Saturday, October 31, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் !

மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் !

-

 • பல்தேசிய இன அடையாளங்களை அழிக்கவே மோடி அரசின் சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பு!
 • திராவிட – தமிழ்மொழிக்கும், தமிழின பண்பாட்டிற்கும் எதிரியே ஆரிய – சமஸ்கிருதமும் வேத கலாச்சாரமும்!
 • தமிழினமே திரண்டெழு! ஆரிய – பார்ப்பன படையெடுப்பை முறியடிப்போம்!

28-06-2016 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்

சென்னையில்

29-06-2016 காலை 11.30 மணி வள்ளுவர்கோட்டம்
மாணவர் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்!
மாணவர்களே அணிதிரண்டு வாரீர்!

ன்பார்ந்த மாணவர்களே,

sanskrit domination
சமற்கிருத ஆதிக்கம்

இந்த கல்வி ஆண்டு (2016 – 17) முதல் சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக கற்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டிருக்கிறார். கல்வித்துறையில் காட்ஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதையும், இந்துத்துவா கருத்துக்களை புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவுத்திட்டம்- 2015 சமஸ்கிருதத்தை தனிப்பாடமாக கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறது.

தேசிய கல்விக்கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட 5 பேர் குழுவில் உள்ள ஜே.எஸ் ராஜ்புத் என்பவர் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர ஆதரவாளர். இக்கல்விக்கொள்கை மூலம் கல்வியை காவிமயமாக்க திட்டமிட்டு செயல்படுவதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான ‘பாரதிய சிக்சன் மண்டல்’ வழிகாட்டுதலின்படிதான் நடைபெற்று வருகிறது.

சமஸ்கிருத திணிப்பின் மூலம் பலதேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து, ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை தேசம் என்பதை அதாவது இந்தி – இந்து – இந்தியா என்ற இந்துத்துவா கொள்கையை நிறுவத் துடிக்கிறது, ஆர்.எஸ்.எஸ். இவர்கள் சொல்லும் இந்த இந்துராஷ்டிரத்தின் நோக்கம் என்ன? இயற்கைவளம், கனிமவளம், மனித வளம் என ஒன்றையும் விடாமல் நாட்டை சூறையாடி வரும் ஏகாதிபத்திய முதலாளிகள், அதானி, அம்பானி, டாடா போன்ற தரகு அதிகாரவர்க்க முதலாளிகள், நிலபிரபுத்துவ சக்திகளான ஆளும் வர்க்கங்களுக்கு, அதாவது பெருவாரியான உழைக்கும் மக்களின் எதிரிகளுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி யின் இந்துராஷ்டிரம்.

நாட்டின் கல்வித்துறையை உலகவர்த்தக கழகத்தின் காலடியில் அடகு வைத்துவிட்டது மோடி அரசு. அதன் விளைவாக கல்விக்கான மானியங்களை ஒழிப்பது, கல்வி உதவித்தொகைகளை நிறுத்துவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை இறக்குமதி செய்வது; அரசுப் பள்ளி, கல்லூரிகளையே ஒழித்துவிட்டு ஆன்-லைன் கல்வி; தேர்வு என கல்வியை வியாபாரப் பண்டமாக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் தாரை வார்க்கப்படுகிறது. பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் சமூகத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. மருத்துவம், பொறியியல் என படித்து முடித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள், பன்னாட்டுக் கம்பெனிகள் ஆட்குறைப்பு செய்து வீதிக்குத் தள்ளியதால் விரக்தியடைந்த இளைஞர்களின் தற்கொலைகள் அச்சத்தை உருவாக்குகின்றன. விவசாயம், தொழில்துறை, சிறு தொழில்கள், இயற்கை வளங்கள் என அனைத்தையும் ஏகாதிபத்தியங்கள் சூறையாடி வரும் வேலையில், இதை எதிர்த்துப் போராடுவதில் இருந்து மாணவர்கள், இளைஞர்களை, மக்களை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அவ்வப்போது சாதி-மத வெறியைத் தூண்டி விடுகின்றன.

