privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாரஜினியைக் கழுவி ஊற்றும் சினிமா தொழிலாளிகள் !

ரஜினியைக் கழுவி ஊற்றும் சினிமா தொழிலாளிகள் !

-

ஜினி அரசியலுக்கு வருவதை தமிழகத்தின் தலைப்பு செய்தியாக ஊடகங்கள் மாற்றிவிட்டன. பாஜக, ஆர்.எஸ்.எஸ், குருமூர்த்தி வகையறாக்களின் திட்டமும் அதுவே. மாலை நேர தொலைக்காட்சி விவாதங்களோ இல்லை தந்தி டி.வி முன்வைத்த கருத்துத் திணிப்போ எல்லாம் ரஜினியை தமிழகத்தின் அடுத்த ரட்சகராக மக்கள் கருதுவதாக முன்வைத்தன. உண்மையில் ரஜினியைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள திட்டமிட்டோம். முதலில் ரஜினியை நேரடியாக அறிந்த அவரது திரையுலகத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதறிய சில சினிமாத் தொழிலாளிகளை சந்தித்தோம்.

சென்னையின் அதிகாலை ஐந்து மணி, வடபழனி பேருந்து நிலையம் அருகே சினிமா தொழிலாளிகளை ஏற்றிசெல்லும் ஃபெட்போர்டு வண்டியின் வருகைக்காக காத்திருந்த புரடெக்சன் தொழிலாளி செல்வத்திடம் ஆரம்பித்தோம்.

ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

செல்வம்

நான் இருபத்தி அஞ்சு வருசமா ஃபெட்போர்டு வண்டி ஓட்டுறேன். ஒரு கால்சீட்க்கு 700 ரூபா தான் கூலி.மாசத்துல எல்லா நாட்களும் வேலை கிடைக்காது. ஒரு மாசம் முழுசா வேலை இருக்கும் இல்லனா, சுத்தமா வேலையே இருக்காது. சிலசமயம் மாசத்துல பத்து நாள் தான் வேலை இருக்கும். இந்த வருமானத்தை கொண்டு நான் வீட்டு வாடகை கட்டுறதா? குடும்பத்தை நடத்துறதா? ஆனா, ரஜினி ஒரு படம் நடிச்சா எவ்ளோ? 50 கோடி! இந்த பணத்தை வச்சி என்ன பண்ணுறாரு? அவரோட ரசிகர்களின் பசங்க படிக்க இலவச பள்ளிகூடம் கட்டி கொடுத்திருக்கலாம். வேற ஏதாவது மக்களுக்கு பண்ணியிருக்கலாம். ஆனா, எதுவும் பண்ணது கிடையாது.

ரஜினி ஏற்கனவே ஒரு பள்ளி நடத்துகிறாரே அதில் கொண்டு போய் உங்கள் பிள்ளைகளை சேர்க்கலாமே?

அவரு ஸ்கூல் நடத்துறதே நீங்க சொல்லித் தான் தெரியுமே. எங்க யூனியன்ல எல்லாரோட பிள்ளைங்களும் கவர்மென்ட் ஸ்கூல்ல தான் படிக்க வைக்கிறோம்.

ரஜினி முதலமைச்சர் ஆனால் சினிமாகாரங்களுக்கு நல்லது தானே. தொழிலாளியோட பிரச்சனையை தீர்க்க மாட்டாரா? கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் சினிமாவுல இருந்து தானே வந்தாங்க.

அவங்க என்ன பண்ணிருக்காங்க. எல்லாம் அப்படி தான் சார் சொல்லுவாங்க. எல்லாம் பொய். அவனுங்களால் எந்த பிரயோசனமும் இல்லை என்றார்.

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா?

நான் வேணாம்னு சொல்லல. அது அவரோட விருப்பம். இன்னைக்கு அரசியலே ஒரு பிசினஸ் தானே. பணம் இருக்கவன் தொழில தொடங்குறான். அவ்ளோ தான். அவனவன் அரசியல்ல கவுன்சிலர், வட்டம், மாவட்டம்னு தான் போவாங்க. இவரு ஒரேடியா முதலமைச்சர் ஆகப் பார்க்கிறார். அப்பதானே அதிகமா சம்பாதிக்க முடியும். மோடி பிரதமராகி என்ன பண்ணாரு. ஏதாவது ஒரு அறிக்கை விடுவாரு, அதோட பறந்து போயிடுவாரு. அதத்தான் ரஜினியும் பண்ணுவார். சினிமாவுக்கு வேணும்’னா ஸ்டாரா இருக்கலாம். அரசியலுக்கு எல்லாம் வொர்த் இல்லை

ரஜினி, அண்ணாமலை படத்தில் ஒரே பாட்டில் பணக்காரர் ஆனது மாதிரி நம்மையும் பணக்காரர் ஆக்கிடுவாராமே?

