Thursday, October 1, 2020
முகப்பு உலகம் ஆசியா இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள், என்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்.

-

இந்தியர்கள் குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன நினைக்கிறார்கள்? சமீபத்தில் கர்தார்பூர் புனித யாத்திரை பாதையை திறந்து வைத்த பாகிஸ்தான் அரசு, அந்த நிகழ்ச்சிக்காக இந்திய பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.  அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் கே. கே. ஸ்ருதிஜித் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் இந்தியத் தன்மை!

முதன்முதலாக பாகிஸ்தான் வரும் இந்தியருக்கு, தான் பஞ்சாபின் கிராமப்புறத்தில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படும். இந்தியாவின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானில் பஞ்சாபின் அறுவடை முடிந்த நிலங்கள் எரிக்கப்படும் மணத்தை நுகர முடிகிறது. லாகூர் நகரம், இந்தியாவின் லக்னௌ அல்லது சாந்தினி சவுக்-ஐ நினைவுபடுத்துகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் உங்கள் முழங்கையை உரசிக்கொண்டு போவதும் குழந்தைகள் திறந்து கிடக்கும் சாக்கடையில் விழுந்துவிடாதவாறு பார்த்துப் போவதும் இந்தியாவின் பழைய நகரங்களின் சாயலைக் கொண்டுள்ளது. நம்மை போலவே அவர்களும் மற்றொரு நகரத்தின் மீது பொறாமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கராச்சிக்காரர்களுக்கு லாகூர் நெருக்கடிமிக்க, சிறு சிறு குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரம். லாகூர்காரர்களுக்கு கராச்சியின் உணவு பிடிக்காது.

கர்தார்பூர் புனித யாத்திரைக்காக பாதை திறந்த பாகிஸ்தான் அரசு

இந்திய நகரங்களுக்கும் பாகிஸ்தான் நகரங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம். பாகிஸ்தானில் நிறைந்திருக்கும் பாதுகாப்பு. பாதுகாப்பு என்றால் நம்மூர் கருப்பு உடை அணிந்த கமாண்டோக்கள் அல்ல, இவர்கள் கைகளில் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர். பாதுகாப்புக்காகத்தான் அவர்கள் நிறுத்தப்படுகிறார்கள் என்றாலும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை வெளிக்காட்டிக் கொள்ளவும் அப்படிச் செய்கிறார்கள்.

பயங்கரத்தை நினைவுபடுத்தும் தெருக்கள்!

நகரங்களின் வழியாக நீங்கள் சென்று கொண்டிருக்கும்போது, கடந்த காலத்தின் பயங்கரத்தை உங்களால் உணர முடியும். 2009-ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்தின் மெரியாட் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சக பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். லாகூரின் தெருக்களை கடந்து சென்ற போது, ‘நண்பர் ஒருவர் இதோ இங்கேதான் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்றார்.

தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட ஒவ்வொரு இடத்தையும் கடக்கும் போதும், அங்கே பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அவ்வவ்போது ‘இது இங்கே வழக்கமான நிலைமைதான்’ என சொல்லிக் கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில், உலகின் மிக அபாயமான நாடுகளில் ஒன்றில் இருக்கிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நாங்கள் பாகிஸ்தான் சென்றிருந்த வாரத்தில் தாரீக் ஐ லபைக் பாகிஸ்தான் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு அங்கே தலைப்பு செய்தியாக இருந்தது. இந்தக் கட்சியின் தலைவர் மதபோதகர் காதிம் உசைன் ரிஸ்வி, பாகிஸ்தானில் கொண்டு வரப்பட்ட மத நிந்தனை சட்டத்தை ஆதரித்து பேசி மக்கள் செல்வாக்கு பெற்றவர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில கவர்னராக இருந்த சல்மான் தசீர், இந்தச் சட்டத்தை ‘கருப்புச் சட்டம்’ எனக் கூறியதால் கொல்லப்பட்டார்.

