Friday, September 17, 2021
முகப்பு கட்சிகள் பா.ஜ.க கலவரம் செய்த போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கலவரம் செய்த போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

-

போலீசு ராஜ்ஜியம்…

எழுந்து நின்ற தமிழகமே ! எதிர்த்து நில் !

ஆர்ப்பாட்டம்

நாள் : 30.01.2017
நேரம் : மாலை 4:00 மணி
இடம் : குமணன்சாவடி

PP Notice Slider

ன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்,

தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லிக்கு எதிராக தமிழகமே எழுந்து நின்றது. பணிந்தது பன்னீர் அரசு. தற்காலிகமாக ஜல்லிக்கட்டில் வென்றோம். வங்கக் கடற்கரையில் சீறி எழுந்த மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை பீதியடைய செய்தது. போலீசின் அதிகாரம் செல்லக் காசானது. காளை போராட்டம் காவிரி, விவசாயிகள் தற்கொலை என விரிவடையக் கூடாது என்ற போலீசின் அச்சம் தான் மாணவர்கள் – மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலுக்கு காரணம்.

ஆட்டோக்களை கொளுத்தியது. மீன் மார்க்கெட்டை வெண்பாஸ்பரஸ் மூலம் எரித்தது. வாகனங்களை அடித்து நொறுக்கியது. வீடுகளில் புகுந்து பெண்களை ஆபாசமாக பேசி, ஆண்களை அடித்து இழுத்து சென்றது என போலீசாருக்கு எதிரான ஆதாரங்களை நாள்தோறும் மக்கள் அள்ளி வீசுகிறார்கள். இதுவரை எந்த போலீசார் மீதும் விசாரணை நடவடிக்கை இல்லை.

காவல்துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷ்னர் ஜார்ஜ், கோவை கமிஷ்னர் அமல்ராஜ் மற்றும் வன்முறை சம்பவத்திற்கு காரணமான, தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரியுள்ளனர். நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசோ பொய் மேலும் பொய் என்ற மோடி வித்தையை தமிழகத்தில் செயல்படுத்த முயன்று மூக்கறுபட்டு நிற்கிறது.

மாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவி விட்டனர் என்று சில அமைப்புகள் பெயர்களை சொல்லி பழிபோடும் போலீசார், ஊடுருவி என்ன செய்தார்கள்? என்பதைச் சொல்ல முடிய வில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்., பாஜக, ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சிலர் ஊடுருவி மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க முயன்றதாக இணையதளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை பற்றி போலீசார் பேச மறுக்கின்றனர்.

கலவர தினத்தன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மெரினாவில் இருந்தார்கள். ஜல்லிக் கட்டு நடத்த நிறைவேற்றப்பட்ட சட்ட நகலை தாருங்கள், கலைந்து செல்ல இரண்டு மணி நேரம் அவகாசம் வேண்டும் என போலீசு அதிகாரிகளிடம் கேட்டனர். ஏழு நாள் பொறுத்தவர்கள் இரண்டு மணிநேரம் பொறுக்க முடியாதா?

மாலையில் செய்த வேலையை காலையே செய்திருக்கலாமே. ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தமனை முன்பே அழைத்து வந்து பிரச்சினையை சுமூகமாக தீர்த்திருக்க முடியும் அதை விட்டு தடியடி ஏன் நடத்த வேண்டும்? கர்ப்பிணி பெண் வயிற்றில் ஏன் உதைக்க வேண்டும்? உணவு கொடுத்த மீனவர்களை ஏன் குப்பத்தில் புகுந்து தாக்க வேண்டும்? மாணவர்களுக்கு வந்த உணவு பெட்டியை போலீசார் ஏன் பறித்து திண்ண வேண்டும்? எதற்கும் காவல்துறையில் பதில் இல்லை. ஆனால் காக்கியின் உடம்பில் காவி புகுந்துள்ளது போலிசு அதிகாரிகளின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

தீர்ப்புகளால், சட்டங்களால் சாதிக்க முடியாததை மெரினாவில் மாணவர்கள் முன்னின்று நடத்திய மக்கள் போராட்டம் சாதித்தது. தினம்தோறும் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் கூடினர். மாணவர்களே தங்களை ஒழுங்குபடுத்தி கொண்டனர். பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. காரணம் அங்கு போலீசு அதிகாரம் இல்லை. ஒருவார காலம் அதிகார போதையை இழந்தபோலீசார் அதிகாரத்தை மீண்டும் சுவைக்கவும் மக்களை அச்சுறுத்தவும் நடத்தப்பட்ட கலவரம் தான் இது.