அமெரிக்காவில் குடியரசுக்கட்சி வேட்பாளரான டிரம்ப் எப்படி வெளியில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெறியைத் தூண்டி விடுகிறானோ அதைப் போல, மோடியின் பார்ப்பன பாசிச கும்பல் முஸ்லீம்களுக்கு எதிரான இந்துமதவெறியைத் தூண்டி விடுகின்றன. முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல பெருவாரியான உழைக்கும் மக்களுக்கும் எதிரானதுதான் ஆர்.எஸ்.எஸ்-ம், அதன் இந்துத்துவாக் கொள்கையும். இந்த அபாயங்களின் ஒரு பகுதிதான் சமஸ்கிருத – வேதகலாச்சார திணிப்பு. இதை அனுமதிக்கக் கூடாது. 1965 ல் இந்தித் திணிப்பை முறியடித்தவர்கள் நம் மாணவர்கள். மீண்டும் வீறுகொண்டெழுவோம் இன்று சமஸ்கிருத – வேதகலாச்சாரத்தை திணித்து வரும் ஆரிய – பார்ப்பன படையெடுப்பை முறியடிப்போம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
நெ.41,பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95
போன்: 9445112675

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. உடன்பிறப்பே ,

  தமிழ்மொழியின்றி வடமொழி இல்லை !! வடமொழியின்றி இல்லை தமிழே. !!

  எந்த மொழியும் ,மதமுமே அழிவதில்லை .

  இன்று உள்ள நிலையே மீண்டும் ஒருநாள் மீளும் . அதுவே இயற்கையின் நியதி .

  கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி என்பதும் உண்மையே .

  பிரபஞ்சம் ஒரு நாள் அழியும் .

  திரும்ப மீளும்போது தமிழும் தோன்றும் .மனிதனும் தோன்றுவான் .
  இது அவ்வடமொழிக்கும் பொருந்துமாம் .

  இது ஒரு சுழற்சியே .

  இது மென் பொருள் (கணினி மொழி)களுக்கும் பொருந்துமாம் .
  நம்மதமும், நமது சகோதரர்கள் மதமாகிய இஸ்லாம் ,கிருத்துவமும் ,மற்றும் யாவையும் அவ்வாறே .

  இங்ஙனம் இயற்கை சுழலும்பொழுதினில் எங்கு வந்தது வீண் பூசல் ?
  பெருவெடிப்பு – தோற்றமென்றால் ,அதுவும் ஒருநாள் சுருங்குதலே -மறைவாகும்.

  ஆற்றலுக்கும் அழிவில்லை . பருப்பொருளுக்கும் அழிவில்லை .

  இப்பிரபஞ்சத்தில் எந்த திரவமும் /அத்திரவமும் சிறப்புடையதன்று என்றில்லை .
  அங்ஙனமே கீழ்மையுடைத்து என்றுமில்லையாம் .
  இங்ஙனம் இயற்கை சுழலும்பொழுதினில் ஏன் நமக்கு வீண் பூசல் ?

  இதனை சித்திப்பீர் நீரே

  • thoo… “The universe will get destroyed and then it will start from Big-Bang. Again humans will evolve and then start to speak Tamil. So just keep quiet and accept Sankritization.” Your logic is ad nauseaum.

   Why don’t you even say this? “There is a parallel universe where someone from Tamil Nadu has become PM and imposing Tamil in North Indian schools. So there is a balance!”

