Monday, March 27, 2023

100% புறக்கணிக்கத் தயாராவீர் !

-

Hello IT Friends

ndlf-it-boycott-electionசட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஐ.டி. ஊழியர்களான நாம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது.

1. ஓராண்டுக்கு முன்பு டி.சி.எஸ் 25,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதன் பிறகு சின்டெல், வெஸ்டாஸ் என்று பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் ரகசியமாகவும், சட்டவிரோதமான முறையிலும் Layoffசெய்து கொண்டிருக்கின்றன.

தேர்தலில் வாக்களித்தால் லே ஆஃப்-ஐ தடுக்க முடியுமா? ஜாப் செக்யூரிட்டி கிடைக்குமா? இதற்கு எந்தக் கட்சியாவது வாக்குறுதி அளித்திருக்கின்றதா?

2. பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற அடிப்படை உரிமையாக யூனியன்–ல் சேரும் உரிமையை அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் கிடைத்திட்ட இந்த உரிமையை தொழிற்சாலைகளில் பயன்படுத்த முடிகிறதா? யூனியன் சேர விடாமல் தடுக்கப்படுகின்றனர், தொழிலாளர்கள். 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையத்தால், 100% யூனியன்–ல் சேரும் உரிமையை நடைமுறைப்படுத்த முடியுமா?

அமெரிக்காவில் கூட வெரிசான், ஐ.பி.எம் போன்ற நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கம் வைத்திருக்கின்றனர். நம் நாட்டிலோ, ஐ.டி. ஊழியர்களான நாம் யூனியன் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறோமா? இதுதான் ஜனநாயகமா?

3. சென்னை பெருவெள்ளத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கார்ப்பரேட்கள், ரியல் எஸ்டேட் மாபியாக்கள் செய்த ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புதான் இப்பேரழிவிற்கே காரணம். ஆக்கிரமிப்புக்கு அரசியல் கட்சிகள், அதிகாரிகள், நீதித்துறை என அனைவரும் உடந்தை. செம்பரம்பாக்கம் ஏரி நீரை ஒரே நாளில் மொத்தமாக திறந்து விட்ட அரசு மக்களைக் காப்பாற்றாமல் வேடிக்கைதான் பார்த்தது. இன்று வரைக்கும் மியாட் உள்ளிட்ட கார்ப்பரேட்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதா?  இயற்கை மீதான இத்தகைய சூறையாடலை அரசாலோ, இந்தத் தேர்தலாலோ நிறுத்திவிட முடியுமா?

4. பல லட்சம் கோடி மதிப்பிலான தாதுமணலைக் கொள்ளையிட்டு வரும் வைகுண்டராஜன் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, கொள்ளையைத் தொடர நீதிமன்றமே துணைபோனது.

அதேபோல மதுரை மாவட்டத்தின் பல குன்றுகளையும், குளங்களையும் அழித்துவிட்ட P.R. பழனிச்சாமியின் கிரானைட் கொள்ளை பற்றி விசாரணை நடத்த”நேர்மை”யான அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது வழக்கிற்கு தேவையான தடயங்களை போலீசே அழித்துவிடும் என்று பயந்து சுடுகாட்டில் படுத்து உறங்கினார்.

ஆனால், மேலூர் மாஜிஸ்ட்ரேட்  பி.ஆர்.பி-யிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அவரை விடுவித்ததுடன், வழக்கு தொடுத்த கலெக்டர் மீதே வழக்கு போட்டுவிட்டார். கொள்ளைக்காரன் பழனிச்சாமியோ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கின்றான். சகாயத்தின் விசாரணை அறிக்கையோ நீதிமன்றத்தின் டாய்லெட் பேப்பராக தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் கூட பி.ஆர்.பி, வைகுண்டராஜன் முதலானோர் பல கோடிகளை கொட்டி அனைத்துக் கட்சிகளையும் சிறப்பாக கவனித்திருக்கின்றனர். நம் நாட்டை கொள்ளையடிக்க தரகு வேலை பார்க்கும் இந்தக் கட்சிகளுக்குத்தான் வாக்களிக்க போகிறோமா?

5. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு நாடே அறிந்து நாறிப்போன ஒன்று. வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கினார். ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவும், பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியும் சரியாக “கணக்கு” போட்டு அம்மாவை விடுவித்து விட்டனர்.

அதுமட்டுமின்றி, பல்லாயிரம் கோடிகளை ஏப்பம் விட்டு விஜய்மல்லையா லண்டனுக்குத் தப்பிப் போகும் வரை ஒட்டுமொத்த அமைப்பும் உதவியது. ஜெயலலிதா, வைகுண்டராஜன், பி.ஆர்.பி, மல்லையா இவர்களைப் போன்ற எண்ணற்ற கிரிமினல்களுடன் கைகோர்த்துக் கொண்டுதான் நீதித்துறையே இயங்குகிறது.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இவர்களைப் போன்ற குற்றவாளிகளையும், குற்றவாளிகளை காப்பாற்றும் நீதிபதிகளையும் தண்டிக்க முடியுமா?

6. 100% வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறது தேர்தல் ஆணையம்.
100% வாக்களித்தால் 100% ஊழல் ஒழியுமா?
இதற்கு தேர்தல் ஆணையம் உத்திரவாதம் தருமா?
100% வாக்களித்தால் நமக்கு 100% JOB SECURITY கிடைக்குமா?
இதற்கும் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் தருமா?

நேர்மையான தேர்தல் எனக் கூறிக்கொண்டு, அரசியல் தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவி மக்களை சோதனை போடுகின்ற தேர்தல் ஆணையம், நம்மால் தேர்வு செய்யப்பட்ட அமைப்பா? இதன் கேட்பாரில்லாத சர்வாதிகாரம், எவ்வாறு உண்மையான ஜனநாயகத்தைத் தரும்?

7. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.

தேர்தலில் நிற்கும் நல்லவர்கள் யாரையாவது உங்களுக்கு தெரியுமா?

பெயரளவு போலி ஜனநாயகத்திற்கு கூட இடமில்லாதபடி கிரிமினல்களும், ரவுடிகளும் நிறைந்திருக்கும் இந்தத் தேர்தல் முறையில் நாம் யாரைத் தேர்ந்தெடுப்பது?

எனக்கு உனக்கு என்று போட்டி போட்டுக்கொண்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் எல்லாம் எப்படிப்பட்டவை? அ.தி.மு.க – ஜெயலலிதா,சசிகலா மன்னார்குடி மாஃபியா கும்பலின் குடும்பம், தி.மு.க -கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, மாறன் குடும்பம்,  தே.மு.தி.க -விஜயகாந்த்,  பிரேமலதா, சுதீஷ் குடும்பம், பா.ம.க – ராமதாஸ்,  அன்புமணி, சவுமியா குடும்பம். இவ்வாறு கட்சிகள் அனைத்தும் குடும்பக் கட்சிகளாக இருக்கின்றன.

நமக்கோ, கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. ஆனால் தேர்தலில் நிற்பவர்கள் பல கோடிகளை சாதாரணமாக செலவு செய்கிறார்கள். வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல கோடிகளைக் கொள்ளையடிப்பார்கள். மற்ற கட்சிகளும் ஊழல், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்கின்ற பொறுக்கிக் கட்சிகள்தான். பேய்களும், பிசாசுகளும் போட்டியிடும் தேர்தலில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? பேயையா, பிசாசையா?

வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்கிறது தேர்தல் ஆணையம். இந்தத் தேர்தலில் வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதாகும். இன்னும் தெளிவாக கூறினால் நம்மை கொள்ளையடிக்க நாமே வரிசையில் காத்திருந்து லைசென்ஸ் வழங்குவதாகும்!

8.  நாம் போடாவிட்டால் நமது ஓட்டை வேறு யாராவது போட்டுவிடுவார்களே என்கிறார்கள் சிலர். அதற்காக புதைகுழி என்று தெரிந்தே விழ முடியுமா?

சரி, என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? அந்த மாற்றைப் பற்றி வாருங்கள் விவாதிப்போம்! தொடர்புக்கு: 9003198576

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு
NDLF I.T. Employees Wing

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க