முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர் கோலத்தில் மோடி - அமிதாப் - விராத் - ஐஸ்வர்யா - ஷாரூக் ...

காஷ்மீர் கோலத்தில் மோடி – அமிதாப் – விராத் – ஐஸ்வர்யா – ஷாரூக் …

-

காஷ்மீரில் புர்ஹான் வானி கொலைக்கு பிறகு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயன்படுத்தும் பெல்லட் குண்டு தாக்குதல்களை அறிந்திருப்பீர்கள்.  இந்தியாவில் இந்த தாக்குத்தல் குறித்த விவாதங்கள் எல்லாம், பெல்லட் துப்பாக்கியை இராணுவம்  எடுத்த எடுப்பிலேயே பயன்படுத்தியதா, இல்லை கடைசி வழியாக பயன்படுத்துகிறதா என்று நடக்கின்றன. “ஒருபோதும் மறக்காதே பாகிஸ்தான்” எனும் பாகிஸ்தானி சிவில் குடியுரிமைக் குழுமம் ஒன்று ஓவியக் கலையின் துணை கொண்டு பெல்லட் குண்டு தாக்குதலை உணர்த்த முயற்சிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் #IndiaCan’tSee, (இந்தியா பார்க்க முடியாதது) என்ற ஹேஷ் டேக்குடன் அவர்கள் வெளியிட்ட படங்கள் வைரலாக பரவியது. இந்திய பிரபலங்களான மோடி, கிரிக்கெட்டின் விராத் கோலி, நடிகர் ஷாருக்கான் போன்றோர் பெல்லட் குண்டு தாக்குதலால் எப்படி இருப்பார்கள் என்பதை ஃபோட்டோஷாப் மூலம் அந்தப் படங்கள் சித்தரிக்கின்றது.  அந்த படங்களைப் பார்ப்போரிடம் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் என்று காஷ்மீர் மக்களின் துன்பத்தை எடுத்துரைக்க முயல்கிறது இந்த முயற்சி.

காஷ்மீரில் பால் வாங்கவோ, மருந்து வாங்கவோ, வீட்டில் விளையாடவோ, சமையல் அறையில் சமையல் செய்து கொண்டோ இருந்தாலும் மத்திய போலீசின் குண்டுகள் யாரையும் விட்டு வைக்கவில்லை. சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், முதியவர்கள் என்று முழு சமூகமே அங்கு கண்களை இழந்தோ காயம் பட்டோ, இல்லை காயமடைந்தவர்களை காப்பாற்ற முடியாமலோ அழுது கொண்டிருக்கிறது.

இருப்பினும் இந்த கொலைக் குற்றத்தை அதாவது 2,012 முறை பெல்லட் துப்பாக்கிகளால் சுட்ட ( கிட்டத்தட்ட 12 இலட்சம் சிறு குண்டுகள் ) மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவர் ஒரு வரியில் காயங்களுக்கு வருந்துகிறோம் என்று முடித்து விட்டார்.

கற்பனை செய்து பாருங்கள்! இந்தியாவின் பிரபலங்களுக்கு அந்த காயங்கள் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்?

அன்புள்ள ஐஸ்வர்யா,

aiswarya-rai

உங்கள் நான்கு வயது மகளான ஆராத்யாவை காப்பாற்றும் முயற்சியில் நீங்கள் மத்திய ரிசர்வ் படையால் தாக்கப்பட்டது எனக்குத் தெரியும். என் வாழ்வில் இதைப் போன்று காஷ்மீரில் நிறைய பார்த்து விட்டேன். இருப்பினும் இன்னும் எனது நான்கு வயது குழந்தையை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறேன். போலிசு பயன்படுத்திய ஏதோ பட்டாசுதான் தன்னைத் தாக்கியது என்றே எனது மகள் சுஹ்ரா நினைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த குண்டுகள், துப்பாக்கிகள், சாதாரண மக்கள் மீது ஏன் ஏவப்படுகின்றன என்று அவளால் புரிந்து கொள்ள முடியாது. ஒரு வேளை இந்தியாவில் உள்ள தாய்மார்கள் அப்படி குரல் எழுப்பியிருந்தால் காஷ்மீரில் உள்ள குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

–    நசிமா ஜான், காஷ்மீர்.

