privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாண்ட்ராக்ட் சுரண்டல் - மீத்தேன் - ஷேல் எதிர்ப்பு போராட்டங்கள்

காண்ட்ராக்ட் சுரண்டல் – மீத்தேன் – ஷேல் எதிர்ப்பு போராட்டங்கள்

-

1. கோவையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில்

விவசாயம்- நெசவு-சிறுவணிகம் – சிறுதொழில்கள் அழித்து
காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற
கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்!

என்ற தலைப்பில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

contract-labour-kovai-ndlf-demo-1தெருமுனை கூட்டத்துக்கு தோழர் சி.திலிப் தலைமை தாங்கினர். தற்போது விவசாயம்-நெசவு-சிறுவணிகம்-சிறுதொழில்கள்-காண்ட்ராக்ட் தொழிலாளர் எப்படி பாதிக்கப்படுகின்றார்கள் என்பதையும் இந்த அரசும் ஆட்சியாளர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்படி துணை போகிறார்கள் என்பதையும் பற்றி தலைமை உரையில் பேசினார்.

தோழர் ஜெகநாதன் தனது உரையில் கோவையில் சிறுதொழில்கள் அழிந்து வருவதற்கு கார்ப்பரேட் எவ்வாறு காரணமாக உள்ளது என்பதையும், ஈஷா யோகா மையம் எவ்வாறு மக்களுக்கு இடையூறாக உள்ளது என்பதையும் தாது மணல் கொள்ளையர்கள், கார்ப்பரேட்டுகள் எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் பேசினார்.

தோழர் நித்தியானந்தன் தனது உரையில் கோவையில் விவசாயிகள் நகர்புறத்துக்கு ஏன் வருகினறார்கள். வருவதற்கு கார்ப்பரேட் எவ்வாறு காரணமாக உள்ளது என்பதையும் கல்வி தனியார்மயம் கார்ப்பரேட் பிடிகளில் சிக்கி தவிக்கிறது என்பதைப் பற்றியும் விளக்கி பேசினார்.

தோழர் சரவணன் தனது உரையில் கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் எவ்வாறு பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். தொழிலாளி வர்க்கம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப்பற்றி பேசினார்.

சிறப்புரையாற்றிய தோழர் விளவை இராமசாமி, “காண்ட்ராக்ட் முறையில் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தை கணுவாய் பகுதியில் தொடங்கியுள்ளோம்! இந்தப் போராட்டம் நாளை கோவை முழுவதும் பற்றி பரவும். மறுகாலனியாக்கம் என்பது தொழிலாளர்கள் மட்டும் அல்லாமல் சமூகத்தின் சகல தரப்பு மக்களையும் உயிரோடு கொல்கிறது. தஞ்சை விவசாயிகள் குறுவை சாகுபடி இழந்து சம்பா சாகுபடியும் இழந்து, விளை நிலங்கள் முழுக்க தரிசாகி தவிகுகம் போது கார்ப்பரேட்டுக்கள் மீத்தேன் திட்டத்துக்காக காத்திருக்கின்றனர்.

மீனவர்கள் மீன் பிடிக்க வழியில்லாமல் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்திய அரசும், இலங்கை அரசும் கார்ப்பரேட்டுகள் காட்டிய வழியில் இயங்கிக் கொண்டு தனது சொந்த நாட்டு மீனவர்களின் வாழ்க்கையை சூறையாடி வருகின்றனர். தனியார் மயம்-தாராள மயம்- உலக மயம் என்கிற திரிசூலத்தால் நமது நாட்டு மக்கள் அடையும் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அளவில்லாமல் உள்ளது. தினசரி செய்தித்தாள்களில் பெண்களின் கண்ணீரும் ஓலமும் ஒலித்துக்கொண்டுதான் உள்ளது .

கணுவாய் பகுதியில் எங்கு பார்த்தாலும் ஒப்பந்தமுறை தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள். நிரந்தரத் தொழிலாளர்கள் என்பதே கிடையாது. தடாகம் ரோடு என்பெஸ்ட், கௌரி மெட்டல் ரோட்டோரோ தொழிலாளர்களின் போராட்டத்தால் தவிக்கிறது. இதற்கெல்லாம் சாவுமணி அடிக்கும் காலம் வரப்போகிறது எனும் முன்னறிவிப்புதான் பு.ஜ.தொ.மு.வின் பிரச்சார இயக்கம்,” என முடித்தார்.

இறுதியில் தோழர் ஆரோக்கியராஜ் நன்றியுரை ஆற்றினார்.

செய்தி :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை பகுதி

2. மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களை எதிர்த்து திருவாரூர் பு.மா.இ.மு சுவரொட்டி பிரச்சாரம்

tvr-rsyf-against-methal-shale-gas-project

செய்தி :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க