Wednesday, June 7, 2023
முகப்புசெய்திகோத்தகிரி அரசு மருத்துவமனையின் பெயர் மரணவாயிலா ?

கோத்தகிரி அரசு மருத்துவமனையின் பெயர் மரணவாயிலா ?

-

காசு உள்ளவர்களுக்கே கல்வி, அதிகாரம், ஜனநாயகம், அரசியல்,…அந்த வகையில் மருத்துவம் ஏழைகளுக்கு இல்லை என்ற உச்சத்தை தொட்டு விட்டது.

kothagiri-govt-hospital-7அதற்கு சாட்சியாக கோத்தகிரி அரசு மருத்துவமனை விளங்குகிறது. அம்மருத்துவமனை கோத்தகிரி தாலுக்கா மக்கள் 2 இலட்சம் பேருக்கு மருத்துவம் பார்க்கிறது. அவர்கள் அனைவரையும் ‘சாமர்த்தியமாக’ கையாண்டு வருகிறது மருத்துவமனை நிர்வாகம். ஒரு சிறிய காயத்திற்குக் கூட (ரெஃபர்) பரிந்துரைத்து, “இது ஒரு மருத்துவமனையா? இதை நம்பி வருகிறீர்களே” என்று அவர்கள் நம்மை பார்த்து இடித்து உரைக்கும் வகையில் நிர்வாகத்தின் செயல் இருக்கிறது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் ஏதோ பாவம் செய்தவர்களாகவும் கையால் ஆகாதவர்களாகவும் சமூகத்தை புறம் வைத்து விட்டது கோத்தகிரி அரசு மருத்துவமனை. மயக்க மருத்துவர் இல்லை, ஸ்கேன் இல்லை, எக்ஸ்ரே இல்லை, இருந்தாலும் எடுக்க ஆள் இல்லை, தண்ணீர் இல்லை, போதிய இடவசதி இல்லை என்று உடனே 30, 33, 70 கிலோமீட்டர் உள்ள ஊட்டி, மேட்டுப்பாளையம், கோயமுத்தூர் என்று அனுப்பி விட்டு அவர்களே அரசு மருத்துவமனையின் அவலத்தை அம்பலப்படுத்தி விடுகிறார்கள்.

kothagiri-govt-hospital-5இதைப் பற்றி யாரும் புகார் தெரிவித்தால் M.S.O நிர்வாகத்தின் சீர்கேட்டின் முக்கிய புள்ளியாக இருப்பதால் கண்டு கொள்வது இல்லை. டீன் வருவார் மருத்துவர்களை எல்லாம் அட்டேன்சனில் நிற்க வைத்து கேள்விகள் கேட்டு மருத்துவமனை மீது அதிகாரிகள் மீது ஒரு புகாரை கூட வாயில் இருந்து வரவிடாமல் பார்த்து கொள்வார். சீனியர் டாக்டர் ஜூனியர் டாக்டர்களுக்கு கற்று கொடுத்து விடுவார்கள். தவறுகளை, பிரச்சினைகளை எப்படி மூடி மறைப்பது, கேள்வி வந்தால் எப்படி எதிர் கொள்வது என்று கற்று கொடுப்பது தான் முதல் பணி.

ஜூனியர் டாக்டர்கள் வரும்போது நேர்மையாக குறித்த நேரத்தில் வருவது நல்ல குணம், நல்ல சேவை, நல்ல மருத்துவர்களாகவே வருகிறார்கள். போகப் போக பழக்கப்படுத்தப்பட்டு மாறி ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் பலத்தை பெற்று வருகிறார்கள்.

kothagiri-govt-hospital-4மருத்துவமனையை பொருத்தமட்டில் 52 பணி பிரிவுகள் உள்ளதாம். துடைப்பவர், கூட்டுபவர், சூப்ரவைசர், சமையல் செய்பவர், துணிகளை துவைப்பவர், வாட்ச்மேன், எலக்ட்ரீசியன், பிளம்பர், உதவியர், வர்ணம் பூசுபவர் என்று பல பணி பிரிவுகள் இருந்து பெயருக்காக 2,3 துப்புரவு பணியாளர்களை வைத்து விட்டு மற்ற பிரிவில் ஆள் மாறாட்டம் செய்து ஒட்டு மொத்த நிர்வாகத்தின் பராமரிப்பு நிதியையும் பொய் கணக்கிட்டு சுருட்டிக் கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து விட்டு மருத்துவமனையை தூய்மையாக வைப்பது இல்லை, தண்ணீர் சுத்தமாக கிடைக்க வழி செய்வது இல்லை, மின்சாரம் இல்லாத போது ஜெனரேட்டர் பயன்படுத்துவது இல்லை. பாத்ரூம் கழிவறை சுத்தமாக வைப்பதும் இல்லை.

மருத்துவமனைக்கு உள்ளே சென்றாலே பிணவறைக்குள் செல்வதாக தோன்றும் அளவில் இருக்கிறது. மருத்துவமனை சுற்றிலும் செடி கொடிகள் வளரவிட்டு கரடி, பன்றி என்று காட்டு விலங்குகளும் நாய், மாடு என்று வீட்டு விலங்குகளும் நோயாளிகளையும் மருத்துவர்களையும் அச்சுறுத்துகின்றன. இத்தனை சீர்கேடுகளை வைத்துக் கொண்டு செயல்பட்டால் எந்த மக்கள் வருவார்கள். மக்களை அல்லல்படுத்தி வருகிற அரசு மருத்துவமனையை கண்டித்து பலமுறை நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. “கோத்தகிரி மருத்துவமனையா, மரணவாசலா” என்று பேரணியும் மீண்டும் கோத்தகிரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி வாகன பேரணியும் நடத்தப்பட்டது. அதன் விளைவாக இரத்த வங்கி, சி.டி ஸ்கேன் என்று வந்தாலும் எதுவும் செயல்படுத்தப்படாமல் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

காப்பீடு என்ற பெயரில் 2500 கோடி ரூபாயை தனியார் மருத்துவமனைக்கு பணத்தை வாரி இரைத்துள்ளது அரசு. அந்த பணத்தை வைத்து பல அரசு மருத்துவமனைகளை சிறப்பாக நடத்த முடியும். எனவே மக்களின் பணம் மக்களுக்காகவே பயன்படுத்த மக்களின் வாழ்க்கையில் நோய் நொடிகளை அகற்ற எந்தவிதமாக இடையூறும் இல்லாமல் உடனுக்குடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் முழக்கங்களை அமல்படுத்திட மக்களை அறைகூவி அழைக்கிறது கோத்தகிரி மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம்,
கோத்தகிரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க