நரேந்திர மோடி – நீரவ் மோடி : ஹம் ஆப் கே ஹை கோன் ?

நமோவுக்கும் (நரேந்திர மோடி) நிமோவுக்கும் (நிரவ் மோடி) என்ன உறவு ? என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.

ம் ஆப் கே ஹை கோன்? – இது 1994-இல் வெளிவந்த ஒரு இந்தித் திரைப்படத்தின் தலைப்பு. இதன் பொருள் – உனக்கு நான் என்ன உறவு முறை வேண்டும்?

நமோவுக்கும் (நரேந்திர மோடி) நிமோவுக்கும் (நிரவ் மோடி) என்ன உறவு? நமோவுக்கும் அம்பானிக்கும் என்ன உறவு? அம்பானிக்கும் நிமோவுக்கும் என்ன உறவு? நிமோவுக்கும் அதானிக்கும் என்ன உறவு?

பஞ்சாப் நேஷனல் வங்கியை ஆட்டையைப் போட்ட அக்யூஸ்டு நிரவ் மோடியின் குருநாதரும், அவரது மாமாவுமான மெகுல் சோக்ஸியை, மெகுல் அண்ணாச்சி என்று பாசத்தோடு அழைக்கிறார் பிரதமர்.

நிரவ் மோடியின் எல்லாக் கம்பெனிகளுக்கும் நிதி ஆலோசகர், அதாவது வங்கிக் கொள்ளைக்குத் திட்டம் போட்டுக் கொடுப்பவர், முகேஷ் அம்பானியின் சித்தப்பா நாதுபாய் அம்பானியின் மகன் விபுல் அம்பானி.

நிரவ் மோடியின் தம்பி நீஷல் மோடிக்குத்தான், தன்னுடைய தங்கை மகள் இஷிதாவைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. அம்பானியின் ஆன்டிலா அரண்மனையில்தான் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியை மணக்கப்போகும் பெண் ஸ்லோகா மேத்தா. அவளுடைய தந்தை ரஸ்ஸல் மேத்தா பெரிய வைர வியாபாரி. ஸ்லோகாவின் அம்மா மோனா மேத்தா நிரவ் மோடிக்கு நெருங்கிய சொந்தம்.

நிரவ் மோடியின் 3 பிள்ளைகளும் சென்ற ஆண்டு வரை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் படித்தவர்கள். இப்போது எல்லோரும் இருப்பது அமெரிக்காவில்.
அடுத்தபடியாக அதானி.

3,696 கோடி வங்கிப்பணத்தைச் சுருட்டிய ரோட்டோமேக் பேனா கம்பெனி அதிபர் விக்ரம் கோத்தாரியின் மகள் நம்ரதாவை மணந்திருப்பவர், கவுதம் அதானியின் மருமகன் பிரணவ் அதானி.

கவுதம் அதானியின் அண்ணன் வினோத் சாந்திலால் அதானியின் மகள் கிருபாவை மணந்திருப்பவர், ஜதின் மேத்தா என்ற வைர வியாபாரியின் மகன் சூரஜ். ஜதின் மேத்தா 7,000 கோடி ரூபாய் வங்கிக்கடனை ஏமாற்றி இந்தியாவிலிருந்து தப்பி, செயின்ட் கிட்ஸ் தீவு என்ற வரியில்லா சொர்க்கத்தின் குடிமகன் ஆகிவிட்டவர்.

டாவோஸில் நடந்த மாநாட்டில் நமோவுடன் நிமோ ( வட்டத்திற்குள் )

நிரவ் மோடி – அம்பானி – அதானிகளுக்கு இடையிலான உறவு மண உறவு. டாவோசுக்கு வந்த பிரதமர் மோடியுடன் குரூப் போட்டோவில் உட்கார்ந்திருக்கிறார் நிரவ் மோடி. இது என்ன உறவு என்றுதான் விளங்கவில்லை.

– தொரட்டி
(புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க