Monday, March 27, 2023
முகப்புசெய்திவீட்டுக்கு கங்கை - அடுப்புக்கு ஆப்பு !

வீட்டுக்கு கங்கை – அடுப்புக்கு ஆப்பு !

-

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு! மோட்சம் போக கங்கா தண்ணி!

ரசின் கொடூர சுரண்டலைச் சகிக்க முடியாமல் போதுமடா வாழ்க்கை என்று தீக்குளித்து சாகலாம் என்று நினைத்தாலும் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருக்கிறது. கடந்த நான்கு வாரங்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு 4 ரூபாய் 45 காசுகளும் டீசல் விலை, லிட்டர் ஒன்றிற்கு 6 ரூபாய் 46 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. கூடவே சமையல் எரிவாயு உருளை ஒன்றிற்கு விலை 21 ரூபாய் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

petrol-diesel-priceதற்போது ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை முறையே ரூ 65.60 மற்றும் ரூ 53.93 ஆகும். வண்டிச் சக்கரம் சுழன்றால் தான் தங்கள் வாழ்க்கைச் சக்கரம் சுழலும் என்றிருக்கும் இந்நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் மிகவும் இழிவான சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஒழுங்குமுறை ஆணையம் என்று வெகுசில ஏகாதிபத்திய புல்லுருவிகள் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் எனும் பெயரில் உழைக்கும் மக்களின் இரத்தத்திற்கு விலை பேசுகின்றனர்.

மக்களின் வாழ்நிலையோ மனநிலை பிறழ்ந்த அபலைப்பெண்ணை கயவர் பலர் வன்புணர்வு செய்வதைப் போன்று பலமுனைத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. எந்தத் திசையில் இருந்து நம்மைச் சூறையாடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளமுடியாதபடி மக்கள் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

‘லெளகீக வாழ்க்கையின் இன்னல்களுக்கு தனியார்மயம் ஏகாதிபத்தியம் நுகர்வியம் தான் காரணம் என்று கூறாதே. அவையெல்லாம் ஞானிகளின் மகத்தான கண்டுபிடிப்புகள்’ என எழுத்தாளர் – சமூக விமரிசகர் பெயரில் உலவும் நவீனபுராணிகர்கள் கடுமையாக மக்களைச் சாடுகின்றனர். சனாதன தர்மத்தின் அவசியத்தை கண்துஞ்சாமல் எடுத்துரைக்கவும் செய்கின்றனர்.

ganga-jalஇந்நிலையில், ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கற்பனைக்கு எட்டாத விலைவாசியால் மக்கள் செத்து விட்டால் அதற்குக்காரணம் தனியார்மயம் ஏகாதிபத்தியம் அல்ல; முற்பிறவியில் மக்கள் செய்த பாவம்தான் காரணம்; கர்மவினையைத்தான் முதலில் தீர்க்க வேண்டும்’ என்று பார்ப்பனிய மோடி கும்பல் புதுத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இப்புதுத்திட்டத்தின்படி பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு அறிவிக்கப்படும் பொழுதே ஹரித்துவார், ரிசிகேசிலிருந்து கங்கையின் புனித நீர் இணைய வர்த்தகம் மூலமாக, சாகக் கிடக்கும் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வண்ணம் இணைய செயலியை (E-governance APP) அறிமுகப் படுத்துவதாக மோடிகும்பல் 31-05-2016 அன்று அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தின்படி உள்ளூர் அஞ்சல்காரர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும். இணையத்தின் வாயிலாக கங்கை நீருக்கு ஆர்டர்கள் எடுக்கப்படும்.

இந்தவகையில் கங்கையின் புனித நீரை நம் வீட்டிற்கு கொண்டுவரும் காவிகளின் கரசேவை வெறும் இணையசேவை மட்டுமல்ல ஏகாதிபத்தியத்திற்கு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து செய்யும் எதிர்சேவையாகும்!

