Sunday, February 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்
318 பதிவுகள் 0 மறுமொழிகள்

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி

பல்வேறு தொழிற்சாலைகள் சார்பாக இந்த சிப்காட் பகுதியில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்பேட்டை என வரும்போது முதலாளிகளின் நிலங்களைப் பறிமுதல் செய்யவில்லை.

வேண்டாம் மாநகராட்சி வேண்டும் ஊராட்சி: மதுரை மக்கள் போராட்டம்

ஊராட்சியினை மாநகராட்சியாக மாற்றுவதன் மூலம் மாநகராட்சியில் வரி வசூலித்துக் கொள்ளையடிப்பதும் கார்ப்பரேட் நலனும் இருப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மதுரையை உலுக்கிய மக்கள் பேரணி

தங்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அரசின் மீது நம்பிக்கை இழக்கும்போது மக்கள் தங்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட தடைகளையும் தகர்த்தெறிவார்கள் என்பதை அங்கே காணமுடிந்தது.

மழைவெள்ள பாதிப்பில் டெல்டா மாவட்டங்கள்!

பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 54 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் சென்ற ஆண்டு இயற்கை சீற்றங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கே போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

வாடகைக் கடைகளுக்கு 18% ஜி.எஸ்.டி: மோடி அரசின் அடுத்த தாக்குதல்

வணிக கட்டடங்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதைக் கண்டித்து நவம்பர் 29 ஆம் தேதி தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

மாணவர்களைச் சித்திரவதை செய்யும் நெல்லை ஜல் நீட் அகாடமி

தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால் பயிற்சி மையத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து தன்னுடைய லாபம் குறைந்து விடும் என்பதனாலேயே மாணவர்களைத் தண்டிக்கிறது இந்த பயிற்சி மையம்.

பாரதியார் பல்கலைக்கழகம்: தொடரும் சாதிய அடக்குமுறைகளும், நிர்வாகத்தின் முறைகேடுகளும்!

"பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியான பாகுபாடுகள் நிலவுகின்றன. ஆதிதிராவிடர் விடுதி இருந்தாலும் பொது விடுதிகளில் மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பொது விடுதிகளின் உணவு கட்டணத்தைக் கட்டுவதற்குச் சிரமப்படுகின்றனர்."

திருவாரூர்: சிப்காட் அமைவதை எதிர்க்கும் மக்கள்

தங்கள் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பறிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள், சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைவதற்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.

கோவை:‌ மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் சங்கி கும்பல்!

மோடி அரசு – பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் துண்டறிக்கை கொடுப்பதைத் தடுப்பதும், பிரச்சாரம் செய்யும் இயக்கங்களை மிரட்டுவதும் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது..

நீதியை எதிர்நோக்கி ஆசிக் குடும்பத்தினர்

"இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நிதி உதவியும் செய்யவில்லை, வழக்கும் தீவிரமான முறையில் விசாரிக்கப்படவுமில்லை. தற்போது என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்கின்றனர் முகமது ஆசிக்கின் குடும்பத்தினர்.

திருமங்கலம் டோல்கேட்டின் அடாவடித்தனம் – முற்றுகையிட்ட கிராம மக்கள்

சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக டோல்கேட் எதிர்ப்பு குழு என்ற ஒன்றை உருவாக்கி திருமங்கலம் வியாபாரிகள், அனைத்து வாகன ஓட்டிகள் சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயப் படுகொலைகள் | உண்மை அறியும் குழு அறிக்கை

கருணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் அன்றாடம் உழைக்கும் தலித் மக்கள். பெரும்பாலும் நிரந்தர வேலை ஏதுமற்ற அன்றாடம் காய்ச்சிகளாகத் தான் வாழ்கின்றனர்.

சட்டப்பூர்வமாக்கப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து வழிப்பறி | நேரடி அனுபவம்

தொலைதூரத்திற்கு செல்லும் அரசு பேருந்துகளை விட ஆம்னி பேருந்துகள் மூன்று மடங்கு அதிகம். அனைத்து மக்களும் மலிவாக பயன்படுத்தக்கூடிய அரசு பொது போக்குவரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி தனியார் பேருந்துகள் வளர்ந்து வருகின்றன.

கள்ளிக்குடி: கோழிக்கழிவுகளை மக்கச் செய்யும் ஆலையை நிரந்தரமாக மூடு!

கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆறு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தி உள்ளனர். குறிப்பாக நச்சு வாயுவின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னம்பட்டி, பேய்குளம் ஆகிய கிராமங்களில் ஒரு ஓட்டு கூட செலுத்தவில்லை.

தேர்தலை புறக்கணிக்கும் கீழ மூவக்கரை மீனவ கிராம மக்கள்

"எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தந்த பிறகே நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம்; இல்லை என்றால் நாங்கள் தேர்தல் தேதி அன்று வாக்களிக்க போகாமல் வீட்டிலேயே இருக்கப் போகிறோம்” என்று மக்கள் தங்கள் முடிவு குறித்துக் கூறியுள்ளனர்.