***

அன்புள்ள அலியா,

alia-bhatt

நீங்கள் எனது வார்டுக்கு அருகில் இருப்பதாக அறிந்தேன். நான் உங்களது தீவிர ரசிகர் என்பதால் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நன்கு ஓய்வு எடுங்கள், மன அழுத்தத்தை கை விடுங்கள். எந்த தவறுமே செய்யாமல் நாம் ஏன் தாக்கப்பட்டோம் என்று நீங்கள் பயந்து கொண்டே சிந்திப்பது தெரிகிறது.  நானும் அப்படித்தான் எனது வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தாக்கப்பட்டேன். எனது அப்பாவும் திகைத்துப் போனார்.

“எதற்காக எனது 11 வயது மகளை தாக்கினீர்கள், அவள் ஒரு பிரிவினை இயக்கத்திலும் இல்லையே” என்று அவர் கேட்டார். அந்த போலிசோ எதுவும் சொல்லவில்லை. உலகம் அமைதியாக இருந்தால் கொடூரம் தலைவிரித்தாடும் என்பதறிவேன். எனவே நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு பலமடைவோம். எது வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளுங்கள், நானும அருகில்தான் இருக்கிறேன்.

–    இன்ஷா முஸ்டாக், காஷ்மீர்.

***

அன்புள்ள மோடிஜி

modi

முதற்கட்ட அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக உங்கள் கண்களில் இருக்கும் பெல்லட் குண்டு துகள்களை முழுவதுமாக அகற்ற முடியவில்லை. மருத்துவமனையில் இருக்கும் போலிஸ் உடனே அறுவை சிகிச்சை செய்வதை தடுத்திருந்ததால் உங்களுக்கான காயம் மேலும் மோசமாகும் வாய்ப்பிருக்கிறது. போலீசார் மருத்துவமனைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வது அடிக்கடி நடப்பதால் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை உடனுக்குடன் அளிக்க முடியவில்லை. இங்கே ஒரு தலைமுறையே பார்வையற்றவர்களாக்கப்பட்டு முடக்கப்பட்டிருக்கிறது. இப்படி நூற்றுக்கணக்கானோரை கடந்த ஐந்து வருடங்களாக பார்த்து வருகிறோம். உங்கள் காயம் குணமடைந்து இத்தகைய தாக்குதல்களை நிறுத்துவீர்கள் என நம்புகிறேன்.

–    டாக்டர் ஷாஜத் காந்தே,
ஸ்ரீநகர் எஸ்.எம்.ஹெச்.எஸ் மருத்துவமனை, கண் மருத்துவம் துறை.

***

அன்புள்ள அமிதாப்ஜி,

amitabh

நீங்கள் காயமடைந்தது குறித்து பெரிதும் வருந்துகிறேன். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நடவடிக்கைகளில் நீங்கள் நுழைந்திருக்ககூடாது. எனது மகன் கௌகர் நாசீரும் இதே தவறைச் செய்திருக்கிறான். பால் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறியவன், அங்கே நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி பையனை போலீஸ் அடிப்பதை பார்த்து தடுக்க முயற்சித்தான். உடனே போலிசார் அவனை துப்பாக்கியால் சுட்டனர். கௌகர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அதிர்ச்சியால் எனது தாய் இறந்த போனார்.

போகட்டும். அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். உங்கள் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இன்னமும் உங்களுக்கு காலமிருக்கிறது.

–    நசீர் அகமத் தார், காஷ்மீர்.

***

அன்புள்ள கஜ்ரோல்,

kajol

உங்களை சந்திக்க இயலாமைக்கு என்னை மன்னியுங்கள். எனது 9 வயது மகள் தமன்னாவை விட்டு நான் நீங்கினால் அவள் பதட்டமடைவாள். மருத்துவமனை படுக்கையில் இருந்தாலும் அவள் பயத்துடனே இருக்கிறாள். நான் அவளை எப்படி குற்றம் சொல்ல முடியும்? பெல்லட் குண்டு தாக்கும் போது அவள் சமையலறையில் இருந்தாள். ஒரு இலக்கை சுடுவதற்கு காஷ்மீர் போலிசாருக்கு எந்த காரணமும் தேவையில்லை. எனது வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதை ஒரு தாயாக உறுதி கூறுகிறேன்.

–    ஷாமீமா, காஷ்மீர்.

***

அன்புள்ள சையஃப்,

saif-ali-khan

நீங்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை நம்பவே முடியவில்லை. எனது வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும், எனது வலது கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருப்பதால் உங்களை உடன் வந்து சந்திக்க முடியவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதாக கூறும் இந்திய இராணுவம் என்னை ஏன் சுட்டது? நான் உயரமானவனோ அச்சுறுத்துபவனே கூட அல்ல. எனக்கு வயதே 11தான், அதுவும் வீட்டின் வெளியே சும்மா நின்றிருந்தேன். இந்திய இராணுவம் பயங்கரவாதிகளாக இல்லை என்றால் நான் ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுகிறேன், ஏன்?

–    உமர் நாசீர், காஷ்மீர்

***

அன்புள்ள விராத்,

virat-kohli

கிரிக்கெட் பயிற்சி முடித்து விட்டு திரும்பும் போது நானும் இந்திய இராணுவத்தால் எனது இடக்கண்ணில் சுடப்பட்டேன். இருப்பினும் இதற்காக கவலை கொள்ள வேண்டாம், இது உயிரழக்கச் செய்யும் குண்டு அல்ல என்று இந்தியாவால் சொல்லப்பட்டேன். ஒரு காஷ்மீரியாக இருப்பதால் வரும் பொறுமைதான் எனக்கு சக்தி தருகிறதே அன்றி, எனக்காக குரல் கொடுக்க யாருமில்லை. நீங்களும் உறுதியாக இருந்து விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். நீங்களோ நானோ இனி கிரிக்கெட் பந்தை பார்த்து அடிக்க இயலாது. என்றாலும் நமக்கு உயிராவது கிடைத்திருக்கிறதே என்று இந்திய இராணுவம் கூறுகிறது.

–    ஷாகில் சாகூர், காஷ்மீர்.

***

அன்புள்ள ஷாருக்

sharukh-khan

இந்திய இராணுவம் உங்களுக்கு செய்திருப்பது ஒரு சோகமான நிகழ்வு. நீங்கள் அந்தப் போராட்டக்காரர்களோடு கூட இல்லை. இப்படித்தான் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டம், இராணுவத்திற்கு சந்தேகப்படும் யாரை வேண்டுமானலும் சுடுவதற்கு அதிகாரம் கொடுக்கிறது. எனது சகோதரன் ஹமீதுக்கும் இதே கொடூரம்தான் நடந்திருக்கிறது. நாள் முழுவதும் பள்ளியில் இருந்து விட்டு டியூஷனுக்கு திரும்பும் போதுதான் அவனும் பெல்லட் குண்டால் சுடப்பட்டான். இந்த அதிர்ச்சியிலிருந்து அவனை மீட்பதற்கு சிரமப்படுகிறோம். அடுத்த முறை காஷ்மீரில் ஒரு இராணுவ அதிகாரியின் பாத்திரம் குறித்து உங்களிடம் கேட்கும் போது காஷ்மீர் மக்களுக்காக பேசும் உறுதியை பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.

–    ஜுனாத் நாசீர்.

***

அன்புள்ள மெகபூபா முப்தி,

mehbooba-mufti

உங்கள் வலது கண் பார்வை பறிபோனதுக்கு மிகவும் வருந்துகிறோம். மருந்துக் கடையிலிருந்து திரும்பும் போது நானும் இராணுவத்தால் வலது கண்ணில் தாக்கப்பட்டேன். எனது பார்வை பறிபோயிருப்பதால் எதையும் பார்க்க முடியாது என்று உள்ளூர் மருத்துவர்கள் கூறி விட்டார்கள். நிர்ப்பந்தத்தால் உங்களை பங்களாவில்  எனது குடும்ப உறுப்பினர்கள் சந்தித்தார்களே அந்த படத்தை கூட நான் பார்க்க முடியாது. இந்த வயதில் அதுவும் பார்வை பறிபோய், காயமடைந்த உங்களால் எங்களது இல்லத்திற்கு வர இயலாது என்பதை புரிந்து கொள்கிறேன். இது போல இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் மக்களான எங்களுக்காக பேச யாருமில்லை. எங்களைக் கொல்லும் உங்களது நண்பர்களை நிறுத்துமாறு கோருவீர்கள் என்று நம்புகிறேன்.

