Friday, December 9, 2022
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! - புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016

உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016

-

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் வெளியீடுபுதிய கலாச்சாரம் ஆகஸ்ட் வெளியீடுஉங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி !

வேறு யாருக்கும் தெரியாமல் உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் என்ன செய்வீர்கள்? அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா?

இன்றைய சூழலில் பலரால் இதற்கு நிச்சயமான ஒரு பதிலைச் சொல்ல இயலாது. இது ஒரு கசப்பான உண்மை. கைபேசிகள் கையடக்கமான நீலப்படத் திரையரங்குகளாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில், மேற்படி கேள்வியே கூட கொஞ்சம் அபத்தமாக சிலருக்குத் தோன்றலாம்.

நுகர்வு வெறியாக நோய்வாய்ப்பட்டிருக்கும் காதலும்,காமமும் நவீன தொழில் நுட்ப புரட்சியின் உதவியால் உடலையும் உள்ளத்தையும் ரணமாக்கி வருகின்றது. ஜனநாயகத்தை மறுக்கும் பார்ப்பனியத்தின் ஆணாதிக்க மனம், நவீன தொழில்நுட்பத்தை கொலை வெறியோடு பயன்படுத்துகிறது.

காதலிக்க மறுத்த வினுப்பிரியாவை ஆபாச படமாக உருமாற்றி தற்கொலை செய்ய வைத்தவனோ, காதலிக்க மறுத்த வினோதினியை ஆசிட் ஊற்றி கொலை செய்தவனோ, காதலிக்க மறுத்த சுவாதியை அரிவாளால் வெட்டிக் கொன்றவனோ எவரும் தொழிற்முறைக் கிரிமனல்கள் அல்ல.

தான் காதலிக்க விரும்பும் ஒரு பெண், தன்னை மறுக்க முடியாதென்றே ஒரு சராசரி ஆண் நினைக்கிறான். ஒருவேளை அவன் அரிவாள் எடுக்கவில்லை என்றாலும் இந்த ஆதிக்கத்தை விடுவதில்லை. இந்த சராசரித்தனத்தை அனைத்து தமிழ் சினிமாக்களும் ஒரு பெண்ணை துரத்தி சென்று வேட்டையாடும் (அ)சிங்கமாகவே நமது இளைஞர்களை பயிற்றுவிக்கின்றன.

நீதிபதிகள், மத சாமியார்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், அதிகாரிகள் என அதிகாரம் படைத்தோர் இத்தகைய குற்றங்களை தம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலையில் சுதந்திரமாக செய்கின்றனர். சன் டி.வி ராஜாவோ, நீதிபதி கங்குலியோ, தெகல்காவின் தருண் தேஜ்பாலோ தண்டனை இன்றி உலவுவதற்குக் காரணம் இவர்களது குற்றங்களையெல்லாம் இந்த அரசமைப்பு அங்கீகரிக்கிறது.

பெண்கள் வாழ்த்தகுதியற்றதாகி வருகிறது இந்த சமூக அமைப்பு. ஆணாதிக்க வெறியை அறுவை சிகிச்சை செய்வதும், போலி ஜனநாயக அமைப்பை தூக்கி எறிவதும் வேற வேறு அல்ல. அந்தக் கடமையை இந்த தொகுப்பில் வரும் கதைகள் வலியுடனும், கோபத்துடனும் நினைவுபடுத்துகின்றன.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1. ஆணாதிக்கத்தின் அமிலக் காதல்
2. போர்னோகிராஃபி: பாலியல் சுதந்திரமா, அடிமைத்தனமா – ?
3. ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
4. த்ரிஷா: கருத்து காய்த்ரிக்களின் அறச்சீற்றம் !
5. பாலியல் வன்முறை: பா.ஜ.க-வின் பாரதப் பண்பாடு !
6. ரோல்ஃப் ஹாரிஸ் குழந்தைகளை சிதைத்த டி.வி. பிரபலம்
7. சூரியநெல்லி: குற்றவாளிகளே நீதிபதிகளாக… !
8. ஐ.எம்.எஃப் – ஸ்ட்ரெளஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம் !
9. வினோதினியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்
10. நீதிபதி கங்குலியின் குற்றத்திற்கு நீதி கிடைக்குமா ?
11. பாகிஸ்தானில் வன்புணர்வு கொடுமைக்கு கோதுமை அபராதமே தண்டனை !
12. நீங்கள் பாலியல் குற்றவாளியா ?

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

  1. காதலிக்க மறுத்த சுவாதியை அரிவாளால் வெட்டிக் கொன்றவனோ // ஆணவக் கொலை என்றூ உறூதிப்படும் தகவல் வரும் பொழுது இந்த வரி இடிக்கிறது

  2. ///ஜனநாயகத்தை மறுக்கும் பார்ப்பனியத்தின்///

    சுவாதி கொலைகாரன் என்ன பார்ப்பனரா????

    • ///ஜனநாயகத்தை மறுக்கும் பார்ப்பனியத்தின்///

      சந்திரசேகரன். பார்ப்பனீயத்தின் என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்தையையும் சேர்த்துப் படியுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க