கு டிரான்ஸ்பர் செய்வது என முதலாளிகளின் அட்டகாசம் பிழைப்புவாத சங்கங்களின் துணையுடன் தலைவிரித்தாடுகிறது.

இந்த பிழைப்புவாத சங்கங்களை கண்டித்தும், முதலாளிகளின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்தும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக 16-06-2015 அன்று மாலை 05.30 மணிக்கு தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கிளை மற்றும் இணைப்புச்சங்கத்திலிருந்தும் பொதுமக்களும் சேர்ந்து 250க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி தெருமுனைக்கூட்டம்
பிழைப்புவாத சங்கங்களை கண்டித்தும், முதலாளிகளின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்தும் தெருமுனைக்கூட்டம்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் அவர்கள் தலைமை உரையாற்றினார். இதில் கும்மிடிபூண்டி சிப்காட் முழுவதும் ஆலைகளில் நடக்கும் தொழிலாளர் விரோத போக்கையும், அவர்களுக்கு ஆதரவாக பிழைப்புவாத தொழிற்சங்கங்கள் செயல்படுவதையும் அம்பலப்படுத்தினார்.

கும்மிடிப்பூண்டி தெருமுனைக்கூட்டம்
இக்கூட்டம் தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் அரசின் மீதான மாயயை போக்கும் விதமாக இருந்தது.

இந்த ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் தோற்றுப்போய் திவாலாகி, எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது என்பதையும், இந்த அரசை அப்படியே பயன்படுத்தி முதலாளிகளை தண்டித்துவிட முடியும் எனவும் நமது உரிமைகளை வென்றுவிட முடியும் எனவும் கருதுவது “கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்” என்றும் இந்த அரசமைப்பை அடித்து நொறுக்காமல் நமக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களுடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் தோழர் நாகராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இக்கூட்டம் தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் அரசின் மீதான மாயயை போக்கும் விதமாக இருந்தது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்

பென்னாகரம் வட்டம் கரியம்பட்டி அரசுப் பள்ளிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் புறக்கணித்து வருவதைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்.

டந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரியம்பட்டி அரசுப் பள்ளியில் 19 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று இதையே சாக்காக வைத்து பள்ளியை மூடிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டது அரசு. அரசுப் பள்ளியை பாதுகாப்பதும் கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வைப்பதும்தான் தற்போதைக்கு நமது கல்வி உரிமையை பாதுகாக்க ஒரே வழி. இந்தப் பள்ளியில் தற்போது இரண்டு ஆசிரியர்கள் மட்டும் உள்ளனர். இதிலும் உருது பள்ளி ஆசிரியர் ஒருவர். இவருக்கும் தமிழ்கூட சரியாக பேச வருவதில்லை. இது போன்ற உருது ஆசிரியர்களை நியமித்து கணக்கு காட்டி வருகிறது அரசு.

கரியம்பட்டி அரசுப் பள்ளி போராட்டம்
அரசுப் பள்ளியை பாதுகாப்பதும் கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வைப்பதும்தான் தற்போதைக்கு நமது கல்வி உரிமையை பாதுகாக்க ஒரே வழி.

இதனை உணர்ந்து கொண்ட இதே கிராமத்தைச் சேர்ந்த திரு. மாதேஷ் அவர்களும், இந்தக் கிளையில் செயல்பட்டு வரும் வி.வி.மு தோழர்களும் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராம மக்களிடம் பிரச்சாரம் செய்து மாணவர் சேர்க்கையை உயர்த்தினர். பெற்றோர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி, 19 மாணவர்கள் இருந்த பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை 70 ஆக அதிகப்படுத்தினர். தற்போது 80 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இதற்கு தகுந்தாற்போல் ஆசிரியர் நியமனம் செய்யவில்லை.

கரியம்பட்டி அரசுப் பள்ளி போராட்டம்
தகுந்தாற்போல் ஆசிரியர் நியமனம் செய்யவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கக் கல்வி அலுவலர் பள்ளியைப் பார்த்து விட்டு, “ஆங்கிலவழி பள்ளியாக மாற்றிக் கொள்ளுங்கள் உடனே உங்கள் பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்துவிடும் அரசு” என்று கூறி உறுதியளித்தார். இதனை நம்பி பெற்றோர்களும் ஆங்கிலவழிக் கல்வி வந்தால் நல்லது என்று கருதியும், கூடுதல் ஆசிரியர்கள் வருவார்கள் என்ற ஆசையிலும் அரசுப் பள்ளியை ஆங்கில வழிக் கல்விப் பள்ளியாக மாற்ற எழுதிக் கொடுத்தனர். அதன்படி கரியம்பட்டி அரசுப் பள்ளிக்கு ஆங்கில வழிக் கல்வி பள்ளி என்ற பெயர் வந்தது. ஆனால், இன்றுவரை ஆசிரியர் மட்டும் வரவில்லை.