–    ஐசியா

***

அன்புள்ள ஹிரித்திக்,

hrithik-roshan

நலமடைந்து வருவீர்கள் என நம்புகிறேன். உங்களது “மிஷன் காஷ்மீர்” படம் பார்த்திருப்பதால் நீங்களாவது காஷ்மீரில் நடக்கும் அராஜகங்களையும், எங்களது இன்னல்களையும் கொஞ்சமாவது அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன். சிகிச்சைக்கு பணமில்லாமல் எங்களது தந்தை இந்த உலகை விட்டே சென்றது போன்ற நிலைமை உங்களுக்கு இல்லை. இந்த வருட மே மாதத்தில் எனது உடலில் 40 பெல்லட் குண்டு துகள்கள் சுடப்பட்டு தங்கியிருக்கின்றன. இதுதான் உயிருக்கு இழப்பு ஏற்படுத்தாத ஆயுதமாம். எனது அண்ணனுடன் வீட்டை கவனிக்க நினைக்கும் எனக்கு வயது 13. ஆனால் தற்போது அவர்கள்தான் எனது சிகிச்சைக்காக என்ன செய்வதென்று கவலைப்படுகிறார்கள்.

–    இமாத் அகமத், காஷ்மீர்.

நன்றி : அவுட்லுக் வார இதழ்.

 1. காஷ்மீர் பண்டிட்டுகள் ஹிந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன அழிப்பு செய்யப்பட்ட போது வினவு இது போல் நவாஸ் ஷெரிப் புகைப்படத்தை பண்டிட்டுகள் கோலத்தில் வெளியிட்டதா ?

 2. இந்தியா ஒரு இளிச்சவாய முட்டாள் தேசம், மாதசார்பின்மை பேசி சிறுபான்மையினருக்கு (இஸ்லாமியர்களுக்கு) அதிக உரிமைகளை கொடுக்கும் பைத்தியக்கார தேசம். ஒரு ஹிந்து பாகிஸ்தானிலோ அல்லது வேறு ஒரு இஸ்லாமிய தேசத்திலோ அதிபராக வர முடியாது. ஆனால் இந்தியாவில் ஒரு சீக்கியன் இந்தியாவின் பிரதமராக முடியும் அதையும் பெரும்பாண்மை ஹிந்துக்கள் ஏற்பார்கள், ஒரு இஸ்லாமியன் இந்தியாவின் அதிபராக முடியும் அதையும் பெரும்பான்மை மக்கள் ஏற்பார்கள் ஒரு இஸ்லாமியன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வர முடியும் பெரும்பான்மை மக்கள் ஏற்பார்கள்…

  ஆனால் காஷ்மீரில் ஒரு ஹிண்டுவை எம்.ல்.ஏவாக கூட இஸ்லாமியர்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

 3. இந்தியாவில் இருந்து கொண்டு இவ்வுளவு சலுகைகளையும் பெற்று கொண்டு இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு தான் விசுவாசமாக இருப்பார்கள், காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க நம் நாட்டை இஸ்லாமியர்கள் அவமானப்படுத்துவார்கள். நாமும் அதை மதசார்பின்மை பேசி பொறுத்துக்கொள்வோம்…

 4. அடே முஸீலீம்களின் பங்காளி கம்மூனிஸ்டுகளா ஏன் ஒரு விசயத்தை புரிஞ்சுக்கவே மாட்டிறீங்க இந்திய மக்களின் உணர்வுகளை கேவலமா இருக்கு இசுல்லாமியன் என்று சொல்லிக்கொல்லும் ______ நீங்க பரிந்து பேசுவதை பாக்கும் போது ஏன்டா சிந்திக்கவே மாட்டிங்களா ,கிறிஸ்தவர்கள் அதிகமா இருக்குற மாநிலம் இருக்கு சீக்கியர்கள அதிகமா இருகுற மாநிலம் இருக்கு இஙெல்லாம் எழும்பாத தனிநாடு கோரிக்கையும் இல்லனா பிரிவினை வாதமும் மத்தவஙளுக்கு இல்லாத போது இவ_களுக்கு மட்டும் என்னடா தனி அந்தஸ்து குடுக்கனும் இசுலாம் என்ற காரணத்துக்காக மட்டும் தானா வேற என்னடா இருக்கு இதுல…….

