privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மாருதி தொழிலாளிகளை பாதுகாப்போம் ! களச்செய்திகள்

மாருதி தொழிலாளிகளை பாதுகாப்போம் ! களச்செய்திகள்

-

துப்பாக்கி சூட்டுக்கு மீனவர் பலி, காவிரி துரோகத்துக்கு விவசாயிகள் பலி, கொக்கே கோலாவிற்கு தாமிரபரணி பலி, ஹைட்ரோ கார்பனுக்கு நெடுவாசல் பலி !
தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு இந்தியாவே பலி !

தர்ணா போராட்டம்

இடம் : பெரியார் சிலை, மணப்பாறை.
நாள் : 15.03.2017, புதன் கிழமை.
நேரம் : காலை 10:00 மணிமுதல் மாலை 5:00 மணி வரை.

தலைமை : தோழர் மா. பாண்டியன் ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், மணவை

கண்டன உரை :

திரு மணவை துரை. காசிநாதன், தலைமை கழகப் பேச்சாளர், திமுக
தோழர் இரும்பொறை பிச்சை, நகர தலைவர், தி.க
தோழர் வீ. தனபால், திராவிடர் விடுதலைக்கழகம்
தோழர் கராத்தே வீர. முருகன், மாவட்ட செயலாளர், ஆதிதமிழர் கட்சி
திரு சூர்யா சுப்பிரமணியன், வையம்பட்டி
திரு வே. பாலசுப்பிரமணியன், மணவை தமிழ்ச்சங்க பொருளாளர்
திரு அறிவுச் செல்வன், சமூக ஆர்வலர்
தோழர் பழனிச்சாமி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தோழர் ந. பிரபாகரன், மாநில து. பொ. செ, முற்போக்கு மாணவர் கழகம்
தோழர் தே. கோபி, புறநகர் மா. செ, புதிய தமிழகம்
திரு வழக்கறிஞர் தமிழ்மணி, சமூக ஆர்வலர்
திரு பசுலுதீன், தலைவர், மணவைத்தமிழ் கழகம்
தோழர் வை. கண்ணன், மக்கள் அதிகாரம், மணவை

சிறப்புரை :

தோழர் த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

நன்றியுரை :

தோழர் ந.காளிதாஸ், மக்கள் அதிகாரம், மணவை

தகவல் :
மக்கள் அதிகாரம்
மணப்பாறை, தொடர்புக்கு – 98431 30911


போலீசும் நீதித்துறையும் நமக்கானதல்ல!
மாருதி ஆலைத் தொழிலாளர்களை பாதுகாப்போம்!

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

நாள் : 16 மார்ச் 2017
நேரம் : மாலை 5 மணி
இடம் : ராம்நகர் அண்ணா சிலை அருகில், ஒசூர்.

அன்பார்ந்த தொழிலாளர்களே!

நீதித்துறையும், போலீசும், ஒட்டுமொத்த அரசு கட்டமைப்புமே உழைக்கும் மக்களுக்கு எதிரானது தான் என்பதை மார்ச் 10 அன்று தில்லி குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது. மாருதி ஆலைத் தொழிலாளர்கள் மீது நடந்து வந்த குற்றவியல் வழக்கில் 117 தொழிலாளர்களை விடுவித்த நீதிமன்றம், 31 தொழிலாளர்களைக் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் மீது கொலைக்குற்றமும், 18 பேர் மீது வன்முறை- தீயிடல்-சூறையாடல் குற்றமும் திணிக்கப் பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்கான தண்டனை யை எதிர்வரும் மார்ச் 17 அன்று அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு-முதலாளிகளது திட்டமிட்ட சதி!

கடந்த 18.7.2012 அன்று தில்லி மனேசர் தொழிற்பேட்டையில் இயங்கி வந்த மாருதி-சுசூகி கார் தொழிற்சாலையில்  வன்முறை வெடித்தது. நிர்வாகம் நூற்றுக்கணக்கான குண்டர்களை ஆலைக்குள் அனுப்பி வைத்து இந்த வன்முறை -தீவைப்பு சம்பவத்தை அரங்கேற்றியது. இந்த வன்முறையின் போது அவானிஷ் தேவ் என்கிற மனிதவள அதிகாரி செத்துப் போனார். இந்த சாவை சாக்காக வைத்து 2,300 தொழிலாளர்களை வேலையைவிட்டே துரத்தப் பட்டனர். 148 தொழிலாளர்கள் மீது கொலை, வன்முறை, தீயிடல், சூறையாடல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்த வன்முறைக்கு யார் காரணம், அதிகாரியைக் கொன்றது யார் என்பது குறித்து பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரியதை அரியானா மாநில அரசு நிராகரித்தது. மாறாக, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை பிணையில் விடக்கூடாது என்று நீதிமன்றத்தில் போராடியது. இதனால், தொழிலாளர்களின் பல ஆண்டுகள் போராட்டத் தில்தான் பிணைகூட கிடைத்தது. இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு குர்கான்– மனேசார் தொழிற்பிராந்தியத்தில் இயங்கி வந்த நூற்றுக்கணக்கான பன்னாட்டுக் கம்பெனிகளில் தொழிற்சங்கம் அமைக்கவே முடியாத சூழலை உருவாக்கிட அரியானா மாநில அரசும், பன் னாட்டு முதலாளிகளும் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.

