privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதேர்தலுக்கு முன்பாகவே டாஸ்மாக்கை மூடு - மக்கள் அதிகாரம்

தேர்தலுக்கு முன்பாகவே டாஸ்மாக்கை மூடு – மக்கள் அதிகாரம்

-

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு

நெ.5/9, எஃப்.எம் பிளாசா, 3-வது தளம், பேக்கர் தெரு, பாரிமுனை, சென்னை-01.
தொடர்புக்கு 9962366312

———————————————————————————————————————–

2.05.2016

பத்திரிக்கைச் செய்தி
100% டாஸ்மாக் சாராயம்? 100% வாக்குப் பதிவு?
தேர்தல் ஆணையம், டாஸ்மாக்கை மூடிவிட்டு தேர்தலை நடத்த முடியாதா?

ன்புடையீர் வணக்கம்,

 ஓட்டுக்கு பணமும், குவார்ட்டரும், பிரியாணியும்தான் கைகோர்த்து கொண்டு தேர்தலை நடத்துகின்றன. டாஸ்மாக்கை மூடாமல் தாமதிக்கின்ற ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பேரழிவு. சாராய ஆலை அதிபர்களுக்கோ கோடிக்கணக்கில் லாபம்.

கரூரில் சாராயம் குடித்து டாஸ்மாக் கடை எதிரிலேயே 3 பேர் சுருண்டு விழுந்து செத்தனர். யார் செத்தாலும்  நான் விற்பனையை நிறுத்த மாட்டேன் என்பதை மக்கள் ஏன் அனுமதிக்க வேண்டும்?.

தோழர் வெற்றிவேல் செழியன், தோழர் ராஜு, தோழர் காளிப்பன் - மக்கள் அதிகாரம்
தோழர் வெற்றிவேல் செழியன், தோழர் ராஜு, தோழர் காளியப்பன்
மக்கள் அதிகாரம்

டாஸ்மாக் விற்பனையில் அரசு வருமானம்  30 ஆயிரம் கோடி என்றால் சாராய முதலாளிகளுக்கு இரண்டு  லட்சம் கோடி. புத்தாண்டு, தீபாவளி பொங்கல் அன்று பல மடங்கு டாஸ்மாக் விற்பனை நடக்கும். இன்று  பெரும்பான்மையினர் வேலைக்கு போகாமல் தேர்தல் பிரச்சார வேலைக்குதான் போகிறார்கள். கூலியும் சரக்கும் தடையின்றி ஓடுகிறது.

கட்சிகளும், தேர்தல் ஆணையமும் சாராயம் இல்லாமல் தேர்தலை சந்திக்க தயாரா?. மக்களுக்கும், சமூகத்திற்கும், கேடு என தெரிந்த பிறகு மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு என முடிவு செய்த பிறகும், டாஸ்மாக்கை மூட தேர்தல் ஆணையத்திற்கு என்ன தடை?

தேர்தல் திருவிழாவில் டாஸ்மாக் விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்கள். தேர்தல் ஆணையம் அதற்கு உடந்தையாக உள்ளது.

படிப்படியாக மூடுகிறேன் என பேசும் ஜெயா அரசின் போலீசு  ஏப்-20  மக்கள் அதிகாரம் நடத்திய டாஸ்மாக் மண்டல அலுவலக முற்றுகையிட்டு போராடிய பெண்களின் ஆடைகளை கிழித்து மிக வக்கிரமாக நடந்து கொண்டது.

மதுவிலக்கை பற்றி பாடினால் பேசினால் தேச துரோக வழக்கு. வீட்டுக்காவல் சிறை. சுவரொட்டி ஒட்டினால் வழக்கு, பிரச்சாரம் செய்ய தடை, பிரசுரம் கொடுக்க தடை, போலீசார் அ.தி.மு.க கட்டுபாட்டிலா? தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டிலா?

தேர்தலில் ஓட்டுக்கு கொடுக்கும் பணமும் டாஸ்மாக் சாராயத்திற்குதான் போகும். பாதிப்பு என தெரிந்த பிறகும் படிப்படியாகவோ, தேர்தல் முடியட்டும் என காத்திருக்கவோ, மக்களுக்கு அவசியம் இல்லை.

பல்வேறு மாவட்டங்களில் கிராம மக்கள் மக்கள் அதிகார அமைப்பினருடன் இணைந்து ஆயிரக்கணக்கில் கையெழுத்திட்டு எங்கள் ஊர் டாஸ்மாக்கை மூடுவது என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதை அறிக்கையாக தேர்தல் அதிகாரியிடம் இன்று கொடுக்கிறார்கள்.

வருகிற 5ம் தேதி முதல் குறிப்பிட்ட கடைகளை மூட தொடர் போராட்டம் நடத்த உள்ளனர். இதே போன்று போராட்டத்தை தங்கள் பகுதியில் நடத்த விரும்புவர்கள் மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொள்ளவும். இத்தகைய போராட்டத்தை அனைவரும் ஆதரிப்பதுடன் பங்கேற்க வேண்டு்ம் என கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்.

_______________________________

பிற்சேர்க்கை: 1

டாஸ்மாக் கடைகளை மூடாமல் போராட்டம் ஓயாது – மக்கள் அதிகாரம் சூளுரை- பத்திரிகையாளர் சந்திப்பு!

ஊடக நண்பர்கள்
மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்த ஊடகங்கள்

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு வித போராட்டங்களை முன்னெடுத்து நடத்திவருகின்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் 2-5-16  அன்று சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர். அச்சந்திப்பின் போது டாஸ்மாக்கைத் தேர்தலுக்கு முன்பாகவே மூடவேண்டும் என்பதுதான் மக்களது விருப்பம். படிப்படியாக மூட மக்கள் விரும்பவில்லை.  ஏன் தேர்தல் ஆணையம் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிவிட்டு தேர்தல் நடத்தக் கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தை இந்த டாஸ்மாக் சீரழிவிலிருந்து மீட்க தேர்தலுக்கு முன்பாக டாஸ்மாக கடைகளை மூட தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குறிப்பாக சில பகுதிகளைத் தேர்வு செய்து 5-5-16 முதல்  டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடும் வரை தொடர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் டாஸ்மாக் கடைகளை மூட விரும்புகிறவர்கள், அரசியல்வாதிகளது வாக்குறுதிகளை நம்பாமல் தங்கள் பகுதியில் நடத்தும் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தை அழைத்தால். போராட்டத்திற்குத் தலைமை தாங்கத் மக்கள் அதிகாரம் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

___________

பிற்சேர்க்கை 2:

டாஸ்மாக்கை மூடு, இல்லையேல் நாங்களே இழுத்து மூடுவோம் -மக்கள் அதிகாரம் எச்சரிக்கை மனு

சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தலைமையில் மக்கள் ஆலப்பாக்கம் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றிருக்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று பு.மா.இ.மு உறுப்பினர் தோழர் கணேசன் கைது செய்யப்பட்டு பிறகு நீண்ட விவாதத்திற்குப் பிறகு விடுதலை!