Saturday, August 13, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் சமூகப் பொருளாதார சாதி வாரிக் கணக்கெடுப்பு: தீவிரமடையும் வறுமை !

சமூகப் பொருளாதார சாதி வாரிக் கணக்கெடுப்பு: தீவிரமடையும் வறுமை !

-

சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு: தீவிரமடையும் வறுமைக்குத் தீர்வு என்ன?

ந்தியா வேகமாக முன்னேறுகிறது; அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும்  அடுத்த நிலையில் உள்ள இந்தியா வல்லரசாகப் போகிறது என்றெல்லாம் ஆட்சியாளர்கள் வாப்பந்தல் போட்டாலும் உண்மை நிலை வேறாக இருக்கிறது. 1947 போலி சுதந்திரத்துக்குப் பின்னரும் கிராமப்புறங்களில் குறிப்பிடும்படியான வளர்ச்சி எதுவுமில்லை; இன்னமும் வறுமையிலும் ஒடுக்கப்பட்ட நிலையிலும்தான் கிராமப்புற மக்கள் வாழ்கின்றனர். – இந்த உண்மைகளை அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மெய்ப்பித்துக் காட்டியுள்ளது.

சமூக, பொருளாதார, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
‘வளர்ச்சி’யின் மறுபக்கம் : 10.69 கோடி கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக துண்டு நிலம் கூட இல்லை. தினக்கூலிகளாகப் பிழைப்பை நடத்தும் இவர்கள் குடிசை வீடுகளில் வறுமையில் உழல்கின்றனர்.

கடந்த 2011 முதலாக நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் ஒரு பகுதியை கடந்த ஜூன் 3-ம் தேதியன்று மைய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காலனிய ஆட்சிக் காலத்தில் 1934-ம் ஆண்டில் சமுக பொருளாதார சாதிவாரியிலான கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ள இந்த முதலாவது சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு, இந்திய மக்களின் அவலமான வாழ்க்கை நிலைமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.

ஐந்தாண்டு திட்டங்கள், ஊரக வளர்ச்சித் திட்டங்கள், மக்கள்நல மேம்பாட்டுத் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் முதலான எவையும் நாட்டு மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. காந்தியம், போலி சோசலிசம், சமூக நீதி, இட ஒதுக்கீடு, தனியார்மய – தாராளமய – உலகமயமாக்கம் – என எல்லா கொள்கைகளும் தோற்றுப்போவிட்டதையே நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைகள் இடித்துரைக்கின்றன. ஆனால் ஆட்சியாளர்களோ, இந்தியாவில் வறுமை குறைந்து, வளம் பெருகி, வல்லரசாக வளர்ந்து கொண்டிருப்பதாகப்  புள்ளவிவர சதவீதக் கணக்கு காட்டி சதிராடிக் கொண்டிருக்கின்றனர்.

இச்சமூக பொருளாதார  சாதிவாரிக் கணக்கெடுப்பின் வாயிலாக அதிகாரத்தில் எந்தெந்த சாதிகளுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்ற உண்மை வெளியாகி, அதனால் ஆதிக்க சாதிகளுக்கிடையே முரண்பாடும் மோதலும் வெடிக்கலாம் என்பதால் ஆளும் வர்க்கமும் பா.ஜ.க. அரசும் கிராமப்புற சமூக பொருளாதார நிலைமை பற்றிய விவரங்களை மட்டுமே வெளியிட்டுள்ளன. சாதிவாரிக் கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடவில்லை. இதைக் கண்டிக்கும்  சமூக நீதி பேசும் பல்வேறு ஓட்டுக் கட்சிகள், சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இதர பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த வேண்டுமென்று கோருகின்றன. இதன் மூலம் இக்கட்சிகள் தமது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன தவிர, இக்கணக்கெடுப்பின் மூலம் அம்பலமாகியுள்ள நாட்டு மக்களின் சமூக பொருளாதார அவலநிலையை மாற்றியமைப்பதற்கான எந்த திட்டத்தையும் அவை முன்வைக்கவில்லை.

சமூக, பொருளாதார, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
வறுமையின் கோரம் : நாட்டின் 4.08 லட்சம் குடும்பத்தினர் குப்பை சேகரித்து பிழைக்கின்றனர். 6.68 லட்சம் குடும்பங்கள் பிச்சை எடுத்துதான் வாழ்க்கையை ஓட்டுகின்றன.

இக்கணக்கெடுப்பின்படி, இந்திய நாட்டில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் – என இரண்டையும் சேர்த்து மொத்தம் 24.39 கோடி குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் 17.91 கோடி – அதாவது 73 சதவீதக் குடும்பங்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றன. கிராமங்களில் உள்ள 21.53 சதவீத குடும்பத்தினர் – அதாவது 3.86 கோடிப் பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவராவர். இவர்களில் பெரும்பாலோருக்குச் சொந்தமான வீடு கூட இல்லாமல் தொடர்ந்து வறிய நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, கிராமப்புறங்களிலுள்ள 49 சதவீத குடும்பங்கள் ஏழ்மை நிலையில் உள்ளன. கிராமப்புறத்தின் 10.69 கோடி குடும்பங்களுக்கு சொந்தமாகத் துண்டு நிலம்கூட இல்லை. தினக்கூலிகளாகப் பிழைப்பை நடத்தும் இவர்கள் குடிசை வீடுகளில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி வாழ்கின்றனர். கிராமப்புறங்ககளில் வெறும் 3 சதவீத அளவிலான குடும்பங்களில் மட்டுமே, குடும்பத்தில் ஒருவர் பட்டப்படிப்பு படித்துள்ளனர். ‘ஒளிரும் குஜராத்’தில் 72 சதவீத குடும்பங்கள் மிகக் குறைந்த கல்வி பெற்றவர்களாகவே உள்ளனர்.

இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், நாட்டின் 4.08 லட்சம் குடும்பத்தினர் குப்பை சேகரித்து பிழைக்கின்றனர். 6.68 லட்சம் குடும்பங்கள் பிச்சை எடுத்துத்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றன. டெல்லியில் மட்டும் 3 லட்சம் பேர் குப்பை பொறுக்கிப் பிழைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1 கோடியே 67 ஆயிரத்து 849 குடும்பங்களில் 42.47 சதவீதக் குடும்பங்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். கிராமப் புறங்களில் 55.58 சதவீதக் குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமப்புறத்திலுள்ள 78.08 சதவீத குடும்பங்களில் அதிகம் சம்பாதிக்கும் உறுப்பினருக்கு ரூ. 5000 க்கும் குறைவாகத்தான் வருவாய் உள்ளது.  இது தேசிய சராசரியான 74.5 சதவீதத்தை விட அதிகமாகும். குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தமிழக கிராமங்களில் ஒட்டுமொத்தமாக 56 சதவீதக் குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. இது தேசிய சராசரியான 38.27 சதவீதத்தை விட மிகவும் அதிகம். நிலமில்லாமல், கூலி வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலையிலுள்ள ஏழைகள் அதிகமான மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது.

இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியான அதேநேரத்தில் , இந்தியாவில் பல லட்சம் டாலர் சொத்துக்களை உடைமையாகக் கொண்டுள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 2013-ல் 1.96 லட்சத்திலிருந்து 2014-ல் 2.5 லட்சமாக அதிகரித்துள்ளது என்று “வெல்த் எக்ஸ்” என்ற நிறுவனம் கடந்த ஜூன் 8 அன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “நியூ வேர்ல்டு வெல்த்” என்ற அமைப்பானது, புனே நகரில் மட்டும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 317 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. 2014-ல் இந்தியாவில் 600 கோடிக்கு மேல் சொத்துக்களைக் கொண்டுள்ள பெரும் பணக்காரர்கள் 8595 பேர் என்றும், அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ 50 லட்சம் கோடி என்றும் அது குறிப்பிடுகிறது. கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் உழைப்பைக் கொடூரமாகச் சுரண்டி வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பிடுங்கி, சமூக அடுக்கின் உச்சியிலுள்ள மேட்டுக்குடி கும்பலிடம் குவித்ததன் விளைவாக அம்பானி, மிட்டல், சாங்வி, அசிம் பிரேம்ஜி, பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்த்திரி ஆகிய ஐந்து பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 5,23,897 கோடி ரூபாயாக ஊதிப்பெருத்துள்ளது. இத்தகைய புள்ளிவிவரங்கள் மலைக்கும் மடுவுக்கான ஏற்றத்தாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இதை மேலும் தீவிரமாக்கும் வகையில், ஏற்கெனவே பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளதோடு, ரூ 7,525 கோடிக்கு மறைமுக வரியை மோடி அரசு சாமானிய மக்களின் மீது திணித்துள்ளது. நாட்டின் கோடானுகோடி மக்கள் வறுமையில் பரிதவிக்கும்போது அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பை வழங்காமல், நேரடிப் பணப்பட்டுவாடா திட்டத்தின் மூலம் அவர்களைச் சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைக்கிறது. அரிசி, மண்ணெண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் என்று இதற்காகவே ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு திட்டங்களை மோடி அரசு திணித்துவருவதோடு, இதனை வளர்ச்சிக்கான பாதையாகச் சித்தரிக்கிறது.

இந்த ‘வளர்ச்சி’ யாருக்கானது என்பதை இந்தப் புள்ளி விவரங்களே  காட்டும்போது, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனப்படும் இந்தப் பேரழிவுப் பாதையை அனைத்து ஓட்டுக்  கட்சிகளும் ஒரே குரலில் ஆதரித்துக் கூப்பாடு போட்டுவருவது எத்தகையதொரு மோசடி!

– மனோகரன்
________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
________________________________

 1. ///1947 போலி சுதந்திரத்துக்குப் பின்னரும் கிராமப்புறங்களில் குறிப்பிடும்படியான வளர்ச்சி எதுவுமில்லை; இன்னமும் வறுமையிலும் ஒடுக்கப்பட்ட நிலையிலும்தான் கிராமப்புற மக்கள் வாழ்கின்றனர். – இந்த உண்மைகளை அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மெய்ப்பித்துக் காட்டியுள்ளது./// எது உண்மை ? வறுமை குறையவே இல்லையா ? அல்லது 90களுக்கு பிறகு வெகு வேகமாக குறைந்து வருகிறதா ? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் தொடர்ந்து பொய்யான சித்திரத்தை வெத்து வார்த்தைகள், மிகை நடையில் சொல்லி வருவதால் தான் வினவு தளத்தை சீந்துவார்கள் குறைந்து விட்டனர்.

  2011 ஆய்வறிக்கையை மட்டும் வைத்து கொண்டு ‘விவாதிப்பது’ அறிவியல் முறை அல்லவே. கடந்த 50 ஆண்டுகளில் வருடந்தோரும் எடுக்கப்படும் பல வகையான ஆய்வுகள், surverysகளின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசுவது தான் நேர்மையான செயலாகும். ஆனால் அது தான் உங்களிடம் கிடையாதே.

  கருத்து முரண்பாடுகள், சித்தாந்த முரண்பாடுகள் நமக்குள் வரலாம். பிரச்சனை இல்லை. மிக இயல்பானது தான். ஆனால் தரவுகள், facts பற்றியே முரண்பாடுகள் வந்தால் அங்கு தான் பிரச்சனை. சரி, ஒரே ஒரு தரவை அளிக்கிறேன். அய்.நா அறிக்கை. (உடனே அதுவும் பொய்யானது, etc என்று கிளம்புவ்ர்களுடன் விவாதிக்க ஒன்றுமில்லை என்று இப்பவே சொல்லிவிடுகிறேன்) :

  http://www.thehindu.com/news/national/millennium-development-goals-report-2015-india-on-track-in-reducing-poverty/article7396544.ece

  UN MDG report : India on track in reducing poverty

  India has halved its incidence of extreme poverty, from 49.4 per cent in 1994 to 24.7 per cent in 2011, ahead of the 2015 deadline set by the U.N,, shows the Millennium Development Goals (MDG) Report, 2015, released on Tuesday. The report set the limit for extreme poverty as those living on $1.25 or less a day.

