யமஹா, என்ஃபீல்டு தொழிலாளர்களை ஆதரித்து புஜதொமு ஆர்ப்பாட்டம் | வினவு நேரலை | Live Streaming

தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் யமஹா, என்ஃபீல்ட் மற்றும் எம்.எஸ்.ஐ ஆலை நிர்வாகங்களைக் கண்டித்தும், அத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் வினவு நேரலையில் !

தொழிற்சங்க உரிமையை பறிக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக கிளந்தெழுவோம்!

உரிமைகளுக்காக போராடும் யமஹா, ராயல் என்பீல்டு, எம்.எஸ்.ஐ. தொழிலாளர்களுக்கு துணை நிற்போம்!

மஹா, ராயல் என்ஃபீல்ட், எம்.எஸ்.ஐ ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் மீதான நிர்வாகத்தின் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை எதிர்த்து சங்கமாகத் திரண்டனர். இத்தொழிலாளர்களை மிரட்ட சங்க முன்னணியாளர்களை பணி நீக்கம் செய்வது, அவர்களை பிற பகுதிகளுக்கு பணியிடம் மாற்றுவது, வீட்டிற்கு ஆள் விட்டு மிரட்டுவது, மன்னிப்புக் கடிதம் எழுதித் தரச் சொல்லி மிரட்டுவது என சட்டவிரோத நடைமுறைகளில் ஈடுபட்டு வருகின்றன அந்நிறுவனங்கள்.

இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதனைத் தொடர்ந்து முறையாக தொழிலாளர் துறையால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டும், செல்லாமலிருப்பது என தொடர்ந்து திமிர்ப் போக்கையே கடைபிடித்து வருகின்றன இந்நிர்வாகங்கள்.

தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும், போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் பு.ஜ.தொ.மு-வினர் இன்று சென்னை குமனன்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் வினவு இணையதளத்திலும், வினவின் பக்கம் முகநூல் பக்கத்திலும், வினவு யூ-டியூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்

நாள்: 08-10-2018
நேரம்: மாலை 5:00 மணி
இடம்: குமனன்சாவடி பேருந்து நிலையம் அருகில், பூந்தமல்லி

காணத் தவறாதீர்கள் !

தகவல்: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு), (மேற்கு) மாவட்டம்
தொடர்புக்கு : 94444 61480 / 94453 68009

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க