ஒருவேளை இதை வாசிக்கிற வாசகர்கள் ‘ஐயா, காவி வானரங்கள் முன் தள்ளும் மோட்சத்தில் நம்பிக்கை இல்லை; மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை; நாங்கள் சித்தர், அசுர மரபை சேர்ந்தவர்கள்” என்று பார்ப்பனியத்திற்கு மரண அடி கொடுத்த சிவவாக்கிய சித்தரின் கீழ்க்கண்ட பாடலை எடுத்துக்காட்ட கூடும்.

“கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணைய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களும் முடற்புகா
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.”

petrol-diesel-price‘மோட்சத்திற்கு போகாதவனெல்லாம் சூத்திர தலித்துகளாக பிறப்பர்’ என்று பார்ப்பனிய இந்துமதம் கதைக்கிற பொழுது இறந்தவன் பிறப்பதில்லை என்று அடித்துப் பேசும் சித்தர் பாடல் சரியான சவுக்கடிதான். பார்ப்பனியம் எனும் பெயரில் கழிவு நீரை அஞ்சலில் அனுப்பும் காவிக்கும்பலை தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபு இந்தவகையில் எளிதில் இனங்கண்டுகொள்ளும். ஆனால் இதோடு இன்னொன்றையும் சேர்த்துப் புரியவேண்டும். இந்த மோட்சத்தை வைத்து ஏமாற்றும் பார்ப்பனியக் கும்பல் தான் ஏகாதிபத்தியத்தின் பங்காளியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது என்பதைத் தெளிய வேண்டும்.

ஆக ஊத்தைப் பார்ப்பனியம், தனியார்மய ஏகாதிபத்தியற்கு இப்படி சேவை செய்கிறதே என்று ‘இட்ட குண்டமேதடா இருக்கு வேதமேதடா’ என்று சித்தர்களை போல பார்ப்பனியத்தை இன்னொரு ரவுண்டு எதிர்க்காவிட்டால் அடுத்த வாரமும் பெட்ரோல், டீசல் விலை உயரும் இந்தமுறை பார்ப்பன மோடி கும்பல் தலைமாட்டில் வைக்க காமாட்சி விளக்கை தபாலில் அனுப்பும் என்பதை மறந்துவிடாதீர்!

– இளங்கோ

 1. நாட்டின், மக்களின் வாழ்வை தீர்மானிக்கும் பொருளாதாரத்தை ஒரு தேர்ந்த அய்யோகியனிடம்(மோடியிடம்) கொடுத்து விட்டு, வாழ்க்கை சிக்கலுக்கான தீர்வை கோவிலிலும், குளத்திலும், தீர்த்தத்திலும், ஜோதிடத்திலும் தேடும் அற்பர்களின், மூடர்களின் முகத்தில் அறைவது போன்ற கட்டுரை. வாழ்த்துக்கள் வினவு

  மேலும், பார்பன, மார்வாடி பனியா கும்பல்களின் சைவ உணவு பாசிசத்திற்கும் எதிராகவும், மாடிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்றுக் கூறும் பார்பன சங்பரிவார கும்பல்களின் முகத் திரையை கிழிக்கும் சிவவாக்கியரின் பாடலையும் இங்கு பதிவு செய்கிறேன்.

  மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
  மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
  மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
  மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.

  ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
  ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே
  மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
  மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

  • நாட்டின், மக்களின் வாழ்வை தீர்மானிக்கும் பொருளாதாரத்தை ஒரு தேர்ந்த வெளினாட்டு அயோக்கியர்களிடம் இருந்து மீட்டு மோடியிடம் மக்கள் கொடுத்துள்ளார்.\\வாழ்க்கை சிக்கலுக்கான தீர்வை கோவிலிலும், குளத்திலும், தீர்த்தத்திலும், ஜோதிடத்திலும் தேடும் அற்பர்களின்//யார் தேடு சொன்னது?மத காழ்புணர்ச்சி மற்றும் மத வெறி காரணமாக உன் கருத்து உள்ளது.

