எதிர்த்து நில் ! புதிய கலாச்சாரம் மார்ச் 2017

0
20

யிரக்கணக்கான பிரச்சினைகளால் வதைபடும் உலகமிது. சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் பறிகொடுத்து, ஆயுள்தண்டனைக் கைதி போல நைந்து மடியும் வாழ்க்கை. சகிக்கவே முடியாத நிலையில் தற்கொலை.

இது மட்டும்தான் எதார்த்தமா? இல்லை.

மெரினாவில் மின்மினிப் பூச்சிகளாய் எழுந்த ஒளிமழையுடன் அலை அலையாய் எழுந்த முழக்கங்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் ருமேனியாவின் புச்சாரெஸ்ட்டிலும் எதிரொலிக்கின்றன. ஆளும் வர்க்கங்களை அச்சுறுத்துகின்றன.

கொலைகார ராணா பிளாசா முதலாளிக்கு எதிராக அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடுகிறார்கள் வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளிகள். பெங்களூரிலோ ஆயத்த ஆடைத் தொழிலாளிகளின் போராட்டத்தால் தொழிலகங்கள் நொறுங்கின, போலீசு நிலையம் எரிந்தது, மோடி அரசு பணிந்தது.

மோடியின் குஜராத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செத்த மாடுகளை வீசி, உன்னுடைய கோமாதாவை நீயே புதைத்துக்கொள் என்றனர் தலித் மக்கள். இது உனாவில் வெறியாட்டம் போட்ட பார்ப்பனியம் வாங்கிய பதிலடி.

மல்லையாவிடம் அபராதம் வசூல் செய்யத் துப்பில்லாத அரசுக்கு என்னி டம் அபராதம் வசூலிக்க என்ன அருகதை இருக்கிறது என்று ரயில்வே நிர்வாகத்திடம் கலகம் செய்து சிறை சென்றார் பிரேமலதா பன்சாலி எனும் மும்பைப் பெண். மக்கள் வறுமையில் வாடுகையில், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்காக பல கோடிகளை வாரியிரைத்த அரசுக்கு எதிராக 2014-ஆம் ஆண்டில் பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்கள் எழுந்தன.

2011-இல் நடந்த இலண்டன் கலகம் இன்றளவும் உலக முதலாளி வர்க்கம் மறக்க விரும்பும் கெட்ட கனவு. ஐந்து ஆண்டுகளில் 7,000-ம் பேர் தற்கொலை செய்து கொண்ட கிரீசில், எங்களுடன் இணைந்து போராடுங்கள் என்று அழைக்கிறார் ஒரு தொழிலாளி. பட்டினி கிடப்போரே பணக்காரனைத் தின்று பசியாறுங்கள், என்ற முழக்கம் வால்ஸ்ட்ரீட்டில் மட்டு மல்ல உலகமெங்கும் எதிரொலிக்கிறது.

சுரண்டலையும் ஆதிக்கத்தையும் சகித்துக் கொள்வது ஒரு நோய். சகித்துக் கொள்வதன் விளைவும் நோய்தான். எதிர்த்து நிற்பதுதான் ஆரோக்கியம். மகிழ்ச்சி என்றால் என்ன என்ற கேள்விக்கு போராட்டம் என்ற ஒரே சொல்லில் பதிலளித்தார் கார்ல் மார்க்ஸ்.

ஆம். உலகெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம்?

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

 • மகழ்ச்சி என்பது போராட்டமே: மெரினா முதல் புச்சாரெஸ்ட் வரை !
 • வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !
 • கிரீஸ் : பிச்சை எடுப்பதை விட போராடுவதையே விரும்புவேன் !
 • இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும் !
 • பிரேசில் கால்பந்து அணியை தோற்கடிக்கும் பிரேசில் மக்கள் !
 • பா.ஜ.க அரசைப் பணிய வைத்த இராஜஸ்தான் பள்ளி மாணவிகள் !
 • அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள் !
 • குஜராத் : நாறுகிறது உன் கோமாதா !
 • துனிசியா: சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி !
 • இது மக்களின் போர் ! போலீசு சித்திரவதையில் தோழர்கள் !
 • நெடுவாசல் விவசாயிகளின் போராட்டம் வெல்லும் !
 • முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை !
 • வால் ஸ்ட்ரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி !
 • வண்ணப் புரட்சிகள்: “மேட் இன் அமெரிக்கா !”

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

சந்தா