தாரீக் ஐ லபைக், மக்கள் செல்வாக்கு (இந்துத்துவ கும்பல் போல, ஆர்ப்பாட்டம் செய்வது, தெருச்சண்டையில் இறங்குவது) பெற்றிருந்த போதும், தேர்தல் அரசியலில் அக்கட்சிக்கு பின்னடைவே கிடைத்தது. இந்த ஆண்டு நடந்த தேர்தலில் மதவாதம் பேசும் கட்சிகள் பின்னடைவை சந்தித்திருக்கின்றன. அதுபோல, ஆயுதம் தாங்கிய அமைப்புகளின் ஆதரவு பெற்ற கட்சிகளுக்கும் இதே நிலைமைதான்.

தாரீக் ஐ லபைக் 150 இடங்களில் போட்டியிட்டு இரண்டே இடங்களில் வென்றது. ஆனால், தொடங்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஐந்தாவது பெரிய கட்சியாக அது உருவெடுத்துள்ளது. தற்போதைய பிரதமர் இம்ரான்கான், இதன் தலைவர் மீது தீவிரவாதம் மற்றும் தேச துரோக வழக்கை போட்டிருக்கிறார்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

நான் சொல்வது வழக்கமானதாக இருக்கலாம். ஆனால், இந்தியர்களை பாகிஸ்தானியர்களின் கணிவுடன் வரவேற்கிறார்கள். சக பாகிஸ்தானியரைப் போல அன்பையும், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது தள்ளுபடியும் தருகிறார்கள். நான் பேசிய அத்தனை பாகிஸ்தானியரும் உள் அன்போடு இதை வெளிப்படுத்தினார்கள், அவர்களிடம் உண்மையைக் காண முடிந்தது. ஆனால், இந்திய சமூக ஊடகங்கள் இதை மாற்றிக் கொண்டிருக்கின்றன என்பது வேதனைக்குரியது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடை வடிமைப்பாளர் மியான் நோமான் மற்றும் அவரது நண்பர்களை சந்தித்தேன். மியானின் அம்மா இந்தியாவின் லூதியானாவில் பிறந்தவர். மற்ற இரண்டு நண்பர்களின் வேர்களும் இந்தியாவில் இருந்தது. மியானின் நண்பர்களில் ஒருவரான சாபி ஸெக்ரா என்னிடம் மெதுவாக, “சமூக ஊடகங்களில் இந்தியர்கள், ஏன் எங்கள் மீது இவ்வளவு வெறுப்பாக இருக்கிறார்கள்?” எனக் கேட்டார்.

தொடர்ந்த அவர், “நான் அவர்களிடம் பேச முயற்சித்திருக்கிறேன். ஏனெனில் இந்தியாவின் மீது மதிப்பு வைத்திருக்கிறேன், என்னுடைய வேர்கள் அங்கே உள்ளன. ஆனால், அவர்கள் சமூக ஊடகங்களில் வெறுப்பை கக்குகிறார்கள். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என தெரிந்தவுடன் அவதூறு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்” என்றார். அவர் காயப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அவரிடம் சொல்ல என்னிடம் நேர்மையான பதில் இல்லை.

இம்ரான் நியாசி

லாகூரில் உள்ள குல்பர்க்-2 குடியிருப்பு அருகே இருந்த சிறிய கடை ஒன்றில் செல்போன் ரீசார்ஜ் செய்யச் சென்றிருந்தேன். அங்கே இருந்த சிறிய குழு, ‘பாகிஸ்தான் – இந்தியா இடையே அமைதி நிலவ வேண்டும்’ என இம்ரான்கான் சொன்னது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். கடை பொறுப்பாளரான் இம்ரான் நியாசி, அதுபற்றி என்னிடம் பேசினார். “இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக்கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள்” என பேசியவர், இரண்டு நாடுகளுக்குமிடையே அமைதி நிலவ வேண்டும் என்றார்.

