கோவை:‌ மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் சங்கி கும்பல்!

மோடி அரசு – பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் துண்டறிக்கை கொடுப்பதைத் தடுப்பதும், பிரச்சாரம் செய்யும் இயக்கங்களை மிரட்டுவதும் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது..

பாசிச மோடி அரசே மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையிலும் அரங்கக் கூட்டம் வருகின்றன வெள்ளிக்கிழமை (30-08-2024) நடைபெறவுள்ளது. பல்வேறு ஜனநாயக சக்திகள் இயக்கங்கள் இதில் கலந்து கொள்கின்றனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் 25-08-2024 ஞாயிறு மாலை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த போது கோவை, சரவணம்பட்டி பிஜேபி -யை சேர்ந்த சங்கி கும்பலைச் சேர்ந்த சிலர் பிரச்சாரத்தைத் தடுக்கும் விதத்தில் துண்டறிக்கை, புத்தகங்களைத் தோழர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்தனர்.

இந்நிகழ்வு இன்று மட்டும் நடந்ததல்ல. மோடி அரசு – பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் துண்டறிக்கை கொடுப்பதைத் தடுப்பதும், பிரச்சாரம் செய்யும் இயக்கங்களை மிரட்டுவதும் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது..

ஆனால் இதே கோவையில் தான் வருகின்ற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிஜேபி இந்து முன்னணி சார்பாக நடைபெறவுள்ள நிகழ்ச்சி நிரல் துண்டறிக்கையில் இஸ்லாமிய வெறுப்பு, மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் கருத்துகளை எழுதி கோவை முழுவதும் பிரச்சாரம் செய்கின்றனர்.

கருத்துச் சுதந்திரம் என்பது யாருக்கு இருக்கிறது? மக்களைப் பிளவுபடுத்தி இந்துத்துவ கருத்துகளை அப்பாவி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் இந்த பாசிச கும்பலுக்கு மட்டும் தான் இருக்கிறது கருத்துச் சுதந்திரம்.. அக்கும்பலுக்கு எதிராகப் பேசும் முற்போக்கு இயக்கங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

கோவையில் தொடர்ந்து கலவரங்களை உருவாக்குவதற்கும், மாணவர்கள் மத்தியில் பாசிச மத வெறி கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதற்கும் செயல்பட்டுவரும் பிஜேபி இந்து முன்னணி போன்ற அமைப்புகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக இயக்கங்களும்  ஒன்று சேர்ந்து போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்.


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க