 5. முஸ்லீம் மக்கள் தீவீரவாதத்தை ஆதரிப்பதை கைவிட வேண்டும்…இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும்… இஸ்ரேலிலும், சிரியாவிலும் இந்திய ராணுவம சுட்டது??? பாகிஸ்தானிலும், அப்கானிஸ்தானிலும் இந்திய போலீஸா சுட்டது??? இந்த அடி அவர்கள் வாங்க வேண்டிய அடி தான்… இது ஒரு பாடம்…

 6. புகைப்படங்கள் இன்னும் அதிகமாக தாக்கப்பட்ட நிலையில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். அடிபட்டவர்களுக்கு அது ஆறுதலாகவேனும் இருந்திருக்கும்.

 7. There was no India before Muslims& English came here.
  You know that, there was even no ‘Tamil Nadu’ it was Chola,Pandia,Chera and others.
  Before our Independence Kashmir was not in India.
  Our whole defense budget spent on Kashmir defense, leave them alone-let them defend themselves.
  Than we will capture Kashmir(If India has that capability) and keep Kashmir as colony of India not as one of the STATE

 8. அப்படியே மற்ற மாநில பிரபலங்களையும், குண்டு காயங்களாக மார்பிங் செய்து போட்டிருந்தால், எல்லா மாநிலத்தாரும் உணர்ந்து கொள்வார்கள், அந்த வலியையும், வேதனையையும்..

 9. காஷ்மீரின் இந்தியாவுடன் இணைப்பு முதல் அரசியல பாருங்கள் இந்திய அரசின் கபட வேலைகள் புரியும்………….

 10. இயல்பிலேயே மிக மிக மென்மையான சுபாவம் படைத்தவர்களே காஷ்மீரிகள்.அமர்நாத் யாத்திரை போகும் உண்மையான இந்து பக்தர்கள் இதை அறிவார்கள்.இரண்டு நாட்டு அரசாங்கங்களும் அந்த மக்களை தங்களின் போட்டி அரசியலுக்கு பலிகடாவாக்கி, காசிம்கான் இந்தியன் போன்ற விபரம் அறியாத முகமூடிகள் அவர்களை மூர்க்கர்களாக அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஏஜெண்டுகளாக நினைக்கும் அளவிற்க்கு கொண்டு விட்டிருக்கின்றன.

 11. மறுமொழி பகுதிக்குள் நுழையும் முன்னரே
  கணித்தேன்,——- குரைப்பு அதிகமாக
  இருக்கும் என்று.கணிப்பு தவறவில்லை.

 12. முகநூலில் கண்ட பதிவு …

  ஆசிரியர்: ஹலோ! தினவெறி ஆசிரியர் பேசுறேன்.

  தரணி: சார்! நான் தான் சார், தஞ்சை நிருபர் தரணி.

  ஆசிரியர்: சொல்லுங்க தரணி

  தரணி: சார்! இங்க ஒரு அட்டம்ட் ரேப் அண்டு மர்டர் சார்.
  ஆசிரியர்: என்னது கற்பழித்துக் கொலையா? அடக்கொடுமையே! யாருய்யா?

  தரணி: கல்லூரி மாணவி சார்!

  ஆசிரியர்: வாட்!……….. ஒரு நிமிசம்! எடிட்டர்!!!
  எடிட்டர்: சொல்லுங்க சார்!

  ஆசிரியர்: முதல் பக்கத்துக்கு தலைப்புச் செய்தி ஒரு மேட்டர் போட்டுக்குங்குங்க, தஞ்சை கல்லூரி மாணவி கற்பழித்துக் கொடூரமாக கொலை! கலர் படம். பெரிய சைஸ் இடம் ஒதுக்குங்க

  எடிட்டர்: ஓகே சார்.

  ஆசிரியர்: தரணி, வேறு ஏதும் செய்தி உண்டா?

