JNU நேரடி ரிப்போர்ட் 7
ஜே.என்.யு வளாகத்தில் வினவு குழுவினர் பார்த்த மாணவர் விடுதி அறைகளிலேயே அந்த அறை வித்தியாசமாக இருந்தது. அங்கே புத்தகங்கள் கலைந்து கிடக்கவில்லை. படுக்கை வாரிச்சுருட்டி போடப்பட்டிருக்கவில்லை. மேசையின் மீது பேனாக்கள் சிதறிக் கிடக்கவில்லை. தரை சுத்தமாக பெருக்கித் துடைக்கப்பட்டிருந்தது. பயன்பாட்டுக்கு அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே அந்த அறையில் இருந்தன. அந்த அறை மிக நேர்த்தியாகவும் எளிமையாகவும் இருந்தது. அந்த அறையில் குடியிருந்தவர் பெயர் ஷிங்லாய். மணிப்பூர் மாநிலத்தின் நாகா இன மக்கள் பிரிவைச் சேர்ந்தவர் அவர்.
வட இந்தியர்கள் உங்களிடம் எப்படிப் பழகுகிறார்கள்?
எங்களை வினோதமாக பார்ப்பார்கள். சிலர் தங்களுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள். ’சிங்க்கிஸ்’ என்று கேலியாக அழைப்பார்கள். எல்லாரும் அப்படித் தான் என்று சொல்லி விடமுடியாது. ஆனால், அநேகமானோர் அப்படித் தான். முதலில் எனக்கு ஆத்திரமாக வந்தது. ஒரு கட்டத்தில் சண்டைக்குப் போகலாமா என்று கூட யோசித்திருக்கிறேன். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல ஒன்றை புரிந்து கொண்டேன்.
இவர்களுக்கெல்லாம் இந்தியா என்பது ஒரு முனையில் பஞ்சாபில் துவங்கி பெங்காலில் முடிகிறது.. இன்னொரு முனையில் உ.பி-யில் துவங்கி மஹாராஷ்டிராவில் எங்கோ முடிந்து விடுகிறது. இது ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லைக் கோடு. இதற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் இந்தியர்களாகவே கருதிக் கொள்வதில்லை. ஒரு கட்டத்தில், எனது தேசியத்தன்மை குறித்து நானே நீண்ட விளக்கங்கள் கொடுத்து புரியவைக்க வேண்டிய அவசியத்தை “சிங்க்கீஸ்” ரத்து செய்து விட்டதை உணர்ந்து அமைதியடைந்தேன். இப்போதெல்லாம் அப்படிக் கூப்பிடுபவர்களை நோக்கி என்னால் புன்னகைக்க முடிகிறது. நீங்கள் கூட ஒரு ’மட்ராஸீ’ தானே?
இங்கே எழுப்பப்பட்ட கோஷங்கள் குறித்த உங்கள் கருத்து எதுவாக இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது. அதே போல் தான் இந்தியா என்கிற இந்த ஏற்பாட்டைக் குறித்து உங்கள் கருத்தையும் அனுமானிக்க முடிகிறது. எனினும், நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?
இந்தியா என்பது ஒரு கேலிக்கூத்தான நகைச்சுவை (Farce). இந்தியா என்பது சாவர்கருடையது. சங்பரிவாரங்களுடையது. எங்களுடையது அல்ல. நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள். தேசியம் குறித்து அவர்கள் பீற்றிக் கொள்ளும் எந்தக் கற்பிதங்களின் கீழ் எங்களை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
இதைத் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார்கள் அல்லவா? இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றல்லவா பாட புத்தங்கள் நமக்குக் கற்பித்துள்ளன?
சரி. மங்கோலிய முகமும் உடலும் கொண்ட எனது தோற்றத்தை விடுங்கள். உணவுப் பழக்கம் குறித்து சொன்னேன். அதற்கும் மேலே எங்கள் சமூகத்தில் சாதி கிடையாது. எங்கள் திருமணங்களில் வரதட்சிணை கிடையாது. கணவனும், பிள்ளைகளும் தின்றது போக எஞ்சியதைத் தின்பதே ஒரு குடும்பப் பெண்ணுக்கு அழகு என்கிற பைத்தியக்காரத்தனங்கள் எங்களிடம் இல்லை. பெண்களுக்கு எங்கள் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் மிகவும் தனித்துவமானது. ஒரு குடும்பத்தின் தீர்மானங்களை எடுப்பதில் மட்டுமல்ல, எங்களது சர்ச்சுகளிலும், சமூக இயக்கங்களிலும் பெண்களின் குரலுக்கு முக்கியமான இடமுள்ளது. எங்களது பொருளாதார வாழ்வு வேறுபட்டது. எமது விவசாய முறை வேறு. இப்படிச் சொல்லத் துவங்கினால் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்களென்றால், ஒரு கோட்டைக் கிழித்து அதற்கு உள்ளே இருப்பவர்கள் அத்தனை பேரும் இந்தியர்கள் என்கிறீர்கள். இறைவனின் கருணையால் உங்கள் கோடு துணைக் கண்டத்துக்குள்ளே மட்டும் கிழிக்கப்பட்டிருக்கிறது. ஸ்காண்டிநேவிய காகாசியர்களும் ஆப்ரிக்க கருப்பர்களும் நல்வாய்ப்பாக தப்பித்துக் கொண்டார்கள்.
நாகாக்களின் தனித்துவம் குறித்து உங்களிடம் அதிக பெருமிதம் தெரிகிறது. நாகாக்கள் வெளிநபர்கள் குறித்த அச்சம் அல்லது வெறுப்பு கொண்டவர்கள் (Xenophobic) என்று சொல்லப்படுவது உண்மையா?
பழைய காலங்களில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நிச்சயமாக இல்லை
என்றால் நாகாக்களிடையே கலப்புத் திருமணங்கள் உள்ளதா – குறிப்பாக குக்கி இனத்தவருடன்?
நிறைய உள்ளது. நாகா குக்கி இனத்தவரிடையே மட்டுமல்ல, சிலர் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த மைத்தாய் இனத்தவரோடும் கூட திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் பழங்குடி இனத்தவர்கள். எட்ட நின்று பார்க்கும் போது கொஞ்சம் கரடு முரடாகத் தெரிவோம். பழகிப் பாருங்கள் உங்களுக்கே புரியும். நாகா மக்கள் யாரையும் எளிதாக நம்பி விடுவார்கள். ஒரு தமிழராக இருந்தாலும் எங்கள் நாகா பெண்ணை காதல் திருமணம் செய்வதை நாங்கள் தடுக்க மாட்டோம். எங்கள் பெண்ணை அவர் துன்புறுத்தாமல் மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் வரை அந்தக் குடும்ப விவகாரத்தில் தலையிடவும் மாட்டோம். ஆனால், நீங்கள் திருமணம் செய்யப் போவது சுதந்திரமான சிந்தனைகள் கொண்ட நாகா பெண் என்பதை மறந்து விடாதீர்கள். அவள் ஒரு அன்பான அடிமையாக இருக்க மாட்டாள். இந்தியர்களால் எங்கள் பெண்களை சமாளிக்க முடியாது என்பதே எனது புரிதல்… சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.
ஒரு குடும்பத்தின் அங்கமாகவும் சமூகத்தின் அங்கமாகவும் நாகா பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சம உரிமை குறித்து குறிப்பிட்ட ஷிங்லாய், பல்வேறு சமூக அமைப்புகள் பெண்களாலேயே முழுவதுமாக நடத்தப்படுகின்றது என்பதையும் குறிப்பிட்டார். குறிப்பாக நாகா தாய்மார்கள் சங்கத்திற்கு அவர்கள் சமூகத்தில் உள்ள செல்வாக்கைப் பற்றியும் குறிப்பிட்டார்.
வேறுபாடுகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். உங்களது விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்லுங்கள். கிரிக்கெட் பார்ப்பதுண்டா? இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் போது உங்களுக்கு அந்தப் பரபரப்பு இருக்குமா?
கிரிக்கெட்டா? அது மந்த புத்திக்காரர்களின் விளையாட்டு. அதனால் தானோ என்னவோ இந்தியர்களுக்கு அது மிகவும் பிடிக்கிறது. நாங்கள் கிரிக்கெட் பார்ப்பதும் இல்லை. விளையாடுவதும் இல்லை. அதே போல இந்தியாவின் மற்ற விளையாட்டு வெற்றிகளையும் தோல்விகளையும் உங்களைப் போல் உணர்வுப் பூர்வமாக அல்லாமல் ஒரு விளையாட்டு என்கிற அளவில் மட்டுமே பார்க்கிறோம். எங்கள் விளையாட்டுக்கள் மல்யுத்தமும் வில்வித்தையும் தான். இப்போது மேற்கத்திய கலாச்சார தாக்கத்தினால் கால்பந்தாட்டம் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது. வாலிபால் மற்றும் பாஸ்கட்பால் கூட நிறைய பேரால் விளையாடப்படுகின்றது. பொதுவாக எங்கள் விளையாட்டுக்கள் உடல் வலிமையைச் சார்ந்ததாகவே இருக்கும்
ஆம்.. நாகா தற்காப்புக் கலை பற்றிய காணொளித் துண்டு ஒன்றைப் பார்த்திருக்கிறோம். கொடூரமான அசைவுகள் கொண்டதாக இருந்த நினைவு.
சரி தான். அலங்காரமான அசைவுகளும் நுணுக்கங்களும் குறைவாகவே இருக்கும்.. நேரடியாக உயிரைப் போக்கும் அசைவுகள் கொண்டதாகவும் இருக்கும். எங்களது பாரம்பரிய மல்யுத்தமும் அப்படித்தான்.. புள்ளிகள் எடுப்பதை விட எதிராளியின் எலும்பு இணைப்புகளை முறித்துப் போடுவதற்கு தான் வீரர்கள் முனைவார்கள். நண்பரே… நாங்கள் வேட்டைக்காரர்கள்… எங்களது சண்டைக் கலைகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள்? ஆனால் அதெல்லாம் சில பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கதை. இப்போது நிறைய மாறியுள்ளது.. எங்களது தற்காப்புக் கலைகள் விளையாட்டின் அம்சங்களை நிறைய உள்வாங்கி இருக்கிறது.
உங்கள் பொழுது போக்கு பற்றிச் சொல்லுங்கள். பாலிவுட் சினிமாக்கள் பார்ப்பதுண்டா?
இந்தி சினிமாக்களை நாங்கள் விரும்புவதில்லை.. மொழி புரியாது என்பது ஒரு காரணம்.. அடுத்து பாலிவுட் சினிமாக்களில் காட்டப்படும் காதல், குடும்பம் போன்ற உணர்ச்சிகள் குமட்டலை ஏற்படுத்துவதாக இருப்பது இன்னொரு காரணம். மற்றபடி ஹாலிவுட் சினிமாக்களும் இப்போது சமீபத்திய சில ஆண்டுகளாக கொரிய சினிமாக்களும் தான் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இந்தி தெரியாது என்றா சொல்கிறீர்கள்? உங்கள் மாநில கல்வித் திட்டத்தில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதாக அல்லவா கேள்விப்பட்டோம்?
ஆம் எட்டாம் வகுப்பு வரை இந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், அது இந்தி மொழியில் ஆனா ஆவன்னா அளவுக்கு மேல் தெரிந்து கொள்ளப் பயன்படாது. எங்கள் மொழியின் கட்டுமானமே இந்திய மொழிகளுக்கு நேர் எதிரானது. எனவே எத்தனை ஆண்டுகள் படித்தாலும் அந்த மொழியே எங்கள் நாக்குக்கு விரோதமானது தான்
சரி, நாகா சமூகத்தில் உள்ள சொத்துடைமை மற்றும் விவசாய முறை பற்றி சொல்லுங்கள். உங்கள் சமூகத்தில் தனிச்சொத்துடைமை இல்லை என்று சிலர் குறிப்பிடுவது உண்மையா?
முற்றிலும் அப்படிச் சொல்ல முடியாது… எங்களிடம் நான்கு வகையான சொத்துடைமை வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு தனிநபருக்கும் தனியே சொத்து உண்டு. அது போக குடும்பத்திற்கான சொத்து, இனத்திற்கான (Clan) சொத்து மற்றும் கிராமத்திற்கான சொத்துக்களும் இருக்கின்றன.
குழப்பமாக இருக்கிறது. இதில் கிடைக்கும் வருமானம் எப்படி பகிர்ந்து கொள்ளப்படுகின்றது?
அதைப் புரிந்து கொள்ள நீங்கள் முதலில் எங்களது விவசாய முறையைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது விவசாயம் இடம்மாறும் சாகுபடி (Shifting Cultivation) என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாக, எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் பத்து மலைகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மலையை சாகுபடிக்காக எங்கள் கிராம கவுன்சில் தேர்ந்தெடுக்கும். இது பிப்ரவரி மாதம் நடக்கும். தேர்தெடுக்கப்பட்ட மலையில் உள்ள மரங்கள் மற்றும் களைகளை தீயிட்டு எரிப்போம். முதல் மரத்தை வெட்டும் உரிமை கிராமத் தலைவருக்கே உண்டு. மரங்கள் எரிந்து சாம்பல் பரவிய பின், ஜூன் மாதம் விதைப்போம் ஆகஸ்டில் ஒரு முறை களையெடுப்போம். இடையில் ஜூலை மாதம் தொடங்கி பருவ மழை பொழியத் துவங்கும். செப்டெம்பர் இறுதியிலிருந்து நவம்பருக்குள் அறுவடை முடிந்திருக்கும்..
எங்களது விவசாயத்தில் பெரும்பாலும் நெல் சாகுபடிக்கு முதன்மையான இடம் உண்டு. அது தவிர வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்வோம். அறுவடை செய்த பின் விளை பொருட்களை ஊரில் பொதுவான இடத்தில் சேமித்து வைப்போம். சிலருக்கு நிலம் இருக்கும். சிலருக்கு நிலம் இருக்காது.. நிலம் வைத்துள்ளவர்கள் தங்களது சொந்த நிலத்தில் உழைத்தது போக கிராம நிலத்திலும், இனத்திற்கான நிலத்திலும் உழைக்க வேண்டும். நிலமற்றவர்கள் நிலவுடைமையாளர்களின் நிலங்களின் வேலை செய்வதோடு பொது நிலங்களிலும் வேலை செய்வார்கள். அறுவடை முடிந்த பின் விளைச்சல் எல்லோருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். நிலவுடைமையாளர்களுக்கு மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் பங்கு கிடைக்கும். எனினும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகப் பெரியளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.
இந்த முறையினால் தான் எங்கள் சமூகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டையோ, ஏழைகளையோ, பிச்சையெடுப்பவர்களையோ பசியால் வாடுபவர்களையோ நீங்கள் காண முடியாது. எங்கள் உணவு முறை தனிச்சிறப்பானது.. பரந்து விரிந்த காடு எங்களுக்கு இருக்கிறது.. அதன் ஒவ்வொரு மரத்தின் இலைகளையும், பட்டைகளையும், வேரையும், எதற்காக எப்போது தின்ன வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும். பிரதான உணவான அரிசியோடு சேர்த்து நிறைய பச்சை இலைகளுக்கும், இறைச்சிக்கும் இடமுண்டு. மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் விருப்பமான அசைவ உணவுகள். வேட்டையில் காட்டுப் பன்றிகளும், எருமைகளும் நிறைய கிடைக்கும்..
