மோடிக்கு செருப்படி ! – கோவில்பட்டி மக்கள் அதிகாரம் சாலை மறியல் !

1
30

‘நீட்’டுக்கு மாணவி அனிதாவை பலியிட்டுள்ள பி.ஜே.பி, அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்து, இவர்களை மக்கள் தான் வீதியில் இறங்கி தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக கோவில்பட்டியில் 05.09.2017 அன்று சாலை மறியல் நடத்தப்பட்டது.

பழைய பேருந்து நிலைய வாயிலில் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி தலைமையில் மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் எழுச்சிகரமாக முழங்கியதைக் கேட்ட பொதுமக்கள் திரண்டு நின்று கவனித்தனர். போராட்டத்தின் போது மோடியின் படத்தை செருப்பால் அடித்ததை பலரும் ஆதரித்தனர்.

போராட்டம் முடிந்து கலைந்து சென்ற தோழர்களை பின் தொடர்ந்த போலீசார் தேநீர்க் கடையில் வைத்து கைதாகுமாறு கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோழர்கள் “போராடும் போதே கைது செய்து கொள் என்று கூறினோமே, இங்கு வந்து கைதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்” என்று வாதிட்டனர். ”மேலிருந்து உத்தரவு வந்துள்ளது” என்று நயந்து பேசினர் காக்கிகள். ”மீண்டும் அனைவரையும் வரச் சொல்கிறோம்! மறியலும் செய்கிறோம்!! அப்பொழுது கைது செய்து கொள்ளுங்கள் !” என்று தோழர்கள் பதில் தந்தனர். ஆய்வாளர் “ஒருவரையாவது கைது செய்து கொள்கிறோம்” என்றதை ஏற்க மறுத்து அனைவரையும் கைது செய்து கொள் என அங்கிருந்த 7 தோழர்களும் வேனில் ஏறினர்.

இரவு 10.00 மணியளவில் இந்து மத வெறியர்கள் காவல் நிலையத்தில் மோடியின் படத்தை செருப்பால் அடித்து விட்டதாகப் புகார் தந்து நம்மை தண்டிக்கும்படி கோரினர். வாயிலில் நின்று கொண்டு கலைந்து செல்லாமல் பிரச்சினையும் செய்தனர். உடனே மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் அணிதிரண்டு காவல்நிலையத்திற்கு வந்தனர். இதனால் காவிக்கும்பல் பின்வாங்கி ஓடியது. இரவு 1.00 மணியளவில்  பிணையில் விட்டனர். அடுத்த கட்ட வேலைகளை முன்னெடுக்க மக்கள் அதிகாரம் தயாராகி வருகிறது.

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவில்பட்டி.

_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா