Monday, March 27, 2023
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅனிதா - நீட் : நீதி கேட்டுத் தொடரும் மாணவர் போராட்டங்கள் !

அனிதா – நீட் : நீதி கேட்டுத் தொடரும் மாணவர் போராட்டங்கள் !

-

சென்னை கோவூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (08.09.17) பள்ளி மாணவிகள் நீட் தேர்வை எதிர்த்தும், மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கமிட்டுக் கொண்டே சாலையில் கூடினர். இதனைப் பார்த்து  அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் அங்கு திரள ஆரம்பித்தனர்.
இதனைக் கண்டு பதறியடித்து ஓடி வந்த போலீசு,  அங்கிருந்து மாணவ மாணவிகளை கலைக்க ஆரம்பித்தது. எனினும் மாணவிகள் கலையாமல் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் போலீசு அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தந்திரமாக வரவழைத்து, அவர் மூலமாக மாணவிகளை மிரட்டிக் கலையச் செய்தது.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

***

ர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்றும் (08.09.2017) வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு இப்போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி.

***

டுதுறையில் உள்ள அஸ்-சலாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று (08.09.2017) நீட்டுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் பு.மா.இ.மு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தஞ்சை.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. ஆம்….

    போலிசு,நீதிமன்றங்கள் மக்களுக்கு எதிராகி விட்டன. போராட்டம் தான் தேர்வு.

    முதல் நாளில் தனி மனித உரிமையை பேசிவிட்டு அடுத்த நாளில் மனைவி கணவனின் பொருள் என்று கூறுகிறது.

    பாலியல் வல்லுறவினால் 10 வயதில் கர்ப்பிணியான ஒரு குழந்தைக்கு 26 வார சிசுவை கலைக்க அனுமதியை மறுத்தது ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி.குழந்தை பிறந்து விட்டது. அதற்கு 10 இலட்சம் பராமரிப்பு செலவுக்கு கொடுக்க வேறு உத்தரவு.
    பாலியல் வல்லுரவினால் 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட 30 வார சிசுவைக் கலைக்க சொல்லி இன்னொரு உச்சா நீதிமன்ற நீதிபதி….

    அனிதா மரணத்திற்காக போராடும் மாணவர்களின் போராட்டத்தை தடுக்க கூடாது என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி….15 நாள் சிறையில் தள்ளுக என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி…

    இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசும் இந்த நீதிபதிகளுக்கு என்ன தேர்வு இருக்கிறது? சட்டத்தை பற்றியும் இந்த நீதி பரிபாலனை பற்றியும் கிஞ்சித்தும் அறிந்திராத அப்பாவி மக்களுக்கு இவர்கள் தரத்தை பற்றி போதிக்கிறார்கள்….அவர்களுக்கு போராட்டம் மூலம் தாம் நாம் அணிதாவிர்கான நீதியை போதிக்க முடியும்…

    மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்.

    • தமிழக மாணவர்களின் நலனுக்காக இந்த மாதிரியான போராட்டங்கள் முழுமையாக தோல்வி அடைய வேண்டும்.

  2. நீட் போராட்டத்துக்கு எதிரான உச்சி குடுமி நீதி மன்றத்தின் தீர்ப்பை உதிர்ந்த மயிர் அளவுக்கு கூட தமிழர்கள் மதிக்கத் தேவையில்லை…

    உச்சி குடுமி நீதி மன்றமே…, பெரும்பான்மை மக்கள் எதிர்க்கும் நீட் தேர்வை ஆதரித்து நீ வழங்கிய உன் தீர்ப்பை மாற்று… மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோத சார்வதிகார உன் செயலை திருத்திக்கொள்…

  3. நீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை.இது ஜனநாயக விரோத செயல்.உச்ச நீதி மன்றத்தின் அராஜகம். ஆனாலும் போராடுவோம்.

  4. அனிதாவின் மரணத்திற்கு காரணம் தமிழகத்தின் கல்வி தான்… சமஸீர் என்று சொல்லி மாணவர்களின் வாழ்க்கையை அழித்தது திராவிட அரசியல் தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்

  5. நீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை. இந்த அராஜக,,பாசிச ,,மக்கள் விரோத தீர்ப்பை நாம் உதிர்ந்த மயிரலவுக்கு மதித்தாலும் நாம் தமிழர் விரோதிகள் ஆவோம்.

    உச்சி குடுமி நீதி மன்றத்தின் தீர்ப்பை குப்பையாக மதித்து ஒதுக்கிதள்ளிவிட்டு நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்….

    • உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எல்லாம் மாணவர்களின் நலனுக்கு எதிரானவர்கள்.

  6. சமம் என்ற சொல்லே ஆகாத மணிகண்டன் சாருக்கு சமச்சீர் கல்வி மட்டும் ஆகுமா என்ன?

  7. இது ஒரு தேவையில்லாத போராட்டம்…. கூடங்குளம், தனி ஈழம், கல்விக்கட்டணம் போல இதுவும் வெகு விரைவில் அடங்கிவிடும்… எல்லா போராட்டத்தையும் ஜல்லிக்கட்டு போராட்டமாக நினைக்கக்கூடாது…. ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்ததா இல்லை அடுத்த பொங்கலுக்கு தொடருமா என்பது எவனுக்கும் தெரியாது… ஆயிரம் அனிதாக்கள் இறந்தாலும் “நீட்” தேர்வு நடைமுறை தொடரும்…. மாணவர்களும், அரசும், ஆசிரியர்களும் இதற்கு தயாராக வேண்டியது தான் ஒரே வழி… வினவு மாதிரி ஆட் களுக்கு வேண்டுமானால் மாணவர்கள் கூடி கோஷம் போடுவது ஜாலியாக இருக்கலாம் அதை தவிர மாணவர்கள் போராட்டம் எதையும் சாதிக்க முடியாது…..

  8. சமச்சீரை சம ஸீர் என்று எழுதுவதிலிருந்தே இவர் யார் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளலாம். தமிழ் நாட்டை விட்டு இம்மாதிரி ஈனப்பிறவிகள் எப்போதும் ஒழிவதில்லை.

    • அதெப்படிங்க…ஹோஸ்ட்டை விட்டு போனால்தானே ஒட்டுண்ணி செத்துவிடுமே..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க