 2. @Vinavu,
  “To support their case that the UN-MDG program is a success,its supporters point to the world statistical averages.Upon closer examination,we find that Asia has experienced improvements across the board from 2000 to 2015.The results in Asia are the product of the national capitalism and not the UN-MDG program.In other words,the rapid GDP growth of China and India in the first decade of the 21st century resulted in the derivative growth in many parts of the world that depend on commodity exports.Cyclical demand for minerals and agricultural products with derivative benefits for a segment of the masses has absolutely nothing to do with the UN-MDG program and its supporters cannot possibly claim that improvements in poverty reduction are directly linked to the UN program.Naturally,UN-MDG officials hailed China for its role in helping achieve the MDG goals,but this is a clear case where credit goes to China and not the UN.”For further details click the article,”Global poverty and the UN Millennnium Development Goals program by Jon Kotas,Retired Professor,Indiana University- http://www.countercurrents.org/kotas090915.htm.
  @Adhiyaman,
  “According to some studies,the number of people living on less than $1.25 a day has been reduced from 1.9 billion in 1990 to 836 million in 2015.The World Bank estimate that the number of people living under $1.25 is 1.2 billion.While British based Overseas Development Institute (ODI)places the estimate at 1.5 billion and more than 2.5 billion on $2 per day.In short,one third of the world”s population lives below the poverty line.If the poverty line is set at $5 per day,then more than 4 billion people live under such conditions.The absolute value of the dollar amount is not as significant here because $5 dollars per day in sub-sahara Africa has a much higher PPP value than it does in NewYork city.The issue is that the US anti-poverty program goals remain elusive,even by the most optimistic count.In the absence of addressing the structural impediments to social justice,the rich-poor gap will not be closed as the UN-MDG goals promise.”
  “Roughly 80% of the world”s wealth is concentrated in the G20 and within these countries the majority of wealth is in the hands of a small minority.Does such income distribution mean there is hope for UN-MDG program to be realized not in the next five years but in the next 100 years?”
  “Because the export sector in underdeveloped countries is invariably owned through local contractors by multinationals,national capitalism and the state as a support mechanism are very weak in comparison with the rich nations.This makes it easier for the multinationals to manipulate through bribary and legal methods using the World Bank,IMF,and the services of their government in the underdeveloped countries that need capital.The result is less stringent legislation (environmental,labour relations,health codes etc)affecting foreign companies,lower taxes than they pay in their own countries,and of course easy terms for repatriating profits. (my example-Nokia)This situation entails perpetual movement of capital from the semi-developed and less developed countries to the rich nations.How the UN-MDG program can possibly be realized under such a global capitalist structure is a mystery in which very few believe while those supporting the program are using this as another vehicle to prove that capitalism is working well and addressing the worst cases of inequality.”
  “15 years after the UN promulgated the MDG program,we have the evolution of globalization that needs a work force in the semi-developed and less developed countries where labour values are low.Otherwise the growth and expansion of capitalism cannot continue.Given its cyclical nature,capitalism constantly seeks new markets to exploit for greater profit and lowest labour costs.The UN is offering the forum and the means for governments of the rich nations serving large corporate interests to create a more viable work force in the semi-developed and less developed nations,and to continue thorough geographic and economic integration of every inch on the planet in order to realize the goal of capital concentration”
  “Because the UN-MDG program enjoys corporate support,there is no criticism of the massive wealth concentration and the need for policies of income redistribution-the reality that 1% of world”s richest people own about as much wealth as the bottom 50% of the world people.”
  For details-click http://www.countercurrents.org/kotas090915.htm

 3. Sooriyan,

  So what is your final verdict ? Did India reduce its poverty ratio dramatically since reforms began or not ? Vinavu & Co lives in denial and எதுவும் பெருசா மாறல, மாறவே முடியாதுன்னு
  ஒரே அடியா (ஆதரமே இல்லாமல்) சாதிக்கிறாக. நீங்க அதுக்கு ஒத்து ஊதறகீகளா ?