“ஆனால், சமீப நாட்களில் இந்தியாவில் முசுலீம்கள் மோசமாக நடத்தப் படுகிறார்கள். நாங்கள் அந்த வாட்சப் வீடியோக்களை பார்க்கிறோம். அது மிகவும் எதிர்பாராதது. இன்னொரு வீடியோவையும் பார்த்தோம். அதில் சிலர் காசு தருகிறோம் பாகிஸ்தான் கொடியை எரிக்க முடியுமா எனக் கேட்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் அதைச் செய்தார்கள். மற்றவர்கள் எவ்வளவு காசு தந்தாலும் அதைச் செய்யமாட்டோம் என்றார்கள். அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என வெளிப்படையாகப் பேசினார்.

 • நன்றி: தி எக்னாமிக் டைம்ஸ்

கண்ணுக்குத் தெரிந்த எதிரியை கட்டமைப்பதே தேசியவாதம்-மதவாதம்-இனவாதம் பேசும் வெறியர்கள் செய்யும் அடிப்படையான விசயம். இந்துத்துவா கும்பலுக்கு முசுலீம்களும் பாகிஸ்தானும் எதிரிகள். மோடி தலைமையிலான இந்துத்துவா கும்பல் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த ‘எதிரி’ உணர்வு நஞ்சாக பரப்பப் பட்டது.

முசுலீம்களுக்கு எதிரான கும்பல் கொலைகளை விமர்சித்த முசுலீம் பிரபலங்களை ‘பாகிஸ்தானுக்கு போ’ என்றார்கள். காஷ்மீர் பிரச்சினையை விவாதித்த மாணவர்கள் ‘பாகிஸ்தான் வாழ்கவென கோஷமிட்டார்கள்’ என வதந்தி பரப்பினார்கள். காங்கிரஸ் தேர்தல் வெற்றி களிப்பினால், ‘பாகிஸ்தான் கொடி’ பறந்ததாக வாட்ஸப் வதந்தி பரப்பினார்கள். இந்தியா வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஹோட்டலில் இடம் தரக்கூடாது என போராடி, சுற்றுலா பயணிகளை நடுத்தெருவில் நிறுத்தினார்கள்.

இப்படி இந்துத்துவ கும்பல், செய்துவரும் கீழ்தரமான பிரிவினை அரசியலை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்… ஆனால் பாகிஸ்தான் மக்கள் இந்திய மக்களை எப்படி நேசிக்கிறார்கள் என்பதை அங்கு செல்லும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள். இங்கே இருக்கும் மதவெறி அங்கேயும் இருந்தாலும் அம்மக்கள் இங்கிருப்பது போல நம்மை வெறுக்கவில்லை. பாகிஸ்தான் மக்கள் மீதான துவேசத்தை இந்துமதவெறியர்கள் எப்படிக் கிளப்பினாலும் இதுவரை அம்மக்கள் அந்த வெறிக்கு எதிர்முகத்தை காட்டவில்லை. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் துடைத்தெறியப்படும் போது இந்த ஒற்றுமை உறுதிப்படும்!

தமிழாக்கம் – கலைமதி

வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் துடைத்தெறியப்படும் போது இந்த ஒற்றுமை உறுதிப்படும்//
  ஆம் மிகச்சரியான கருத்து….RSS,BJP,VHP…… இன்னும் எண்ணிலடங்கா பார்ப்பனீய பாசிச பயங்கரவாத அமைப்புகள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட வேண்டும்…..

  • ஏன் சார் பாகிஸ்தானோடு கூட்டு சேர்வதில் இவ்வுளவு ஆர்வமாக இருக்கிறீர்கள், இந்தியாவை அழிக்க வேண்டும், ஹிந்துக்களை அடிமையாக்க வேண்டும் என்று நினைக்கும் தேசத்தோடு உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் சேர்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறீர்கள்.