   • Nobody has the right to tell which food one person to take.If Vinavu article objects that,you are not in a position to give proper answer.When you have no answer,you side track the issue by saying that the article writer is biased against a particular religion.This type of answer we are seeing for ages from the fundamentalists.At least try new strategy.

   • ஸ்ரீநிவாசன்

    எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. உண்மை எதுவோ அதை கூறினேன். கோவில்,குளம்,தீர்த்தம் என்பதெல்லாம் மக்களின் வாழ்க்கை நிலையை, பொருளாதார கஷ்டங்களை முன்வைத்து எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிக் கொண்டு தான் இருக்கின்றன. நேர்த்திக் கடனாக மக்கள் மழித்து போடும் மயிரையும் கூட விட்டு வைக்காமல் அதிலும் பணம் சம்பாதிக்கும் திருப்பதி கோவில் இதற்க்கு ஒரு தேர்ந்த உதாரணம்.

    மேலும்,வெளிநாட்டு அய்யோகியர்களிடம் இருந்து ஆட்சியை, ஊதி பெருக்கப்பட்ட ஊடக மாயையால் மக்கள் அப்பாவி தனமாக உள்நாட்டு அயோக்கினிடம்(சங்பரிவார அய்யோக்கிய கும்பல்களிடம்) ஒப்படைத்து விட்டார்கள். புழு பூச்சிகளை காட்டிலும் கேவலாமான பிறவிகள் தான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பல்கள் அனைத்தும்.

    • \\குளம்,தீர்த்தம் என்பதெல்லாம் மக்களின் வாழ்க்கை நிலையை, பொருளாதார கஷ்டங்களை முன்வைத்து எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிக் கொண்டு தான் இருக்கின்றன.//இந்து மதம் பற்றி நீர் பாடம் நடத்த வேண்டாம்.குருடன் பாரக்கிரான்,செவிடன் கேட்கிரான்,முடவன் நடக்கிரான் என்ற மோசடி அலெலுயா கும்பலிடம் சொல்லும். பொருளாதார கஷ்டங்களை முன்வைத்து மத மாற்றம் செய்லாமா?த்தூ.\\நேர்த்திக் கடனாக மக்கள் மழித்து போடும் மயிரையும் கூட விட்டு வைக்காமல் அதிலும் பணம் சம்பாதிக்கும் திருப்பதி கோவில் இதற்க்கு ஒரு தேர்ந்த உதாரணம்.//அந்த திருபதி கோவிலயெ அபகரிக்க முயற்சி செய்தது உலகம் அறியும்(ராஜ்செக்ர ரெடி).புழு பூச்சிகளை காட்டிலும் கேவலாமான பிறவிகள் நீங்கள் தான்.

     • ஸ்ரீநிவாசன்…

      குருடன் பார்க்கிறான், செவிடன் கேட்க்கிறான் என்பதெல்லாம் மோசடிகள் தான் அவையும் ஒழிக்க பட வேண்டியவையே. ஆனால், அலேலூயா கும்பல் செய்யும் மோசடிகளை காட்டிலும் மிகவும் மோசமானதும் சமுக விரோதமானது கோவில்களில் நடக்கும் சுரண்டல்கள் தான். திருமணம் என்கிற பெயரில் பெண்களுக்கு இந்து மதத்தால் இழைக்கப்படும் சுரண்டல்கள் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா. பெண்களில் பலரை முதிர் கண்ணிகளாக்கி வீட்டில் முடங்க வைத்ததில் பார்ப்பனியத்தின் பங்கை யாரால் மறுக்க முடியும்.