அருகே இருந்த புரடெக்சன் தொழிலாளி முருகன் பேச ஆரம்பித்தார்.

“சினிமா என்பது ஒரு கவர்ச்சி தான். அது மக்களுக்கு பிடிக்கும்” சினிமாவுல நல்லவரா நடிக்கலாம். அவரோட நடிப்பை ரசிக்கலாம், இது தான் சினிமா. ரசிகர்கள் கொண்டாடுவாங்க. அதுக்காக அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏதாவது செஞ்சிருக்காரா என்றால் இல்ல. மக்களுக்கோ, ரசிகர்களுக்கோ ஒன்னும் பண்ண வேணாம். சினிமா தொழிலாளிங்களுக்கு என்ன பன்னிருக்காருன்னு முதல்ல சொல்ல சொல்லுங்க!

முருகன்

சென்னையில வெள்ளம் வந்தப்ப வீட்டுக்குள்ளயே பத்திரமா இருந்தாரு. சின்ன சின்ன நடிகர்கள் எல்லாம் வந்தபிறகு தான் இவர் வெளியவே வந்தார். மக்கள் கஷ்டப்படும் போது கூட எதுவும் பேசாதவன் தான் ஆட்சிக்கு வந்து செய்யப்போகிறாரா?

விவசாயியங்க போராடினப்ப ரஜினி எதுவும் பேசல. ஆனா இப்ப எதுக்காக அய்யாக்கண்ணுவை பாக்கணும்? புதுக்கோட்டையில மக்கள் எல்லோரும் போராடினாங்க அதுக்காக என்ன பண்ணாரு? நான் ரஜினியோட தீவிர ரசிகன் தான், இருந்தாலும் அரசியல்ல அவரால ஒன்னும் பண்ண முடியாது. சினிமா கற்பனை; வாழ்க்கை நிஜம். ரெண்டும் வேற தான்……….

அதற்குள் ஃபெட்போர்டு வண்டி வந்ததும் சென்று விட்டார்.

சற்று தொலைவில் நின்றிருந்த தொழிலாளி ஒருவர்,

…. நான் ஒரு சினிமாக்காரன். அதனால் சினிமாவையோ, நடிகர்களையோ பத்தி எதுவும் குறை சொல்ல முடியாது.  இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர் எல்லாம் மாற்று மொழியில் இருந்து தான் வந்தார்கள். அந்த வகையில் இவரும் வரட்டுமே என்று கூறியவாறே நகர்ந்தார்.

ஃபெட்போர்டில் அமர்ந்திருந்த பெண் தொழிலாளிகள்,

நாங்க எதுவும் சொல்ல கூடாதுங்க…… எங்க யூனியன்ல பிரச்சனை வந்துடும். ….! யாரு வந்தாலும் எதுவும் பண்ண போறதில்ல. நானும் 20 வருசமா சினிமாவுல சோறு ஆக்கிபோடுறேன். எங்க முகம் கூட அவங்களுக்கு தெரியாது. எந்த நடிகை, நடிகரும் ஒரு புடவை கூட எடுத்து கொடுத்தது இல்லை.

அங்கே வேலைக்காக காத்திருந்த ஆந்திரா தொழிலாளர்கள் ஆர்வமாக,

ரஜினிய பத்தி என்ன சொல்றது….? சொல்லுற அளவுக்கு ஒன்னும் இல்ல..! நாங்க எல்லாத்தையும் பார்த்துட்டு தானே இருக்கோம். தொழிலாளிங்க எங்க பாடே பெரும்பாடு. ஷூட்டிங் ஸ்பாட்க்கு ஆறு மணிக்கு போகணும். அதுக்காக நாங்க நாலு மணிக்கே எழுந்து கெளம்புறோம். 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் வேலை செய்றோம்.

ஆந்திர தொழிலாளிகள்

ஷூட்டிங் சாப்பாட்டுக்கு தேவையான எல்லா வேலையும் செய்வோம். ஆனா ஒருநாள், கேமராவுக்கு சூடம் காமிக்க தேங்கா, கற்பூரம் வாங்க மறந்துடுவோம். அதுக்காக வாங்கற திட்டு கொஞ்சமில்ல…..! செட்டு போடுவோம், புரடெக்சன் வேலையும் பார்ப்போம். ரொம்ப கஷ்டமா இருக்கும். வெறும் 750 ரூபா தான் தராங்களே. சொந்தமா வீடு கூட வாங்க முடியல.