  தரணி: சார்! அந்தக் கொலையைக் கண்டிச்சி தலித் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் அறிவிச்சி இருக்காங்க சார்.

  ஆசிரியர்: அப்டின்னா பொண்ணு தலித்தா?
  தரணி: ஆமா சார்!

  ஆசிரியர்: ஒரு நிமிசம் தரணி! எடிட்டர், இப்ப சொன்ன தஞ்சை மேட்டர் முதல் பக்கம் ஹெட்லைன் கிடையாது. கீழ்பக்கம் போட்டுக்குங்க. கற்பழித்துக் கொலைன்னு போட்டா போதும். கொடூரமாகன்னு போட வேண்டாம். பிளாக் & ஒயிட் படம் போட்டால் போதும். மேல் பக்கம் முதலமைச்சர் நிகழ்ச்சியைப் போடுங்க.

  டிரிங்..டிரிங்..டிரிங்..டிரிங்..

  ஆசிரியர்: ஹலோ! தினவெறி!

  மணி: சார்! நான் டெல்லி நிருபர் மணி. இங்க காஷ்மீரில ஆர்ப்பாட்டம் செய்த அப்பாவி மக்கள் 15 பேரை சுட்டுக் கொன்னுட்டாங்க சார்.

  ஆசிரியர்: ஓகே! ஓகே! எடிட்டர், 14 வது பக்கத்தில் ஒரு பெட்டி செய்தி போடுங்க, காஷ்மீரில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.

  டிரிங்…டிரிங்…டிரிங்..

  ஆசிரியர்: ஹலோ! தினவெறி!

  ராஜூ: சார்! ராஜூ பேசுறேன் சார்..,

  ஆசிரியர்: ஆஹா! ராஜூ சொல்லுங்க சொல்லுங்க, இன்னிக்கி என்ன சூடா செய்தி

  ராஜூ: சார்! நம்ம உள்ளூர்நாயகன் மலஹாசன் கக்கூஸ் போகும் போது வழுக்கி விழுந்து கால் ஒடிஞ்சி ஆஸ்பத்திரியில கெடந்தாருல்ல! அவரு இன்னிக்கி டிஸ்சார்ஜ் ஆயிட்டாரு சார்!

  ஆசிரியர்: பிரமாதம்யா! அற்புதமான செய்தி. எடிட்டர் அந்த முதல் பக்க கற்பழிப்பு மேட்டரைத் தூக்கி 14 வது பக்கத்துல போடுங்க. முதல் பக்கத்துல்ல உள்ளூர் நாயகன் மலஹாசன் டிஸ்சார்ஜின்னு பெரிசா எழுதி கலர் படம் போடுங்க.

  எடிட்டர்: சார்! 14 வது பக்கத்துல இடம் இல்லை சார்!
  ஆசிரியர்: அப்படியா! அப்டின்னா காஷ்மீர் கொலையை தூக்கிட்டு தலித் மேட்டரை அங்க போடுங்க.

  எடிட்டர்: சார்! காஷ்மீர்ல 15 மக்கள் செத்திருக்காங்க, அதுமாதிரி ஒரு அப்பாவி ஏழை தலித் பொண்ணை கற்பழிச்சி அநியாயமா கொலை செஞ்சி இருக்காங்க, அதை விட ஒரு நடிகனுக்கு கால் ஒடிஞ்சதை தலைப்பா போடச் சொல்றீங்களே! இது நியாயமா சார்?

  ஆசிரியர்: என்னைய்யா! புதுசா நீதி நியாமெல்லாம் பேசுற? இப்ப நாம வாழுற நாட்டுல பத்திரிகா தர்மத்தின் படி தலித்துகளையும் முஸ்லிம்களையும் ரோட்டுல செத்துக் கெடக்குது பாத்தியா நாயி! அதை விடக் கேவலமா பாக்கனும். மாட்டுக்கு அடிபட்டா மரண வேதனைன்னு எழுதனும், மனுசனைக் கொன்னா மர்ம நபர்கள் தாக்குதல்னு எழுதனும்.