      ஒரு புறம் பிறந்த நேரம்,ராசி, செவ்வாய் தோஷம்,ஜலதோஷம் என்று சோதிட சுரண்டல். மறுபுறம் எந்த நாட்டிலும் மதத்திலும் இல்லாத வழக்கமான வரதட்சினை என்னும் பார்ப்பனீயம் ஏற்படுத்திய பிச்சை வாங்கும் பழக்கத்தாலும் பாதிக்கபடுவோர் எத்துனை பேர். இது ஒரு புறம் என்றால் “போதிய வயதில் திருமணம் ஆகவில்லையா”, திருமணஞ்சேரிக்கு கோவிலுக்கு போனால் திருமண தோஷம் கழிந்து விரைவில் திருமணம் நடக்கும் என்று சமுக கொடுமைகளை(சோதிட புரட்டு, வரதட்சினை) மறைத்து விட்டு, குறை(தோஷம்) உன்னிடம் தான் உள்ளது அதை நிவர்த்திக் செய்கிறேன் என்று மக்களிடம் பணம் பிடுங்கும் பார்பன சுரண்டல் இன்னொரு புறம்.

      அலேலூயா கும்பல் செய்யும் மோசடிகளாவது கண்ணுக்கு தெரிகிறது, சட்டத்தின் துணை கொண்டு இப்படி பட்டவர்களை போலிசை வைத்து ரெண்டு தட்டு தட்டி இவைகளை ஒழித்து விடலாம். ஆனால், பார்பனிய சுரண்டல் அப்படியானதல்ல உளவியல் ரீதியாக மனிதனை பலகீன படுத்தி அவனிடம் இருந்து பொருளை பிடுங்குவது, சந்தேகம் இருந்தால் காலஹஸ்தி கோவிலில் நடக்கும் ராகு.கேது பரிகார பூஜை(உயர்கல்வி, உடல் ஆரோக்கியம்,வேலைவாய்பு) என்கிற பெயரில் நடக்கும் கொடுமையை நேரில் போய் பார்க்கவும். பார்பனிய சுரண்டலுக்கு இதுவே கண்கண்ட சாட்சி. மக்களாக பார்த்து திருந்தி இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக வர்க்க போராட்டம் நடத்தினால் தான் இது போன்ற கேவலங்கள் ஒழிந்து போகும்.

      • சுரண்டலில் எது ஏற்று கொள்ள கூடியது ?

       என்னுடையா மததில பரவால்ல அங்கே இன்னும் மோசம் ! 🙂

       கிருத்துவ மதத்தில் மாதா மாதம் வரி கட்ட வேண்டுமே ? இப்போது ஆரம்ப கட்டத்தில் இந்தியாவில் வளரும் நிலையில் உள்ளதால் , வாங்காமல் விட்டாலும் நீங்கள் நிறைய பொருள் ஈஎட்டும் போது டிதிங் கொடுத்து தானே ஆகவேண்டும்

       • ராமன்…

        கிறித்துவ மதத்தில் மாத மாதம் கட்டாய வரி கட்ட வேண்டும் என்கிற நிர்பந்தமெல்லாம் கிடையாது. levy(பங்கு தொகை) தான் கேட்ப்பார்கள். இவ்வளவு தான் தர வேண்டும் என்றில்லை,அவரவரின் வசதிகேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். எங்கள் சர்ச்சிலேயே மாதம் வெறும் 50 மட்டும் கொடுக்கும் குடும்பமெல்லாம் நிறைய இருக்கின்றன, யாரும் அவர்களை ஒதுக்கி வைப்பதெல்லாம் கிடையாது. Tithe எனப்படும் தசமபாகம் அதாவது பத்திலொரு பங்கு என்பதெல்லாம் பெரும் கோடீஸ்வரர்கள், நிலசுவாந்தார்கள் கொடுப்பது. அதனை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். இங்கு செல்வந்தர்கள் பணத்தை வாரி இறைப்பதை பற்றியல்ல பேச்சு. மேலும்,கிறித்துவ மதத்தை மொத்தமாக சரியானது என்று நான் எங்கும் நியாய படுத்தி பேசியது கிடையாது.மேலும், நீங்கள் கிறித்துவத்தை விமர்சனம் செய்வதால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம். ஆனால், அதற்க்கு முன்பு உங்கள் சொந்த மதத்தின் அக்கிரமங்களை சுய விமர்சனத்திற்கு உள்ளாக்குங்கள், அது தான் அறிவு நாணயம் உள்ளவன் செய்யும் செயல்.

        ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், அதற்க்கு என்ன காரணம் என்பதை ஏற்கனவே நான் கூறி விட்டேன். அதை ஒழிக்காமல், திருமணஞ்சேரிக்கு சென்று தோஷம் கழித்தால் அனைத்தும் சரியாகி விடும் என்றுக் கூறுவது அயோக்கிய தனமில்லையா. இந்த கட்டுரை கூற வருவதும் இதைத் தான், இதற்க்கு என்ன பதில்.

        ஏழை மற்றும் எளிய நடுத்தர மக்களின் வறுமையையும், கையறு நிலையையும் பயன்படுத்திக் கொண்டு பாரிகாரம் செய்கிறோம், தோஷம் கழிப்பது என்று கூறி பிழைப்பு நடத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை பற்றி தான். புரியும் படி கூற வேண்டுமானால், அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் வீட்டில் தங்கம் சேரும் என்று கூறி இந்து பார்பனியமும்,நகை கடை முதலாளிகளும் ஒரு சேர கூட்டு வைத்துக் கொண்டு மக்களை சுரண்டுகிறார்களே. அட்சய திரிதியை நாளில் ஒரு பொட்டு தங்கம் வாங்கினால் வீட்டில் சகல ஐஸ்வர்யமும் சேர்ந்து விடுமா. இது போன்ற அசிங்கங்களை வேறு எந்த மதத்திலாவது பார்க்க முடியுமா. உங்கள் வீட்டில் எப்படி ராமன்? பரிசோதித்து பார்த்து விடீர்களா.ஐஸ்வர்யம் கூடி விட்டதா. இது போன்ற கேவலங்கள் எல்லாம் கிறித்துவத்தில் இல்லை.

        • // எங்கள் சர்ச்சிலேயே மாதம் வெறும் 50 மட்டும் கொடுக்கும் குடும்பமெல்லாம் நிறைய இருக்கின்றன//

         இந்து மத்தில் மாதா மாதம் தருபவர் இல்லை …

         //Tithe எனப்படும் தசமபாகம் அதாவது பத்திலொரு பங்கு என்பதெல்லாம் பெரும் கோடீஸ்வரர்கள், நிலசுவாந்தார்கள் கொடுப்பது//

         மதம் என்னும் மாயைக்கு , யார் கொடுத்தால் என்ன ?

         //,கிறித்துவ மதத்தை மொத்தமாக சரியானது என்று நான் எங்கும் நியாய படுத்தி பேசியது கிடையாது//

         அடடே

         //ஏழை மற்றும் எளிய நடுத்தர மக்களின் வறுமையையும், கையறு நிலையையும் பயன்படுத்திக் கொண்டு பாரிகாரம் செய்கிறோம், தோஷம் கழிப்பது என்று கூறி பிழைப்பு நடத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை பற்றி தான்//

         குருடர்கள் நடக்கிறார்கள் என்று பிழைப்பு நடத்துவதும் இதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை . கிருத்துவத்தில் சாதி தடை இல்லாமல் பிசினஸ் பண்ணலாம் என்பதை தவிர

         // அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் வீட்டில் தங்கம் சேரும் என்று கூறி இந்து பார்பனியமும்,நகை கடை முதலாளிகளும் ஒரு சேர கூட்டு வைத்துக் கொண்டு மக்களை சுரண்டுகிறார்களே//

         ஒன்னும் நஷ்டம் இல்லை . பியட் கரன்சியை கொஞ்சம் தங்கத்திலும் முதலீடு செய்வது நல்லது தான்.