  60களில், 70களில் முடியாத மாறுதல், 90களுக்கு பிறகு சாத்தியமாகியுள்ளது. ஆமாவா இல்லையா ?
  Can you give a STRAIGHT answer ? and yes UN MDG programs did not make this possible. These are goal posts and targets. And India reached them because of its reforms and not thanks to comrades like you or vinavu. We did it and UN support helped a little. But the point is did we achieve anything at all or not ? ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து கொண்டு
  copy paste மட்டும் செய்து மாட்டி கொள்ள வேண்டாமே.

  • India could reduce poverty ratio due to successive poverty alleviation programmes and not due to reforms.India could have done still better in the absence of reforms.I have stated in my previous comments under Gramina Bank etc,that the reforms process slowed down poverty alleviation measures.These poverty alleviation programmes were mostly implemented through nationalized banks.Actually the nationalized banks and gramina banks have diverted their focus after the reforms that too after 2005.Gramina banks are no longer gramina banks.They also lend to big industrialists instead of small/marginal farmers.The focus on rural banking got diluted after 2005.
   Yes I have given my straight answer and awaiting for the response of Adhiyaman for criticism levelled against UN and developed countries/rich countries about their exploitation of underdeveloped countries in the name of achieving MDG targets.

   • ///India could reduce poverty ratio due to successive poverty alleviation programmes and not due to reforms.India could have done still better in the absence of reforms.///

    Super. You deserve a noble prize in economics for this அரிய கண்டுபிடிப்பு / தியரி.
    Then how and why did India went bankrupt in 1991 (BoP crisis and gold pledging for forex which was down to two week import coverage) ? and why, without reforms we would have really gone bankrupt with resulting hypeinflation and massive unemployment..

    and if possible try to answer this simple and direct question about the 1991 crisis and REFORMS that helped prevent re-occurrence of such crisis in my old post :

    http://nellikkani.blogspot.in/2008/05/1991.html
    1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

    This is the acid test for your sweeping and unfounded assumption that reforms do not matter at all. And why do you suppose the Amartya Sen supported reforms ? Was he a fool or a stooge of imperialists, capitalists, etc ?

    • The reforms would have helped India to come out of it”s BOP crisis in 1991.Amartya Sen supported reforms in 1991.But in his New Delhi CII lecture in 1997,What Amartya Sen has told about reforms?
     “India has not chosen the right course for economic reforms since 1991”
     “The reforms process has been lopsided with the government failing to address basic social issues like education and health care.This may prove a road block to the globalization process”-Business Standard,30-12-1997.
     Adhiyaman,as usual side tracks the issue and not at all answered any of the criticism levelled against developed countries for their exploitation of underdeveloped countries.Come on Adhiyaman.I am still waiting for your response.

    • Apart from the above lecture at CII,New Delhi in 1997,Amartya Sen along with Jean Drez wrote a book,”An Uncertain Glory”.In that book,the authors ask,”What difference does it make to lift millions above some notional poverty line if they still lack the basics of a decent life?”