 2. அன்பரே ,
  முந்துறமுன்னம் நீர் தாய்மொழியினில் இடுகை இடத்தொடங்கவும் . (கீழ் காணும் சுட்டியினைக் காணிரே ) http://www.google.com/intl/ta/inputtools/try/
  பார்ப்பனரே உயர்பிறப்பினர் எனவும் நாங்கள் தாழ்பிறப்பினர் எனவும் நிலவிய காலம் மலைத்தேனில் மலைதனில் ஏறி அரை நூற்றாண்டு கழிந்தன என்று நீவிர் அறியீரோ ?
  எங்கள் ஐயன் அண்ணல் அம்பேத்கர் மீது வடமொழியினில் சதகம் இயற்றி உள்ளனர் பார்ப்பனர்கள்.
  இப்பாடம் வடமொழியினில் இளங்கலை இலக்கியம் பயிலுவோருக்கு முதலாண்டு பாடத்திட்டத்தினில் உளது .
  இச்செய்தியினை கீழ் காணும் சுட்டியினில் காணலாகுமே .
  http://www.ksu.ac.in/Images/KSU/e%20books/1st%20Paper/Sanskrit%20Compulsory/Bimambedkar%20Satkam/Bimambedkar%20Satkam.pdf
  இது நிகழ்வது பெங்களூரு வடமொழி பல்கலைக்கழகத்தினிலே .
  இங்ஙனமே வாரணாசி பல்கலைக்கழகத்தினில் நாளை பகலவன் எம்தந்தை பெரியாரையும் பயிலுவார் பார்ப்பனர்.
  எங்கள் குலமக்களும் இன்று மருத்துவர் ,பொறியாளர் ,வழக்குரைஞர் ,அரசு அலுவலர் ,அமைச்சர் என்று இப்பொற்காலத்தினில் பார்ப்பனர் முன்பு அடைந்திருந்த வாழ்வினைப் பெற்றுள்ளோம் ,என்னில் அப்பெருமை
  எம் அண்ணலை மட்டுமே சாரும்.

  மொழி என்பது ஒரு ஒரு கருவியாம் (சாதனம்,பொறி, கரணம் ). அப் பொறியினில் பார்ப்பனர் பொறி ,ஆங்கிலேயர் பொறி என்று வாசியறிவது மடமையாம் .

  பார்ப்பனன் என்னும் செத்தபாம்பை அடிப்பானேன் .

  அடியேனும் ஒரு பொறியாளனாம் .

  பிறர் மீது துப்புவது என்னும் இப்பண்பினை (குற்றத்தினை ) கற்றீர் அன்பரே.
  யானும் நன்னூல் சுவடியினிலே பதவியல் படலத்திலேயே (சூத்திரம் 135) தேடினேன் .
  மற்றும் தொல்காப்பியம் சுவடியினிலே பொருளதிகாரம் படலத்தினில் அகம் ,புறம் மற்றும் இன்னபிற இடங்களிலும் தேடினும் காணாநின்றேன் .
  உம்மிடமே கண்டேன் . திருந்துவீர் நீரே .!!

  அன்புடன் ,
  கேணேசு

  • Gane-sooo… Just by typing in Tamil my ideas won’t change. I will type in whatever language I am comfortable in. It is up to Vinavu to publish it or not. Tamil transliteration tool is PITA for me.

   50 years since Brahminical domination ended? Still you can’t make a non-Brahmin as priest in Palani or Chidambaram. Castism (not only Brahminism) is still at large. You don’t have spine to oppose it.

   Brahmins have a cunning way to digest every opposing ideology as their own. They made Buddha as an avatar of Vishnu. Similarly they are saffronizing Ambedkar. “Adi” varudis like you claim that this is a victory!

   Spitting on utterly stupid statements is very valid. I will spit again. Or do even worse if your comments are stupid. You being an engineer won’t give any merit to your stupid first comment.

   • Dear brother,

    Please read a book called “BRIEF HISTORY OF TIME” written by Stephen Hawking. I don’t need to answer you. The answer is there.
    Everybody in this world dominate others with various ideas like RACISM(White People ) ,etc.

    Vinavu is editing or deleting my comments, very well.

    Becoming an Engineeer doesn’t mean that he knows everything. In the same Being a layman doesn’t stop him learning science.

    Spitting is not an act of a well cultured person.

    Please try to unlearn it.
    Please respect others ,whether they are Engineers or layman.
    First love all(living and non living beings)!!

    With Love,
    GENESU

    • I have spitted on your stupid ideology. Not every ideology should be respected. I have read the book Brief History of Time. Could you please quote the exact page/text so that I can refute your argument. Stephen Hawking is a leading rationalist and I am sure that he won’t have said such stupid things.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க