Sunday, November 3, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பென்னாகரம் கிறித்துவ தொண்டு நிறுவனத்தின் மோசடிகள்

பென்னாகரம் கிறித்துவ தொண்டு நிறுவனத்தின் மோசடிகள்

-

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், கண் பார்வையற்றோர், ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு, விதவைகள், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் மத்தியில் பழகி சில உதவிகளை செய்வது, பிறகு சலுகைகள் கொடுத்து கருணை உள்ளம் போல கபட நாடகமாடி மதமாற்றம் செய்வது, இதை காட்டி வெளிநாட்டு பணத்தை சுருட்டுவது என கொள்ளை கூடாரமாக   25 ஆண்டுகளாக பலகோடி ரூபாய்களை கிறித்துவ கெரீசிம் புனர்வாழ்வு தொண்டு நிறுவனம் சுருட்டி உள்ளது. இது பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு என்ற பெயரில் ஒரு மாதத்திற்கு 30 லட்சம் ரூபாய் இந்த தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாக கூறுப்படுகிறது. இதனை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்காமல் கொள்ளையடித்து கொழுத்து வருகின்றனர் இந்திரா, ஜோசப் பொன்ராஜ், கைகூலி லாரன்ஸ் சந்திரன் உள்ளிட்ட  தொண்டு நிறுவனத்தின் நபர்கள். மாதம் ஒரு புதிய கார், பெரிய நகரங்களில் ஆடம்பர பங்களா, உல்லாசம் என கும்மாளமிட்டு வருகிறது இந்த கும்பல். மேலும் ரியல் எஸ்டேட், கல்வி நிலையங்கள் தொடங்கி, பல செயல்களால் பலகோடிகளை சுருட்டி மோசடி செய்து வருகிறது. மேற்கண்ட இவர்களின் செயல்களுக்கு இடையூராக இருப்பவர்களை பழிவாங்கி கொடுமைபடுத்துகிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு பென்னாகரம் பெத்தம்பட்டியில் இக்கும்பல் ஒரு சிறிய சர்ச் ஆரம்பித்தது. புதியதாக சர்ச் தொடங்குவது என்றால் வறிய ஏழை, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சென்று அடித்தளமிடுகின்றர். மேலும் கிராமந்தோறும் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்து மறுவாழ்வு கொடுப்பதாக கூறி வெளிநாட்டவர் வரும் பொழுது இவர்களை காட்டி போட்டோ எடுத்துகொள்வது, உதவுவது போல் நடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். இவர்களின் திருட்டு வேலைகள் எல்லாம் கடந்த ஓராண்டுகளாக அம்பலப்பட்டு நாறிவருகிறது. ஏன் இன்றைக்கு பெத்தம்பட்டி மக்கள் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் அந்த சர்ச்க்குள் சாதாரணமாக நுழைய முடியாது.

மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு கணிணி, கோழிபண்ணை, தையலெந்திரம், மைக்செட், கல்வி உதவிதொகை என பல்வேறு உதவிகளை செய்வது போல் நாடகமாடினர். பாலக்கோடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, பாப்பாரபட்டியை சேர்ந்த சின்னராஜ், ஆறுமுகம், தருமன் போன்ற மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொடுத்த பொருட்களை எல்லாம் மிரட்டி பறித்து வந்துள்ளனர். இம்மக்கள் வளர்த்த கோழிகளைக் கூட அள்ளி சென்றுள்ளனர். இது போல் உதவிகளை காட்டி உண்மையாக மாற்றுதிறனாளிகளுக்கு சேர வேண்டிய பொருள்கள், பணம் அனைத்தையும் மாதம் பல லட்சம் வரை திருடியது தற்போது அம்பலமாகி உள்ளது. கடந்த 25 வருடங்களாக இதுபோன்ற மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

தாங்கள் ஏமாற்றபட்டதை கண்டு மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த திருட்டு கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையும், அதிகாரிகளும் இந்த கிறித்துவ தொண்டு நிறுவனத்திடம் கூட்டு சேர்ந்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த திருட்டு கும்பலை அம்பலபடுத்திய 5 ஊழியர்களையும் வேலையை விட்டு நீக்கி உள்ளனர்.