நாகா சமூக அமைப்பு பற்றிச் சொல்லுங்கள்.
நாகா ஒரு இனக்குழுச் சமூகம். ஒவ்வொரு கிராமத்துக்கும் கிராமத் தலைவர் இருப்பார். அவருக்கு வழிகாட்டுவதற்காக ஒரு கிராம கவுன்சில் இருக்கும். இந்தக் கவுன்சிலின் அதிகாரம் தான் உச்சபட்சமானது. அதே போல் நாங்கள் இனத்தால் ஒன்று என்றாலும் எங்களிடையே பல்வேறு மொழிகள் உள்ளன. கிட்டத்தட்ட 40 மொழிகள் நாகா மக்களிடையே உள்ளன. எங்கள் பக்கத்து கிராமத்தவர்கள் பேசும் மொழி எனக்குப் புரியாது. என்றாலும் எங்கள் அனைவரையும் மொழியால் இணைப்பது ஆங்கிலம் தான். தொன்னூறு சதவீதம் பேர் ஆங்கிலம் எழுத பேச படிக்கத் தெரிந்தவர்கள் தான்.
விவசாய முறை பற்றிச் சொன்னீர்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த விவசாய முறையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவே இல்லையா? உலகமயமாக்கத்தின் தாக்கம் எதுவுமே இல்லையா?
நிறைய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நான் குறிப்பிட்ட விவசாய முறை இப்போதும் உள்ளடங்கிய பகுதிகளில் பின்பற்றப்படுகின்றது. ஆனால், தற்போது நகரங்களின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய முறையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலரும் பழங்கள், பூக்கள் போன்ற பணப்பயிர்களை விளைவிக்கின்றனர். முன்பெல்லாம் நாங்கள் அரிசிக்காக யாரையும் எதிர்பார்க்க மாட்டோம். இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நாகா வாழ்க்கையில் பணம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. வசதி வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளனர். பல நாகா இளைஞர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்… இங்கே சீன உணவகங்களில் நீங்கள் பார்க்கிறவர்கள் எல்லாம் சீனர்கள் அல்ல, வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான். நாங்கள் மேற்கே வருவதைப் போல பீகாரிகள் கிழக்கே வருகிறார்கள். விவசாய கூலிகளாகவும், இன்னபிற வேலைகளிலும் பீகாரிகள் அதிகரித்து வருகிறார்கள்.
உலகமயமாக்கலுக்குப் பின் பணத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டீர்கள்.. அதன் பின்விளைவுகள் பற்றிச் சொல்லுங்கள்.
எங்கள் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை. அங்கே திருட்டு என்பதை நாங்கள் முன்பெல்லாம் கேள்விப்பட்டதில்லை. எங்கள் வீடுகளுக்கு பூட்டுக்கள் கிடையாது. இப்போதும் கூட உள்ளொடுங்கிய கிராமங்களில் பூட்டாத வீடுகளைப் பார்ப்பீர்கள். அங்கே உள்ள கடைகளில் கடைக்காரர்கள் இருக்கமாட்டார்கள். நீங்களாகவே பணத்தை வைத்து விட்டுத் தேவையான பொருளை எடுத்துப் போகலாம். கேட்பதற்கு ஏதோ உட்டோபிய நகரத்தைப் பற்றிய வர்ணனை போல் தோன்றுகிறதல்லவா? ஆனால் இவையெல்லாம் உண்மைகள். இதோ உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே இந்த தோழர் இதையெல்லாம் நேரடியாகவே பார்த்திருக்கிறார். ஆனால்.. இப்போது நகரங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலைமை மாறி வருகிறது. திருட்டு அதிகரித்திருக்கிறது. பணம் தன்னோடு சேர்த்து பேராசையையும், களவையும் அழைத்து வந்துள்ளது.
சரி, அடுத்த கேள்வி. எங்கள் பகுதியில் இந்துத்துவர்கள் கிருத்துவ மதமாற்றத்தின் அபாயங்களைப் பற்றிச் சொல்வதற்கு வட கிழக்கு இந்தியாவையே உதாரணமாக காட்டுவார்கள்..
அப்படியா? எந்த மாதிரியான அபாயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்?
நாகா பிரிவினைவாத அமைப்புகளுக்கு துப்பாக்கி சப்ளையே சர்ச்சுகளின் மூலம் தான் நடக்கிறதாமே? கிருத்துவ மதத்திற்கு மாறி விட்டால் தேசத்தையே மதிக்காத போக்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்று விடும் என்பதற்கு நாகா பிரிவினைவாத அமைப்புகளே உதாரணம் என்கிறார்கள்
ஏசுவே.. ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதி தங்களுக்குச் சொந்தமில்லாத தேசிய கற்பிதங்களை ஏன் மதிக்க வேண்டும்? இதில் மதம் எங்கே வந்தது? நாகா விடுதலை இயக்கங்கள் துப்பாக்கிகளுக்காக சர்ச்சுகளை ஏன் சார்ந்திருக்க வேண்டும்? சர்ச்சுகளை அவர்கள் ஆயுதங்களுக்காக சார்ந்திருந்தார்களென்றால் எப்போதோ வீழ்த்தப்பட்டிருப்பார்கள். நாங்கள் பெரும்பான்மையாக சி.என்.ஐ (தென்னிந்தியாவில் சி.எஸ்.ஐ) சர்ச்சுகளைச் சேர்ந்தவர்கள்.. கணிசமாக கத்தோலிக்கர்களும் உள்ளனர். விடுதலை இயக்கங்களின் பால் சர்ச்சுகளுக்கு அனுதாபம் உள்ளதே தவிர நேரடியாக கீழே இறங்கி ஆயுதங்களை கைமாற்றி விடுமளவிற்கு அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஏனெனில், இந்தியா முழுவதும் அவர்களுக்கு சொத்துக்களும், இன்னபிற நலன்களும் உள்ளன. எங்களை ஆதரிக்கப் போய் அவற்றையெல்லாம் இழப்பதற்கு சர்ச் என்பது முட்டாள்களின் கூடாரமா என்ன?
மற்றபடி நாகா வாழ்வில் கிருஸ்தவத்தின் பங்கு என்ன?
கிருஸ்தவம் அறிமுகமாவதற்கு முன் நாங்கள் இயற்கை வழிபாட்டாளர்களாக இருந்துள்ளோம். கிருஸ்தவம் நாகா சமூகத்திற்கு அறிமுகமான போது எங்களது கலாச்சார அடிப்படைகளை பெரிதும் மாற்றாமல் பல அம்சங்களை உட்செறித்துக் கொண்டது. உதாரணமாக எங்கள் பாரம்பரிய வழக்கங்கள், விழாக்கள்.. மற்றபடி மற்ற பகுதிகளில் சர்ச்சின் செல்வாக்கு எப்படியோ அப்படித்தான். பிறப்பு முதல் இறப்பு வரை சகலமும் சர்ச்சோடு பிணைந்தே இருக்கும்.
கடந்த இருபதாண்டுகளாக எல்லா மதங்களிலும் அதிதீவிர தூய்மைவாத போக்கு தலையெடுத்து வருகின்றது.. இசுலாத்தில் வஹாபியப் போக்கு, இந்துத்துவத்தின் எழுச்சி.. கிருஸ்தவத்தில் பெந்தெகொஸ்தேவினர் உள்ளார்கள்.. வட கிழக்கில் நாகாக்கள் இடையே பெந்தெகொஸ்தேவினரின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?