போலீசு-நீதிமன்றம்-முதலாளிகளது கூட்டு!

வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த கூட்டணியின் செயல்பாடுகள் தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்க தீவிரமாக முயற்சி செய்தது கண்கூடாகத் தெரிந்தது. தொழிலாளர்களது வன்முறையில் 90 போலீசு மற்றும் மாருதி அதிகாரிகள் காயமடைந்ததாகக் கூறிய போலீசு, ஒரே ஒரு தொழிலாளிக்கு கூட சிறுகாயமோ, கீறலோ ஏற்படவில்லை அப்பட்டமாக பொய்யைக் கூறியது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. ஆனால், இதே நீதிமன்றம் தான் 148 பேரில் 117 பேரை நிரபராதிகள் என்று விடுவித்துள்ளது. அப்படியானால் 90 அதிகாரிகளுக்கு – முக்கியமாக, கலவர தடுப்பு போலீசுக்கு – காயத்தை ஏற்படுத்தியது யார்?  கும்பல் வன்முறை என்கிற குற்றச்சாட்டு போலீசால் இட்டுக்கட்டப்பட்டது தான் என்பது தெளிவாகவில்லையா?

போலீசு கொண்டு வந்த சாட்சியங்கள், தடயங்கள் பொய்யானவை என்பது பல சந்தர்ப்பங்களில் அம்பலமானது. போலீசு கொண்டு வந்த சாட்சிகளில் பலர் சம்பவம் நடந்தபோது  தாங்கள் அந்த இடத்தில் இல்லை என்றும், பொய்சாட்சி சொல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டோம் என்றும் நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்துள் ளனர். செத்துப்போன அதிகாரியின் பிரேத அறிக்கை (போஸ்ட் மார்ட்டம்) நடந்திருப்பது கொலை என்று உறுதிப்படுத்தவும் இல்லை. தற்போது கொலைக்குற்றத்துக்கு ஆளாகி இருக் கின்ற 13 பேரின் பங்கு என்ன என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிலைநிறுத்தவுமில்லை.  போலீசின் ’தயாரிப்பில்’ உள்ள இத்தனை ஓட்டை களையும் மீறி சங்க நிர்வாகிகள் அனைவரையும் குற்றவாளியாக்கியுள்ளது, குர்கான் நீதிமன்றம்.

கற்க வேண்டிய பாடம் என்ன?

போலீசு, நீதிமன்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசு கட்டமைப்புமே உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகத் தான் இருக்கிறது. ஆலை விபத்துக்கள், பாதுகாப்பற்ற வேலைநிலைமை போன்றவற்றால் முதலாளித்துவ பயங்கரவாதம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களைக் கொன்று குவித்துவருகிறது. இலட்சக்கணக்கான தொழிலாளர்களது வேலையைப் பறித்தும், அச்சுறுத்தியும் பணிய வைத்து கொலை வெறியாட்டம் போடுகின்ற கார்ப்பரேட் முதலாளிகளது சுண்டுவிரலை அசைக்கக்கூட துப்பற்றதாக தொழிலாளர் துறை புழுவைப்போல நெளிந்து கொண்டிருக்கிறது.

சங்கம் அமைக்க முயல்கின்ற தொழிலாளர்களை காட்டிக் கொடுக்கவும், சங்கத்தின் மீது முதலாளி நடத்துகின்ற தாக்குதல்களை வேடிக்கை பார்க்கவும் உரிய சன்மானம் பெற்றுக் கொள்கிற தொழிலாளர் துறையும், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று கண்ணை மூடிக் கொள்கின்ற நீதித்துறையும் நம்மைப் பாதுகாக்காது என்பதே நாம் கற்க வேண்டிய முக்கிய பாடம். கொலை வழக்கு முதல் கலவரவழக்கு வரை  பொய்யாக வழக்குகளைப் பதிந்து தொழிலாளி வர்க்கத்தை அச்சுறுத்துகின்ற போலீசுக்கு நாம் ஏன் பணிய வேண்டும்? கோடிக்கால் பூதமான தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை தான் மாருதி தொழிலாளர்களை மட்டுமல்லாமல், ஓட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தையும் முதலாளித்துவ பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாக்கும்.

தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டிமையப்போம்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தருமபுரி -கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784


தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை ! காவி, முகத்திரையை கிழித்த மக்கள் அதிகாரம் !

தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை என்ற பாரதிய ஜனதாவின் போலியான இயக்கத்தை அம்பலபடுத்தும் விதமாக கோவை பகுதி மக்கள் அதிகாரம் சார்பாக தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை கோவை மக்களே! சீமாரை எடுப்போம்!! என்ற தலைப்பிலான சுவரொட்டிகள் கோவை நகரெங்கும் ஒட்டப்பட்டது. லெனின் நகர் பகுதியை ஒட்டிய காய்கடை மைதானத்தில் 12.03.2017 அன்று பா.ஜ.க நடத்திய பொதுக்கூட்ட இடத்தை சுற்றி நெருக்கமாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை போலீசும், மதவாத காலிகளும் மறைந்து நம் சுவரொட்டிகளை கிழித்தனர்.  தோழர்களோ விடாமல் அதற்கு மேலும் சுவரொட்டிகளை ஒட்டினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க