இது போன்ற கிறித்துவ தொண்டு நிறுவனத்தின் உண்மையான நோக்கம், சில உதவிகளை செய்து ஏழை வறிய தாழ்த்தபட்ட மக்களை மதமாற்றம் செய்வது, எவன் எப்படி போனால் நமக்கு என்ன, எல்லாம் தேவன் கையில் இருக்கிறது. தான் பிழைத்தால் போதும் என மக்களின் சிந்தனையை திசைத்திருப்பி போராட்ட உணர்வற்ற நபர்களாக்குவது என்பதுதான் இவர்களின் உண்மையான நோக்கம். அதே சமயம் அந்நிய செலாவணி வருகை, மக்கள் நலனில் அக்கரையற்ற போக்கு இது போன்ற காரணங்களால் அரசே இந்த குற்ற செயல்களுக்கு துணையாக நிற்கிறது.

எனவே பெத்தம்பட்டி, ராஜாவூரில் இருக்கின்ற கிறித்துவ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றியதற்கு எதிராக ஒன்றிணைவோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நியாயமாக சேரவேண்டிய பொருட்களை பெற்றுதர அணிதிரள்வோம்.

மாற்றுத்திறனாளிகளை காட்டி பலகோடி சுருட்டிய பென்னாகரம் பெத்தம்பட்டி, ராஜாவூர் கிறித்துவ கெரிசீம் புனர்வாழ்வு தொண்டு நிறுவனத்தை தடைச்செய்! அரசே ஏற்று நடத்து !

தெருமுனைக்கூட்டம்

நாள்: 15-3-2016 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு

இடம்: பென்னாகரம் டெம்போ ஸ்டேண்டு

தலைமை : தோழர் கோபிநாத், வட்டார செயலர், பென்னாகரம்

உறையாற்றுவோர்: தோழர் மாயாண்டி, வட்டார குழு உறுப்பினர், பென்னாகரம்,

தோழர் ஜானகிராமன் வழக்கறிஞர், மாவட்ட செயலர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தருமபுரி .

 

படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

 

விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் வட்டம் ,
தருமபுரி மாவட்டம்.
தொடர்புக்கு:  99433 12467

  1. மோசடிகளை அம்பலபடுத்துங்கள்.பாதிக்கப்பட்டவர்களுக்கு
    உறுதுணையாய் இருங்கள்.ஆனால்,

    ** இது போன்ற கிறித்துவ தொண்டு நிறுவனத்தின் உண்மையான நோக்கம்,
    சில உதவிகளை செய்து ஏழை வறிய தாழ்த்தபட்ட மக்களை மதமாற்றம் செய்வது,
    நாட்டுபற்று இல்லாத நபர்ளாக மக்களை மாற்றுவது **

    இது என்ன வினவு தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுத
    ஆரம்பித்து விட்டாரா? பாசிச பாரத தீய ஜனதா பார்ட்டி
    ஆட்சிக்கு வந்த பின் நாட்டுப்பற்றின் இலக்கணம் மாற்றப்பட்டுவிட்டதே?
    இப்போது எதற்கு இந்த வார்த்தை பிரயோகங்கள்?

  2. சில(ந்)திய சக்திகளகு இப்படித்தான் கோபம் வரும் உன்மைய சொனால்

    • ** சில(ந்)திய சக்திகளகு இப்படித்தான் கோபம் வரும் உன்மைய சொனால் **
      மேலே இருப்பது இப்படி இருக்க வேண்டும்,
      சில(ந்)தீய சக்திகளுக்கு இப்படித்தான் கோபம் வரும் உண்மையை சொன்னால்.
      என் கருத்தை குறை கூறலாம்,
      ஆனால் தமிழை கூறு போடாதே!
      பொதுவாகவே அம்பிகளுக்கு தமிழ் என்றால் இளக்காரம்தான்.
      நீச பாஷை அல்லவா? ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய சொன்னால்
      சீனி மாமா பொளந்து கட்டுவார்.