  காவி பயங்கரவாதி துப்பாக்கியுடன் பிடிபட்டால் கொக்கு சுட வந்த அப்பாவி வேட்டைக்காரர் கைதுன்னு எழுதனும், அதே ஒரு முஸ்லிம் கலைஞர் டிவி ரிமோட்டுக்கு பேட்டரி வாங்கிக்கிட்டு வந்தா குண்டு தயாரிக்க பேட்டரி வாங்கிய தீவிரவாதின்னு தலைப்புச் செய்தி போடனும். அதுதான் நம்ம நாட்டின் பத்திரிக்கா தர்மம். இனிமேல் நீ பத்திரிகையில் வேலை பார்க்க லாயக்கு இல்லை. யு ஆர் டிஸ்மிஸ்..

  ஆக்கம் : அஹ்மத் கபீா்

  • அப்பாவி ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கொடுமையையும்
   பேரறிவாளனுக்கு நேர்ந்ததையும்
   மதவெறி கொண்டு தனி நாடு கேட்டு தீவிரவாதம் செய்பவர்களையும்
   ஒரே தராசில் வைத்து , அனுதாபம் தேட முயலுகிறார் அஹமது கபீர்

   பலே !

 13. @ Raman

  அப்பாவி தலித் பெண்ணுக்கு நேர்ந்ததும், காஷ்மீரில் உள்ள அப்பாவி இசுலாமிய மக்களுக்கு நேர்ந்ததும் ஒரே விதமான ஒடுக்கு முறை தான். அங்கு ஆதிக்க சாதி வெறி என்றால், இங்கு ஆதிக்க தேசிய வெறி. இரண்டிற்கும் பெரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது.

  ஆர்.எஸ்.எஸ், பார்ப்பன கண்ணாடியை கழற்றி விட்டு நேர்மையாக எந்த விஷயத்தையும் அணுகுங்கள். காஷ்மீரிலுள்ள ஒரு சில அமைப்புக்கள் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் அவ்வாறல்ல, இந்திய பாகிஸ்தான் போன்ற எந்த தலைவலியுமில்லாமல் நிம்மதியாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள். விரைவில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதன் படி அவர்களுக்கான தீர்வினை அளிக்க வேண்டும். காஷ்மீர் என்றுமே காஷ்மீரிகளுக்கு தான்.

  • //ஆர்.எஸ்.எஸ், பார்ப்பன கண்ணாடியை கழற்றி விட்டு நேர்மையாக எந்த விஷயத்தையும் அணுகுங்கள்.//நான் ஆர் எஸ் எஸும் இல்ல பிராமனனும் இல்ல, அக்கா காஸ்மீர் பிரச்சனைல மதம் தவிர என்ன இருக்குனு புளி போட்டு விளக்குங்களேன்

   • Mr Joseph,

    Before our Independence Kashmir was not in India.
    Our whole defense budget spent on Kashmir defense.
    Kashmir is beutiful state we want to occupy and sell/lease to corporates.
    Let those people live in their own way like tribals and others in the name of OVER tourism we should pollute and overcrowd kashmir

    • அட சம்முகு

     காஸ்மீர் என்கின்ற நாட்டை இந்தியா ஆக்கிரமித்தது என்பதே தவறு . இந்தியா என்கின்ற நாடே அப்போது தான் உருவானது . பலதரப்பட்ட சமஸ்தானங்களும் ஒன்று சேர்ந்து “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ” என்னும் அடிப்படையில் உருவானது .

     இன்றைக்கு காஸ்மீர் அழகா இருக்கு செல்வாகுது போகட்டும் என்று விடுவது, அரிசி மூட்டையில் உள்ள நுனி மூட்டை பிறப்பது போல . மற்ற மாநில எத்தினிக் குரூப்களுக்கு அந்த தேவை இல்லையா என்ன ?
     ஏன் நமக்கே கோர்ட்டில் தமிழில் வாதாட முடியாது போன்ற பிரச்சினைகள் இருக்கே ? கூட்டு குடும்பத்தில் பிரச்சினை வரத்தான் செய்யும் . தனி குடித்தனம் போவேன் என்பது ஏற்புடையது அல்ல .

     அப்படியே இருந்தாலும் , இசுலாமியர்களும் , இந்துக்களும் பிரிட்டிஷ் இந்தியாவை மத அடிப்படையில் பிரித்தாகி விட்டது .மீண்டும் மீண்டும் அதையே செய்வது முட்டாள் தனம் .

     _________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க