privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் !

ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் !

-

ட்டோமேசன் எனப்படும் தானியங்கி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் எனும் எந்திர மனிதன், ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் யாருக்கு இலாபம்? இவற்றை பயன்படுத்தி இந்திய ஐ.டி துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 6.4 லட்சம் வேலைகள் பறிக்கப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த எச்.எஃப்.எஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி 2021-ல் உலக அளவிலான ஐ.டி வேலைவாய்ப்புகள் சுமார் 9% அல்லது 14 இலட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்று தெரிகிறது.

BPOகடந்த ஆண்டு நாஸ்காம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 2025-ல் 26 கோடி வேலைகள் உலக அளவில் நீக்கப்பட்டு அவை இயந்திரங்களை மையப்படுத்திய புதிய தொழில்நுட்பத்தை கொண்டு நிரப்பப்படும். செய்த வேலைகளையே மறுபடியும் செய்யும் படியான வேலைகள் முதற்கட்டமாக ஆட்டோமேசனுக்கு மாற்றப்படும். ஆய்வு பணித் திறன் குறைவாக தேவைப்படும் வேலைகள் 30% குறையும் போது மிதமான மற்றும் அதிக திறன் தேவைப்படும் வேலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கிறது. பின்னர் படிப்படியாக இவ்வேலைகளும் குறைக்கப்படும்.

இதில் ஐ.டி துறையில் ஒரு பகுதியாக செயல்படும் பி.பி.ஓ துறை மிக அதிகமாக பாதிக்கப்படும். “ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேசனின் பாதிப்புகளை பி.பி.ஓ துறை இரண்டு ஆண்டுகளில் அனுபவிக்க போகிறது. இது அத்துறை மட்டுமில்லாமல் நாடும் எதிர்கொண்டாக வேண்டிய சவாலாகும்.” என்கிறார் அன்ட்ஒர்க்ஸ் பி.பி.ஓ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அசீஸ் மெஹ்ரா.

ஐ.டி துறையில் பணியாட்களின் எண்ணிக்கையை குறைக்கும் வேலைகள் ஏற்கனவே துவங்கி விட்டன. டெக் மகெந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு முதல் தானியங்கி தொழில்நுட்பத் துறையில் கவனம் செலுத்தபோவதாக கூறிய நிலையில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மொத்தத்திலிருந்து 2000 எண்ணிக்கை  குறைந்திருக்கிறது. அக்செனசர் நிறுவனமும் புதிதாக ஊழியர்கள வேலைக்கு எடுப்பதை குறைக்கபோவதாக அறிவித்துள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரி நன்டெர்மி கூறுகையில் “தானியங்கி தொழில்நுட்ம் மற்றும் எங்கள் வேலை திறன் காரணமாக இனி எங்கள் வருமானம் அதிவேகமாக வளரும் அதே வேளையில் ஊழியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவான எண்ணிக்கையில் வளரும்” என தெரிவித்துள்ளார்.

ஊழியர்களை வைத்து செய்யும் வேலையின் குறிப்பிடத்தக்க பங்கை மென்பொருளாக மாற்றி எழுதிதருவதை ஊழியர்களின் வருடாந்திர இலக்கில் வைத்து ஏற்கனவே செயல்படுத்திவருகின்றன ஐ.டி நிறுவனங்கள். இதனால் கிரயமாக பத்து பேர் செய்யும் வேலையினை ஒருவர் செய்தால் போதும் என்ற நிலை தோற்றுவிக்கப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக சிக்கா என்பவர் நியமிக்கப்பட்டதும் தானியங்கி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தபோவதாக கூறி அது தொடர்பான நிறுவனங்களை வாங்கி இணைத்துக்கொண்டது இன்போசிஸ் நிறுவனம். இது போன்று பிற ஐ.டி நிறுவனங்களும் இத்துறையில் அதிக கவனம் செலுத்திவருகிறார்கள்.

ஏற்கனவே உற்பத்தித் துறையில் தானியங்கி எந்திரங்களின் வருகையால் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளது அனைவரும் அறிந்ததே. இனி கல்வி, ஊடகம், மருத்துவம், சட்டம், வங்கி உள்ளிட்ட துறைகள் தானியங்கி திறனை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை ஒழிப்பது நடக்கும்.

