டல் பிகாரி வாஜ்பாய் 16.08.2018 அன்று மறைந்து போனார். மோடியின் ஆட்சி நாடு முழுவதையும் இந்துத்துவமாக்கும் முயற்சியில் இருப்பதால் வாஜ்பாயியும் முன்னாள் பிரதமர் என்பதைத் தாண்டி மாபெரும் தேசபக்தர், அரசியல் சாணக்கியர், தவறான கட்சியில் இருக்கும் நல்லவர் என்ற புகழாரங்கள் வலிந்து கொட்டப்படுகின்றன. இவையெல்லாம் உண்மையா? இல்லை பாதி உண்மை, பாதி பொய்யா? இல்லை முழுப் பொய்யா?

வாஜ்பாய் யார் என்பதை அறிந்து கொள்ள நீங்கள் வாதிட வேண்டாம். அவரது வரலாற்றை அறிந்து கொண்டாலே போதும். இந்த வினாடி வினா அதற்கு ஒரு துவக்கமாக இருக்கட்டும்.

கேள்விகள்:

  • 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தனது அண்ணன் பிரேமுடன் கைது செய்யப்பட்ட 16 வயது வாஜ்பாயி, 23 நாட்களுக்குப் பிறகு ஏன் விடுதலை செய்யப்பட்டார்?
  • 1957 மதுரா பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனசங்கத்தின் சார்பில் (பா.ஜ.க-வின் முந்தைய அவதாரம்) போட்டியிட்ட வாஜ்பாயியை தோற்கடித்தவர் மதச்சார்பற்ற கொள்கையை கடைபிடித்த சுயேட்சை வேட்பாளர், அவர் யார்?
  • 1968-ல் வாஜ்பாயி, பாரதிய ஜனசங்கத்தின் தேசியத் தலைவரானார். 1960-களில் பாரதிய ஜனசங்கம் நடத்திய முக்கியமான போராட்டம் எது?
  • 1977-ம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய வாஜ்பாயியின் குறிப்பிடத் தக்க பணி எது?
  • 1979-ம் ஆண்டில் ஜனதா அரசாங்கம் கலைக்கப்பட்டதற்கு முதன்மைக் காரணம் எது?
  • 1951-ல் ஆர்.எஸ்.எஸ்-ஆல் ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனசங்க கட்சிக்கு வாஜ்பாயியோடு அனுப்பட்ட தீனதயால் உபாத்யாயா எப்படி இறந்து போனார்? (இவர் இறந்து கிடந்த முகலேஸ்வரி ரயில்நிலையத்தின் பெயர் இன்று இவரது பெயரால் பண்டித தீனதயால் உபாத்யாயா சந்திப்பு என்று அழைக்கப்படுகிறது.)
  • 1939-ம் ஆண்டு வாஜ்பாயி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்வதற்கு காரணமான பாபா சாகேப் ஆப்தே எனும் உமர்கந்த் கேசவ ஆப்தேவின் வாழ்நாள் பணி எது?
  • வாஜ்பாயியை ஆசிரியராகக் கொண்டு 1948 ஜனவரி 14 அன்று துவக்கப்பட்ட “பான்ஞ்சைன்ய” எனும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்தி வார பத்திரிகையின் முதல் அட்டைப்படத்தில் இடம் பெற்றவர் யார்? (2013-ம் ஆண்டில் இப்பத்திரிகையின் விற்பனை விநியோகம் 50,000 மட்டுமே)
  • வாஜ்பாயி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, 1984 தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் எத்தனை?
  • 1996 தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாரதிய ஜனதாவை குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பதவியேற்க அழைத்தார். வாஜ்பாயியும் ஏற்றார்? எத்தனை காலம் பிரதமராக பதவியேற்றார்? ஏன்?
  • 1998 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற வாஜ்பாயி 13 மாதங்களுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று பதவி விலகினார் ஏன்?(இந்த நிகழ்வில் ஒரு புகழ்பெற்ற தேநீர் விருந்திற்கு சம்பந்தம் உள்ளது)
  • 1999 பாராளுமன்றத் தேர்தலில் வாஜ்பாயி தலைமையில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இத்தேர்தலில் பா.ஜ.க பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு?
  • வாஜ்பாயி பிரதமராக இருந்த 1999-ம் ஆண்டில் ஆப்கானுக்கு இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய தீவிரவாதிகள் மசூத் ஆசாரை விடுவிக்குமாறு மிரட்டினர். வாஜ்பாயி அரசு என்ன செய்தது?
  • வாஜ்பாயி பிரதமராக இருந்த 1999 – 2004 காலத்தில் நடந்த ஊழல்கள் என்ன?
  • மோடி முதலமைச்சராக இருந்தபோது நடந்த 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலையை வாஜ்பாயி கண்டித்தாரா?

1 மறுமொழி

  1. மனித “முகமூடியுடன்” நடமாடிய பார்ப்பனீய பாசிட்டுக்கெல்லாம் பொதுஅறிவு வினாடி வினா.
    வினவு வாசகர்களுக்கு வரும் சோதனை.

Leave a Reply to முரளி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க