Saturday, June 19, 2021
முகப்பு செய்தி பல்லடம் GTN நிர்வாகத்தை கண்டித்து புஜதொமு கண்டன ஆர்ப்பாட்டம் !

பல்லடம் GTN நிர்வாகத்தை கண்டித்து புஜதொமு கண்டன ஆர்ப்பாட்டம் !

-

ஜி.டி.என். நிறுவனத்தை கண்டித்து பல்லடம் தெற்கு தாசில்தார் அலுவலகம், செஞ்சிலுவை சங்கம் அருகில் கடந்த புதன் கிழமை 19.07.2017 அன்று மாலை 5:00 மணியளவில் பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்திய கிளைச்சங்க நிர்வாகி தோழர் குணசேகரன் பேசிய போது “அடுத்த கட்ட போராட்டங்களை நாங்கள் எப்படி செய்வது அல்லது போராட்டம் செய்யாமல் இருப்பதா? என்பதைப் பற்றி CEO KP பாபு எடுக்கும் முடிவுகளில் தான் இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு முழு காரணம் அவர் மட்டுமே” என்று பேசி தொடங்கி வைத்தார்.

நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் சுப்ரமணி முழக்கங்களை போர்க்குணத்துடன் எழுப்பினார். அதைத் தொடர்ந்து துணைத்தலைவர் தோழர் சந்திரஹாசன் கண்டன ஆர்ப்பாட்ட நோட்டீசில் குறிப்பிட்ட சில விஷயங்களை சுட்டிக்காட்டி பேசினார். அடுத்து சுப்ரமணி அவர்கள் வருடத்திற்கு 500 கோடி வருமானம் ஈட்டும் ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நாங்கள் வாடகை வீட்டில் வாழ்க்கை நடத்துகிறோம் என்று கூறி மேலும் ஏ‌ஐ‌டி‌யு‌சி தொழிற்சங்கம் தொழிலாளர்களுக்கு செய்த துரோகத்தால் தான் பு ஜ தொ மு சங்கத்திற்கு வந்தோம் என்று சொல்லி பிரச்சினையை தீர்க்க அரசு தலையீடு செய்ய வேண்டும் என்றும் , பிறகு பார்த்திபன் அவர்களும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அரசு தலையீடு செய்ய வேண்டும் என்று பேசினார். பொதுக்குழு தோழர் மகேந்திரன் நாங்கள் நேர்மையாக அற வழியில் பு ஜ தொ மு வின் வழிகாட்டுதல்படி போராடி வருகிறோம். மேலும் எம்‌எல்‌ஏ ஒரு லட்சம் சம்பளம் உயர்த்துகிறார்கள். தொழிலாளிக்கு சம்பள உயர்வு கேட்க கூடாதா என்று நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பினார்.

அடுத்து பேசிய தோழர் லோகநாதன் ஏ‌ஐ‌டி‌யு‌சி சங்கத்தின் துரோகத்தை சுட்டிக்காட்டி 2010 இல் பு ஜ தொ மு சங்கத்திற்கு சென்ற பொழுது இதே போலத்தான் DA வாங்கித்தருவதாக கூறி மோசடி , குறுக்கு வழியில் முதுகுக்கு பின்னால் குத்தாதே நேராக வந்து பேசு என்று துரோக சங்கத்திற்கு சவால் விடுத்தார்.

SRI கிளைத் தலைவர் தோழர் ராஜன் அவர்கள் DA ஏன் பெற முடியவில்லை, அதைப்பற்றி ஏ‌ஐ‌டி‌யு‌சி கற்றுக் கொடுக்கவில்லை, ஆகவே GTN -இல் புஜதொமு என்ற விதை விதைக்கப்பட்டு விட்டது. அது வளர்ந்து அடுத்தடுத்த பரவும். இனி நடக்கும்  போராட்டங்களை தடுக்க முடியாது என்று நிர்வாகத்தை எச்சரித்தார்.

கிளைப் பொறுப்பாளர் தோழர் சரவணகுமார் பேசும் பொழுது CEO KP பாபு திமிராக பேசிக் கொண்டிருப்பதை , அந்த திமிரு எப்படி வந்தது 20 வருடமாக தொழிலாளர்கள் உழைத்துக் கொடுத்த பணத்தில் இருந்து வந்தது, உனக்கு திமிரை கொடுத்த தொழிலாளர்களின் உழைப்பையே KP பாபுக்கு எதிராக திருப்பி தாக்க முடியாதா முடியும், ஆனால் எங்களுடைய நோக்கம் அதுவல்ல தொழிலாளர்களுக்கு சட்டப்படியான உரிமைகளைப் பெற வேண்டும். தொழிலாளி வர்க்கம் மீண்டும் அடிமைப்படுத்த முடியும் என்கிற பகல் கனவு காண வேண்டாம் என்று CEO KP பாபுவை எச்சரித்தார்.

இறுதியாக மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி அவர்கள் , காவல்துறை வேகமாக கூட்டத்தை முடிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதை கண்டித்துப் பேசினார். 20 வருடம் வேலை செய்து வாழ்க்கையை இழந்து வீதியில் தள்ளப்பட்ட தொழிலாளர்கள் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இத்தனை இடையூறுகள் செய்வதிலிருந்தே ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்று விட்டது. சசிகலா சட்டப்படி கொள்ளைக்காரி என்று நிரூபிக்கப்பட்ட குற்றவாளி. அவர் சிறையில் எல்லா ஆடம்பரங்களோடு சுதந்திரமாக வாழ்கிறார்.

ஆனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அரைமணி நேரம் அதிகமாக ஆர்ப்பாட்டத்தில் பேசிவிட்டால் சட்டம் ஒழுங்கு கேட்டுவிடுமா? என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பி , CEO KP பாபு வால் 20 வருடம் வேலை செய்த 150 தொழிலாளர்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டிருக்கிறது. அந்த தொழிலாளி சட்டத்தை மீறி எந்தத் தவறும் செய்யவில்லை. அதற்கு நீதி கிடைக்கும் வரை அடுத்தடுத்து போராட்டங்களை அனைத்து வடிவங்களிலும் புஜதொமு நடத்தும். தொழிலாளர்களுக்கான போராட்டங்களை வளர்த்தெடுப்போம். எத்தனை துன்பம் வந்தாலும் அதை எதிர்கொள்வோம் நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது எங்கள் போராட்டம் என்று வலியுறுத்தி நேரமின்மை காரணமாக சுருக்கமாக பேசி முடித்தார்.

இறுதியாக கிளை பொருளாளர் தோழர் குமரேசன் அவர்கள் CEO KP பாபு வின் துரோகத்தை சுட்டிக்காட்டி இறுதி வரை போராடுவோம் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பல்லடம் ஜி.டி.என். கிளை.
_____________

இந்தப் போராட்டச் செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

  • தொழிலாளிகளின் தோழன் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க