புதிய பொருளாதார கொள்கைகளின் விளைவாக “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி”(Jobless growth) என்பது தான் நாடு தழுவிய நிகழ்ச்சிப்போக்காக இருக்கிறது. பல லட்சம் இளைஞர்கள் படித்துமுடித்து வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடன் தானியங்கி தொழில்நுட்பத்தின் பேரில் பலியாகிறவர்களும் இணையப் போகிறார்கள்.

பல்வேறு ஐ.டி ஊழியர்களின் உழைப்பால்தான் எண்ணிறந்த மென்பொருட்களும், தானியங்கி தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுகின்றன. பிறகு அவற்றை பயன்படுத்தி தனது இலாபத்தை அதிகப்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ஈவிரமிக்கமின்றி அவ்வூழியர்களை தூக்கி எறிகின்றன. ஐ.டி என்றால் சொர்க்கம், அமெரிக்கா என்று கனவில் காத்திருக்கும் புதியவர்களோ என்ன செய்வதென்று திகைத்துப் போகிறார்கள்.

முன்னேறிய உற்பத்திமுறை உண்மையில் தொழிலாளிகளின் பணிச் சுமையை குறைப்பதாக இருக்கவேண்டுமா? இல்லை முதலாளிகளின் லாபத்தை அதிகமாக்குவதாக இருக்க வேண்டுமா? என்பது தான் கேள்வி?.

சோசலிச நாடுகளில் மட்டும்தான் தானியங்கி தொழில்நுட்பம் தொழிலாளிகளின் பணிச்சுமையை குறைத்து அவர்களின் ஆற்றலை அறிவியல், கண்டுபிடிப்புகள், கலை உள்ளிட்ட மற்ற துறைகளில் செலுத்துவதாக அமையும். மாறாக முதலாளித்துவத்தில் முதலாளியின் லாபத்தை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும். அதன் தவிர்க்கமுடியாத விளைவு வேலை பறிப்பு. இப்படி வேலையிழந்து தெருவில் நிற்கும் பட்டாளம் அதிகரிக்கும் போது முதலாளிகள் ஆசைப்படும் பிரம்மாண்டமான விற்பனை அகலபாதாளத்தில் சரியும். உற்பத்தி தேங்கும். சங்கிலித் தொடராய் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகள் ஏற்படும்.

தானியங்கி தொழில்நுட்பத்தை தடுக்கமுடியாது. ஆனால் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும். என்ன செய்யலாம்?

– ரவி

மேலும் படிக்க:

  1. இதுவரை இருந்த தொழில் நுட்ப முன்னேற்றம் எல்லாம் , மனிதனின் வேலையை இலகுவாக்கும் உபகாரணங்களாக இருந்தன .

    இப்பொழுது வரும் தொழில் நுட்பம் மனிதனே தேவை இல்லை என்னும் புதிய உலகை நோக்கி நகர்கின்றன .

    தானியங்கி டாக்சிகள் , டிரைவர்கள் தேவை இல்லை எனும் நிலை கொண்டு வரும்
    வங்கி பணியாளர்கள் ,ட்ரெயின் பஸ் பிளேன் டிக்கெட் புக் பண்ணும் கிளர்க்குகள் , ரீ டைல் வேலைகளை செல் போன்கள் செய்து விடும். இப்பொழுதே ஏர் போர்ட்களில் உள்ள உணவகங்களில் ஆர்டர் செய்ய ஐபேட் வைத்திருக்கிறார்கள் . நாமாகவே தேர்வு செய்து ஆர்டர் செய்ய வேண்டும் .

    வாட்சன் போன்ற டார்கெட்டேட் ஸ்பெஷாலிட்டியில் மெஷின்கள் வந்து டாக்டர் வேலை , வக்கீல் வேலை செய்யும்

    புதியதொரு உலகில் பயணிக்க இருக்க்கிறோம் . அல்காரிதம் மனிதனின் வாழ்க்கையை நிரநயிக்கும்

  2. புதியதோர் உலகிற்கு பயணிப்பதெல்லாம் இருக்கட்டும் ராமன்.. இந்த ஆட்டோமேஷனால் பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோக போகிறதே அதை பற்றி எந்த சிந்தனையோ, அக்கறையோ உங்களுக்கு இல்லை. ஆட்டோமேஷன் வந்த பிற்பாடு பல ராமன்களின் அறிவெல்லாம் அந்த ரோபோட் இயந்தரத்தின் கால் நுனியில் ஒட்டி இருக்கும் தூசிக்கு கூட சமானம் இல்லை என்று ஆகி விடுமே அதற்கு என்ன செய்யலாம்.

