
டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு விஞ்ஞானரீதியில் ஒரு பயனற்ற அழுகிய கோட்பாடு என்று கூறி ஒன்பதாம் வகுப்பு உயிரியல் பாடத்தில் இருந்து துருக்கி அரசு நீக்கியிருக்கிறது. ரமலான் நோன்புக்குப் பிறகு செப்டம்பரில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த பாடத்திட்டத் திருத்தத்திற்கு இசுலாமிய அடிப்படைவாதியான அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு போதிய வயதில்லை என்று பாட நீக்கத்திற்கு காரணம் கூறியிருக்கிறார் துருக்கி கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்டக்குழு தலைவர் அல்புஸ்லன் டர்முஸ். எனவே பரிணாமவியல் கோட்பாடு இளங்கலை படிப்பு வரைக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று மேலும் கூறியிருக்கிறார். என்ன இருந்தாலும் இவர்களால் டார்விணின் கோட்பாட்டை முற்றிலும் தடை செய்ய முடியவில்லை.
சவூதி அரேபியாவிற்குப் பிறகு பரிணாமவியல் கோட்பாட்டை தேசியப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியிருக்கும் இரண்டாவது நாடு துருக்கி என்று கூறுகிறார் துருக்கியின் ஆசிரியர் சங்கமான எகிடிம் சேன்னின் தலைவர் ஃபெரே அய்ட்கின் அய்டோகன். பரிணாமவியல் குறித்து 60 மணி நேரமும் டார்வினைப் பற்றி 11 மணி நேரமும் ஈரானில் கூட பாடம் எடுக்கிறார்கள் என்று மேலும் அவர் கூறினார்.
ஏக இறைவனே களிமண்ணில் இருந்து ஆதாமை படைத்ததாக இஸ்லாம் நம்புவதற்கு மாறாக ஆதாமைப் படைத்தது இயற்கைத் தேர்வே என்று டார்வின் கூறுவது இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. அதனால் தான் “பரிணாமவியல் மட்டுமல்ல அனைத்து வகுப்புகளுமே [இசுலாமிய] மதம் சார்ந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது” என்று அய்டோகன் கூறுகிறார். “இந்த புதியப் பாடத்திட்டம் மாணவர்களுக்கும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் பெருங்கேட்டையே கொண்டு வரும்” என்பது அவரது வாதம்.
“துருக்கி மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுதான் ஆபத்து. இதற்கெதிராக எங்கள் ஆசிரியர்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள். அரசின் நடவடிக்கைகளைப் பற்றி கவலையில்லை மாறாக மதச்சார்பற்ற அறிவியல் மதிப்பீடுகளின் படி வகுப்பறைகளில் மாணவர்களுக்கு அவர்கள் கல்விக் கற்றுக் கொடுப்பார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.
1922 ஆம் ஆண்டு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தில் இருந்த துருக்கியை முஸ்தபா கெமாலின் தலைமையில் சோவியத் யூனியன் உதவியுடன் துருக்கியில் தேசியப்புரட்சி நடந்தது. மதச்சார்பற்ற அறிவியல் கல்விக்கான கதவினையும் அந்தப் புரட்சி தன் குடிமக்களுக்கு திறந்து விட்டது. பரிணாமவியல் பற்றி அடிப்படை வகுப்புகளில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் அது ஆழமாக விதைத்திருந்தது.
நூற்றாண்டுகளுக்குப் பிறகு அறிவியலைப் பற்றியதான துருக்கியின் இந்த நிலைப்பாடு இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு மட்டுமே உரிய ஒன்றன்று. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் கூட கிறித்தவ திருச்சபைகள் பரிணாமவில் கொள்கையை மறுத்து பேசி வருகிறது. இந்தியாவிலோ வர்ணாஸிரமும் விஷ்ணுவின் தசாவதாரமுமே பரிணாமவியல் கொள்கையாக இந்துமத அடிப்படைவாதிகள் பேசுகின்றனர்.
அறிவியலைக் கற்பதற்கு சக்தி, முயற்சி மற்றும் காலத்தை அதிகமாகச் செலவிடுவது அவசியம். மார்க்ஸ் கூறுவது போல “விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.” இறைவனே அனைத்தையும் படைத்தான் அவன் விதிப்படி தான் சகலமும் இயங்குகின்றன என்ற மதவாதிகளின் மூளைகள் அத்தகைய கடுமுழைப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாதவை.
கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா உள்ளிட்ட மிகச்சிறிய உயிரினங்கள் ஒவ்வொரு கணமும் நுண்கூர்ப்பு (microevolution) அடைகின்றன. மிக உயரமான மலைச்சிகரங்களில் உயிர்ப்பிழைத்திருப்பதற்கான பெருங்கூர்ப்பை (macroevolution) மூவாயிரம் ஆண்டுகால போராட்டத்தினால் திபெத்திய மக்கள் பெற்றிருக்கிறார்கள். இது டார்வினின் இயற்கைத்தேர்வுக்கு மிகச்சிறந்த நிரூபணங்கள்.
உயிர்ப் பிழைத்திருப்பதற்கான ஒவ்வொரு கணமும் பரிணாமத்திற்கான நிரூபணம் என்று அறிவியல் உலகம் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அறிவியல் கூற்றை ஏற்காமல் பரிணாமம் புரியவில்லை பொய்யானது என்று படைப்புவாதிகளும் அடிப்படைவாதிகளும் கூறுவது மக்களை அறியாமையில் மூழ்கடித்து மூடர்களாக அடிக்கவே என்பது தெள்ளத் தெளிவு.
செய்தி ஆதாரம்:
- Passions flare as Turkey excludes evolution from textbooks
- Identifying Signatures of Natural Selection in Tibetan and Andean Populations Using Dense Genome Scan Data
- Ten Major Court Cases about Evolution and Creationis
_________________________________________
இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா?
இந்தியா போல மத சார்பற்ற துருக்கி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கேயும் இதற்கு எதிராக கோர்ட்டிற்கு சென்று இருக்கிறார்கள்.
//ஏக இறைவனே களிமண்ணில் இருந்து ஆதாமை படைத்ததாக இஸ்லாம் நம்புவதற்கு மாறாக ஆதாமைப் படைத்தது இயற்கைத் தேர்வே என்று டார்வின் கூறுவது இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு வேப்பங்காயாக கசக்கிறது//
களிமண்ணிற்கு உயிர குடுத்த கதை யூதர்களுடையது.
தலைப்பாகையும் யூதர்களுடையது.
சுன்னத் செய்வதும் யூதர்களுடையது.
இறைவன் முதலில் அனுப்பிய தூதர் ஆபிரகாம் இவை எல்லாம் அங்கீகரித்தார் .
அவருக்கு பின் இறைவன் அனுப்பிய தூதர் ஜீசஸ் சுன்னத் , தலைப்பாகை எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டார்.
கடைசியாக வந்த இறைவன் அனுப்பிய தூதர் சுன்னத் , தலைப்பாகை எல்லாம் மீண்டும் வேண்டும் என்று கூறி விட்டார்.
இறைவன் நிலையான சிந்தனை கொண்டவரல்ல என்று தெரிகிறது .
கட்டுரைக்கும்,நீ இங்கு சொன்னதற்க்கும் என்ன தொடர்பு? எல்லா கதைகளும் முழுதும் (அல்லது பெரும்பாலும்) கற்பனையே. இப்போ விஷயம் சுன்னத் பற்றியோ, தலைப்பாகை பற்றியோ அல்ல. பள்ளிகளில் அறிவியல் உண்மைகள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதே! உன்னால் அறிவியலை ஏற்க முடியாது. காரணம் உனக்கு ராமர் பாலமும், ராம ஜென்ம பூமியும் வர்ணாஷ்ரமமும், திருநள்ளாறு மேலே பறக்கும் நாசா சாட்டிலைட்டும், பஞ்சகாவியமும், யோகாவும் இன்னும் கணக்கற்ற போலி அறிவியல் நம்பிக்கைகளும் வேன்டும். பின் நீ எப்படி அறிவியலை ஏற்பாய்?
மரியாதை தெரியாத, இறைவன் காலடியில் கிடக்கும் அற்பவாதி அவர்களே !
நான் கூறாத கருத்துக்களை நான் கூறியதாக உங்கள் கருத்தை கூறி , அதையே அடித்து துவம்சம் செய்து இருக்கின்ரீர் . இது போன்ற straw man அயோக்கிய விவாதத்தை செய்வதை விட வேறு உபயோகமான வேலையை பார்க்கலாமே !
சுன்னத் செய்த ஒவ்வொருவரும் ஏவொலுஷன் மூலமாக உருவானவன் மனிதன் என்பதை பறை சாற்றுகிறார்கள்.
மனிதன் எல்லாம் தெரிந்த சரியான ஒரு சக்தியினால் படைக்கப்பட்டு இருந்தால் சுன்னத் தேவை பட்டு இருக்காது .
அந்த சக்தியினால் படைப்பில் மாற்றம் செய்ய முடியும் என்றாலும் தேவை பட்டு இருக்காது. அவர் அடுத்த குழந்தை பிறக்கும் முன்னர் குறையை நிவர்த்தி செய்து இருப்பார்.
சுன்னத் தேவை படுகிறது என்றால் இறைவன் செய் நேர்த்தி இல்லாதவர் என்று ஆகிறது.
சிக்கிசம் மட்டுமே இறைவன் படைப்பை அப்படியே ஏற்று கொண்டு முடி திருத்துவதை கூட செய்வது இல்லை .
Raman sir, without any control you start crying here….could you not understand about hisfeet’s explanation…
@கி.செந்தில்குமரன்
May I point that you have a problem with comprehension. These books will help you
http://www.amazon.in/Triple-Your-Reading-Speed-4th/dp/0743475763
http://www.amazon.in/Speed-Reading-Third-Tony-Buzan/dp/0452266041
There are some iOS/Android apps also available for practice
மீண்டும் தொடபின்றி உளறிகிட்டு இருகிங்க ராமன்…ஹிஸ் பீட் என்ன கூறுகின்றார் என்பதனை மீண்டும் அவர் பின்னுட்டம் 1.1ஐ “””கட்டுரைக்கும்,நீ இங்கு சொன்னதற்க்கும் என்ன தொடர்பு?…….” படித்துவிட்டு பதில் அளிக்கவும்….
http://thescienceexplorer.com/brain-and-body/here-s-why-speed-reading-hoax
I am not a creationist. An I think all religions are man-made. I have clearly said that those are imaginary things and have no impact on the issue at hand. First Judaism-Christianity-Islam, now Shikism. Try to bring in more religions just to avoid discussing Hindutva’s anti-science stand. If you are open-minded just tell me what are all the things you don’t accept in the pseudo-scientific things I have listed above?
What type of respect you expect and why?