அரசு உதவி பெரும் பள்ளியில என்னோட பிள்ளையை சேர்த்தேன். ஐந்தாவது படிக்கிற பையனுக்கு 5,000 பீசு கட்ட முடியாம கஷ்டப்பட்டேன். 25 தேதியிலிருந்து 10 ம் தேதி வரைக்கும் எங்களுக்கு ஏற்படுற மன உளைச்சல் மரண வேதனையா இருக்கும். வீட்டு வாடகை கட்டனும், தண்ணி, கரண்ட் பில் எல்லாம் கட்டனும். ஆனா அந்த நேரத்துல ஷூட்டிங் இருக்காது. ஆனா, இந்த வேலைக்கி யூனியன்ல சேர அப்போ ரூ.4000 கட்டி ஷூட்டிங் கார்டு வாங்கினோம். இப்ப ரூ.2.60 லட்சம் கட்டினா தான் இங்க வேலையே செய்ய முடியும்.

இன்று வேலை கிடைக்குமா கிடைகாதா என என்ற தவிப்புடன் அமர்ந்திருக்கும் பெண்கள்

நாங்க ஓய்வு பெரும் போது ஆறு லட்சம் தருவதற்காக எங்களோட சம்பளத்துல இருந்து 5% பிடிப்பாங்க. 20 வருசமா வேலை செய்றவங்களுக்கு இத கொடுக்கணும், ஆனா 30 வருஷம், 35 வருஷமாகியும் பல தொழிலாளிக்கு இன்னும் பணம் கிடைக்கல. இந்த பிரச்சனைய எந்த ரஜினியும் கேட்டதில்லை. நாங்களும் கேட்க முடியாது. கேட்டா வேலையும் இருக்காது.

இங்க இருக்கவங்க முகத்தை பார்த்திங்கன்னா தெரியும் . ஒரே கலக்கத்தோட இருப்பாங்க. வேலை இருக்குமா? இருக்காதா-ன்னு ஒரே குழப்பமா இருக்கும். எங்க யூனியன்ல 300 பேர் வந்திருக்கோம்.. இதுல ஒரு ஐம்பது பேர் தான் வேலைக்கு போவாங்க. இது தான் எங்களோட வாழ்க்கை. இப்ப ரஜினி வந்து மட்டும் என்ன பெரிய மாற்றம் வரப்போகிறது?

குழுவாக இருந்த பெண்கள்,

35 வருசமா இந்த வேலை செய்யறோம். எங்கள பாத்தா கொத்தனார் வேலைக்கு போற மாதிரி இங்க குந்திக்கினு இருக்கோம். எத்தனையோ ரஜினி படத்துல சோறு ஆக்கி போட்டிருக்கோம். அந்த ஆளு சாப்பிட்ட தட்டை கூட நாங்க தான் எடுக்குறோம். எங்களுக்குன்னு ஒண்ணுமே பண்ணாதவன். அட, எதுவும் பண்ண கூட வேணாங்க. நாம வணக்கம் சார்னு சொன்னா கூட ஒரு “ஹாய்” கூட சொல்ல மாட்டான். அவங்க வந்தாலும் போனாலும் கேரவனு. எங்களுக்கு எப்பவுமே இந்த ஃபிளாட் பாரம் தான். ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க “ஆளப் பார்த்த அழகு, பூ**** பார்த்த சொத்த” அதான் ரஜினி!

-வினவு செய்தியாளர்கள்

  1. நீ எந்த எண்ணத்தில் சொன்னாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் உன்னை போல அல்லாமல் நாகரிகம் அறிந்தவர். ரஜினி அவர்கள் தேர்தல் அரசியலுக்கு வந்தால் அவரை தான் மக்கள் தமிழ்க முதல்வராக தேர்ந்து எடுப்பார்கள்.

    • ஓம்.. ஸ்ரீ … சத் பூஜ்ய ஸ்ரீ ரஜினிஜீ அவர்கள் நாட்டை ஆளுவார்னு நானே அவர்கிட்ட டைரக்டா சொல்லிருக்கேன். அவர் நாட்டை ஆளுவார்.

      உங்களுக்கு புரியிரது , இந்த வினவுக்கு தெரியமாட்டேங்கிது ஓய் ..