பெந்தெகொஸ்தே என்று மட்டும் சொல்ல முடியாது.. பொதுவாகவே இவாஞ்சலிஸ்ட் வகைப்பட்ட கிருஸ்தவ சபைகள் மெல்ல மெல்ல செல்வாக்குப் பெற்று வருகின்றன. கத்தோலிக்கர்களிடையே கூட ப்ரெஸ்பெடீரியன் என்ற ஒரு பிரிவு செல்வாக்கு பெற்று வருகின்றது. இவர்களை கத்தோலிக்க பெந்தெகொஸ்தே என்று சொல்லலாம். இவர்கள் யாருக்கும் பதிலளிக்கவோ கணக்குக் காட்டவோ தேவையில்லை. இவர்களைப் பொறுத்தவரை தங்களை கடவுளுக்கு நிகரான ஞானிகளாகவும் எதிரே அமர்ந்திருப்போரெல்லாம் சாத்தானுக்கு நிகரான பாவிகளாகவும் கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்தில் ஆபத்தான சக்திகளாக வளர்வதற்குரிய எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது – அதே நேரம் நான் பைபிள் சொல்லும் படைப்புக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கடவுள் மனிதனுக்கு மூளையைக் கொடுத்திருப்பதே எது சரி எது தவறு என்று பகுத்தறிவதற்காகத் தான். உழைக்காமல் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு மட்டும் இருந்தால் சாப்பாட்டு மேசை நிறைந்து விடுமா என்ன?
சரி, இந்திய அரசோடு நாகா போராளி இயக்கங்கள் செய்து கொண்டுள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து சொல்லுங்கள்.
அதை அமைதி ஒப்பந்தம் என்று அழைக்க முடியாது.. இப்போதைக்கு அது அமைதி ஒப்பந்தத்திற்கான ஒரு வரைவுச் சட்டகம் தான். இந்தச் சட்டகத்துக்குள் இந்திய அரசு சொருகப் போவது ஒரு நாகாவின் புகைப்படத்தையா அல்லது மோடியின் புகைப்படத்தையா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. மேலும், நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது பிரதமர் அல்ல. பிரதமரின் முன்னிலையில் ஒரு அதிகாரி தான் கையெழுத்திட்டிருக்கிறார். ஒருவேளை மோடியே கையெழுத்திட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
நீங்கள் மோடியின் மேல் நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரிகிறதே..
நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.
ஜே.என்.யு வளாகத்தில் மோடிக்கு இப்படி ஒரு ஆதரவா? அதுவும் ஒரு நாகா இளைஞர் மோடியை ஆதரிப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது…
பலமாகச் சிரிக்கிறார்.. மோடி ஆதரவு என்பதை அப்படியே இந்துத்துவ ஆதரவு என்று புரிந்து கொள்ளப் போகிறீர்கள். இந்துத்துவ பாசிசம் என்கிற கருத்தியலில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.. ஆனால், இதில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒரு விசயம் இருக்கிறது. இதே காங்கிரஸ் அரசாங்கம் என்று வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் மெனக்கெட்டு நாகாக்கள் என்பவர்கள் யார் தெரியுமா? என்பதில் ஆரம்பித்து நாங்கள் தனித்துவமானவர்கள் என்பதை புரியவைக்க மொத்த கதையையும் விளக்க வேண்டும். அவர்கள் எல்லா கதைகளையும் கேட்டு விட்டு, கடைசியில்.. ‘இத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் நாமெல்லாரும் இந்தியர்கள் தானே’ என்பார்கள்.. மீண்டும் வேறு விதமாக புரியவைக்க மெனக்கெட வேண்டும்.. இந்துத்துவ சக்திகளிடம் அந்த சங்கடங்கள் இல்லை.. ‘ஏய், இதோ பார் நாங்கள் மாடு தின்போம், எங்களிடம் சாதி இல்லை’ என்று மட்டும் சொன்னால் போதும். ‘அட, இது பாரதிய கலாச்சாரம் இல்லையே’ என்று கதையின் விடுபட்ட பகுதிகளை அவனே நிரப்பிக் கொள்வான். இந்திய தேசியம் என்பதற்கு அவர்கள் சொல்லும் எந்த வரையறைக்குள்ளும் நாங்கள் இல்லாதிருக்கும் ஒரே தகுதி போதும் நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு. ’நாங்கள் இந்தியர்களில்லை. கெடு வாய்ப்பாக எங்கள் நிலத்தின் மீது நீங்களே கோடு கிழித்து இந்தியாவாக்கி விட்டீர்கள். என்ன செய்யலாம் சொல்லுங்கள்’ என்று நேரடியாக விசயத்திற்குப் போய் விடலாம். சொல்லப் போனால் இந்துத்துவம் அதிகாரத்தில் இருப்பது பொதுவான நோக்கில் தீமையானது என்றாலும், பிரிவினை உரிமை கோரும் மக்களின் பணிகளை அவர்கள் சுலபமாக்குகிறார்கள்.
சரி நாகா – குக்கி மோதல்கள் குறித்து சொல்லுங்கள்?
நாகா குக்கி மோதல்கள் மட்டுமல்ல.. வடகிழக்கில் உள்ள இனக்குழுக்களுக்கு இடையே சண்டைகள் உள்ளேயே நடக்கும் மோதல்கள் மொத்தமும் இந்திய உளவுத்துறையின் ஏற்பாடு தான். சமீபத்தில் இந்திய இராணுவ உயரதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே பேட்டியளித்துள்ளார். அதில், ‘நாங்கள் நாகாக்களின் நிலங்களில் திட்டமிட்ட ரீதியில் குக்கி இனத்தவரைக் குடியமர்த்துவதில் வெற்றி பெற்றுள்ளோம். இனி நாகாக்கள் விடுக்கும் சவாலை குக்கி இனத்தவரே எதிர்கொண்டு விடுவார்கள்’ என்றுள்ளார். ஆனால், நாகா குக்கி மோதல்கள் இப்போது பழங்கதைகள் ஆகிவிட்டன. நாங்கள் அந்த கசப்பான நினைவுகளை மறக்கத் துவங்கி விட்டோம். சமீபத்தில் கூட ஒரு குக்கி இளைஞன் இராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாகா கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள்.
முழுக்க முழுக்க இந்திய அரசின் சதி மட்டும் தான் காரணமா? நீங்கள் எந்த வகையிலும் பொறுப்பில்லையா?
அந்த மோதல்களுக்கு ஏற்பாடு செய்து களம் அமைத்துக் கொடுத்தது இந்திய உளவுத்துறை என்றாலும் நாங்கள் இருவருமே அந்தச் சூழலுக்குப் பலியாகிப் போனோம். இப்போது நிதானமாக வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது மிகவும் வெட்கமாக உணர்கிறேன். குறுகிய இனப் பெருமைக்காக எதிரிக்கு எதிராக பிளவுபட்டு நின்று மோதிக் கொண்டு செத்து மடிந்திருக்கிறோம் என்பது அவமானகரமானது.. ஆனாலும், வரலாறு வரலாறு தானே? இனிமேல் நடந்தவற்றைத் திருத்தி எழுதவா முடியும். கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டியது தான்.
மைத்தாய் இனத்தவரோடு உங்கள் உறவு எப்படி உள்ளது. குறிப்பாக ஐரோம் சர்மிளாவின் போராட்டம் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள். நாகா இனத்தவர்கள் ஐரோம் சர்மிளாவிற்கு பெரியளவில் ஆதரவளித்து களமிறங்கியதாக தெரியவில்லையே?