பண்பாட்டு அடையாளங்கள், இயற்கை வளங்கள், வாழ்வுரிமைகள், வாழ்வதாரங்கள், தாய் மொழி மீதான தாக்குதல் என அனைத்தையும் எதிர்த்துப் போராடி திகைத்த தமிழகத்தில், அனைவரும் பங்கேற்க நடந்த அமைதிப் போராட்டம், நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது. சாதி மத பேதமின்றி, ஆண் பெண் அனைவரும் ஒற்றுமையாக போரடியதன் பலத்தை பங்கேற்ற அனைவரும் நேரடியாக உணர்ந்தனர். அதை கருக்கும் முயற்சி தான் போலீசாரின் தாக்குதல்.

காவிரி தொடங்கி கல்வி உரிமை வரை தமிழக மக்கள் போராட வேண்டிய பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது. உரிமைகளுக்காக தொடரும் உறுதியான மக்கள் போராட்டம், போலீசு ராஜ்ஜியத்தை வீழ்த்தும் !

unnamed

 • பொது மக்களுக்கு அச்சுறுத்தல் போலீசு தான், போராடுபவர்கள் அல்ல !
 • அமைதிப் போராட்டத்தை கலவரமாக்கிய போலீசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய் !
  கைது செய் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656

 1. மாணவர்களுக்கு உணவு, குடிநீர் அளித்த மீனவர்களை தாக்கிய போலிஸ் அராஜக வெறியாட்டத்தை கண்டிக்கும் அதே நேரத்தில் மீனவர்கள் மீதும், குடிசை மாற்று வாரிய ஏழை எளிய மக்கள் மீதும் இந்த மக்கள்-சமுக விரோத அரசு போட்டு உள்ள வழக்குகளை திருப்பி பெற கோரியும் நாம் போராட வேண்டிய தருணம் இது! சமிபத்தில் மறைந்த கவிஞர் மற்றும் பேராசிரியர் ஐயா இன்குலாப் அவர்களின் “மனுசங்கட” கவிதையை போராட்ட களங்களில் உரத்து பாடவேண்டிய தருணம் இது……

  பாடல் வரிகள் ………………..

  ”சதையும் எலும்பும் நீங்க வச்சதீயில் வேகுதே-ஒங்க
  சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே
  எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க
  எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க?
  மனுசங்கடா… நாங்க… மனுசங்கடா…..”

 2. மெரினாவில் போலீஸ் தடியடிக்கு காரணம் “சமூக விரோதிகள் சிலர் ஊடுருவி, பின் லேடன் படத்தை வைத்து தனித்தமிழ்நாடு கோரிக்கைகளை எழுப்பினர்” என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார்.
  ————————————

  அதாவது, இஸ்லாமிய ஜிஹாதிக்கள்தான் போலீஸ் தடியடிக்கு காரணமென இஸ்லாமியர் மீது பழி போட்டு தப்பிக்க முயல்கிறார் ஓ.பி.எஸ்.

  • குஜராத் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல்களின் பங்கு பற்றி சான்றாதாரங்களை தெகெல்கா வெளியிட்ட போதும், தீஸ்தா செதல்வாத் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருந்த போதிலும் இந்திய நீதித்துறை மோடியை தண்டிக்காமல் விடுவித்து விட்டது. தண்டிக்கபடாததே மோடிக்கான சிறப்புத்தகுதியாக மோடி பக்தர்கள் முன்வைக்கிறார்கள். ஊடகங்களும் முன்வைக்கிறார்கள்.

   மாணவர்கள், பெண்கள், மீனவர்கள் என பொதுமக்கள் மீது காவல்துறை நிகழ்த்திய வன்முறை வெறியாட்டங்களுக்கு ஆதாரங்கள் பல இருந்தும் காவல்துறையையோ அதற்கு ஒப்புதல் வழங்கிய அதிகார வர்க்கத்தையோ அரசையோ அல்லது நீதித்துறையையோ மக்களுக்கு உண்மைகளை தெரியபடுத்த வேண்டிய கடமைகொண்ட ஊடகத்துறையோ யார் தண்டிப்பது?

   குற்றமிழைப்பவர்களும் அவர்களே, சட்டம் இயற்றுபவர்களும் அவர்களே, நீதி வழங்குபவர்களும் அவர்களே, தண்டிப்பவர்களும் அவர்களே எனும் போது பொது மக்களுக்கு நீது கிடைப்பது எப்படி அதிகாரத்தை கைப்பற்றாமல்?

 3. When the opposition leader Mr.M.Karunanidhi was arrested, same scotland famous TN Police acted dastardly, the police gang included the same present Commissioner. DMK cadres not raised to the occasion. The result was DMK leadership compromised with the police when they came to the Power.
  The same Chidambarm Padmini, Vachathi mass rape famous Police gang indulged in riotous acts in Chennai court premises. No criminal was punished yet. If you believe, any justice will be done. You are a fool.
  Now, this is time for the Tamilnadu students Union formation atleast for taking erring government officials by all means. Simple steps like publicising through meadia, like watsapp.
  I thought singer Govan over reacted, when he was arrested. Now, I realise otherwise he would have been killed in cold blooded manner by these cultureless organised thugs

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க