கரியம்பட்டி அரசுப் பள்ளி போராட்டம்
இந்தப் பள்ளிக்கு தான் செய்த சேவையாக இருக்கட்டும்

பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி இருக்கிறது என்று நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காட்டுப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து சேர்ந்தனர். இது காடுகள் நிறைந்த பகுதி என்பதால் அரசு மூலம் காடுகள் உள்ள இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேலும், இதற்கு அரசே இதற்கான கட்டணத் தொகையையும் வழங்கும். இதனை நம்பி கடந்த ஓராண்டு காலமாக திரு. மாதேஷ் ஆட்டோ ஓட்டுனர் தலைமை ஆசிரியர், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் காட்டுப் பகுதியில் இருந்து வந்த மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தார்.

கரியம்பட்டி அரசுப் பள்ளி போராட்டம்
அரசுப் பள்ளி புறக்கணிக்குப்புக்கு எதிராக வி.விமு கண்டன ஆர்ப்பட்டம்.

கடந்த ஓராண்டாக ஆட்டோ ஓட்டிவிட்டு இதற்கான தொகை பெறமுயற்சித்த போது, தலைமை ஆசிரியரும் கண்டுகொள்ளவில்லை. தொடக்கக் கல்வி அலுவலரும் தனக்குத் தெரியாது என்று கைவிரித்து விட்டார். மாதேஷ் இந்தப் பள்ளிக்கு தான் செய்த சேவையாக இருக்கட்டும் என்று பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்.

காரணம் இந்தப் பள்ளியை இழுத்து மூடும் திட்டத்தில் இருந்தது, அரசு. மாணவர் சேர்க்கை அதிகமான உடனே எப்படி பள்ளியை சீரழிப்பது என்ற திட்டத்தில் இறங்கியது. பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்காமல் இரண்டு ஆண்டுகளாக புறக்கணித்து வந்தது. இதனை உணர்ந்து கொண்ட வி.விமு தோழர்கள் இந்த மோசடித்தனத்திற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவது என்ற முடிவு செய்து 16-06-2015 அன்று பென்னாகரம் டெம்போ ஸ்டேண்ட் அருகில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தியது.

கரியம்பட்டி அரசுப் பள்ளி போராட்டம்
அரசுப் பள்ளிகளை பாதுகாத்தால் மட்டுமே நமது அடிப்படை கல்வி உரிமையை நிலைநாட்ட முடியும், தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு முடிவுகட்ட முடியும்.

ஆர்ப்பாட்டம் நடத்திய உடன், போராட்டத்திற்கு பணிந்த அரசு கரியம்பட்டி அரசுப் பள்ளிக்கு தற்காலிகமாக ஒரு ஆசிரியரை நியமித்து உள்ளது. உடனே மாணவர்களுக்குத் தேவையான ஆசிரியர்களை நியமிக்கவில்லை எனில், போராட்டம் அடுத்த கட்டத்திற்குத் தொடரும் என்று எச்சரித்தது வி.வி.மு. அரசுப் பள்ளிகளை பாதுகாத்தால் மட்டுமே நமது அடிப்படை கல்வி உரிமையை நிலைநாட்ட முடியும், தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு முடிவுகட்ட முடியும் என்பதை இந்தப் போராட்டம் உணர்த்தியது.

கரியம்பட்டி அரசுப் பள்ளி போராட்டம்
“பள்ளி ஆசிரியர் நியமனம் செய்யவில்லை என்றால் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தைக் கட்டி அடுத்த கட்ட போராட்டத்தை தொடருவோம் “

ஆர்ப்பாட்டத்திற்கு திரு மாதேஷ் தலைமை தாங்கினார். “பள்ளி ஆசிரியர் நியமனம் செய்யவில்லை என்றால் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தைக் கட்டி அடுத்த கட்ட போராட்டத்தை தொடருவோம் ” என்று எச்சரித்து பேசினார். இதனைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ராஜா, மாவட்ட அமைப்பாளர், வி.வி.மு வட்டாரக் குழு உறுப்பினர் தோழர் மாயாண்டி, வி.வி.மு வட்டாரச் செயலர் ராஜன், கோபிநாத் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் சரவணன் நன்றியுரை தெரிவித்தார்.

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம் வட்டம்
9943312467

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க