    ராமனின் புதியதோர் உலகில் , வேலை இல்லை போய் வா என்று முதலாளி கூற மாட்டார். ஒரு ரோபோவே வந்து ராமனின் சட்டை காலரை பிடித்து தூக்கி, நிறுவனத்தின் வாசலில் கொண்டு வந்து வீசி எரிந்து விட்டு, ” இனிமேல் உன்போல் ஆயிரம் மடையர்களின் வேலையை செய்வதற்கு நான் ஒரு ரோபோவே போதுமாம், இனி உனக்கு தண்ட தீனி(சம்பளம்) தருவதற்கு நிறுவனம் தயாராக இல்லை, get out”. என்று கூறி, நிறுவன முதலாளி செய்து வைத்த அல்காரிதம் programming செட்டிங்ஸ் அடிப்படையில் காரி உமிழ்ந்து விட்டு சென்று விடும். இதெல்லாம் தேவையா ராமன்.

    முன்பெல்லாம், வேலை விட்டு நீக்கினால் முதலாளியோ, அல்லது டீம் லீடரோ,ஹச்.ஆரோ வந்து கையில் ஒரு பிங்க் ஸ்லிப்பையும், இரண்டு மாத சம்பளத்தையும் கொடுத்து விட்டு “உன்னை காலி செய்து விட்டோம்” வேறு இடம் பார்த்துக் கொள்” என்று நாகரீகமா கூறுவார்கள். இப்போது இந்த ரோபோவை வைத்து மனிதாபிமானமே இல்லாமல் என்னை புழுதியில் வீசி எரிந்து விட்டார்களே என்று நீங்கள் புலம்புவது தான் மிச்சமாக இருக்கும். இதெல்லாம் தேவையா ராமன். ஆகவே லாப வெறியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் முதலாளித்துவத்தை வேரறுப்போம். மனித வளத்தை காப்போம். போராட வாருங்கள் ராமன் .

    • ரெபேக்கா மேரி.. நீங்க சொல்றதுல ஒரு முக்கியமான அம்சம் விடுபடுதே.. ஏற்கெனவே ஆட்டோமேசன் பண்ணியது இவர்கள்தான். அது வங்கித்துறையில் துவங்கி போக்குவரத்து, புண்ணாக்கு என எல்லாவற்றையும் ஆட்டோமேசன் பண்ணி அதாவது சேவைத்துறையை ஆட்டோமேசன் பண்ணி வேலை வாய்ப்புகளை குறைத்த்து. இப்போது செலவு பண்ண பசையுள்ள மேல்தட்டுவில் உள்ள ஒரு எலைட் பிரிவினரை (அதாவது பழைய பகுதியினரோடு ஒப்பிடும்போது) வேலையிழக்க செய்வதன் மூலம் செலவு செய்யும் வாய்ப்பை ரத்து செய்கிறது. அப்படியானால் டிமாண்டே இல்லாத இடத்தில் சப்ளையை தொடர்ந்து கொடுப்பது சாத்தியமுமில்லை. எனவே ஆட்டமேட்டிக்காக ஆட்டோமேசனுக்கு பொருளாயாத மதிப்பு குறைந்து விடும். இதுவரை அத்துறை உழைக்கும் மக்களின் உழைப்பை விலைவாசி ஏற்றத்தின் மூலம் உறிஞ்சி வந்த காலம் மாறி பொதுவான பொருளுற்பத்தி முறையில் மக்களுக்கு ஒரு இளைப்பாறுதலை தர வல்ல சூழல் தான் இது என படுகிறது. நானும் எதையும் இதில் மிஸ் பண்ணியிருப்பின் சொல்லுங்கள்

      • மணி,

        எல்லா வேலைகளுமே தானியங்கி மூலம் சாத்தியப்படக் கூடிய ஒரு நாளில் உங்க லாஜிக் படி யாருக்கும் முதலாளி படியளக்க முடியாது எனில் மக்கள் இளைப்பாறவோ பசியாரவோ முடியாது.

        இங்கே தாங்கள் கூறும் டிமான்ட் அண்ட் சப்ளை என்பது வெறுமனே காசுக்கும் பொருளுக்கும் உள்ள உறவு தான்.

