திப்பு : காவிக் கும்பலின் குலைநடுக்கம் !

2
67

வ்வொரு ஆண்டும் திப்பு சுல்தானின் பிறந்த நாள் வரும்போது, அதனைக் கொண்டாடக் கூடாது என கர்நாடகாவில் காவிக்கும்பல் தகராறு செய்வதும், அதைத் தாண்டி போலீசு பாதுகாப்போடு திப்புவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது,

காவிக் கும்பலுக்கு திப்பு ஒரு முசுலீம் என்பது தான் பிரச்சினையா ? அப்படியென்றால், அவர்கள் அப்துல் கலாமையும் , ஏ.ஆர். ரகுமானையும் உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே ! திப்புவின் மீது மட்டும் காவிக் கும்பலுக்கு ஏன் இவ்வளவு வன்மம்?

திப்புவின் புலி – ஆங்கிலேயர்களுக்கு மட்டுமல்ல சங்க பரிவாரத்திற்கும் சிம்ம சொப்பனம் தான்

ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல், இன்று எவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கும், பார்ப்பனியத்துக்கும் சேவை புரிந்து, மக்களை வதைத்து வருகிறதோ அதைப் போன்றே தான் ஆர்.எஸ்.எஸ்.-ன் மூதாதையர்களான சித்பவன் பார்ப்பனர்கள் (மராட்டிய பேஷ்வாக்கள்) அன்று ஆங்கிலேயர்களின் காலை நக்கி சேவகம் புரிந்து வந்தனர்.

காவிக் கும்பலின் குலை நடுக்கம் – திப்பு சுல்தான்

அதனை அன்றே கடுமையாக எதிர்த்தார் திப்பு சுல்தான். வெள்ளைக்காரனை இந்த மண்ணை விட்டு வெளியேற்றுவதையே தமது முதல் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர் திப்புசுல்தான். ஆங்கிலேயர்களுக்கு எதிரான திப்புவின் இறுதிப் போரில் மராட்டியத்தை ஆண்டு கொண்டிருந்த பேஷ்வாக்கள் (சித்பவன் பார்ப்பனர்கள்) ஆங்கிலேயர்களோடு இணைந்து கொண்டு திப்புவின் முதுகில் குத்தினர். அதன் தொடர்ச்சி இன்றும் தொடர்கிறது. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரத்தம் துரோகத்தோடு ஊறியிருப்பதன் காரணம் இது தான்

அது மட்டுமா? பார்ப்பனீயத்தின் அனைத்து பிற்போக்குத்தனங்களுக்கும் தனது ஆட்சியில் தடைவிதித்தார் திப்புசுல்தான். பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டது. தேவதாசி முறையைத் தடை செய்து ஆணையிட்டார் திப்பு. இப்போது சொல்லுங்கள். இத்நியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட தேவதாசி முறையைக் கைவிடக் கூடாது எனக் கொழுப்பெடுத்துப் போராடிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலுக்கு திப்புவை எப்படிப் பிடிக்கும்?

இதோ, திப்புவின் மறைக்கப்பட்ட வரலாறு குறித்து வினவுலும், புதிய கலாச்சாரம் இதழிலும் வெளிவந்த கட்டுரைகளுக்கான சுட்டியை ஒரு தொகுப்பாக இங்கே தருகிறோம்.

*****************************************************************************************************************

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

இந்துவிரோதியாகவும், தேசதுரோகியாக சங்கபரிவாரக் கும்பலால் தூற்றப்படும் திப்புசுல்தானின் வாழ்க்கை நிகழ்வுகளை அவரது பரம எதிரியான ஆங்கிலேயர்களின் வார்த்தைகளில் இருந்தே எடுத்து விளக்குகிறது இந்தக் கட்டுரை.

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

(மேலே அழுத்தவும்)

*****************************************************************************************************************

திப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது?

ராம் எனப் பொறிக்கப்பட்ட திப்புவின் மோதிரம்

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம், திப்புவின் மோதிரம் பிரிட்டனில் ஏலத்திற்கு வந்த சமயத்தில், அந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், அந்த ஏலத்தில் கலந்து கொண்டு அந்த மோதிரத்தை இந்திய அரசே ஏலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.

ராம் என்றும் பொறிக்கப்பட்ட திப்புவின் மோதிரத்தைப் பற்றியும் அது பிரிட்டிஷாரின் கைகளுக்குச் சென்ற வரலாற்றோடு, இன்று நாடே நம்மை விட்டுப் பறிபோகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது இந்த கட்டுரை

திப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது ?

(மேலே அழுத்தவும்)

*****************************************************************************************************************

சொல்லாத சோகம்-யாரும் வெல்லாத வீரம்! – பாடல்

பார்ப்பன வெறிபிடித்த சங்கப் பரிவாரக் கும்பலால் வரலாறு திரிக்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகத்தால் வெளியிடப்பட்டது இந்தப் பாடல். ஹைதர்அலி தொடங்கி சுதந்திரப் போராட்டம் வரையில் இந்த மண்ணிற்காக உயிர்துறந்த முசுலீம்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தருகிறது இந்தப் பாடல்.  இந்தப் பதிவில் பாடல் வரிகளும், காணொளியும் உள்ளன

சொல்லாத சோகம் – யாரும் வெல்லாத வீரம்! பாடல்!!

(மேலே அழுத்தவும்)

*****************************************************************************************************************

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

ஹைதர் அலி

ஹைதர் அலி – திப்புவின் தந்தை. இக்கட்டுரை ஹைதரின் காலனியாதிக்க எதிர்ப்பு மரபை விளக்குகிறது. இதன் சில வரிகளே அவரைப் பற்றிய தெளிவான ஒரு சித்திரத்தைக் கொடுக்கும்.

“1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஓவியம். அதனைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் லாலி என்ற கும்பினி அதிகாரி:

“நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் ஹைதர். வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் ஹைதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.”

ஹைதரின் காலனியாதிக்க வெறுப்புக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

(மேலே அழுத்தவும்)


கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்

19 நவம்பர், 2017, மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.

நண்பர்களே,

ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.

பெரும் பொருட்செலவுடன் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வுக்கான நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

 

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா

2 மறுமொழிகள்

  1. நாட்டையும் மக்களையும் நேசிக்கும் யாருக்கும் புரியும் திப்புவின் தியாகம்.அந்த மாவீரனின் திசைவழியில் நாம் பயணிப்பதில்தான் வீழ்த்தப்படக் காத்திருக்கிறது பார்ப்பனியத்தின் துரோகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க