// If you are open-minded just tell me what are all the things you don’t accept in the pseudo-scientific things I have listed above?//
First of all I have never supported those kind of stuff. You only wrote I supported and you want me to deny those statements which i haven’t made.
பொது சபையில் நாகிரகம் தெரியாத உன்னை போன்ற அயோக்கிய விவாதம் செய்யும் உஅற்ப மனிதர்களை நான் மதிப்பது இல்லை .
Go get a life!
இறைவன் செய் நேர்த்தி இல்லாதவர் என்பதால் சுன்னத் தேவை படுகிறது அல்லவா? உண்மை தான் ராமன்… அவர் “படைப்பில்” தவறு ஏதும் இல்லை என்றால் மரபியல் தொடர்பான எந்த குறைபாடும் (கண் குருட்டு,காது செவிடு போன்ற……)மனிதனுக்கு ஏற்பட்டு இருக்காது அல்லவா? இந்த கருத்தை நீங்கள் ஏற்பிர்கள் என்றால் நீங்களும் நாத்திகவாதி ஆகின்ரீகள்…. இந்த கருத்தை நீங்கள் ஏற்கின்ரீரா?
ராமன்
எதையுமே முழுமையாய் தெரியாமல்,”நமக்கும் ஒரு பிடி கிடைத்து விட்டது” என்று உளறக்கூடாது.
யூத கிறித்துவ இஸ்லாமிய மதங்களுக்குள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை அது தனி பிரிவு.அது ஒரு வரலாறு.ஆர்வம் இருந்தால் அதை யாராலும் அறிந்து கொள்ள முடியும்.அரைகுறையாக எதையாவது மேய்ந்து விட்டு “எல்லாம் ஒன்றுதான் ” என்று காட்ட முனைந்தால் மூக்குடைபடுவதில்தான் முடியும்.
டார்வின் கோட்பாட்டை பேசுவதாக இருந்தால் பேசுவோம்.அதில் நிறைய கேள்விகள் சந்தேகங்கள் தொடர்ந்து கொணடே போகின்றது.சரியான விடைகளும் விளக்கங்களும் தேவையாயிருக்கின்றது.
தலைப்பிற்க்கு சற்றும் தொடர்பில்லாத யூதம் சுன்னத் தலைப்பாகை என்று ,பலவீனமான கண்ணாடிக்கூண்டிலிருந்து கல்லெறிய முயற்ச்சித்தால் கடைசிவரை தாக்கு பிடிக்க வேண்டும்.இடையில் ஓடக்கூடாது.நான் கடைசிவரை ரெடி.
கடைசிவரைக்கும் பரிணாமக் கோட்பட்டை ஏற்கப்போவதில்லை. அப்பறம் நீ தாக்குப்பிடிச்சா என்ன பிடிக்கலாட்டி என்ன?
மிஸ்ட்டர் பீட்டு
பரிணாம கோட்பாட்டை நான் ஏற்ப்பேனா ஏற்க மாட்டேனா, ஏற்றே ஆகவேண்டுமா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது நீர் அல்ல.அது என் விருப்பம் என் உரிமை.
டார்வினை கண்ணை மூடிநம்பும் உரிமை உனக்கிருந்தால் உன் கண்ணை திறக்கும் கடமை எனக்கும் உண்டு.
திரு. மீராசாஹிப்,
மன்னிக்க வேண்டும். இதில் ஒரு மாற்று கருத்தை பதிய விரும்புகிறேன். பரிணாம கோட்பாடு, கிருமி கோட்பாடு, புவிஈர்ப்பு போன்ற அறிவியல் உண்மைகள் மற்றும் பொதுவே உண்மைகள் எல்லாருக்கும் பொது. அது நம்பிக்கை சார்ந்த விஷயம் அல்ல. சில அடிப்படை உண்மைகள் எல்லாரும் ஏற்று கொண்டு தான் நம் சமூகம் இயங்குகிறது. அவை ஏற்பது விருப்பம் என்னும் வலைவில் கொண்டு வருவது தவறு.
We definitely get our own opinions but we dont get our facts and we certainly dont get our own science. டார்வினை கண்ணை மூடி நம்பும்படி யாரும் உங்களை கட்டாய படுத்தவில்லை. இருக்கும் ஆதாரத்தை அறிவியல் கொண்டு அலசுவோம். அது என்ன முடிவுக்கு இட்டு செல்கிறதோ அதை ஏற்போம். உயரினங்கள் எவ்வாறு வந்தது என்பதை இருக்கும் அனைத்து ஆதாரமும் விளங்கும் படி, எவ்வாறு அது நடந்தது, நிலைமை, மாறி இவ்வாறு இருந்தால் அது எப்படி நடக்கும் என்று கணிக்கவும். மேலும் நடப்பதை நாம் பார்த்து உறுதிபடுத்தவும் இன்று வரை பரிணாம வளர்ச்சி கோட்பாடு பல சோதனைகளை கடந்து நிற்கிறது. எனவே தான் அதை அனைவரும் ஏற்கின்றனர். டார்வின் சொன்னதை எல்லாம் கண்ணை மூடி யாரும் நம்ப வில்லை, நம்பவும் வேண்டாம். அவரே பல சொதபல்கள், மிக பெரிய தவறுகள் அவர் எழுத்தில் செய்துள்ளார்.
உயரியல் என் துறை அல்ல. அனால் பரிணாம வளர்ச்சி பற்றி கொஞ்சம் ஆழ்ந்து படித்து உள்ளேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது அதை பற்றி பேச விரும்பினாலோ, தாராளமாக கேளுங்கள். என்னால் இயன்ற வரை பதில் அளிக்கிறேன். இங்கு வேண்டாம் என்றால் என் blog லிங்க் உள்ளது. அங்கயும் என்னை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.
வாங்க சிந்தனை செய்! ரொம்ப நாள் ஆயிற்று உங்கள் விவாதத்தை கண்டு களித்து….! வணக்கம் நண்பரே… சரி விசயத்துக்கு வருகிறேன்…பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது அறிவியல் சார்ந்தது.. இறையியலில் தீவிர நம்மிக்கை உடையவர்கள் அவர்கள் எம்மதத்தவராக இருந்தாலும் டார்வினை புறக்கனிக்கவே செய்வார்கள்.. அவர்கள் நிருவனம்யமாகப்ட்ட கிறிஸ்துவராக இருந்தாலும் சரி…., மீரான் பாய் போன்ற தனி நபராக இருந்தாலும் சரி டார்வினை புறகனிக்கவே செய்வார்கள்….அது நமக்கு எப்ப பிரச்சனையாக மாறும் என்றால்… இத்தகைய அறிவியல் பூர்வமான கோட்பாடுகளை கல்வி தளத்தில் மதவாதிகள் தடை செய்யும் தருணத்தில் தான் பிரச்சனையாக மாறுகின்றது…அப்போது நம் போன்றவர்கள் மத மதவாதிகளுக்கு சரியான பதிலடியை கொடுத்து தான் ஆகவேணும்… அதனை தான் இந்த கட்டுரையும் செய்கிறது, நீங்களும் செய்கின்றீர்கள்… மிக்க நன்றி…
Catholic Church and mainstream Protestant Churches accept evolution. Though there are some points where they have some compromises to fit their religion in, in large they accept and even preach evolution.
இந்த சர்சுகள் பரிணாம கொள்கை விசயத்தில் நடத்தும் இரட்டை நாடகத்தை பற்றி ஒரு விசத்தை கூறினால் நீங்கள் அதிர்ந்து போவிர்கள்…ஹிஸ் பீட்…
ஆமாங்க நான் 2006களில் கொடைக்கானல் கிருஸ்துவ கல்லூரியில் கணினி ஆசிரியராக இருந்தேன்… பல நாட்டு மாணவர்களையும் சந்திக்கும் சந்தர்பத்தை அங்கே பெற்றேன்… குறிப்பாக ஆப்பிரிக்க மாணவகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து…எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது…கம்யுனிட்டி மீல்ஸ் என்று சமத்துவம் எல்லாம் இருக்கத்தான் செய்தது… கல்லுரி முதல்வர் பாதிரியார் ஆங்கில ஆசிரியர்…… அவர் மாணவர்களுக்கும் சரி , ஆசிரியர்களுக்கு சரி நிறைய சொல்லிக்கொடுப்பார்…
ஆனா பாருங்க… மாலையில் கல்லுரி முடிந்துடன் மாணவர்களும் , ஆசிரியர்களும் ஒரு செமினார் கொடுக்கணும் எங்க கல்லுரியில்…. எல்லாரும் தலைப்புகளை கொடுத்தார்கள்… நானும் கொடுத்தேன்…எனக்கும் slot அல்கேட் ஆனது… ஆனால் என் முறை வரும் போது எல்லாம் அந்த செமினாரை தலைமை ஏற்று நடத்தும் என் நண்பர் கிறிஸ்டியன் செடியிஸ் ஆசிரியர் என்னிடம் ரிக்வஸ்ட் செய்து தேதியை மாற்றுவார்… இப்படியஎன் தேதிகளை மாற்றி மாற்றி ஒரு ஆண்டுகளை ஓட்டிவிட்டார்….
என் செமினார் டாப்பிக் என்னவென்று தெரியுமா நண்பரே…
Applications of Evolution Theory in Modern medical Science…!
நவீன மருத்துவ அறிவியலில் பரிணாம கொள்கையின் பயன்பாடு….
இப்ப கூட அந்த கிறிஸ்டியன் செடியிஸ் ஆசிரியர் எனக்கு நண்பர் தான்.. அந்த படிப்பை யாரும் படிக்க சேராததால் அவர் வேளையில் இருந்து விடுவிக்கப்பட்டார்… இப்ப பாஸ்ராக தெக்கத்திப்பக்கம் இருக்கின்றார்… நான் சென்னைக்கு அருகில் மறைமலைநகரில்….
அந்த செமினாரை கொடுக்க இயலாமல் போனதற்காக எனக்கு வருத்தம் எல்லாம் ஏதும் இல்லை…. ஆனால் எனது கருத்துரிமை சுதந்திரம் தடை செயப்படு கற்பழிக்கப்பட்டு விட்டதே என்ற வலி மட்டும் தான் எனக்கு இனமும் இருக்குங்க….
I just said that they are supporting and accepting. But they are not doing it with 100% open mind. And the Christian studies itself should be removed from secular colleges. Religion should be kept outside schools and colleges. Christians should first do this as they started the trend.