        அப்படி வைத்து கொண்டால் முதலாளித்துவம் என்ற அமைப்பு டிமாண்ட் இல்லாத இடத்திலும் தொடர்ந்து சப்ளை செய்து கொண்டே தான் இருக்கும். எது வரை என்றால் மீள முடியா நெருக்கடி வரும் வரை. அப்பொழுதும் அது தான் உற்பத்தி செய்த பொருட்களை அழித்து விடுமே ஒழிய தேவைபடுபவர்களுக்கு கொடுக்காது.

        எடுத்துக்காட்டாக உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவை முதலாளித்துவ நாடுகள் குப்பையில் கொட்டி வீணடித்து விடுகின்றன. அந்த உணவு தேவைப்படும் மக்களுக்கு கிடைக்காமல் வீணடிப்பது எது? இங்கே டிமாண்ட் இருக்கிறது ஆனால் காசுக்குதான் எல்லாம் எனும் முதலாளித்துவ அமைப்பு அதை அனுமதிக்காது.

        எனவே இங்கே ஆட்டோமேசன் உற்பத்திக்கு மட்டுமல்ல எளிமையான மனித உழைப்புக்கும் மதிப்பென்பது கிடையாது.

        • செவப்பு சார்.. நான் சொல்லும் டிமாண்ட் அண்டு சப்ளை இரண்டுமே முதலாளித்துவ சக்திகளுக்குள் நடக்கும் ஒரு மாய விளையாட்டு. அதாவது ஆட்டோமேசனை பொறுத்த வரை மட்டுமே இது பொருந்தும். இதைத்தான் முந்தைய பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறேன். உணவுப்பொருள் என்றெல்லாம் போக முனைவது நீங்கள் அமைக்க விரும்பும் எதிரிக்கான கட்டம் கட்டும் வேலை. ஓரளவுக்கு பின்னூட்டத்தை படித்த பிறகு விவாதிக்க முன் வாருங்கள்.. ஜல்லிகளால் பிரயோசனமில்லை. தார் ஒட்டணும்..போற வாற டயர்ல எல்லாம் ஒட்டிட்டா அப்புறம் காசு லேது

        • செவப்பண்ணே உங்க பொதுப்புரிதலில் எனக்கு இரு ஐயங்கள்..1) முதலாளித்துவ அமைப்பு டிமாண்டு இல்லாத இடத்திலும் சப்ளை செய்து கொண்டிருக்கும் அதாவது மீள முடியாத நெருக்கடி வரும் வரை. அப்போதும் பொருளை கடலில் கொட்டி வீண்டிக்கும் என்றும் 2) காசுக்குதான் எல்லாம் எனும் முதலாளித்துவ அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்… காசு என்பது என்ன, மனித உழைப்பின் பரிவர்த்தனை மதிப்புக்கான ரசீது இல்லையா.. ஒரு சோசலிச சமூகத்தில் கூட திறமைக்கேற்ற கூலி என்று வரும்போது அங்கும் இதே காசு, உழைப்பின் பரிவர்த்தனை மதிப்பு பெயரால் தான் முதலில் அறவிடப்படும். அங்கு திட்டமிடல் சீராக இருக்குமாதலால் கொட்டுவது நடக்காது என நினைக்கிறேன்.. சரிதானா… முதல் பாயிண்டில் டிமாண்ட் இல்லாவிடிலும் சப்ளை இருக்கும் என்கிறீர்களே.. முரண்பாட்டின் ஒரு அம்சத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு பொருளோ, நிகழ்வுப் போக்கோ இருக்க இயலும் என்று கருதுகிறீர்களோ

          • மணி அய்யா,
            நீங்க ரெம்ப படிச்சுட்டு கில்லியா தான் கேள்விய கேக்குறீங்க. ஒரு வேளை ஒங்க பதில் எனக்கு பிரியாம இருந்து இருக்கலாம். அந்த அளவிற்கு எனக்கு அறிவு இல்லாமைக்கு வருந்துகிறேன்.

            //அத்துறை உழைக்கும் மக்களின் உழைப்பை விலைவாசி ஏற்றத்தின் மூலம் உறிஞ்சி வந்த காலம் மாறி பொதுவான பொருளுற்பத்தி முறையில் மக்களுக்கு ஒரு இளைப்பாறுதலை தர வல்ல சூழல் தான் இது என படுகிறது//

            இது எப்படின்னு கொஞ்சம் விளக்குரீங்கள?