நாகா குக்கி இனத்தவர்கள் பழங்குடியினர்.. நாங்கள் மலைவாசிகள். எங்களுக்குள் சமூக அமைப்பில் இருந்து பல அம்சங்கள் ஏறத்தாழ ஒத்துப் போகும். ஆனால், மைத்தாய் சமவெளி மக்கள். இவர்கள் பெங்காலி வகைப்பட்ட இந்து மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். மைத்தாய்களிடையே சாதி உள்ளது. சரியாக சொல்லப் போனால், இத்தனை ஆண்டுகளாகியும் மைத்தாய் மக்கள் எங்களை தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள். எங்களுக்குள் கலப்புத் திருமணங்கள் மிக அரிதாகவே நடக்கின்றன. குக்கிகளைப் போல் அன்றி மைத்தாய் மக்களிடம் நாங்கள் நெருங்குவதற்கான சமூக வாய்ப்புகளே குறைவு தான். ஐரோம் சர்மிளா ஒரு மைத்தாய் என்றாலும் அவரது போராட்டத்தை நாங்கள் அனுசரணையாகவே பார்க்கிறோம். இருந்தாலும், அவருக்கு இந்தியா முழுவதும் கிடைத்திருக்கும் கவனத்தை எங்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக பயன்படுத்தவில்லை என்கிற் வருத்தம் எங்களுக்கு உண்டு.
மைத்தாய் இனத்தவரோடு இணைந்து போராட்டங்கள் நடக்கின்றனவா?
இல்லை. நாங்கள் இன்னும் எமது பழைய கசப்புணர்வுகளை மறக்கவில்லை.
சற்று முன்பு தான் சொன்னீர்கள், எதிரிக்கு எதிரே இணைந்து போராடாமல் உள்ளடிச் சண்டைகளின் பாதிப்பு குறித்து. இவ்வளவு ஒற்றுமையின்மைகளை வைத்துக் கொண்டு உங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்றா கருதுகிறீர்கள்?
முடியாது என்பதே தர்க்கரீதியாக நடைமுறை ரீதியாக கிடைக்கும் விடை. மட்டுமின்றி எங்களது வரலாற்று அனுபவங்களும் அதே விடையைத் தான் தருமின்றன. எனினும், எதார்த்தமான களநிலவரம் நாங்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு எங்களுக்குள் அடித்துக் கொள்வதாகத் தான் உள்ளது. இது எங்களுக்கு மட்டுமல்ல, வலுவான எதிரியை எதிர்த்து போராடும் ஒடுக்கப்படும் பிரிவினர் ஒவ்வொருவரும் இவ்வாறு பிரிந்தே கிடக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட அப்படித்தான் இருக்கிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை இடதுசாரிகள் எழுச்சி பெற்று போராடும் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைப்பது தான் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒரு தீர்வாக நம் கண் முன்னே இருக்கிறது.. அதுவரை என்ன செய்வது?
– வினவு செய்தியாளர்கள்
முந்தைய பாகங்கள்:
- புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட் – 1
- JNU நேரடி ரிப்போர்ட் 2 – ‘தேசத் துரோகி’களோடு ஒரு சந்திப்பு !
- JNU நேரடி ரிப்போர்ட் 3 – ‘தேசத் துரோகிகளுக்கு’ அரசு உதவித் தொகை ஏன் ?
- JNU நேரடி ரிப்போர்ட் 4 – வளாகத்தில் மாணவர் அமைப்புகளும் கருத்துச் சுதந்திரமும்
- JNU நேரடி ரிப்போர்ட் 5 – மாணவர் விஷ்மய் நேர்காணல்
- JNU நேரடி ரிப்போர்ட் 6 – இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் மாணவி நேர்காணல்
- JNU நேரடி ரிப்போர்ட் 7 மோடி : ஊடக சந்தையில் விற்காத லேகியம்
நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள். தேசியம் குறித்து அவர்கள் பீற்றிக் கொள்ளும் எந்தக் கற்பிதங்களின் கீழ் எங்களை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
இவர்களுக்கெல்லாம் இந்தியா என்பது ஒரு முனையில் பஞ்சாபில் துவங்கி பெங்காலில் முடிகிறது.. இன்னொரு முனையில் உ.பி-யில் துவங்கி மஹாராஷ்டிராவில் எங்கோ முடிந்து விடுகிறது. இது ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லைக் கோடு. இதற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் இந்தியர்களாகவே கருதிக் கொள்வதில்லை.
An apparent truth about India. Vow…great…words.
Very nice words
இந்தியா என்பது ஒரு கேலிக்கூத்தான நகைச்சுவை (Farce). இந்தியா என்பது சாவர்கருடையது. சங்பரிவாரங்களுடையது. எங்களுடையது அல்ல. நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள்.
இந்திய யூனியனில் இருப்பதால் அவர்களுடைய வாழ்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன ?
சுதந்திரம் கிடைத்தால் அவர்கள் வாழ்வில் கிடைக்கும் ஏற்றங்கள் என்ன ?
சுதந்திரத்திற்கான காஸ்ட் ஐ எப்படி சமாளிக்க போகிறார்கள் ?
என்று கேட்டிருக்கலாம்
நாங்க தக்காளி சாதம் சாப்பிடறவங்க ,புளி சாதம் சாபிடரவன்களோட ஒத்துவராது
நாங்க கால் இல்லாத சாமி கும்புடறவங்க , கால் இருக்குற சாமி கும்படரவன்களோட ஒத்துவராது
என்று காரணம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது .
ராமர் உங்களது கேள்விக்கு எளிமையாக பதில் கூறுவது என்றால் இந்தியாவில் மாட்டு கறி உண்ணும் மக்களை பார்த்து(என்னையும் சேர்ந்து தான்-நானும் மாட்டுகறி உண்கின்றேன்) நாட்டை விட்டு வெளியேற கூறும் @@@rss-பிஜேபி தேச விரோதிகளை பார்த்து மாட்டுகறி உண்ணும் நாகலாந்து காரர்கள், நாங்கள் மாட்டு கறி உண்ணுகின்றோம் அதனால் நீங்கள் கூறுவது போன்று இந்திய unionனில் இருந்து வெளியேறுகிறோம் என்று கூறலாம் அல்லவா? இப்போது தேசத்தை பிளப்பவர்கள் யார் ராமரே? மாட்டுக்கறி உண்பவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வற்புறுத்தும் RSS பார்பன தேசத்தை பிளக்கும் தேச விரோத கூட்டமா ? அல்லது மாட்டு கறி உண்பதை தங்கள் உணவு கலாச்சாரமாக கொண்டு உள்ள நாகாலந்து பூர்வகுடி-பழங்குடி மக்களா ?
அறிவு உள்ளவன், மனசாட்சி உள்ளவன் நாயமா பதில் சொல்லுவான்…ஆனா ராமன் எப்படி…….. என்று எங்களுக்கு தெரியுமே ?
@@@இந்திய சுதந்திரத்துக்காக மக்கள் ஜெய் ஹிந்த் என்றும் பாராத் மாதக்கி ஜெய் என்றும் முழங்கி குரல் கொடுத்து போராடிய போது இந்த rss கும்பல் என்ன செய்து கொண்டு இருந்து? வெள்ளை காரனுக்கு கால்கழுவிக்கொண்டும் , அவனுக்கு துதி பாடிக்கொண்டும், விடுதலை வீரர்களை காட்டிகொடுத்துகொண்டும்(உதாரணம் வாஜ்பாய் நீதிபதிக்கு எழுதிய கடிதம்), வெள்ளையனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொண்டும் தானே இருந்தது? தூ மானங்கெட் RSS தேச விரோதிகளா !
ராமரே , நாகாலந்து என்ன அந்த இன மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தபட்டு அவர்களின் சம்மதத்துடன் தானா இந்திய unionல் சேர்த்துக்கொள்ளப்பட்டது? இல்லையே….. வலுகட்டாயமாக ,ராணுவ அடக்குமுறையுடன் தானே இந்தியாவால் அது ஆகிரிமிக்கப்ப்ட்டது….
