privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதனியார் சாராயக் கடையை மூடு! தேனி முற்றுகைப் போராட்டம் !!

தனியார் சாராயக் கடையை மூடு! தேனி முற்றுகைப் போராட்டம் !!

-

நீங்கள் பாதுகாப்பாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என விரும்பினால் பேசாமல் சாராயக்கடை திறந்துவிடலாம். அரசு சாராயக்கடையை மட்டுமல்ல…..தனியார் சாராயக்கடையின் பாதுகாவலர்களும் தமிழ்நாடு காவல்துறைதான்.

லோயர் கேம்ப் சாராயக்கடை
ரெஸ்ட்டாரண்டு என்ற பெயரில் நவீன சாராயக்கடை

தேனி மாவட்டம் லோயர் கேம்பில், தனக்கு சொந்தமான மானாவாரி விளை நிலத்தில் , கூடலூரைச் சேர்ந்த மொம்முராசு என்பவர் ரெஸ்ட்டாரண்டு என்ற பெயரில் நவீன சாராயக்கடையை திறக்க கடந்த ஒரு ஆண்டாகவே முயற்சித்து வருகிறார்.

பிரதான சாலையில், பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு முன்பாக சாராயக்கடை வருவதாலும், கேரளா குடிகாரர்கள் வருகையால் சிறு தகராறுகள் கூட இனப்பிரச்சனையாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாலும் , ஒருவருடத்துக்கு முன்பே அப்பகுதியில் செயல்படும் விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமையில் திரண்ட பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பால் திறக்க முடியாமல் போனது. ஆனால் பணவெறிபிடித்த பொம்முராசு எப்படியாவது கடையை திறந்துவிடும் எண்ணத்தில் தோழர். மோகனை சில லட்சங்கள் கொடுத்து சரிக்கட்டுவதற்காக ஓட்டுக்கட்சி புரோக்கர்களை ஏவிவிட்டார். அது முடியாது போகவே, ஆளும் கட்சி , அரசு அதிகாரிகளின் ஆதரவோடு சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கடையை திறந்துவிட்டார்.

சாராயக் கடைக்கு காவலாக போலீசு படை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவலறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள், அடுத்தநாளே பிரசுரம் தயாரித்து லோயரில் வீடுவீடாக கொடுத்து பிரச்சாரம் செய்ததுடன், அன்று இரவே போஸ்டரும் ஒட்டி அடுத்த நாளே முற்றுகைப் போராட்டமும் அறிவித்தார்கள்.

சாராய வியாபாரி பொம்முராசுவை முந்திக்கொண்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் இரவோடு இரவாக கூடலூர் போலிசு, கிழித்தெறிந்தது. இரவே போலிசுப்படையை லோயரில் குவித்து பீதியை கிளப்பினார்கள்.

சாராயக் கடைக்கு காவலாக போலீசு படை
வெளியூர்களில் இருந்து வந்த பேருந்துகளை நிறுத்தி , கையில் துண்டுபிரசுரம் வைத்திருப்பவர்கள், சிவப்பு சட்டை போட்டவர்களை தேடிப்பிடித்து கீழே இறக்கியது போலீசு

காலையில் மேலும் 300-க்கும் மேற்பட்ட போலீஸ் படை, 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து குவிந்தனர். லோயருக்கு முன்பாக கூடலூரிலேயே தோழர்களை மடக்கும் நோக்கத்தில், அங்கும் ஒரு போலிசுப்படை குவிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த பேருந்துகளை நிறுத்தி , கையில் துண்டுபிரசுரம் வைத்திருப்பவர்கள், சிவப்பு சட்டை போட்டவர்களை தேடிப்பிடித்து கீழே இறக்கினார்கள்.

இதையும் மீறி லோயர்வரை சென்றவர்களை சாராயக்கடைக்கு முன்னதாகவே பஸ்ஸில் இருந்து 60-க்கும் மேற்பட்ட தோழர்களை இறக்கி, “அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துகிறீர்கள் கைது செய்கிறோம்” என்றனர். ஏ.டி.எஸ்.பி- டி.எஸ்.பி- இன்ஸ்பெக்டர்கள் என பெரும் பட்டாளமே தோழர்களை சுற்றி வளைத்துக்கொண்டது.

“ஒரு சாராயக்கடைக்காக இவ்வளவு பெரிய ஆபிசருகள்லாம் வீதிக்கு வந்திருக்கிங்களே சார், ரொம்ப அசிங்கமா இருக்கு சார் “ என்ற ஒரு தோழரின் கேள்விக்கு முறுக்கி நெளிந்து சமாளித்தார் ஏ.டி.எஸ்.பி!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“எங்களை போராட விடுங்க…இல்லைனா நாங்க கைதாக மாட்டோம்.! விளை நிலத்துல சாராயக்கடை வைக்க அனுமதி கொடுத்தீங்கள்ல…அதுமாதிரி எங்களுக்கும் அனுமதி கொடுங்க” என்று தோழர் மோகன் கேட்டதற்கு,

“அதெல்லாம் கலெக்டர் வேலை. அவருகிட்ட பேசுங்க” என்றார் டி.எஸ்.பி.

“அப்ப அவர இங்க வரச்சொல்லுங்க பேசுவோம்” என்று தோழர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே பலவந்தமாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றிய போலீசுப் பட்டாளம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாலைவரை கூடலூர் திருமணமண்டபத்தில் வைத்திருந்து விட்டு விடுவித்தனர்.

அரசு சாராயக்கடையை மட்டுமல்ல, இனி தனியார் சாராயக்கடையை பாதுகாப்பதும் எங்கள் வேலைதான் என நிரூபித்திருக்கிறது அம்மா போலிசு! தனியார் சாராயக்கடைகளில் வழக்கமான ரவுடிகளுக்கு இனி வேலை இல்லாமல் போய்விட்டது!. அதுதான் அம்மா போலிசு இருக்குதே!

தகவல்
மக்கள் அதிகாரம்,
தேனி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க