ஏற்பிற்கு உரிய உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நண்பர் ஹிஸ்பீட் ! கணினி, காமர்ஸ் படித்து பொருளைத்தேடும் இவ்வுலகம் இறையியல் கல்வியை புறகணிக்கின்றது என்கின்றபோது நன்னெறிகள் சார்ந்த படிப்புக்கு உள்ள முக்கியத்துவம் இன்மை என்னை சிறிது வருத்தம் அடையத்தான் செய்கிறது…(கிருஸ்துவ படிப்பில் மத துவேசத்தை எல்லாம் பரப்ப மாட்டார்கள் என்ற என் நம்பிக்கையின் அடிப்டையில் இதனை கூறுகின்றேன்)
செந்தில்குமரன்
நீங்கள் என் மீது வைத்திருக்கிற மரியாதைக்கு மிக்க நன்றி.எனக்கும் உங்கள் மேல் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
எனக்கு தனிநபர் என்ற ஒரு அடையாளத்தை கொடுப்பதை காண்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வது..நான் தனிநபர் அல்ல. எல்லோரையும் போல நானும் இந்த சமுதாயத்தின் ஓர் அங்கம்தான்.அதில் நீங்கள் நான் மணிகண்டன் உண்மைவிளம்பி எல்லோரும் அடக்கம்.
அதே நேரத்தில் நான் ஒரு தீவிர இஸ்லாமியன் என்பதையும் எந்தவித ஒளிவும் மறைவும் இன்றி வெளிப்படுத்திக்கொள்கிறேன்.
டார்வினை ஏற்றுக்கொள்வதா புறக்கணிப்பதா என்பதல்ல பிரச்சினை.டார்வினின் கோட்பாடு அறிவியல் பூர்வமானதா என்பதுதான் பிரச்சினை.
டார்வினின் கோட்பாடு நாத்திகத்திற்க்கு வலு சேர்ப்பதால் நாத்திகர்கள் இதை அறிவியல்தான் என்ற முடிவிற்க்கு வந்துவிடுகிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.
விஞ்சாணிகளின் தந்தையாக புகழப்படுகிற ஐன்ஸ்டீன் கடவுளை நம்புபவனாக்வே இருந்தான்.
டார்வினுக்கு பரிணாம கோட்பாடு தாண்டி வேறு என்ன அறிவியல் ஆய்வுகள் இருந்தது?
விவாதிப்போமே…..
இந்த விவாதம் உங்களுக்கும் எனக்கும் நேரவிரையத்தை தான் ஏற்படுத்தும் பாய்… இன்றைய பயோஇன்பர்மெடிக்ஸ் ஆய்வுகள் எல்லாம் டார்வின் தியரியின் அடிப்டையில் தானே நடந்து கொண்டு உள்ளது…குறிப்பாக ஜீன் மியுடேசன் போன்ற ஆய்வுகள் அத்தனயுமே பரிணாமகொள்கையின் அடிப்டையில் தான்… உங்களை நான் இத்தகைய ஆய்வுகளை ஏற்றுகொள்ளவேண்டும் என்று வலியுருதவில்லை. ஆனால் என் கேள்வி என்னவென்றால் பரிணாம கொள்கையை ஏன் மதவாதிகள் கல்வி துறையிலில் இருந்து விலக்கிவைக்க முயலுகின்றார்கள் என்பதே… அது சரியா? துருக்கியின் செயல் சரியா?
என் கேள்விக்கான துல்லியமான பதிலாக இது இல்லையே செந்தில்குமரன்.
பரிணாமம் என்பதே கிடையாது என்ற முடிவில் நான் வாதாடவில்லை செந்தில்.
டார்வினின் கோட்பாடு அதாவது குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா?
நிச்சயம் உலகில் அனைத்து உயிரிணங்களும் தாவர வகைகளும் பரிணாம மாற்றம் அடைந்தே இருக்கும்.நிலக்கரியே பரிணாமத்தின் வரவுதானே.
மனிதனின் உயர அகலம் வலிமை ஆயுள் இப்படி எண்ணற்ற பரிணாம மாற்றங்களை உலகம் அறிந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒட்டுமொத்த படைப்புகளும் ஒன்றிலிருந்தே உருவாகி தனித்தனி வடிவம் தனித்தனி தன்மை பெற்றதாக டார்வின் சொல்லும்போது அதற்க்கு ஆறிவியல் ஆதாரம் உண்டா?என்பதுதான் கேள்வி.
அடுத்து துருக்கியில் பரிணாம பாடத்தை பாட புத்தகத்திலிருந்து தூக்கலாமா என்பது கேள்வி..
இந்த துருக்கி மட்டும் ஐரோப்பாவில் மாட்டிக்கொண்டு பல்வேறுவகையான சித்தாந்த அரசியல் அலைகளால் தத்தளித்துக்கொண்டேதான் இருக்கின்றது.இதை நான் பொதுவாக சொல்கிறேன் பரிணாம கொள்கைக்காக சொல்லவில்லை.
அங்கே என்ன மாதிரியான பாடம் நீக்கப்பட்டது எதற்க்காக நீக்கப்பட்டது தெரியவில்லை.
ஆனால் நான் திரும்பவும் சொல்வது….பொதுவான பரிணாம கொள்கைக்கு எதிராக சிந்தனையாளர்கள் இருக்க முடியாது.அப்படி இருந்தால் மனித அறிவின் மகத்துவமிக்க அறிவியல் உண்மைகளை மறுதலிக்கும் மண்டு மூழிகளாகத்தான் இருப்பார்கள்.
திரும்பவும் கேட் கிறேன் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பது அறிவியல் நிரூபிக்கிறதா?
குரங்கோடு மனிதனை சேர்ப்பது நாத்திகத்திற்க்கு உவப்பாய் இருக்கிறது.
இல்லவே இல்லை. ஒவ்வொன்றும் தனித்தனி படைப்புகள் அனத்தும் இறைவனின் படைப்புகள் என்பதில் ஆத்திகம் உறுதியாய் இருக்கிறது.
ஆக இங்கே அறிவியல் பின்னுக்குபோய் ஆத்திக நாத்திக சண்டைதான் முன்னுக்கு வருகிறது.
இது தேவையா? ஆய்வுப்பூர்வமான முடிவின் அடிப்படையில் பரிணாம கொள்கையை படிப்போம் சிந்திப்போம்.ஒரு வேளை அது டார்வினின் குரங்கு-மனிதன் கதையை நிரூபித்து விட்டதென்றால் பகிரங்கமாய் பரப்புவோம்.” என் அப்பாவும் அம்மாவும் குரங்கே”
மீரான் பாய், உங்களுக்கான பதிலை நேற்றே கொடுத்து விட்டேன் என்று நம்புகின்றேன்… என் பின்னுட்டம் 1.2.1.1.2 இங்கே கீழ் தான் உள்ளது.. படித்துப்பாருங்கள்…. அங்கே நீங்கள் விவாதித்தால் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
டார்வின் தியரி அடிபடையில் குரங்கில் இருந்து மனிதன் தோன்றினானா என்ற கேள்வியை ,சந்தேகத்தை எழுப்பியுள்ளீர்கள்? சரியான கேள்வி தான்… இதற்கான விடை அறிவியல் தளங்களில் ஏராளமாக கொட்டிகிடகிறது… படித்துப்பார்த்துவிட்டு என்னுடம் விவாதிக்கலாமே! இங்கே சிறுவிளக்கம் கொடுக்கிறேன்.. நம் தாய் தந்தையர்கள் எல்லாம் குரங்கு இல்லை என்று நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்… இந்த புவியுலகில் உயிரங்களின் வாழக்கை என்பது மதங்களின் தோற்றத்துக்கான அதிக பச்சம் 3000 ஆண்டுகளை விட மிக மிக அதிகம் முந்தையது…. 4.5 பில்லியன் ஆண்டுகள் முந்தையது….
மனிதனின் வாழ்க்கை 200,000 years முன்பே இந்த புவியில் தொடங்கிவிட்டது.Humans are primates. Physical and genetic similarities show that the modern human species, Homo sapiens, has a very close relationship to another group of primate species, the apes…!
Humans and the great apes (large apes) of Africa — chimpanzees (including bonobos, or so-called “pygmy chimpanzees”) and gorillas — share a common ancestor that lived between 8 and 6 million years ago.
இவை எல்லாம் அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்ட உண்மைகள்..மேலும் மதங்களின் வரலாற்று காலம் என்பது வெறும் அதிகபச்சம் 3000 ஆண்டுகள் என்கின்ற போது மதங்கள் கூறும் மனித வாழ்வின் தொடக்கத்தை பற்றிய கதைகளை எப்படி நம்புவது மீரான் பாய்?
மீரான் பாய்,
நண்பர்கள் சிந்தனை செய்யும் செந்திலும் நல்ல விளக்கங்கள் அளிக்கிறார்கள்.
இந்த கட்டுரை பேசுவது துருக்கி பள்ளிகூடத்தில் பரினாமத்தை தடை செய்தது குறித்து. அதே பள்ளிக்கூடத்தில் மதக்கல்விக்கு தடையில்லை. பரினாமத்தை தடை செய்ததற்கு அவர்கள் கூறிய விளக்கத்தை ஏற்கின்றீர்களா? முதலில் பரிணாமம் பற்றிய படத்தை ஏன் பள்ளியில் இருந்து நீக்க வேண்டும்?
ஏனெனில் சாதாரண மக்கள் மதத்தை நம்புவதற்கும் மதத்தை கட்டுப்படுத்துபவர்கள் நம்புவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஏனெனல் ஏழை மக்கள் ஏழையாகவே இருப்பதற்கு மதம் ஒருக் காரணமாக இருக்கிறது அதே போல பணக்காரர்களுக்கும் அதுவே ஒருக் காரணமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் நடக்கும் படுகொலைகள் வன்முறைகளை ஏன் எல்லாம் வல்ல அல்லாவால் தடுக்க முடியவில்லை. சிரியா, ஈராக், ஆப்கனிஸ்தான், பாலஸ்தீனம், பாகிஸ்தான் என்று இசுலமைய நாடுகளில் இசுலாம் பெயரால் நடக்கும் தீவிரவாத படுகொலைகளை ஏன் அல்லாவாலோ இசுலாமின் மதக் கொட்படுகலாலோ தடுக்க முடியவில்லை.
எண்ணெய்க்காகவும் இயற்க்கை வளங்களுக்ககவும் ஆசியா ஆப்பிரிகா நாடுகளை ஏகதிபத்தியங்கள் சுரண்டுவதை ஏன் இசுலாத்தால் தடுக்க முடியவில்லை. இசுலாமிய மக்களே தங்களுக்குள் ஒருவராவ்யோருவர் அடித்துக் கொல்வதை ஏன் ஏக இறைவனால் தடுக்க முடியவில்லை.
தன்னுடைய தாய்நாட்டின் இயற்கை வளங்களை ஒருத்தன் கொள்ளையடிக்கிறான் என்பது புரிந்தால் தான் அதனை எதிர்த்து போராட முடியும். மதம் அதனை தடுக்கும் அபினியாக இங்கே இருக்கிறது. தன்னுடைய தாய் மண்ணை காப்பதற்கு போராட வேண்டிய கைகளை திருப்பி தன கண்களையே குத்த வைப்பது எது?