//இந்திய யூனியனில் இருப்பதால் அவர்களுடைய வாழ்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன ?//
ராமா ஒரு வேலை 100 ஆண்டுகளுகளுக்கு முன் நீர் பிறந்து இருந்தால் அடிமை இந்தியாவை பார்த்தும் இப்படிதான் சுய மனங்கேட்ட , விடுதலை உணர்வற்ற , அடிமை தன்மான ,வெள்ளையனுக்கு அடிவருடி தனம் செய்கின்ற இந்த கேள்வியை கேட்பிரோ ராமா? நாகாலந்துக்கு இந்தியாவில இருந்து சுதந்திரம் கிடைத்தால் அந்த நாட்டுக்கு அரசியல் ,பொருளாதார சுதந்திரம் கிடைக்கும்…….
//சுதந்திரம் கிடைத்தால் அவர்கள் வாழ்வில் கிடைக்கும் ஏற்றங்கள் என்ன ?//
//நாங்க தக்காளி சாதம் சாப்பிடறவங்க ,புளி சாதம் சாபிடரவன்களோட ஒத்துவராது
நாங்க கால் இல்லாத சாமி கும்புடறவங்க , கால் இருக்குற சாமி கும்படரவன்களோட ஒத்துவராது
என்று காரணம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது .//
Who is telling those things and lynching people? Did Nagas lynch Hindians or the reverse? You lynch them and expect them to live with a “belonging” feeling? Your majoritarianism is what driving them to secession.
You are going back to the RSS argument that ONLY Hinduism can unite the country.
//with a “belonging” feeling//
How will that feeling come? What will bring that feeling?
Religion
Food
Skin color
So Nagas have the right to feel they dont belong here.
In a reverse argument, Cant RSS have the same feeling that you dont belong here because you pray diff god?
Raman, were you awake and not under influence when you wrote this reply?
Did Nagas lynch people for not eating beef? Or do religious fanatics lynch people for eating beef?
Nagas, Muslims and other beef eaters respect and don’t lynch people for not eating beef or pork. But hindutva groups lynch people, beat them up and talk bad about people who eat beef. So who is actually say and also action like we both can’t live together at first? And when Nagas or Muslims after repeated incidents of killings and violence start to feel the same, you are labeling them as anti-nationals.
How many times hindutva groups said that they will kill people who eat beef? How many times they have said we should go to other countries? To day they say they will behead people who don’t say “Barath Mata ki Jai”. What is tomorrow? Everyone should drink cow’s urine or else get killed?
If you lynch someone for their food choice and ask them to live united with the nation, how can they do that?
How many Nagas are killed .Could you get me statistics?
Is that happening daily ?
Were BJP and RSS ruling the country for the past 60 years and beating Nagas?
Just by taking the word and act of some useless people , justifying the secession is not acceptable.
Nagaland should be ruled by RSS/BJP and those bans should be implemented.
And when the minority is forced out of their will by majority ,when thier day to day living is interrupted., they can justify.
Religious people be it Christian/Muslim/Hindu will always talk about religious values.
Read about AFSPA. Have you had a chit-chat with those people? How much data you have? It is true in every sense that they are marginalized in their own land. Will you only believe that Pakistan has terroristic leanings if Osama is PM? BJP or no BJP, the majoritarianism is here from day one.
காஷ்மேர் முதல் இந்த முட்டாள்தனத்தையே சொல்கிறேர்கள். தன் இடம், தன் கலாசாரம், தன் சுதன்டிரம், தன் உரிமை என கேட்பவைகளை ஏற்றுக் கொள்ள ம்டியாது என சொல்ல நீ யார்?
ராமன் பேட்டியை முழுவதும் படிக்கவில்லையானாலும் பரவாயில்லை, ராம்கிஷன் எடுத்து காட்டி ‘கமென்ட்’ செய்ததையாவது படித்து புரிந்து கொண்டிருக்கலாம்! தயிர்சாதமோ, சாம்பார் சாதாமோ நான் என்ன சாப்பிடுவது என்பதை சர்வாதிகாரமாக மற்றவர் முடிவு செய்வதை இன்னமும் சூடு, சொறனை உள்ள மக்கள் எப்படி ஒப்புவார்கள்?
//சர்வாதிகாரமாக மற்றவர் முடிவு//
தேர்தலில் மாட்டு இறைச்சியை தடை செய்வோம் என்று கூறி , மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்த மகாராஷ்டிர அரசாங்கம் தான் தடை செய்தது . இதில் சர்வாதிகாரம் எங்கே வந்தது ?
அடுத்து இது ஒவ்வொரு மாநிலதிரும் அவர்களுக்கு பிடித்த மாட்டு இறைச்சி கொள்கை உள்ளது .
நாகலாந்து மக்கள் மாடு உன்ன கூடாது என்று மதிய அரசாங்கம் தடை போட்டு உள்ளதா ?
ஒரு தேசத்தில் பல விதமான கருத்துகளோடு கட்சிகள் இருக்கும் . சீமான் தமிழர்தான் எல்லாம் என்று சொல்லுகிறார் ஆகவே தெலுங்கு கன்னட தமிழர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கேட்டு ஆரமிக்கலாம ?
மராட்டியத்தில் பா.ச.க.தேர்தல் அறிக்கையில் சொல்லியவாறு மாட்டிறைச்சியை தடை செய்திருப்பதாக சொல்வது மோசடியான வாதம்.தேர்தல்களில் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றித்தான் வாக்குகளை பெறுகின்றன.பா.ச.க.தேர்தல் அறிக்கையில் பலநூறு வாக்குறுதிகளுக்கு இடையில் ஒளிந்திருக்க கூடிய மாட்டிறைச்சி தடையை எத்தனை பேர் படித்து பார்த்திருப்பார்கள்.முதலில் தேர்தல் அறிக்கைகளை படித்து பார்த்துத்தான் மக்கள் வாக்களிக்கிறார்களா என்ன.
ஒரே ஒரு கேள்வி.ராமன் இதுவரை ஒருமுறையாவது தேர்தலில் வாக்களித்திருப்பார். எத்தனை கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை,அது கூட வேண்டாம்,அவருக்கு பிடித்தமான பா.ச.க.வின் தேர்தல் அறிக்கையையாவது முழுமையாக படித்து பார்த்துத்தான் அவர் வாக்களித்தாரா.
சங் கும்பலுக்கு தைரியமும் நேர்மையும் இருந்திருந்தால் மராட்டியத்தில் மாட்டிறைச்சி தடை பற்றி பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திருக்க வேண்டும்.இந்தியாவின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் அப்படி ஒரு வாக்கெடுப்பு நடத்தும் துணிச்சல் சங் கும்பலுக்கு வராது.ஏனென்றால் வாக்கெடுப்புக்கு முன்பே அதற்கான பரப்புரையின் போதே அவர்களது பல்வேறு தகிடு தத்தங்கள் பல்லிளித்து போகும் என்பதை அவர்கள் நன்கறிவார்கள்.
//மராட்டியத்தில் மாட்டிறைச்சி தடை பற்றி பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திருக்க வேண்டும்//
For every issue having an election is not how democracy works.You elect representative who resonate with your expectation.
In democracy people were given choice.
//முதலில் தேர்தல் அறிக்கைகளை படித்து பார்த்துத்தான் மக்கள் வாக்களிக்கிறார்களா என்ன.//
It is their duty. They have all the time to debate cricket and movie.Why not debate policies?