  3. எங்க ஊருல தென்னை மரத்துல தேங்காய் பறிக்க ஒரு ரோபோட் கண்டு பிடிச்சா தேவல ,தேங்காய வெட்டி வித்தா வர்ற பணம் வெட்டுக்கூலிக்கே போயிடுது கதிர் அருக்குற மிசின் மாறி இதுவும் வந்தா தேவலதான் போல இருக்குது

      • இன்னும் எனக்கு வேலயே கிடைக்கல அப்புறம் எப்பிடி ரிடயர்டு ஆறது சாப்ட் வேர் ஆசாமிகளுக்கு வேலை போயிடுமுன உடனே பத்திக்கிட்டு வருது, கதிரு அருக்க நாத்து நடவுக்கெல்லம் மிசின் வந்தப்ப அப்ப உள்ள கூலி தொழிலாளிக கூடா இப்படித்தான் பதறுனாக அப்புறம் எல்லாம் சரி ஆயிடலயா அது மாறிதான் இதுவும் ஆகும் உங்களுக்கு வந்தா ரத்தம் விவசாய கூலீ தொழிலாளிக்கு வந்தா தக்காளி சட்னியா ,ரவிராஜ் கு சால் தெரியுமா

        • இல்லீங்ணா.. அந்த சட்னிய அரச்சவங்களே இவங்கதான். இப்போ இவங்களுக்கு இன்னோருத்தன் அரைக்கும் போது குய்யோ முறையோ ங்குறாங்க..

          • ஒரு ஆட்டோமெட்டடு மிசின டிசைன் பன்னதுக்கு நிறைய என்ஞ்சினியருங்க மூளய கசக்கி வேல செஞ்சு இருப்பாங்க ஒரு மிசின் வேலை செய்ய எலக்ட்ரானிக் சிப் அ டிஸைன் பன்ன 1000 வரில கோடிங்ஸ் எழுதனும் இதெயெல்லம் யோசிச்ச ஆளுக பாதாள சாக்கட அடைப்பு எடுக்குற மிசின் டிஸைன் பன்னி மாநகராட்சிக்கு குடுத்து இருக்கலாமே எத்தன பேரு சாவுறாங்க இவங்களுக்கு ஒரு ஆப்பு வைக்கட்டும் அப்பதான் புரியும் இவனுகளுக்கு

            • யோசேப்பு,

              நாம சாப்புடற சாப்பாட எவ்ளோ கிராமத்து விவசாயிகள் உழைத்து உற்பத்தி செஞ்சு இருப்பாங்க. ஆனா தொழிற்சாலைல வேலை செய்யுற ஒரு தொழிலாளியோ அவரது குழந்தையோ ஏன் பட்டினியால சாகனும்?

              1000 வரிகளில் கோடிங் எழுதுவதோ 1000 டன் கோதுமை தயாரிப்பதோ வெறுமனே மென்பொருள் வல்லுநர் கையிலோ விவசாயியின் கையில் மட்டுமே இல்லை.

              ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்ற சொலவடை அப்படியே உமக்கு பொருந்தும். பாதாள சாக்கடையில வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தேவையான நவீன இயந்திரம் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் அதை தொழிலாளர்களுக்கு கொடுக்காதது எது? அதன் மீது உங்களுக்கு கோவம் வராமல் வெறுமனே மென்பொருள் எழுதுபவர்களை நோவது ஏன்?

              • அய்யா சிவப்பு அது எனக்கும் தெரியும் பாதாள சாக்கட சுத்தம் பன்ற மிசின் அவ்வளவு இன்டிலிஜன்ஸ் மிசின் கிடையாது அதுல சுத்தம் பன்னாலும் அடைப்பு இருந்தா மனுசங்க இறங்கிதான் ஆகனும்

                  • சாதாரன கூலி தொலிலாளி ,விவசாயிய விட தான் அதி புத்திசாலினு நினைச்சுக்குறானே என்ன செய்யலாம் அவுகள

  4. ஆக நான் மட்டும் தப்பிப் பிலைத்தால் சரி – இது தானே உங்கல் வாதம், என்ன மனிதனோ கடவுலே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க