மத்திய காலகட்டங்களில் அறிவியலுக்கு இசுலாமிய அறிஞர்கள் கொடுத்த கொடைகள் ஏராளம் ஆனால் அவையெல்லாம் அல்லாவோ இசுலாம் என்ற மதமோ கொடுததல்ல. அந்த அறிஞர்களின் மதம் வேண்டும் என்றால் இசுலாமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் உழைப்பு அறிவியல் அதற்கும் மதத்திற்கும் துளியும் சமந்தம் இல்லை.
செல்வம் “வரலாற்றின் மத்திய கால கட்டங்களில் முஸ்லிம் கள் அறிவியலுக்கு கொடுத்த கொடைகள் ஏராளம்.” என்ற உங்கள் கருத்தின் ஊடே இஸ்லாம் அறிவியலுக்கு எதிராக இல்லை என்ற உண்மையும் கலந்தே இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
//இஸ்லாத்திற்க்கும் அறிவியலுக்கும் சம்மந்தமில்லை.ஆனால் அந்த காலகட்டத்தில் அறிவியலை முன்னெடுத்துச்சென்ற விஞ்ஞாணிகள் முஸ்லிகளாக இருந்தார்கள்//
என்பது உங்கள் கருத்து.
சரி..உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்.மத இறைநம்பிக்கையற்ற உங்களுக்கு இதை சொல்லும் உரிமை உண்டு.
அதேவேளை இஸ்லாம் என்றாலே பிற்போக்கு அதை பின்பற்றுபவன் மதவெறியாளனாய் அனைத்திற்க்கும் மதத்தின் பின்னால் ஒளிபவனாய் மூர்கனாய் மூடனாய் தான் இருப்பான் என்ற ஒரு கருத்து எல்லா அரைகுறைகளின் மூளையிலும் உறைந்துபோய் கிடக்கிறது.
அவைகள்தான் இதை சிந்திக்க வேண்டும்.
அறிவியலுக்கும் விஞ்ஞாணத்திற்க்கும் இஸ்லாம் காரணமில்லை என்ற உங்கள் கருத்து முழு உண்மை என்று வைத்துக்கொண்டாலும் அந்த விஞ்ஞாணிகள் அனைவரும் முஸ்லிம்களாகவும் இஸ்லாமிய ஆட்சிசிக்குட்பட்ட அரசிலும்தான் வாழ்ந்தார்கள்.
இந்த நேரத்தில் கலீலியோகலிலியின் நிலையை நினைவூட்ட விரும்புகிறேன்.
எக்காலத்திலும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் அறிவியல் ஆய்வுக்கு எந்த தடையும் இருந்ததில்லை. மாறாக அனைத்து துறை ஆராய்ச்சிகளும் சிறந்து விளங்கிற்று.
செல்வம்,
உண்மை திரு சிந்தனைசெய் ஆழமாக பரிணாமம் பற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் நானும் எனக்கான சந்தேகங்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
அடுத்து துருக்கியில் பரிணமத்தை பள்ளியில் தடுத்துவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
பரிணாமம் சம்மந்தமான பாடத்தை தடுத்துவிட்டதாக செய்தி. பரிணாமம் என்ற கொள்கையை முற்றிலுமாய் யாராலும் மறுத்துவிட முடியாது என்பதே உண்மை.
துருக்கியில் நடந்தது என்ன என்பது பற்றி முழுமையாக என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை.அப்படியே துருக்கியில் என்ன நடந்தாலும் அதற்க்கு பொறுப்பேற்க்கவோ வக்காலத்து வாங்கவோ எனக்கு கடமையோ அவசியமோ இல்லை.
பரிணாம கோட்பாட்டு பல்வேறு வகையான ஆரய்ச்சிகளை உள்ளடக்கியது.அதில் டார்வினின் கோட்பாடும் அடங்கலாம்.
பரிணாம கோட்பாடு என்பதே டார்வின் தான் என்பதோ பரிணாம ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் டார்வினை ஏற்றுக்கொண்டார்கள் என்றோ அறுதியிட்டு கூறமுடியுமா?
டார்வினுடையது ஒரு தியரி.
அது ஒரு அனுமானம்.அது உண்மையாக இருக்குமா? ஊகமா? ஆய்வுகள் தொடர்கிறது.
எல்லா பரிணாம ஆராய்ச்சியாளர்களும் டார்வினை அட்டியாக ஒப்புக்கொண்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா?
உலகின் உயிர்கள் பரிணாமம் பெற்று மாற்ற மடைந்திருக்கின்றன் என்று ஏற்க்கும் ஒருவர் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்காமல் இருக்கலாம்.அவரை எப்படி கட்டாயப்படுத்த முடியும்?
“உலகில் உள்ள அநியாய அக்கிரங்களையெல்லாம் அல்லாவால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?
இஸ்லாமியர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வதை ஏன் அல்லாவால் தடுக்க முடியவில்லை?
இவ்வளவு பல்வீனமான முறையிலா எங்களின் இறை நம்பிக்கை இருக்கும்?
உலகில் நடக்கும் அநியாய அக்கிரமங்களையெல்லாம் உடனுக்குடன் தண்டிக்கப்படவேண்டும் தீயவர்கள் அடியோடு அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதை நியதியாக கொன்டு இந்த உலகம் இயங்கவில்லை என்பதே எங்களின் நம்பிக்கை.
இது எங்கள் நம்பிக்கை சம்மந்தபட்டது இதற்க்கு மேல் விளக்கினால் அதில் மத பிரச்சார நெடிதான் அடிக்கும்.அதை கண்டிப்பாய் நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
அதுமட்டுமில்லாமல் இது வேறு ஒரு விவாதமாக மாறிவிடும்.
இதுபோக பலவீன்மான ஒரு இறைவனை நம்புவதும் வணங்குவதும் எங்களின் நிலையாக இருந்துவிட்டு போகட்டுமே செல்வம்…அதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லையே
//அனைவரும் டார்வினை ஏற்றுக்கொண்டார்கள் என்றோ அறுதியிட்டு கூறமுடியுமா?
டார்வினுடையது ஒரு தியரி.
அது ஒரு அனுமானம்.அது உண்மையாக இருக்குமா? ஊகமா? ஆய்வுகள் தொடர்கிறது.
எல்லா பரிணாம ஆராய்ச்சியாளர்களும் டார்வினை அட்டியாக ஒப்புக்கொண்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா?//
ஒரு செல்லில் இருந்து அனைத்தும் வந்தன என்பது நிரூபிக்க பட்டு விட்டது. ஊகம் எதுவும் கிடையாது . பூமி உருண்டைன்னு சொல்லிக்கிறாங்கப்பா , நான் நம்ப மாட்டேன் என்று ஒருவர் ஒதுங்கியதை போல நீங்களும் பின்வாங்குகிறீர்கள்.
அறிவியல் ஊகம் செய்வது அந்த முதல் செல் வந்தது எப்படி என்பது தான்.
ஒரு செல் உருவாக தேவையான அனைத்தும் பூமியிலே இருந்தது என்னும் போது , அந்த ரெசிபியை கண்டு பிடித்து இன்னொரு செல்லை உருவாக்க முடியுமா ?
அதற்கான ரெசிபியை கண்டுபிடிப்பது கடினம். அதே சமயம் பூமியை போன்ற இன்னொரு கிரகத்தில் உயிரினம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அறிவியலின் புதிர் தீர்க்க வாய்ப்பாக அமையும்.
திரு. மீரான்சாஹிப்,
இந்த கலந்துரையாடலில் நடுவே நுழைவதற்கு மன்னிப்பு கோரி கொள்கிறேன். நீங்கள் கூறியதில் ஒரு சில அறிவியல் சம்பந்தப்பட்ட தவறுகள் உள்ளன. எனவே அதை சுட்டி காட்ட விழைகிறேன்.
//டார்வினுடையது ஒரு தியரி.//
இது ஒரு misnomer. அறிவியலில் தியரி என்பது தான் மிக உயர்ந்த அங்கிகாரம். ஆங்கிலத்தின் தியரி என்ற வார்த்தை விளக்கம் வேறு, அறிவியல் தியரி (Scientific Theory) என்பது வேறு. அறிவியல் பாதை, scientific method, மூலம் ஒரு hypothesis பல கட்ட சோதனைகள், பல்வேறு ஆய்வுகள், அது தவறு என நிரூபிக்கும் முயற்சிகள், அத்துடன் போட்டியிடும் மற்ற hypothesis ஆகியவற்றை விட இதுவே மிக consistent முடிவுகள், prediction ஆகியவை தருகிறது என்பது போன்ற பல படிகளை கடந்து தான் ஒரு hypothesis, தியரி என அறிவியலில் வருகிறது. தியரி என்பது வெறும் ஊகமோ, அல்லது அனுமானமோ அல்ல. பல ஆயிரம் விஞ்ஞானிகள், பல ஆயிரம் ஆய்வுகள் , பல கட்ட rigorous சோதனைகள்ஆகியவற்றை கடந்து, இருக்கும் அனைத்து dataவிற்கும் எது மிக பொருத்தமான விளக்கம் அளித்து, அது போன்ற மற்ற இயற்கை நிகழ்வுகளுக்கும் இதை கொண்டு சரியான prediction தர முடியுமோ அதுவே தியரி.
இதை சற்றே விளக்கமாக பேசும் இரு லிங்க் கீழே உள்ளன. அந்த காணொளிகளை பார்க்கவும். ஒன்று hypothesis எவ்வாறு தியரி என மாற்றம் பெறுகிறது என்பதை விளக்குகிறது. மற்றொன்று எவ்வாறு ஒரு பிரச்சனையை விளக்க ஒரு hypothesis தரப்பட்டு, அது ஆராயப்பட்டு பிறகு தியரி என ஆகிறது, எவ்வாறு அனுமானம்(hypothesis) ஒதுக்கி தள்ள படுகிறது என்பதை உதாரணம் கொண்டு விளக்குகிறது.
டார்வினுடயது அனுமானம்(hypothesis) அல்ல. பரிணாம கொள்கையும் அனுமானம் அல்ல. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பல அறிவியல் ஆய்வுகள், genetics, palentology, geology, biology போன்ற பல அறிவியல் கிளைகள் (branches of science) தனித்தனியே செய்த பல ஆயிரம் ஆய்வுகள் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சந்தித்து தான் இப்போதைய பரிணாம கொள்கை தியரி என நிற்கிறது. அனைத்து பரிணாம ஆய்வாளர் மட்டும் அல்ல, மருத்துவத்தில் இருந்து பயோ-இன்ஜினியரிங் வரை பல துறைகளின் அடிப்படை அடித்தளமே பரிணாம கொள்கை தான். இதில் டார்வினை யாரும் ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. அவரை வெளியே வீசி எரிந்து விட்டாலும் பரிணாம கொள்கை அசைக்கமுடியாத உண்மை. நாம் ஒப்ப்க்கொள்ள வேண்டியது அறிவியலை மட்டுமே அல்லாது அதை சொன்னவர் இவர் என்பதால் யாரும் ஒப்புக்கொள்வதில்லை. ஐன்ஸ்டீனை அனைவரும் ஒப்புக்கொல்கிறார்களா என யாரும் கேட்பதில்லை, Francostoroவை ஒப்புக்கொல்கிறார்களா என கேட்பதும் இல்லை. மாறாக நாம் கேட்பது Relativity ஒப்புக்கொல்கிறார்களா, Germ Theory of disease ஒப்புக்கொல்கிறார்களா என்று தான். சொன்னது யார் என்பது பற்றி அறிவியலுக்கு கவலை இல்லை. விஞ்ஞானிகளுக்கும் கவலை இல்லை, யாருக்கும் அந்த கவலை இல்லை.
Links:
How does a hypothesis become a theory –
http://study.com/academy/lesson/how-does-a-hypothesis-become-a-theory.html
The mystery of Mercury’s orbit –
மீராசாஹிப்,
மேல உள்ள ஒரு லிங்க் முழுவதும் பார்க்க account வேண்டும். எனக்கு account இருப்பதால் அதை கொடுத்து விட்டேன். மன்னிக்கவும். அதே விசயத்தை விளக்கும் இன்னொரு லிங்க் கீழே. அதையும் தாங்கள் பயன்படுத்தலாம்
How does a hypothesis become a theory and the scientific method – http://www.oakton.edu/user/4/billtong/eas100/scientificmethod.htm
I am not atheist. I am just an open minded Christian. I accept evolution theory not because it fits with my religious views but because I have studied it in schools and my teachers explained me well and my dad clarified my doubts by both explaining and buying me various books on the topic. Nobody is accepting evolution as it supports atheism. Biology is a discipline of science. It has no need to prove or disprove the existence of God or validity of any religion. It just tests the facts presented and comes to the best possible conclusion. In face of new facts, it will change it stance too. That is the beauty of science.
For example: If tomorrow, there comes a evidence that points to creation of humans from clay and the evidence is presented and debated in the scientific community and comes clear, it can also be accepted. Then someone like Manikandan will say that only because it supports the view of Abrahamic religions, it is accepted without question. But truth is, nothing in science is favored or accepted without scrutiny.
மீரான் பாய் ,பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை நம்புவதும் நம்பாததும் அவர் அவர் விருப்பம்… அவர் அவர் கொண்டு உள்ள இறையியல் நம்பிக்கையை சார்ந்ந்து அது. ஆனால் கல்வித்துறையில் அறிவியல் பாடத்தில் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை துருக்கியில் தடை செய்தது போன்று தடை செய்ய இறையியல் ஆளர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று யோசியுங்கள் மீரான் பாய்!
அறிவியல் அடிப்படையில் உயிர்களின் தோற்றமும் அவற்றின் வளர்சியும் பற்றி பரிணாம கொள்கை பேசுகின்றது… ஆம் அந்த அறிவியல் கொள்கை மத நூற்கள் கூறும் உலகத்தின் தோற்றம் பற்றிய கருதாக்துடன் முரண்படுகிறது என்னும் நிலையில் இறையியல் ஆளர்கள் எதற்காக அறிவியல் கோட்பாடுகளை தடை செய்ய முயலவேண்டும்?
சிந்தனைசெய் செந்தில்குமரன்
மதவட்டம் தாண்டி சுதந்திர சிந்தனை உள்ள உங்களிடம் கேட்டு விளக்கம் பெறவே விரும்புகிறேன்
ரெவெலியுஷன் தியரி எனப்படுகிற டார்வினின் பரிணாம கோட்பாடு உண்மையில் அறிவியலா?
நிரூபனமான அறிவியல் ஆய்வுக்குட்பட்ட உண்மையா?அல்லது ஊகமா?
நாம் பார்க்கிற இந்த உலகின் உயிரினங்கள யாவும் பல்வேறு தன்மை படைத்ததாகவே காணுகிறோம்.ஒவ்வொன்றும் தனித்தனி தன்மைகள் பேற்றே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஒருசெல் உயினத்திலிருந்து பரிணாமம் பெற்றதென்றால் அவை உடலியல் பரிணாமம் பெற்றதா?
மன் இயல் அறிவு இயல பரிணாமும் சேந்து பெற்றதா? தான் வாழ த்ன்னை தகவைமைத்துக்கொள்ளும் உயிரினங்கள் தன் உடலால செயலால் தன்னை மாற்றிக்கொண்டே வந்தது சரி.
பகுத்தறிவு என்ற ஒன்று எப்படி பெற்றது?
உயிரினம் நிலைத்திருக்க பகுத்தறிவு என்ற ஒன்று தேவையில்லையே வலியது வாழ்ந்துவிட்டு போகிறது.
உயிரினம் பல்வேறு பரிணாமம் அடைந்து குரங்கில் வந்து நின்று குரங்கு மனித நிலையை அடைந்தது என்றால், உலகில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் குரங்கு ஒன்றே மனிதனோடு மிக நெருக்கமான உடல் மன அமைப்பை பெற்றிருக்க வேண்டும்.
உண்மையில் அறிவியல் ஆராய்ச்சி அப்படி ஒத்துக்கொள்கிறதா?
மரபணுக்கள் உள்ளுறுப்புகள் ரத்த மாதிரி அனைத்தும் மனிதனின் தன்மையை குரங்கு கொண்டிருக்கிறதா?
சமீபத்தில்,” ஒரு ஆப்பிரிக்க தாய் தந்தைக்கு பிறந்ததே மனித இனத்தின் துவக்கம்” என்ற ஆராய்ச்சி முடிவும் அதன் தொடர்ச்சியான விவாதமும் இதே தளத்திலேயே நாம் நடத்தி இருக்கிறோம்.
ஒரே தாய் தந்தைக்கே நாம் அனைவரும் பிறந்து ப்ல்கினோம் என்பதை ஒத்துக்கொண்டால் பரிணாமத்தோடு அவை முரண்படவில்லையா?
பரிணாமத்தால் உயிரிகள் மாற்றமடைந்தன என்றால் ஒரு தாய் தந்தைக்குத்தான் அனைவரும் பிறந்தோம் என்று எப்படி வரைய்றுக்க முடியும்?
கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது…விவாதிப்போம் விவாதம் தெளிவை நோக்கி நம்மை தள்ளும்.
திரு மீராசாஹிப்,
தங்கள் பதிவை படித்தேன். கேள்விகளுக்கு என்னால் இயன்ற வரை பதில் அளிக்கிறேன். ஒரு வேலை தமிழ் பதில் சரி வர விசயத்தை விளக்கவில்லை அல்லது என்னால் சரியாக தமிழில் கூற/மொழிபெயர்க்க இயலவில்லை என்றால் அந்த பகுதி மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும். இதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறன்.
முதல் விஷயம்.உங்கள் பதிவில் பரிணாம கொள்கை பற்றிய பல தவறான புரிதல்கள் உள்ளன. பல பேரிடம் இருக்கும் misconceptions தான். அவற்றை முதலில் பேசுவோம்.
முதலில் டார்வின் பரிணாம கோட்பாடு என்பது. இது டார்வின் கோட்பாடு அல்ல. இது உயரியல் பரிணாம கோட்பாடு. Evolutionary Biology and Theory of Evolution. டார்வினுக்கு முன்னும் இருந்தன. முதலில் தொகுத்து கூட டார்வின் அல்ல. அவரும் அவருக்கு முன்னால் இருந்தவர்களிடம் இருந்து பல விசயங்களை கடன் வாங்கினார். அவர் காலத்தில் கூட அவர் மட்டும் இந்த அறிவியலை பேசவில்லை. அவருடன் இல்லாமல் தனியாக Alfred Russel Wallace இதே பரிணாம கோட்பாடை ஒரு framework உருவாக்கினார். இருவரின் தனி ஆய்வும் சேர்ந்தே தான் Linnean Societyயில் சமர்பிக்கபடுகிறது. டார்வின் தன் நூலில் அடிப்படை விசயங்களை எளிதாக, ஆதி முதல் தொகுத்து ஆய்வு முடிவுகள், observation துணை கொண்டு எழுதினார். அதனால் அவர் famous. மற்றபடி டார்வின் மட்டுமே தனியாக இந்த அறிவியலை துவக்கியோ, தனியாக கட்டமைதோ வரவில்லை. டார்வின் காலம் தொட்டு பல ஆயிரம் ஆய்வுகள், அறிவியலின் பல துறைகள், பல வித ஆதாரங்கள் கொண்டு ஒரு அசைக்க முடியாத அறிவியல் உண்மையாக, மற்ற அறிவியல் கொள்கைகள் போலவே தான் பரிணாம கொள்கையும் இப்போதைய நிலையை அடைந்து உள்ளது. இந்த கோட்பாடு ஊகம் அல்ல.
அடுத்தது, இந்த quote:
// உயிரினம் நிலைத்திருக்க பகுத்தறிவு என்ற ஒன்று தேவையில்லையே வலியது வாழ்ந்துவிட்டு போகிறது.//
இதை பரிணாம கொள்கை கூறவில்லை. வலியது தான் நிலைக்கும் என்பது தவறு. இருக்கும் சூழலுக்கு எது மிக பொருத்தமானதோ அதுவே நிலைக்கும். Its not survival of the strongest, its survival of the fittest. இந்த மாற்றம் ஏனோ தானோ என்றெல்லாம் ஏற்படுவதும் இல்லை. அனைத்து உயிரும் DNA replicate செய்யும். இதில் பிழைகள் ஏற்படுவது சகஜம் (mutation). இந்த mutation ஒன்றுமே இல்லதாதாக இருக்கலாம் (உதாரணமாக கண் நிறம்) அல்லது ஒரு உயரினம் அதே இடத்தில மற்ற உயிர்களுடன் போட்டி இட்டு உணவு பெறுவதிலோ அல்லது தன்னை வேட்டை ஆடும் predator இடம் தப்பிகவோ உதவி செய்யும் மாறுதலாக இருக்க கூடும். இல்லை இருக்கும் சூழல் மாறும்போது புது சூழலுக்கு கொஞ்சமே கொஞ்சம் advantage தரும் mutation என்றால் அது தன குழுவை சேர்ந்த மற்ற மெம்பர்கள் விட அதிக வாழும் chance உண்டு. அது 1% என்றாலும் பல ஆயிரம் specimen, பல தலைமுறைகள் என வரும் போது அதுவே இயற்கையாக natural selection மூலம் dominant trait ஆக வரும்.
உயரினம் இருக்கும் சூழல் தான் இங்கு ராஜா. அந்த சூழலில் எது advantage தருகிறதோ அதுவே survive ஆகும். அதுவே அடுத்த தலைமுறைக்கும் pass on ஆகும். சுருக்கமாக, the genes of the most fittest survivor, for a given situation gets passed on.
இதில் பகுத்தறிவு என்பது எவ்வளவு வலிய trait என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. ஒரு செடி விஷம் என்னும் அறிவை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுத்தால் அது வாழ்வதற்கு வாய்புகள் அதிகம் அல்லவா? இது பகுத்தறிவு மட்டும் அல்ல. நம் instincts கூட இப்படி shape செய்யப்பட்டது தான். உதாரணமாக ஏதோ ஒரு சப்தம் கேட்கிறது என்று வைத்து கொள்வோம். நம்மில் கிட்ட தட்ட அனைவரும் அது என்ன என்று ஒரு கணம் உன்னிப்பாக கவனிப்போம். இதற்க்கு காரணமும் பரிணாமம் தான். காட்டில் நம் முன்னோர் அலைந்து கொண்டு இருக்கும் போது ஒரு சிறு சலசலப்பு ஒரு predator வரும் அறிகுறியாக இருக்கலாம். எனவே எந்த சப்தம் கேட்டாலும் முன்ஜாக்கிரதையாக கவனமாக கேட்டு இருந்தவர்கள் predator என்றால் தப்பிக்க வாய்ப்பு அதிகம். எனவே காலபோக்கில் அந்த trait natural selection மூலம் அவர்களின் சந்ததியன்ர்களுக்கு வந்தது. அவர்கள் சந்ததியில் வந்த நாம், காட்டில் இல்லாவிட்டாலும் நம் DNA அவர்களிடம் இருந்து inherit செய்யப்பட்டதால், அதே எச்சரிக்கை நம் பழக்கத்திலும் உள்ளது.
//உயிரினம் பல்வேறு பரிணாமம் அடைந்து குரங்கில் வந்து நின்று குரங்கு மனித நிலையை அடைந்தது என்றால், உலகில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் குரங்கு ஒன்றே மனிதனோடு மிக நெருக்கமான உடல் மன அமைப்பை பெற்றிருக்க வேண்டும்.//
இது தவறு. குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை. இன்றைய குரங்குகள் (chimps, great apes), மனிதன் உட்பட ஒரு ape like ancestorஇல் இருந்து பிரிந்து வந்தவை. குரங்கு என்பதும் ஒரு இனமோ, ஒரு species கிடையாது. மற்ற விலங்குகளை விட நம் DNA குரங்குகளோடு அதிகாமாக ஒத்து போகிறது. இது அறிவியல் ஒத்து கொள்ளும் உண்மை. தோற்றம் எல்லாம் சும்மா. தோற்றம் இருக்கும் நிலைக்கு ஏற்ப மாறுதல் அடையும். எனவே தோற்றம் என்பது சரியான comparison அல்ல. DNA ஒப்பீடே சரி. அப்படி DNA ஒப்பீடு செய்தால் மனிதனின் மிக நெருங்கிய ‘சொந்தம்’ great apes தான். மனிதன் மற்ற great apes DNA ஒப்பீடு செய்தால் மனித DNA chimps, bonobo DNAவுடன் 99% ஒத்து போகிறது. அதே gorilla DNA என்றால் அது 98%, பசு என்றால் 80%, fruit flu 61%, இவ்வளவு ஏன் மனித DNA வாழைபழத்துடன் ஒப்பிட்டால் 6௦% ஒத்து போகிறது. இது அனைத்தும் common ancestory என்பதை தான் காட்டுகிறது.
இதிலே இன்னொரு சிறு தவறும் உள்ளது. பரிணாம் குரங்கில் வந்து நின்று, பிறகு மனிதன் வருவது என்பது தான் பரிணாமத்தின் குறிக்கோள் என்பது போல உங்கள் வாக்கியம் தோன்றுகிறது. அது தான் தாங்கள் கூறியது என்றால், அது தவறு. பரிணாம மாறுதல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் ஒன்று. குரங்கோ, மனிதனோ வருவது அதன் நோக்கம் அல்லது end result அல்ல. Evolution is always occuring and has no end result or goal. நாம் குரங்கில் இருந்து வந்தது pure chance.
//மரபணுக்கள் உள்ளுறுப்புகள் ரத்த மாதிரி அனைத்தும் மனிதனின் தன்மையை குரங்கு கொண்டிருக்கிறதா?//
ஆம். குரங்குகள் மட்டும் அல்ல. நாய், பூனை, எலி, பசு உள்ளிட்ட பல விலங்குகளுக்கு உள்ளுறுப்புகள், ரத்த வகை எல்லாம் உண்டு. கிட்னி failure, கண்புரை, புற்றுநோய், சக்கரைவியாதி போன்றவையும் அவற்றுக்கு உண்டு. சில வியாதிகள் கூட பொது.
//சமீபத்தில்,” ஒரு ஆப்பிரிக்க தாய் தந்தைக்கு பிறந்ததே மனித இனத்தின் துவக்கம்” என்ற ஆராய்ச்சி முடிவும் அதன் தொடர்ச்சியான விவாதமும் இதே தளத்திலேயே நாம் நடத்தி இருக்கிறோம்.
ஒரே தாய் தந்தைக்கே நாம் அனைவரும் பிறந்து ப்ல்கினோம் என்பதை ஒத்துக்கொண்டால் பரிணாமத்தோடு அவை முரண்படவில்லையா?
பரிணாமத்தால் உயிரிகள் மாற்றமடைந்தன என்றால் ஒரு தாய் தந்தைக்குத்தான் அனைவரும் பிறந்தோம் என்று எப்படி வரைய்றுக்க முடியும்?//
இந்த விவாதம் எது என எனக்கு தெரியாது. இது ஒரு ஊகம் தான். நீங்கள் mitochondrial eve மற்றும் Y-chromosomal adam பற்றியா? அப்படி இல்லை என்றால் நீங்கள் குறிப்பிட்டு உள்ளது எந்த ஆய்வு என்று லிங்க் தர முடியுமா?
மேலே உள்ளதில் நான் ஏதேனும் நீங்கள் கூறியதை தவறாக புரிந்து கொண்டுள்ளேன் என்றால் தயவு செய்து சுட்டி காட்டவும். அப்படி தவறுகள் இருந்தால், மன்னிப்புகள்.
Links:
https://www.scientificamerican.com/article/tiny-genetic-differences-between-humans-and-other-primates-pervade-the-genome/
http://www.businessinsider.com/comparing-genetic-similarity-between-humans-and-other-things-2016-5/#and-while-the-egg-laying-and-feathered-body-are-pretty-different-from-a-humans-about-60-of-chicken-genes-have-a-human-gene-counterpart-7
https://en.wikipedia.org/wiki/Blood_type_(non-human)
சிந்தனைசெய்
உங்களின் நீண்ட விளக்கத்தை நான் படித்தேன்.
உங்களிடம் ஒரு உண்மையை விளக்க ஆசைப்படுகிறேன்.நான் பெரிய படிப்பாளியோ மொழிப்புலமை உள்ளவனோ கிடையாது.மெத்த படித்தவர்களின் பின்புலமும் எனக்கு கிடையாது. நான் ஒரு வியாபாரி
அநேகமாக இங்கே கருத்து பதிபவர்களில் நான் தான் மிக எளியவனாக இருப்பேன்
என்னோடு மிகத்தீவிரமான எதிர் கருத்து உள்ளவர்களான மணிகண்டன் ராமன் உண்மைவிளம்பி போன்றவர்களெல்லாம் கூட நல்ல படிப்பறிவும் ஆங்கில அறிவும் உள்ளவர்கள்தான். அவர்கள் காவித்துணியால் கண்ணை இறுக்க கட்டிக்கொண்டிருப்பதால் உண்மைக்கு முன் திணறுகிறார்கள். காவி கட்டை அவிழ்த்து விட்டால் கண்டிப்பாய் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள்தான்.
நான் அப்படிப்பட்டவன் அல்ல.
உங்களை ம்றுத்து வாதம் புரிவது என் நோக்கம் அல்ல.என் இயல்பான சந்தேகங்களை தீர்க்கவே விரும்புகிறேன்.
உதாரணத்திற்க்கு பகுத்தறிவு மனித இனத்திற்க்கு மட்டும் எப்படி வந்தது என்ற என் கேள்வியின் விடை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.
சப்தத்தால் உயிரினங்கள் கவனம் ஈர்க்கப்படுவதை பகுத்தறிவிற்க்கு நீங்கள் உதாரணம் காட்டுவது பொருந்தி போக முடியாததாக இருக்கிறது.
ஒலியால் ஒரு உயிரினம் ஆபத்தை உணர்ந்து எச்சரிக்கை அடையலாம் ஒலியை வைத்து தன் இனத்தின் அருகாமையை அடையாளம் காணலாம்.இவை பகுத்தறிவோடு தொடர்புடையாதா?
ஒரு நாய் தன் எஜமானனை பார்வையாலும் மோம்பத்தாலும் அடையாளம் கண்டு வாலாட்டுவது, புது மனிதனை அதே வகையில் அடையாளம் கண்டு குரைத்து தள்ளுவது ஒரு நாயின் தன்மையாகவே நான் காண்கிறேன்.இதை புலனறிவு என்று சொல்ல முடியுமே அன்றி பகுத்தறிவு என்ற வகையில் வருமா என்பதை நான் விளங்க முடியவில்லையே…
அடுத்து..
டி என் ஏ பற்றி நீங்கள் விளக்கும்போது, காமன் ஆன்செஸ்டரி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.உயிரினங்கள் அனைத்திற்க்கும் பொதுவான ஒற்றுமைகள் இருக்கிறது என்பதை அனைவரும் ஒத்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
உள்ளுறுப்புக்ளில் இருக்கிற ஒற்றுமைகள் ஒருபக்கம் இருக்கட்டும் உணர்வுகளில் கூட எத்தனை விலங்குகள் மனிதனைப்போன்ற அன்பு பாசம் வாஞ்சை போன்ற உணர்வுகள் கொண்டவைக்ளாக இருக்கின்றன..
இவைக்ளெல்லாம் ஒன்றிலிருந்தே அனைத்தும் உருவானது என்பதற்க்கு ஆதாரங்கள் ஆகுமா என்ற கேள்வியே குடைகிறது.
ஒவ்வொரு இனமும் தனித்தனி தனமை பெற்றதாகவல்லவா இருக்கின்றது.
வலிமையான பல விலங்குகள் மனிதனுக்கு கீழ் படிகிற நிலையை அடைந்தது எப்படி?
இப்படிப்பட்ட மேம்பட்ட நிலை மனிதனுக்கு எப்படி சாத்தியமானது?
மனிதன் பகுத்தறிவு பெற்றதனால், பரிணாமம் நின்று போய்
தன் அறிவை கொண்டு சாதனங்களால் இன்னும் இன்னும் உயர்ந்து போகிறானா?
மற்றவைகளின் பரிணாமம் நின்று போனதா?
இவைகளை விளங்கிகொள்ள என் அறிவு இன்னும் பல பரிணாமம் பெற வேண்டுமா?
என் புலனறிவால் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து என் பகுத்தறிவால் பிரித்து அறிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இன்றுவரை.
இன்னும் என் அறிவு மேம்பட்டு அனைத்தும், “தான் தோன்றியது” என்ற உண்மை உரைக்குமானால் கடவுளை தூக்கி கடலில் போட்டுவிட்டு அந்த சமுத்திர துளியிலிருந்து உண்டானவனே நான் என்று உரக்க சொல்லி முடிப்பேன
திரு. மீராசாஹிப்,
நீங்கள் கூறியது பிரச்சனையே இல்லை. தங்கள் சந்தேகங்கள் எதுவானாலும் தாராளமாக கேட்கவும். நானும் விவாதிக்க விரும்பவில்லை. இரு நண்பர்கள் உரையாடுவதாக தான் நான் நம் பேச்சை பார்கிறேன். So please do not hold back anything.
நான் கூறிய ஒலி பற்றிய உதாரணம் பகுத்தறிவு என்பதற்கு அல்ல. குழப்பத்துக்கு மன்னிக்கவும். சப்தம் பற்றிய உதாரணம் நம் instincts, உள்ளுணர்வு எவ்வாறு பரிணாம கொள்கையால் பல தலைமுறைகள் வாயிலாக வடிவமைக்க பட்டது என்பதை விளக்கவே. பகுத்தறிவு பற்றி தங்கள் கேள்விக்கு பதில் அளிபதர்க்கு முன், குழப்பம் தவிர்க்க ஒரு சிறிய வேண்டுகோள். உங்கள் definition படி பகுத்தறிவு என்றால் என்ன, அது எப்படி மற்றவற்றில் (எ.க: புலனறிவு) இருந்து மாறுபடுகிறது? இதை முதல் படியாக கொண்டு மேலே பேசலாம்.
உங்களின் அடுத்த பகுதிக்கு வருவோம். ஒரு உயிரினத்தின் அனைத்து விசயங்களையும் தீர்மானிப்பது DNA தான். எனவே உயரினங்கள் அனைத்துக்கும் common ancestor இருந்தது என்று ஒத்துகொள்ளும் போது, உறுப்பு ஒற்றுமை மட்டுமென்ன, உணர்வுகளில் கூட ஒத்துபோவதில் என்ன ஆச்சர்யம்? அனைத்து உயிர்களின் அடிப்படை நோக்கம் என்று பார்த்தால் அது என்ன? தான் வாழ்ந்து அடுத்த சந்ததி மூலம் தன் DNA வாழவேண்டும். ஒரு பக்டீரியா, வைரஸ் போன்றவை நோய் உண்டாக்குவது அது பல்கி பெருகுவதின் பக்கவிளைவே. சிங்கம் வேட்டையாடுவது, மான் தப்பித்து ஓடுவது, போன்ற அனைத்துமே தான் வாழவேண்டும். பிறகு அடுத்த சந்ததி, அதன் மூலம் அதன் DNA பல்கி பெருகி வளர வேண்டும். இது தான் அனைத்து உயிர்களின் நோக்கம். பூக்கள் தேனீக்களை கவரும் விதமாக இருப்பதும், பழம் பறவைகளை கவரும் விதமாக இருப்பது எல்லாம் இதற்க்கு தான். அன்பு, பாசம், வாஞ்சை போன்ற உணர்வு எல்லாம் அந்த DNA பாதுகாப்பின் பல வெளிப்பாடுகள். அவ்வளவு தான். இது எல்லாவற்றையும் நீங்கள் DNA ஒப்பீடு மூலம் கண்கூடாக பார்க்க முடியும். நம்பிக்கை வேண்டாம், ஆதாரம் நம் DNAவில் உள்ளது.
தனி தனி தன்மை என்பது பல தலைமுறையாக, பல ஆயிரம் வருடங்களாக அந்த உயரினம் வாழ்ந்த சூழலால் mould செய்யப்பட்டது. மேலே கூறிய மான் உதாரணத்தை எடுத்துகொள்வோம். ஒரே மான் கூட்டம், ஒரே பரந்த புல்வெளி நிலத்தில் இருக்கிறது. ஆனால் உணவு போதுமான அளவு இல்லை அனைவருக்கும் என்ற போது ஒரு சிறு கூட்டம் பிரிந்து புல்வெளியின் விளிம்பில் இருக்கும் காட்டில் சென்று வாழ ஆரம்பிக்கிறது. இப்போது இரண்டு குழுக்கும் போதுமான உணவு இருப்பதால் அவை பல்கி பெருக ஆரம்பிக்கின்றன. ஆனால் அவை இருக்கும் சூழல் வேறு வேறு. புல்வெளியில் இருக்கும் மான் சந்திக்கும் பிரச்சனைகள், ஆபத்துக்கள் வேறு, காட்டில் இருப்பவை சந்திப்பது வேறு. உதாரணமாக காட்டில் பெரிய கொம்பு தப்பித்து ஓடுவதற்கு தடங்கல். எனவே கொம்பு அளவு கம்மியாக உள்ள மான்கள் வாழ வாய்ப்பு கொஞ்சமே அதிகம். இதுவே பல தலைமுறைகள் செல்லும் போது அந்த மான் குழுவின் கொம்பு அளவு பரவலாக on average குறைகிறது. அடுத்து ரோமத்தின் நிறம். ஒரே நிறமாக இருப்பதை விட மரத்தின் நிழல் போல ரோமம் சற்றே கருப்பாக இருப்பவை சற்றே எளிதாக தப்பிகின்றன. எனவே பல தலைமுறைகள் கடந்து செல்லும் போது, ரோமம் கருப்பாக மாறுகிறது. இப்படி பல தலைமுறைகள், பல மாற்றங்கள் என நடக்கும்போது இரு மான் கூட்டமும் மிகுந்த வித்யாசம் கொண்டவையாக மாறுகின்றன. ஒரே இடத்தில இருந்து வந்தவை தான். ஆனால் சூழ்நிலை அவற்றை முற்றிலும் மாற்றி விட்டது. இது தான் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படை. Evolution by natural selection. இதை இன்னும் எளிதாக விளக்கும் வீடியோ இங்கே. ஆங்கிலத்தில் உள்ளது.
https://www.youtube.com/watch?v=10QRBfcxQyU
அடுத்து நீங்கள் கேட்டு இருப்பது மிக, மிக அருமையான கேள்வி. இதற்க்கு பதில் பல முனை பட்டது. நாய்கள் கீழ படிந்தது மனிதனுடன் இருந்தால் அவற்றுக்கு பல பிரச்சனைகள் (உணவு வேட்டையாடுதல், அடுத்த தலைமுறை பாதுகாத்தல்) தீர்ந்தன. மனிதனுக்கும் அவற்றுடன் இருப்பதில் பல advantage இருந்தன. எனவே ஒரு mutually beneficial relation ஓநாய்கள், மனிதன் இடையே உண்டானது. இது தானாகவே கீழ்படிதல். இது ஒரு வகை, மனிதன் மற்ற விலங்குகளை கட்டி ஆள்வதில்.
ஆனால்மனிதன் மற்ற விலங்குகளில் இருந்து எப்படி தனிதுவம் பெற்று இருக்கிறான் என்பது உங்கள் கேள்வியானால், மற்ற விலங்குகளுக்கு மற்ற பல trait போல, நமக்கு அறிவு, மூளை ஆகியவை select செய்யப்பட்டன. அப்படியும் லட்சகணக்கான ஆண்டுகள் கற்காலம் தான் இருந்தோம். நம் மூளை ஒன்றும் பெரிதாக மாற்றம் அடையவில்லை. இரண்டரை மில்லியன் ஆண்டுகள் கற்காலம், அதில் வாழ்ந்த மனிதனின் மூளையும், இப்போதைய மனிதனின் மூளையும் ஏறக்குறைய ஒன்றுதான். ஆனால் கற்காலத்தில் வாழ்ந்த மனிதன் தன்னை விட வலிய விலங்குகளை கட்டி ஆளவில்லை. நம்மால் அதை செய்ய முடிவதன் காரணம், அப்போது இருந்த மனிதனை விட இப்போது நமக்கு சிறந்த tools உள்ளன. சிறந்த tools செய்யும் திறன் select செய்யப்பட்டது. இந்த முறை நம் சமூகத்தால். இயற்கைக்கு பதில் நம் மனித குழு. அவ்வளவு தான். சிறந்த tools செய்த சமூகம் பெருகியது, மற்றவற்றை அடக்கி ஆள முடிந்தது. அது தான் அடிப்படை காரணம். இப்போது intelligence மிக சிறந்த trait ஆக இருக்கிறது. இதுவே நாம் வாழும் நிலைமை மிக மாறினால், intelligence சரியான trait இல்லை என்று ஆனால், மனிதனும் அழிந்து விடுவான். அவ்வளவு தான். சுருங்க சொல்ல வேண்டும் என்றால் In this generation, we are the most successful species due to intelligence being the best trait. But that doesnt mean we are invincible much like dinosaurs before us. இப்போதும் ஒரு சூப்பர் வைரஸ் வந்தால் நாம் அனைவரும் அழிய கூடிய வாய்ப்பும் உள்ளது. நாம் ஒன்றும் பரிணாம வளர்ச்சியை வென்று விட வில்லை, அதுவும் முடியாது.
நம்மை பல லட்சம் ஆண்டுகளாக வட்டி வதைத்த நோய்களை நம் அறிவை கொண்டு இன்னும் வெல்ல முடியவில்லை. பரிணாம வளர்ச்சி இன்னும் நின்று போய்விடவில்லை. மற்றவைகளிடமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதர்களிடம் கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது என்றும் நிற்காது. கிருமி anti-bacterial resistance பெறுவதும் பரிணாம வளர்ச்சியால் தான். ஒரு சில மனிதர்கள் ஒரு சில நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை பெறுவதும் அதே காரணம் தான். இவ்வளவு ஏன், நம் முன்னோர்களுக்கு மிக எதுவாக இருந்த பல trait இன்று நமக்கு பெரும் பிரச்சனையாக உள்ளன. Evolutionary baggage என்று இதற்க்கு பெயர். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் இயற்கையாக மலேரியா எதிர்ப்பு தன்மை தர கூடிய ஒரு mutation தான் Sickle cell anemia என்ற நோய்க்கும் காரணம். ஆனால் மலேரியா எதிர்ப்பு என்பது முற்காலத்தில் அதிக beneficial. சிறிய வயதிலயே மலேரியா கொல்ல வல்லது என்பதால், sickle cell anemia பல வருடங்கள் கழித்து தரும் பிரச்சனையை விட மிக சீக்கிரம் வரும் மலேரியா என்பதன் எதிர்ப்பு திறன் பல்கி, பெருகியது. ஆனால் இப்போது நம்மிடம் anti-malarial மருந்துகள் உள்ளன. எனவே அந்த traitக்கு வேலை இல்லை. இது போன்ற விஷயங்கள் பல உள்ளன. பரிணாம வளர்ச்சி என்பது மிக சிறந்த selection, அற்புதமான process என்பது எல்லாம் அல்ல. Evolution is stupid. இருக்கும் நிலைமைக்கு எது மிக advantage தருகிறதோ, அது dominant ஆக வரும். அவ்வளவு தான். நாம் அறிவு பெற்றது, ஏன் நம் மனித நாகரிகம் உட்பட அனைத்தும் இந்த என்றும் நிற்காத, நாம் வெல்லவே முடியாத stupid processஇன் விளைவு தான். நாம் ஒன்றும் pinnacle of evolution அல்ல. ஒரு நீண்ட, பெரிய புத்தகத்தின் ஒரு அத்தியாயம் நாம். அவ்வளவே.
சிந்தனைசெய்
பரிணாம இயலின் ஆர்வமும் அதன் காரணமாய் உங்களின் வாசிப்பறிவும் பாராட்டத்தக்கவை.
மிக முக்கியமான இந்த கலந்துரையாடலை உடனுக்குடன் தொடரமுடியாத சில வேலைகள்.போன வாரம் வரை நிறைய நேர அவகாசங்கள் இருந்தது.இப்போதுதான் உங்களின் பதிவை பார்த்தேன்.உடனே பதில் வரைகிறேன்
ப்ரிணாமத்தை அறவே மறுத்தவனாக நான் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே நான் சுட்டிக்காட்டி விட்டேன்.ஆகவே, ரொம்ப அதிகம் வேண்டாம் ஒரு நான்ங்கு தலைமுறை மனிதர்க்ளோடு ஒப்பிட்டாலே இன்றைய நம்முடைய ஆற்றல் செயல்பாடுகளில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை காணுகிறோம்.போன தலைமுறையோடு ஒப்பிட்டாலே வாய் கணக்கு போடும் திறன் இந்த தலைமுறையில் குறைந்திருக்கிறது. மூன்றையும் இரண்டையும் கூட்ட கல்குலேட்டர் தேவையான காலமாக இது மாறியிருக்கிறது.
கையை பிடித்து பார்த்தே நோயின் அறிகுறி அறியும் மருத்துவர்களின் காலம் போய் தடுமல் காய்ச்சலுக்கும் ஸ்கேன் பண்ணி பார்த்து அறியும் கேலிக்கூத்தான காலத்தில்தான் வாழ்கிறொம். பணத்தாசை ஒரு காரணம் என்றாலும் மதிநுட்பம் குறைந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
இவை மனிதனின் வேறுபட்ட அணுகுமுறையினால் அவனிடம் இருந்த இயல்பு ,மாற்றம் பெறுகிறது.பரிணாமம் இப்படித்தான் தொடர்கிறது இல்லையா? நிச்சயம் இது அறிவியல்.
எனக்கு இன்னும் விளங்கி கொள்ள முடியாத கேள்விகள்…
நாய் என்று ஒரு படைப்பு .உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிறங்களில் நாய்கள் வாழ்கின்றன.நாய் நாயாகத்தான் இருக்கின்றது. ஓநாய் ஒநாயகத்தான் இருக்கின்றது.
யானைகள் உலக்ம் முழுக்க இருக்கின்றது ஆப்பிரிக்க யானை ஆசிய யானை என்ற சற்றே வித்தியாசமுடையனவாக இருந்தாலும் எல்லா யானையும் நீண்ட தும்பிக்கையோடு ஒரே குணாதிசயம் கொண்டனவாகத்தான் இருக்கின்றது.
எப்படி ஒவ்வொரு இனமும் மனிதன் மிக எளிதாக விளங்கி அவைகளின் குணாதிசயத்தை கொண்டு அவற்றை பழக்கி எடுக்க கூடிய வகையில் குண ஒற்றுமை கொண்டதாக இருக்கின்றது.
பசித்தாலும் புலி புல்லை திண்ணாது என்று உறுதியாக அறிந்து வைத்திருக்கின்றோம்.
பரிணாமத்தால் இவ்வளவு கச்சிதமாகவா உயிரிகள் மாற்றம் பெற முடியும்?
நீங்களே ஒரு கருத்தை கூறினீர்கள்…
குரங்கிலிருந்துதான் மனிதன் என்றில்லை பரிணாமம் என்பது அது பாட்டிற்க்கு இயற்க்கையின் இயல்பான சுழற்ச்சியால் நிகழ்ந்து கொண்டே இருக்கிற ஒன்று என்று. இல்லையா
அப்ப்டி என்றால் எங்கேனும் ஒரு புலி புல்லை திண்ணலாம். எங்கேனும் ஒரு ஆடு பூனையை கடிக்கலாம்.
ஆண்டாண்டு காலமாய் உயிரினங்களின் குணாதிசயம் இயல்பு மாறுவதே இல்லையே சிந்தனை செய்.
எல்லாமே மிக கச்சிதமாய் ஒரே உருவ அமைப்பில் குணாதிசயத்தில் பரிணாமம் அடைந்ததெப்படி?
பகுத்தறிவிற்க்கு விளக்கம் கேட்டீர்களில்லையா..
ஒரு உயிரினம் தான் நிலைத்திருக்க தன் சந்ததிகளை பெருக வைக்க டி என் ஏ வை கடத்தச்செய்கிறது சரி…பல கால அளவுகளால் பரிணாமம் பெற்று தன் உள்ளுணர்வை வளர்த்துக்கொண்டிருக்கிறது அதுவும் சரி…
நான் மீண்டும் கேட்பது பகுத்தறிவு என்பது உயிரினம் நிலைத்திருக்க தேவையே இல்லாத ஒன்று.
நாம் இப்போது பார்க்கும் மனிதனை தவிர்த்து உள்ள அத்தனை உயிரினங்களும் ஐந்தறிவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கண்டு கேட்டு முகர்ந்து தொட்டு சுவைத்து இவைகளில் தான் அனைத்தும் உண்டு குடித்து தன்னை வளர்த்து இணை சேர்ந்து தன் இனம் தன் எதிரி இனம் என்று போதுமான புலனறிவோடு அவைகள் வாழ்கின்றன.
இடையில் மனிதன் என்ற இனம் மட்டும் பகுத்தறிவு பெற்றது எப்படி?
அதாவது மற்ற விலங்குகள் போல ஐந்தறிவையும் பெற்று ஆறாம் அறிவான பகுத்தறிவு கொண்டு, அவைகள் சிந்திக்காத அனைத்தையும் சிந்தித்து ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து, இதோ “சிந்தனைசெய் “போல ப்ரிணாம கோட்பாட்டை மண்டை முழுக்க ஏற்றி என்னைப்போன்ற பாமரனுக்கு மிக எளிதாக அவற்றை விளக்கவும் ஆற்றல் பெற்ற பகுத்தறிவு வந்தது எப்படி?
உயிரினம் நிலைத்திருக்க அல்லது அவை தன் இனத்தை கடத்த பகுத்தறிவு என்ற ஒன்று நிச்சயம் தேவையில்லை.எப்படி மனித இனம் பகுத்தறிவு பெற்ற இனமாக மாறி முழு உலகையும் ஆளும் பிரதிநிதியாய் ஆனது?
//ஒரே தாய் தந்தைக்கே நாம் அனைவரும் பிறந்து ப்ல்கினோம் என்பதை ஒத்துக்கொண்டால் பரிணாமத்தோடு அவை முரண்படவில்லையா?//
அறிவியல் கூறும் தாய்க்கும் தந்தைக்கும் எழுபதாயிரம் ஆண்டு இடை வெளி உள்ளது . இருவரும் சமகாலத்தில் வாழ்ந்ததாக அறிவியல் கூற வில்லை .
பெரிய மூளையுடன் குட்டி போடும் ஆற்றலை உயிரினம் மெதுவாகத்தான் பெற்றது .
மதம் கூறும் ஒரே தாய் தந்தைக்கு சீனர்கள் , வெள்ளையர்கள் , அரபிகள் , இந்தியர்கள் எல்லோரும் எப்படி பிறந்து இருப்பார்கள் என்று சிந்தித்து உண்டா ?
பரவாயில்லை..அறிவியலை ஏற்றுக்கொள்கிற ராமனுக்கு பாராட்டுகள்.
அறிவியல் கூறும் தாய்க்கும் தந்தைக்கும் எத்தனை ஆண்டு இடைவெளியும் இருக்கட்டும்.ஆக அனைவரும் ஒரு தாய் தந்தைக்குத்தான் பிறந்தோம் என்பது நம் அனைவரையும் சமமாக ஆகச்செய்தால் சரிதானே
அடுத்தது,//பெரிய மூளையுடன் குட்டி போடும் ஆற்றலை உயிரினம் மெதுவாக பெற்றது// இருக்கட்டும்.
யானையும் எருமையும் திமிங்கலமும் நம்மைவிட பெரும் மூளைதான்.மூளையின் அளவு எப்படியும் இருந்து தொலையட்டும்.அந்த மூளையின் ஆற்றலில் உள்ள வேறுபாடு வந்தது எப்படி?
நம்மையும் விட மிகப்பெரும் நாக்கு கொண்ட ஒரு மாடு, மூக்கு உள்ளே நாக்கை கொண்டு போய் வழிக்கும் ஆற்றலை பெற்றும் ஏன் நம்மை போல் பேசுவதில்லை?
“//ஒரே தாய் தந்தைக்கு பிறந்தவன் வெவ்வேறு நிறத்தில் வெவ்வேறு வடிவில்//
இது நல்ல சிந்தனை.
இதுதான் பரிணாமம்.காலச்சூழல் இடப்பெயர்ச்சி சீதோசணம் மனிதனை வெவ்வேறு நிறமாக குலமாக பிரிக்கிறது.
இதைக்கொண்டே ஆரியன் என்றும் திராவிடன் என்றும் மங்கோலியன் என்றும் நாம் அடையாளம் காணுகிறோம்.
இவை மனிதனை வெவ்வேறு வகை வாழ்க்கை முறைகளாலும் நாகரிகங்களாலும் செதுக்கி கொண்டே வந்திருக்கிறது.
நிச்சயம் வெள்ளை தோல் உள்ளவன் உயர் பிறப்பாகவும் கருத்தவன் இழிபிறப்பாகவும் இருக்க வாய்ப்பே இல்லை.
//பரவாயில்லை..அறிவியலை ஏற்றுக்கொள்கிற ராமனுக்கு பாராட்டுகள்.
//
🙂
// இதுதான் பரிணாமம்.காலச்சூழல் இடப்பெயர்ச்சி சீதோசணம் மனிதனை வெவ்வேறு நிறமாக குலமாக பிரிக்கிறது //
அப்படி என்றால் மனிதன் படைக்கப்படவில்லை , பரிணாமம் வளர்ச்சி மூலம் வந்தவன் என்பதை ஏற்று கொள்கிறீர்களா ?