அதுக்கு பேரு election இல்ல.referendum .மக்கள் கருத்து அறிந்து செயல்படுவதுதானே சனநாயகம்.ராமனின் வாதப்படியே பெரும்பான்மையினர் முடிவே செல்லுபடியாகும் என்று வைத்துக்கொண்டாலும் அதை அறிவதற்கு தேர்தல்கள் உதவாது.அதனால்தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா இல்லையா என்று மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் ஐரோப்பிய பாராளுமன்றங்கள் மட்டுமே முடிவு செய்வதில்லை.அதற்கென தனியே வாக்கெடுப்பு நடத்துகிறார்கள்.இந்தியாவிலோ பல ஆயிரம் ஊழல் குற்றச்சாட்டுக்கள்,சொல்லி பல ஆயிரம் வெற்று வாக்குறுதிகள் கொடுத்து தேர்தல்களில் பெறும் வெற்றியை வைத்துக்கொண்டு அனைவருக்குமான முடிவை ஒரு சிறு கும்பல் எடுக்க முடியும் என்றால் அதற்கு பெயர் சனநாயகமா.
மோடி ஆட்சிக்கு வந்தா 15 இலட்சம் உங்க வங்கி கணக்குல போடப்படும் என்று கூடத்தான் ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள்.அதை நம்பி வாக்களித்தவன் கிட்ட போய் நீ மாட்டுக்கறி திங்கலாமா கூடாதான்னு நான்தான் முடிவு பண்ணுவேன்.ஏன்னா நீ எனக்கு ஓட்டு போட்டிருக்க என்று சொல்லிப்பார்க்கட்டும் ராமன்கள்.
// ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா இல்லையா//
Those decisions cannot be reverted back by the next elected govt. And those are historic decisions elected representatives simply cant make on behalf of the people.
General election everybody voted and secession referendum only scots voted.
In the case of Beef ban, people were already informed in the electoral process.
It was not a surprise/hidden decision.
Lets say, you may not like freebies ,but people elected the party which has promised freebies.
After the election, you still cannot ask for referendum to decide if freebies can be given or not.
May be in future, Aaadhar/iphone will enable referendum like direct democracy in a cost effective way.
But still in this majority mandate democracy and an issue like this ,how minority will get benefit is a question.
I dont agree with beef ban.That is forcing ideas from one culture on others is always a bad idea.Religions are always intolerant to other cultures. Today you cry beef ban, if pendulum swings to your side you will be banning pork.
ஒரு முடிவு அடுத்த தேர்தலில் வேறு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து மாற்ற கூடியதாக இருக்குமானால் அந்த முடிவை தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் எடுத்து நாட்டு மக்கள் மீது திணிக்கலாம்.குறிப்பான அந்த பிரச்னையில் மக்கள் கருத்து என்னவென பார்க்க வேண்டியதில்லை.பொத்தாம் பொதுவாக பெற்ற தேர்தல் வெற்றியே போதுமென்கிறார் ராமன்.
நல்லது, மாண்புறு சனநாயகம்.ஏற்றுக்கொள்வோம்.ஒரே ஒரு கேள்வி.
இடைப்பட்ட அந்த ஐந்து ஆண்டு காலத்தில் அந்த தவறான முடிவால் மக்களுக்கு நேர்ந்திருக்க கூடிய துன்ப,துயரங்களை இழப்புகளை ரத்து செய்ய முடியுமா.பட்ட துன்பம் பட்டதுதானே.இதுதான் சனநாயகமா.
//தேர்தலில் மாட்டு இறைச்சியை தடை செய்வோம் என்று கூறி , மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்த மகாராஷ்டிர அரசாங்கம் தான் தடை செய்தது . இதில் சர்வாதிகாரம் எங்கே வந்தது ?//
If tomorrow an American says we will kill all non-Christians or non-Whites in US in election manifesto and comes to power, you will have no problem to give your family for the gas chambers right? Hitler came to power through voting. Does that mean Nazis are democratic? Food choices, religion, culture, choice of music etc are constitutional rights and in a republic, you can’t just take away a constitutional right. If you are that much pro-democratic, then ask the same type of voting for Kashmir, Naga, TN etc.
//சீமான் தமிழர்தான் எல்லாம் என்று சொல்லுகிறார் ஆகவே தெலுங்கு கன்னட தமிழர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கேட்டு ஆரமிக்கலாம ?//
If Chee-man comes to power and starts persecuting them, they will ask! And I will support them.
@HisFeet
You are coming back to age old question. So what is better?
Communism -> One man deciding for all?
Manu/Sharia/Religious -> One book deciding for all?
Democracy -> Majority deciding for all?
You have mistaken me.
//One man deciding for all//
That is not communism. That is dictatorship.
Majority forcing their view on minority is not democracy. It is majoritarianism. You fail to see the difference. If majorities can decide what a minority can have in his plates, where is democracy? Is it not dictatorship? Democracy works like this. It takes the vote based decisions on social, political and economical aspects of life while it protects the personal liberty of everyone. Food, dress, religion, language etc comes under personal liberty. How long you’ve been in US? Ask any American if your view of forcing others not to eat is democracy or not!
Ok @HisFeet mention one Communist country without one man deciding things
I was just saying that communism is not dictatorship. But in my opinion, USSR under Lenin was not dictatorship per se. It was a dictatorship of working class. Also, any day, a right minded Communist dictatorship is far better than oligarchy by people like Tata, Ambani, Adani.
//right minded Communist dictatorship/
Common man wants Military rule
Influence of movies. A Hero with right mindset and devotion to people will be sent from heaven and rescue all good and hard working people.
If you don’t get the difference between Lenin and Hitler, then get your brain checked by a doctor. Something may be seriously wrong.
We had seen right minded socialists as rulers in Venezuela and Bolivia.
//We had seen right minded socialists as rulers in Venezuela and Bolivia.
//
Chavez a right minded socialists! What a joke?
Why not take a trip to the heaven Venezula?
During his regime,Chavez provided an ideal welfare state.He was hounded by capitalist countries since he prevented their loot and nationalized the oil industry.Due to fall in oil price,the present Venezuelan economy is suffering for which Chavez can not be responsible.For that matter will you blame Bush and Obama for 2008 economic crisis in USA.
In the name of majority,just 31% should not decide for all and that too what to eat,what slogan to utter and what language should be learnt etc.These subjects were not finding place even in the election manifesto of the concerned party.
ஆட்டை கடுத்து , மாட்டை கடித்து கடைசியில் மனிதர்களையே வேட்டையாட துணிந்து விட்டது இந்துத்வா! மாட்டிறைச்சியில் ஆரம்பித்து, தற்போது “பாரத மாதா கீ” !நாளை என்னவோ? ராமன் அவர்களே ! அடுத்த வீட்டில் மாட்டிறைச்சி பரிமாறினால் உமக்கென்ன பிரச்சினை? அடுத்தவர் உரிமையை பறிக்கிறோம் என்ற உணர்வு உங்களுக்கு (இந்துத்வா வாதிகளுக்கு) வருவதில்லையே? ஏன்? இது அடாவடி அல்லவா?
நாதாறிகளின் அஜெண்டாவில் அடுத்ததாக இது
இடம் பெறக்கூடும்.
தினமும் காலை எழுந்தவுடன் கோமியம்
குடித்தே தீர வேண்டும்.வீட்டில் பசுமாடு இல்லையா?
அரசு பின் எதற்கு இருக்கிறது? மூத்திரத்தையும்
அவர்களே வீடு தேடி டெலிவரி செய்வார்கள்.
//During his regime,Chavez provided an ideal welfare state.He was hounded by capitalist countries since he prevented their loot and nationalized the oil industry.//
Funny. So he sold oil and spent the wealth and you agreed his economic model was not sustainable.