 4. 1949 செம்புரட்சி துவங்கி 1978இல் டெங்கு தொடங்கிய சீர்திருத்தங்கள் வரை சுமார் 30 ஆண்டு காலம் சீனாவால் பெருசா வறுமையை அழிக்க முடியவில்லை. பெரு வாரியான மக்களின் வாழ்க்கை தரத்தில் பெரிய மாறுதல் ஏற்படவில்லை. _________________________

  சரி, 1978 முதல் இன்று வரை சீனாவில் எப்படி இத்தனை அசுர வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு சாத்தியமானது ? முதலாள்த்துவ பாதை தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா ?
  ///but this is a clear case where credit goes to China and not the UN.///

  sure. ஆனால் சீனா மாவோவின் வழியில் சென்றதால் இதை சாதித்ததா அல்லது டெங்கின் வழியில் நேர் எதிராக சென்றதால் சாதிக்கா முடிந்ததா ? நேர்மையாக, தெளிவாக, ஆம் இல்லை என்று பதில் சொல்லவும். இல்லாவிட்டால் i can conclude that you were unfit to be a bank manager who could judge economic reality, credit worthiness in a sensible manner, etc.

  • India and China could reduce poverty through different methods.China could reduce poverty by providing full employment to its labour class for production of goods for it”s huge export market.But over exploitation of labour by China resulted in high wage demand by its labour class rigt now.That is why developed countries are now looking to India,Bangladesh and Phillipines for their manufacture. Only cyclical exploitation of under developed countries by developed countries is repeatedly highlighted in the article quoted by me.If Adhiyaman has any stuff, let him answer the criticim levelled in the article.Whether it is copy pasted or not,it deserves closer examination and analysis.Adhiyamam has copy pasted from The Hindu and I have copy pasted from Countercurrents.But he should not run away as usual.I do not need any certificate from Adhiyaman regarding my knowledge and understanding.

  • // சீனா மாவோவின் வழியில் சென்றதால் இதை சாதித்ததா அல்லது டெங்கின் வழியில் நேர் எதிராக சென்றதால் சாதிக்கா முடிந்ததா ?//

   Please read this book ‘Chinese Profiles’ – by ‘Zhang Xinxin’ and ‘Sang Ye’ to know what is achieved by following Mao. It is a collection of interview by more than 100 common people.

   Even without embracing market-capitalism by Deng Xiaoping, left in the Mao’s way, economy of China would have been mammoth by this time, if not earlier. In any macro economy, when the take-off is reached, stability is taken care by the dynamics set by the earlier system. To understand this, one must have courage to think and accept the facts rather than making cacophony.

   • எம்ஜியாரின் ஆட்சி பொற்கால ஆட்சி அப்படி சொல்லி பேட்டி எடுத்து , இப்ப கூட நிறுவ முடியும் . நாட்டின் பொருளாதார வளர்ச்சி காரணிகள் வைத்து அளக்க வேண்டும் . தொண்டர்களின் பால் குடத்தை வைத்து அல்ல …

    ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனத்திடம் பேட்டி எடுங்கள் , சோசியலிசம் பிரமாதம் என்றுதான் சொல்ல்வார்கள் .

    //economy of China would have been mammoth by this time//

    மாவோவை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே ? 🙂

  • //சீனா மாவோவின் வழியில் சென்றதால் இதை சாதித்ததா அல்லது டெங்கின் வழியில் நேர் எதிராக சென்றதால் சாதிக்கா முடிந்ததா ?//

   Please read this book ‘Chinese Profiles’ by Zhang Xinxin and Sang Ye to know what Mao’s way did in China. It is a collection of interviews with more than 100 common people of China engaged in different walks of life.

   In any macro economy, the threshold is realised soon after the real takeoff happens due to the policy changes by active participation of the masses in addition of social wealth without barriers.

   Even without Deng Xiaoping’s reforms towards market economy, macro economy of China would have been mammoth like this today, over these 35 years. Probably with a better planned way, not leading to crisis like today. Economic crisis was unheard in USSR. It requires courage to accept these facts, rather than cacophony like நேர்மையாக, தெளிவாக, ஆம் இல்லை என்று பதில் சொல்லவும். இல்லாவிட்டால்…….

   In history, sometimes (mis)alignment happens with evil forces like what happened by shuttle diplomacy of Henry Kissinger.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க