         //அட்சய திரிதியை நாளில் ஒரு பொட்டு தங்கம் வாங்கினால் வீட்டில் சகல ஐஸ்வர்யமும் சேர்ந்து விடுமா//

         சேர்ந்துவிடாது . ஆனால் நாடு திவாலாகும் போது உதவும் .
         உதாரணமாக வெனிசூலாவில் வாழும் நீங்கள் சாவேஸ் காலத்தில் அட்சய திரிதியை கொண்டாடி இருந்தால் , மதுரோ காலத்தில் உங்கள் செல்வம் ஓரளவு இருக்கும் .

         5 பொலிவார் ஒரு டாலர் எனபது 1000 பொலிவார் ஒரு டாலர் என்று ஹைபர் இன்பிலேசன் வரும் பொழுது காக்கும்

         //இது போன்ற கேவலங்கள் எல்லாம் கிறித்துவத்தில் இல்லை.//

         தன மதத்தில் நடப்பது எல்லாம் ஓரளவு தேவிலை என்னும் மனப்பாங்கு

    • மேரியம்மா மேரியம்மா அ யம் ஸாரியம்மா ஸாரியம்மா

     நீங்க ஆர் எஸ் எஸ் 7 எஸ் எஸ் பத்தி பேசினா எனக்கு கவலையில்லை

     ஆனால்

     புனித இந்து மதநம்பிக்கைகளை மாசு கூரினால்

     அப்புறம் நான்

     மக்தலேன் அம்மையார் வாழ்வும் வாக்கும் பற்றி பேசவிரும்பாவிட்டாலும் கூட

     போர்வையில் கிருமி தடவி தெனமெரிக்க மக்களை மதம் மாற்றியதை கதாகாலட்சேபம் செய்ய வேண்டியதிருக்கும்

 2. சிவவாக்கியரின் பாடல்களையும், திருமழிசையாழ்வாரின் பாடல்களையும் ஒருவரே எழுதியதாக காட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சிவவாக்கியரின் பாடல்களில் வேதியர்களுடனான சமரச சொல்லாடல்களை பல இடங்களில் காண முடிகிறது. இடைச்செருகலா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு பார்ப்பன எதிர்ப்பு மரபு தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வருவதாக சொல்பவர்கள், அதனைப் பற்றி விரிவாக எழுதினால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 3. Mr.Ilango number of indians starve in hunger for that you and me didnt take food? number of persons do not have clothes to wear for that do you expect everyone to roam naked? இது மாதிரி எழுத சொல்லி யாரு–சொன்னது? ரும் பொட்டு யொசிபாங்க்லொ?

  • Nobody asks you to starve or go naked.Support anyone who think about the struggling masses or any movement which creates awareness about these social evils.The author is perfectly alright when he criticize the move of the Govt to take orders for ganga water supply when poor men are affected by diesel/petrol prices.

 4. In The Hindu dated 16-6-2016,in page 9,there is a news item informing that India Post gears up to begin Ganga jal delivery service.It is also informed that the Ganga water will be sold on no-profit,no-loss basis.
  On the same page,just below the above news item,a picture has been published under the heading,”A daily tightrope walk”A man,with a bag in his one hand,holds the rope overhead with the other hand,walks on a rope bridge to cross Ulhas river to reach Bhivpuri station from Bendase village in Raigad district in Maharashtra.He can reach the station in 5 minutes by doing the dangerous exercise.Otherwise,he has to go in the rough road of about 8 km to reach the station.The demand of the villagers for a bridge on this river is pending for the last 60 years.
  We can understand which issue gets priority from our rulers.Incidently,Maharashtra is also currently ruled by BJP.This is the state which is undergoing severe drought and people die out of starvation.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க