To implement such an economic model, a country should have a natural resource in demand eternally
Once money is spent country is begging.They will bankrupt soon.Already people are fighting each other for a single piece of bread.His model brought down the whole country and made it not livable
American Capitalist Shale technology/battery car technology has brought the oil price down. Once again capitalist country will march in new territory with new technology while socialist left behind begging
That is why you are also supporting capitalist countries like America which put pressure on Indian govt against encouraging generic life saving drugs by Indian manufacturers.You are much bothered about non sustainable economic model of Venezuela.But you are neither bothered about Indian people not getting life saving drugs at affordable price nor about loss of opportunities for Indian drug manufacturers to export generic life saving drugs to African countries. You seem to have pride in supporting such capitalist countries at the cost of fellow Indians.What kind of patriot you are MrRaman?
நல்லவரு வந்துட்டாரு ! அமெரிக்காகாரன் கண்டுபிடிக்கணுமா , இவரு இட்லி திருவிழா நடத்தி ஜாலியா இருப்பாராம் . அப்புறம் மருந்து கண்டு பிடிச்ச பிறகு அதை காப்பி அடித்து ஏழைக்கு கொடுப்பாராம் .
Let Americans invent medicines and market elsewhere.Why the US Govt force our Govt to register their patent rights and prevent our Govt from giving compulsory licenses to manufacture generic medicines?Hello!Admirer of Americans’ingenuity.Are you aware that only Indians have invented medicine for SIKA virus.It is high time to change your opinion about Indians.You always blame Indians as lazy and useless people.Are you including yourself among the useless lot?
//Indians have invented medicine for SIKA virus//
Great. Now do the same for Hepatitis C and distribute it free. Nobody can stop it.
//Great.Now do the same for Hepatitis C and distribute it free//
If you do not invent be ready to spend $1000 per injection or simply die.Modi bakthas like Raman will neither find fault for signing secret treaty with USA nor allow other right minded people to criticize the Govt on this score.One step more.Raman will have the sadist pleasure on the gains made by the capitalist countries at the cost of millions of people dying the world over for want of affordable life saving drugs
நீங்கள் வேலை செய்து சம்பாதித்த பணத்திற்கு சமூக பாதுகாப்பு வேண்டும் அல்லவா ? அமெரிக்காவும் அது போன்ற சமூக பாதுகாப்பை அவர்கள் நாட்டு கம்பெனியின் உழைப்பை பாதுகாக்க விழைகிறது .
உங்கள் பக்கத்துக்கு வீட்டுகாரருக்கு சிகிச்சை அளிக்க பணம் தேவை படுகிறது என்று உங்கள் பணத்தை எடுத்தாள் கொடுப்பீர்களா ? உங்களிடம் உயிர் காக்கும் பணம் இருக்கிறது , கொடுப்பீர்களா ? எத்துனை பேருக்கு கொடுத்து இருகிறீர்கள் ?
இப்போது $1000 எனபது அமெரிக்காவின் பண மதிப்பில் வைத்துள்ள விலை . இதை தாரளமாக இந்திய அரசாங்கம்
சட்ட பூர்வமாக தடை செய்யலாம் . அவரகளிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி குறைக்கலாம் . அவர்களுக்கு நஷ்ட ஈட்டு தொகை கொடுத்து நாமே தயாரிகாலம் . இதைதான் மோடி அரசு செய்து உள்ளது .
the problem is, the companies steal the wealth of people. If you fail to understand that, then either you are retard or selfish scumbag. I go with the second.
Modi Govt has not held any talks with the Govt of USA regarding price reduction.On the other hand,it has readily agreed to register the patent rights of the US company unconditionally.The Indian officers in the patent office are being trained in USA so that they will never refuse to register patent for various life saving drugs manufactured in USA.Whenever there is a debate about the greedy capitalist countries,Raman poses questions to the debating person as to whether he is ready to give money to his neighbours.At best,this may be his way of side tracking the issue.Since he does not have any worthwhile arguments to defend the Modi Govt,he is exposing himself by side tracking.I pity you Raman.It seems that one course of treatment for Hepatitis C is 83 injections.Even US citizens are not able to buy this medicine.Even if the price is reduced by half(as imagined by Raman)who can afford to buy this medicine at $41500 in India?
//,it has readily agreed to register the patent rights of the US company unconditionally//
It is a good thing. Recognizing patent means, recognizing that they have discovered the medicine. It is a truth and you have to agree.
Otherwise bring with you medicine and dispute it.
@hisfeet and சூரியன்
ராமனுக்கு இந்த மருந்து விஷயத்தில் ஆழ்ந்த அறிவு கிடையாது. எனவே அவரை விட்டுவிடுங்கள் பாவம்…
Raman, knowledge, creativity and innovations are not property of rich alone. Anyone can invent given right opportunity and resources. You know what will happen to a small company which invents a cure for diabetes or cancer. They will be bought out and the patents will go to large companies. If the company refuses, they will sue them with some other patent infringements and make them go bankrupt and swallow them. If they publish their findings without patents, then there will be “proofs” that the drugs are not safe and the big companies will bribe/lobby the government to ban the drugs. Even if you prove that the drugs are safe, then the companies will also make generics and claim that their quality is superior than your small company’s quality. In all possible scenarios, the big companies win. People lose!
The rich bastards(Vinavu, please don’t censor) whom you support are testing drugs on poor and illiterate Indians. Even children are tested with hypertension drugs. Why not they do the testing in America or UK? Unless this happens to you or your family, you won’t understand. As I see all Indians as my family I feel the pain.
// Anyone can invent given right opportunity and resources//
You dont get it. Only capitalism aligns all the right resources and talents .
//ou know what will happen to a small company which invents a cure for diabetes or cancer//
Why wait for some greedy investor company to invent? Govt/Church has enormous wealth,why cant they do it?
//The rich bastards(Vinavu, please don’t censor) whom you support are testing drugs on poor and illiterate Indians//
When one of your family member is in peril, you will be the first to buy that medicine.
You stop buying their product, they will stop it.Or select your govt with people who will represent you instead of selling your votes.
Only capitalism can do the job? USSR beat Americans in space race. Also NASA is a publicly funded organization. Once USSR is dissolved, their many space programs are abandoned. USA.started to privatize space programs and now they are also having far less adavances. CERN, ISRO, DARPA etc are all government orgs that led to many inventions.
Raman, if you are to talk about sustainability, then capitalism is the most unsustainable economic model in the world. Most sustainable model is pre-agricultural hunter-gatherer society. Socialism in one country or few countries, especially when the nation(s) are small, is not sustainable. Also no need to explain about the capitalistic pressure through economic sanctions, wars, aiding armed militia to topple the government etc.
//American Capitalist Shale technology/battery car technology has brought the oil price down. Once again capitalist country will march in new territory with new technology while socialist left behind begging//
Is it? Saudi is artificially keeping the petrol price lower so that they can bring Russia to its knees. Batter car! How much knowledgeable you are? The parity has not yet been reached in electric cars.
சிலிகுரியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கோ, மணிப்பூருக்கோ செல்வதென்பது மிகக்கடுமையான ஒரு பயணம். பிரிட்டிஷார் போட்ட, வசதி குறைவான, பழமையான சாலை. சமீபகாலம் வரை, மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் தான். இப்போது தான் முதல் முறையாக, மொத்த வடகிழக்கையும் சிலிகுரி வழியாக வடஇந்தியாவுடன் இணைக்கும், மிகப்பெரிய ரயில் திட்டம் நிறைவேறியிருக்கிறது.மேலும், பிரம்மாண்டமான ஒரு திட்டம் தொடங்க இருக்கிறது. டெல்லியில் தொடங்கி அஸாம், மணிப்பூர் வழியாக பர்மா சென்று தாய்லாந்தை அடைந்து, பாங்காக் வரை செல்லும் ஒரு பலதேச நெடுஞ்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது……..
-ஜனநாயகச் சோதனைச்சாலையில் – 29:அணைக்க முடியாத நெருப்பு
ஜெயமோகன்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1503872
Yes Mr Ravikumar,Raman has proved that he is a MARAI KAZHANDA LOOSU YENDRU