privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !

திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !

-

டாஸ்மாக்கிற்கெதிராக இரு பாடல்களை இயற்றிப் பாடியதற்காக ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் பாடகர் தோழர் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமின்றி, இந்தப் பாடலை வெளியிட்ட வினவு தளத்தின் பொறுப்பாளரும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலருமான தோழர் காளியப்பன் மீதும் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

மார்க்கண்டேய கட்ஜூமுன்னாள் உ ச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, ஏற்கெனவே தனது முகநூலில் கோவன் கைதைக் கண்டித்திருக்கிறார். தற்பொழுது, இது தொடர்பாக தந்தி டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில், “வழக்கை ரத்து செய்து, கோவனை விடுவிக்க வேண்டும்; நடந்த தவறுக்காக ஜெயலலிதா கோவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.” என கூறியிருக்கிறார்.

இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பரவலாக கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, தி.மு.க.வின் பொருளாளர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி, ம.தி.மு.க.வின் பொதுச்செயலர் வை.கோ., தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த், வி.சி.கட்சியின் பொதுச்செயலர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சி.பி.ஐ., சி.பி.எம்., பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டுப் பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஓட்டுக் கட்சிகள் மட்டுமின்றி, அறிவுத்துறையினரும் ஊடகங்களும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களும் இந்தக் கைதைக் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

“காலனியத்தன்மை கொண்ட இச்சட்டம் முற்றுமுழுதாக வெட்டியெறியப்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டு, கோவன் கைதை கண்டித்து தலையங்கம் எழுதியிருக்கிறது தி இந்து நாளிதழ். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட்; பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் உள்ளிட்டு அயல்நாடுகளின் ஊடகங்களும், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைக் கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கோவன் கைதைக் கண்டித்திருக்கின்றன. கோவனை விடுதலை செய்யக் கோரி இலண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு நவம்பர் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது, “பறை – விடுதலைக்கான குரல்” அமைப்பு.

இவைதவிர, கார்டூனிஸ்ட் பாலா, மும்பை கார்டூனிஸ்ட் அசிம் திரிவேதி, ஆர்.பிரசாத் உள்ளிட்ட அரசியல் கேலிச்சித்திர ஓவியர்கள் தங்களது ஓவியங்களால் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்.

00-seditionistsஇவற்றுக்கப்பால், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணையதள செயற்பாட்டாளர்கள் பலரும் அழுத்தமான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றனர். ஜெயா கும்பலின் ஆணவத்தையும், பாசிசத் திமிரையும் எள்ளி நகையாடியிருக்கின்றனர். அவர்களின் மொழியிலே சொல்வதென்றால், ஜெ. கும்பலைக் கழுவி கழுவி ஊற்றி விட்டனர். பேஸ்புக்கில் பலரது முகப்பு பக்கங்களில் தோழர் கோவனின் புகைப்படம்தான் இடம்பெற்றிருக்கிறது. “கோவன் செய்தது தேசத்துரோகம் என்றால் அதே தேசத்துரோகக் குற்றத்தை நாங்களும் இழைக்கிறோம்; முடிந்தால் எங்களையும் கைது செய்!” என்று நேரிடையாகவே சவால்விட்டுப் பதிவிட்டுள்ளனர். அவற்றுள் சிலவற்றை இங்கே தொகுத்து தருகிறோம்.

Gopalan TN: ஒரு தலைமுறையினைச் சீரழித்துக்கொண்டிருக்கும் இவ்வரசை சாடக்கூட ஜனநாயகத்தில் நமக்கு உரிமை இல்லையா என்ன?

00-mathimaranவே.மதிமாறன் :
அ.தி.மு.க. மேடைகளில் ரெக்காட் டான்ஸ் என்ற பெயரிலும் வசனம் என்ற பெயரிலும்… நின்னு பாக்கவும் முடியாது கேட்கவும் முடியாது அவ்வளவு ஆபாசமாகக் கீழ்தரமாகத் தமிழகம் முழுக்க எல்லா மேடைகளிலும் முழங்கிகிட்டே இருக்கிறார்கள் அ.தி. மு.க. காரர்கள். இது காவல்துறையின் பாதுகாப்போடு நடக்கிறது.கோவன் பயன்படுத்திய ஊத்திக் கொடுத்த வார்த்தைக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால்.. அதிமுக மேடையில் பெண்களை இவ்வளவு வக்கிரமா, கேவலமா பேசுகிற அவர்களுக்குத் தூக்கு தண்டனையே கொடுக்கனும்.

Raja Sivakkumar from Chennai : வெளிய வந்த பிறகும் பாடுங்க தோழரே, நாங்க சப்போர்ட் பண்றோம், வாட்ஸ்அப், நெட்ல எதில வேணாலும் போடுங்க… மூடாமல் ஓவதில்லை…

Bala G: சாராய அதிபர்களுக்காகவும் பெப்ஸி போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்காகவும் ஆட்சி நடத்துகிற ஜெயாவின் போலீஸ் டாஸ்மாக்கை மூடு பாடலுக்காக புரட்சிகர பாடகர் தோழர் கோவனை கைது செய்திருக்கிறது..