      இப்ப்டித் தான் அன்னைக்கு ஒருத்தர்ட்ட சொன்னேன், அவரு ஆட்சிக்கு வந்தா நாடு சுபிக்‌ஷமா இருக்கும்னு.. பயபுள்ள பதிலுக்கு ஒன்னு சொல்லுச்சு

      “ அவன மொதல்ல வீட்ட ஒழுங்கா பாக்கச் சொல்லு .. ரெண்டாவது அவன் பொண்டாட்டி நடத்துற ஸ்கூல்ல வேலை பாக்குறவங்களுக்கு ஒழுங்கா சம்பளத்தக் கொடுக்கச் சொல்லு, அப்புறமா வந்து நாட்ட பாக்கலாம்”னு சொல்லிட்டுப் போயிட்டான் ஓய்…

      என்ன பண்றது ,. கலி முத்திடுத்து ..

  2. தமிழகத்தின் அடுத்த முதல்வர் எங்கள் ரஜினி தான் அதை யாராலும் தடுக்க முடியாது.

    • ஆமாண்டா அம்பீ,

      அவரை யாராலும் தடுக்க முடியாது, ஏன்னா போயஸ்தோட்டத்துல வச்சி செருப்பால அடிக்க ஜெயலலிதாவும் இல்ல, ராமாவரத்துல கட்டி வச்சி அடிக்க எம்.ஜி.ஆரும் இல்லை. இப்போ அவர் ஃப்ரீயா வெளில வரலாம்.

      ”பீ திங்கிற பன்னிக்கு சாக்கடதான ஓய் போக்கிடம் “ பங்குக்கு ரெண்டு பீயத் திண்ணுட்டுப் போகட்டும் ஓய்..

      • ரஜினி அரசியலுக்கு வரலாமா என்று யோசிக்கும்போதே இங்க சில பல
        கட்சிகளுக்கும்
        தலைவர்களுக்கும் வயிறு கலக்குது.. வந்தா எப்படி இருக்கும்!! வா ராஜா நீ வா !
        கண்டிப்பாக இந்த திராவிட கட்சிகளைவிடவும் ரவுடி கட்சிகளான சீமான் மற்றும்
        தைலாபுர திண்ணை பேச்சாளரை விடவும் மோசமாக நீர் ஆட்சி செய்யப்
        போவதில்லை. கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கமே
        போதும். நாங்கள் இருக்கிறோம், உம்மை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க.
        தைரியமாக வாருங்கள். வந்து இந்த பாழாய்ப்போன தமிழ்நாட்டு
        அரசியல்வியாதிகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள். காத்திருக்கிறோம்.

  3. இவரு வந்தவுடனே ” காவிரி ” குடகிலிருந்து கர்நாடக எந்த அணியிலும் தேக்கி வைக்காமல் நேரே ” தமிழகத்தின் டெல்ட்டாவுக்குள் ” பாய்ந்து ஓடி வந்துடும் … நாமளும் மீண்டும் யானைகளை தேடி பிடித்து வந்து ” நெற் போரடிக்கலாம் ” ….
    இப்படிதான் மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் வந்தவுடன் இந்தியா முழுக்க தேனாறும் — பாலாறும் ஓடும் என்று கூறி … காங்கிரஸ் ஆட்சியில் விட்டத்தைப் பார்த்து குந்திகினு கிடந்த ஜனங்களை — வீதிக்கு கொண்டு வந்து வாயில் விரலை வைத்து சூப்பிக்கொண்டே வானத்தை பார்க்க வைத்த கில்லாடிகள் போல — இவரு வந்தவுடன் மேற் சொன்ன ஆறுகள் ஓடுதோ இல்லையோ — மாட்டு மூத்திர ஆறு ஓடாமல் இருக்க வேண்டும் — பாபா தான் அருள் புரியனும் … !!!

  4. வினவு சார் உங்கஜட்ஜுமெண்ட்ரொம்பதப்பு?கழுதைவிட்டைக்குகாத்திருப்பவனுக்கு தான்அதன்அருமைதெரியும்உலக அறிவாளிகுருமூர்த்தி,ஊடக அறிவாளி பாண்டை,சொர்ணாக்காதமிழ்இம்சை, அர்ஜூன்சம்பத் போன்ற மேற்படியாளரிடம்கேட்டுப்பாருங்கரஜினி அரசியலுக்குவந்தா என்னாஅற்புதம்நடக்கும்னு!ஆன்மீகம்செழிக்கும் !ஆண்டிபயலுகவாழ்க்கைமினுமினுக்கும்!கிராக்குகள்ஆட்சியிலே கிருக்குபயலுக்கெல்லாம்அதிகாரம்கிடைக்கும்!ஆம்பளைஜெயாஆட்சிமலர்வதைகெடுக்காதிங்கசார்!

  5. தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க