      • சிலந்தி you keep diverting from the main stream.you need not give me any certificate, Im against those who called tamil as நீச பாஷை and also those who termed tamil as காட்டுமிராண்டி மொழி

        • நான் தான் சொன்னேன்ல.
          ஆங்கிலத்துல பொளந்து கட்டுவார்னு.

          அப்புறம் முக்கிய பிரச்னைக்கு வருவோம்.
          இது போன்ற பித்தலாட்டத்தில் ஈடுபடும் தொண்டு
          நிறுவனங்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் பாய்வதில்லை?
          அந்த ஏரியா காவலர்கள் எல்லோரும் கிருஸ்துவர்களா?
          அதற்க்கு எந்த அவசியமும் இல்லை.காந்தி படம் போட்ட
          காகிதம் செய்யும் வேலை இது.பணத்தை வாங்கி கொண்டு
          அயோக்கியத்தனத்தை தட்டி கேட்காமல் இருப்பவனும்,
          சாதாரண அரசு அலுவலகத்தில் தன காரியம் உடனே நடக்க
          லஞ்சம் கொடுத்து தனக்கு முன்னே காத்திருப்பவனை
          பின்னுக்கு தள்ளுபவனும் தேச துரோகியே.இவனை
          போன்றவர்களால் நாடு மேலும் மேலும் சீரழிகிறது.

          சந்தடி சாக்கில் “காட்டுமிராண்டி மொழி” என்ற இடைசெருகல் வேறு.
          இதை தாத்தா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பது
          ஊருக்கே தெரியும்.

          • நீச பாஷைக்கு ஒரு அர்த்தம், காட்டுமிராண்டி மொழிக்கு ஒரு அர்த்தமா? யாரு உங்க தாத்தா சொன்னாரா?

            • When Tamilians looked in to old myths and fantasies in Tamil, instead of science and progress, Periyar scolded them to bring them back to senses. Brahmins think that Sanskrit alone is divine and Tamil is inferior. This is dogmatic and without reason or context. First is defenitely different from second.

              • நன்றி நண்பரே! நான் சொல்ல வேண்டியதை நீங்கள்
                சொல்லி விட்டீர்கள்.இது அவருக்கும் தெரியும்.
                இருந்தாலும் தெரியாதது போல் ஒரு பாசாங்கு.

                • I am supporting the protest of Vinavu here. I don’t need to clarify my stance to anyone. If I have opposed the protest, I have no shame to oppose Vinavu 🙂

                  By the way, the statement that conversion makes one lesser patriotic is bit hurting. It sounds like RSS statement.

            • ஆம். பகுத்தறிவு பகலவன்,வெண் தாடி வேந்தர்,
              என் ஈரோட்டு தாத்தா சொன்னார்.

              • மன்னிக்கவும் நண்பரே!
                சீனி மாமாவுக்கு போட வேண்டிய பதில் தவறுதலாக
                உங்கள் பெட்டியில் இடம் பெற்று விட்டது.

            • ஆமாம் அய்யா! பகுத்தறிவு பகலவன்,வெண் தாடி வேந்தர்,
              என் ஈரோட்டு தாத்தா சொன்னார்.

  3. இந்த ஊர்ப்பெயர் நிச்சயமாக ‘பென்னாகரம்’ இல்லை, பெண்ணாகரம் என்பது தான் சரியானது என்று நம்புகிறேன். தமிழ்நாட்டிலேயே, தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்களை எழுத்துப் பிழையுடன் எழுதுவது வெறும் அபத்தம். 🙂

    “உரிமை யொழுக்கந் தலைநின்ற வுயர்தொன் மரபி னீடுமனைத்
    தரும நெறியால் வாழ்குடிக டழைத்து வளரும் தன்மையதாய்
    வருமஞ் சுறையு மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த வளம்புறவிற்
    பெருமை யுலகு பெறவிளங்கு மேல்பாற் பெண்ணா கடமூதூர்.”
    (திருத்தொண்டர் திருவந்தாதி)

    பெண்ணாகடம் > பெண்ணாகரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க