நா.முத்துக்குமார் தமிழன்: கொடநாட்டு கோமாளவள்ளியின் கொழுப்பெடுத்த பாசிசம். பாடலை பாடியதற்காக தேசத்துரோக வழக்கில் கைதா? இதுதான் பாசிசம்.

தமிழச்சி (பிரான்ஸ்) : தமிழ்நாட்டை ஆளும் ஜெயலலிதாவுக்கு, “கலை என்றால் சினிமாவில் ஆடும் டூயட்டாக இருந்தால் மட்டும் போதும்” என்று நினைக்கிறார். அவருடைய வயிற்றுப்பிழப்புக்கு வேண்டுமானால் “டூயட்” ஆட்டங்கள் கலையாக இருக்கலாம். ஆனால் அது மக்களுக்குச் சோறு போடாது. மக்களுக்காக பேசப்படும் கலைகளும் இலக்கியங்களும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதைத்தான் புரட்சிப் பாடகரான தோழர் கோவன் செய்திருக்கிறார். எனவே, “ஜெயலலிதாவே டாஸ்மார்க்கை மூடு. தோழர் கோவனை வெளியே விடு.”

00-thyaguதோழர் தியாகு:
‘உல்லாசம்’ என்று பாடியதாக கோவன் மீது குற்றம் சாட்டுகிறார்கள். Pleasant stay என்பது தங்கும் விடுதியின் பெயர்! Pleasant என்றால் உல்லாசம் என்றும் பொருள் படும்! “இங்கே வாருங்கள் உல்லாசம் அனுபவிக்கலாம்” என்று அர்த்தம் செய்து கொள்ள முடியுமா ?

ஸ்டாலின் பெலிக்ஸ்: “மூடு டாஸ்மாக்கை மூடு” போன்ற சமூக பிழையான பாடல்களை பாடாமல்… “டாடி மம்மி வீட்டில் இல்லை..”, “நேத்துராத்திரி எம்ம்மா…”, “கட்டி புடி கட்டி புடி டா… ” போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை பொதுமக்கள் பாடும்படி சமூகம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

Feroz Babu: எவண்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடச்சா செத்தான்; வை திஸ் கொலவெறி என பெண்களை இழிவு படுத்தி பாடி னால் மரியாதை. ஓபன் த டாஸ்மாக் எனும் பாடலுடன் வரும் படத்துக்கு வரி விலக்கு (இத்தனைக்கும் அதுல சின்னதா குடி குடியை கெடுக்கும் எனும் வாசகத்துடன்). ஆனால் மூடு டாஸ்மாக்கை என பாடினால் சட்ட விரோத கைது. என்னாங்கடா உங்க ஜனநாயகம் டே!

Vijii Ambedkar : முதுகு வளைந்தவனெல்லாம் மந்திரினு வெள்ளையும் சொல்லையுமா சுத்தும்போது, நிமிர்ந்து நிக்கிற மண்ணின் மைந்தன் சிறைக்கு தான் போகனும்…

Sundararajan Lawyer Sundar: மதுபானம் ஆட்சிக்கும் , அதிகாரத்துக்கும் நல்லது. மதுவிலக்கு கோரிக்கை ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும் எதிரானது. ஆட்சியும், அதிகாரமும்தான் தேசம் என்பதால் மதுவிலக்கு கோரிக்கை தேசத்திற்கு எதிரானது.

00-manushyaputranமனுஷ்யபுத்திரன்:
இன்று கோவனுக்கு நேர்ந்தது தமிழக அரசை எதிர்க்கும் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஜனநாய உரிமைகளைப் பாதுகாக்க கோவனின் பக்கம் நிற்போம். மாற்று கருத்துக்களின் குரல்வளையை நெரிக்கும் கரங்களுக்கு எதிராக நம் கரங்களை உயர்த்துவோம். டாஸ்மாக்கை எதிர்ப்பது தேச துரோகம் என்றால் நாம் தேச துரோகிகளாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லை.

Balan Guru: “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை சில ஆயிரம் மக்களுக்கு மட்டும் சென்றடைந்த பாடலை லட்சக்கணக்காகன மக்களுக்குக் கொண்டு சென்ற அம்மா ஆட்சியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

Sumi B: பேச்சுரிமை எழுத்துரிமை இருக்கிற ஜனநாயக நாட்டில் ‘பாட்டுரிமை’ இல்லையா…..!!! ‘அரெஸ்ட்’ உரிமைக்கும், கொடநாடு ‘ரெஸ்ட்’ உரிமைக்கும் முடிவு கட்ட ‘பாடு அஞ்சாதே பாடு’…!!!! தமிழ்நாடு இல்லடா, டாஸ்மாக் நாடுடா……. இங்க குடி இருக்கறவன் எலலாம் ‘குடிமகன்’ இல்லடா…… குடிக்கறவன் தாண்டா தேசதுரோகம் செயாத உண்மையான ‘குடிமகன்’.

ஆளூர் ஷானவாஸ்: கோவனை சிறை வைக்கிறீர்கள். கோவனின் புரட்சிப் பாடல்களை என்ன செவீர்கள்? அது என்னையும் கடந்து, என் நான்கு வயது மகன் வரை ஊடுருவிச் செல்கிறதே! அதை எப்படித் தடுப்பீர்கள்?

***

தொகுப்பு – இளங்கதிர்.

relase-kovan
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க