Monday, February 24, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கல்வி வியாபாரம் : வாங்க சார்... வாங்க ! புதிய கலாச்சாரம் ஜூன் 2017

கல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க ! புதிய கலாச்சாரம் ஜூன் 2017

-

கோடை வெயிலோடு சேர்ந்து கல்வி ஆண்டின் ஆரம்ப கட்ட துன்பங்கள் மக்களை வாட்டுகின்றன. பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வந்த பிறகு எந்தக் கல்லூரியில் என்ன படிப்பு கிடைக்கும்? கட்டணம் எவ்வளவு, விடுதி இடம் கிடைக்குமா என்றெல்லாம் ஆரம்பித்து இறுதியில் பிடித்த படிப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஏதாவது ஒரு படிப்பு கிடைக்குமா என்று தவிக்கிறார்கள் மாணவர்கள்.

அன்றாடம் மதிய நேரத்தில் அனைத்து தொலைக்காட்சிகளும் எந்த படிப்பு படிக்கலாம் என்ற வண்ண மயமான கனவுகளையும், கல்லூரிகளையும் நிபுணர்கள் வாயிலாக ஆசை காட்டுகிறார்கள். சிலநேரம் அச்சுறுத்தவும் செய்கிறார்கள்.

ஒரளவு பிடித்த படிப்பும்  கல்லூரியும் கிடைத்தவர்களுக்கும் எதிர்காலம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பொறியியல் படித்த மாணவர்கள் பலர் போலீசு வேலைக்குப் போட்டி போடுகிறார்கள். பொறியியல் இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்கு பல தனியார் பள்ளிகள் தமது மாணவர்களை இறுதித் தேர்வில் காப்பி அடித்து எழுதக் கூட ஊக்குவிக்கின்றன. நாமக்கல் பிராயலர் பள்ளிகள் உருவாக்கும் மன அழுத்தம் ஆண்டுக்காண்டு காவு கொள்ளப்படும் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.

மேட்டுக்குடியினர் படிக்கும் பள்ளிகளில் ஏழை மாணவருக்கு 25% இடம் ஒதுக்க வேண்டும் எனும் அரசு உத்திரவு கேலிக்குரிய முறையில் அலட்சியப்படுத்தப்படுகிறது. மல்லையா வகையறாக்களின் வராக்கடனை வசூலிக்க முடியாத அரசுகள், ரிலையன்ஸ் நிறுவனத்தை வைத்து மாணவர்களின் கல்விக் கடனை அடாவடி செய்து வசூலிக்கின்றன. மதுரை மாணவர் லெனின் இப்படித்தான் கொல்லப்பட்டார்.

ஒப்பீட்டளவில் கட்டணக் கொள்ளை இல்லாத அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே சாகடிக்கப்படுகின்றன. இந்நிலையில் “நீட் தேர்வு” ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக் கல்லூரி படிப்பை நிரந்தரமாக புதைத்து விட்டது.

கேள்வி கேட்க கற்றுத்தர வேண்டிய கல்வி இன்று கேள்விக்கிடமின்றி மக்களை காயடிக்க பயன்படுகிறது. நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தனியார் மயத்தின் கோரக்கரங்களை அழிக்காமல் நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கல்வியையோ எதிர்காலத்தையோ வழங்கிவிட முடியாது!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

 • கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி – கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்
 • மெட்ரிக் கொலைக்கூடங்கள!
 • அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி: யார் குற்றவாளி?
 • கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…
 • பிட் அடித்து 100% ரிசல்ட் தனியார் பள்ளிகள் சாதனை!
 • ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
 • தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்!
 • கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?
 • கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்!
 • நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது!
 • காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க