   ஒன்று மட்டும் நிச்சயம் உங்களை போன்ற கிறிஸ்துவ மதவெறியர்களை எதிர் கொள்ள RSS போன்ற இயக்கங்கள் அவசியம் தேவை. இல்லையென்றால் பிரேசில் போன்ற நாடுகளில் செய்தது போல் இந்தியாவிலும் பெரும் அழிவை கிறிஸ்துவ மதவெறியர்கள் கொண்டு வருவார்கள்.

   இந்த நாட்டை உங்களை போன்றவர்களிடம் இருந்து காப்பாற்ற RSS இயக்கம் அவசியம் தேவை.

 2. //இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் துடைத்தெறியப்படும் போது இந்த ஒற்றுமை உறுதிப்படும்!//
  அருமையான வாசகம் . . . !!
  அரபு நாடுகளில் பாகிஸ்தானியர்கள் நம்மைக் கண்டால் ஆரத்தழுவி வரவேற்கிறார்கள்.
  மாறாக காஷ்மீரிகள் நம்மை வேற்று நாட்டவராகவே பார்க்கிறார்கள். தங்களை காஷ்மீரிகள் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.இந்தியர்கள் என்று கூறிக்கொள்வதில்லை. இது நமது ‘இந்தியர்’களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவர்களது உணர்வை மதித்தால் நம்மை கொண்டாடுகிறார்கள். ‘அருந்ததி ராய்’ அவர்களுக்கு பிடித்தவராக இருக்கிறார். பொதுவாக தமிழர்களை சகோதரர்களாக பாவிக்கிறார்கள் – நாம் RSS டவுசரை கழட்டுவதால் . . . . !

  • உங்களை போன்ற இந்திய விரோத கிறிஸ்துவ கம்யூனிஸ்ட்களை பாகிஸ்தானியர்களுக்கு மிகவும் பிடிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் அவர்கள் கண்டிப்பாக உங்களை வரவேற்க தான் செய்வார்கள்.

 3. எவ்வுளவு தான் நீங்கள் வேஷம் போட்டாலும் உங்களின் பாக்கிஸ்தான் சீனா பாசத்தை அடிக்கடி காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

  இந்தியாவில் இருந்து பயங்கரவாதிகள் பாக்கிஸ்தான் சென்று அப்பாவி மக்களை நூற்று கணக்கில் கொன்ற ஒரு பயங்கரவாத கூட்ட தலைவனை தண்டிக்காமல் அவனுக்கு (பெண் உட்பட) அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவனை நீதிமன்றத்தில் நிரபராதி என்று சொல்லி விடுவித்து இருந்தால் அப்போது தெரியும் பாக்கிஸ்தான் மக்களின் இந்தியா பாசம்…

  இப்படிபட்ட ஒரு மோசமான தேசத்தை பற்றி உயர்வாகவும் இந்தியாவை தாழ்வாகவும் பேச கூடிய மனவக்கிரம் உங்களை போன்ற கம்யூனிஸ்ட் அயோக்கியர்களை மட்டுமே வரும்.

  • இந்த அனுபவத்தை பகிர்ந்தவர் மோடி மற்றும் பாஜக-வின் ஆதரவு சொம்பில் நம்பர் ஒன் சொம்பான டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் பத்திரிகையில் பணியாற்றுபவர் என்பதை மனதில் கொள்க.

   • சரி பாகிஸ்தான் செய்வது போல் இந்தியாவில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து பாக்கிஸ்தான் அனுப்பி அங்கே அப்பாவி மக்களை நூற்று கணக்கில் கொன்று இருக்கிறதா ?

    இந்தியாவில் குண்டு வெடிப்பை நிகழ்த்தி அப்பாவி மக்கள் பலரை கொன்ற பயங்கரவாத கூட்ட தலைவர்களுக்கு பாகிஸ்தான் இன்று வரையில் அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு பெண்கள் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொண்டு கொண்டு இருக்கிறது, அது போல் இந்தியா செய்து இருக்கிறதா ?

    இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் செய்யாத இந்திய தேசத்தின் மீது உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் வன்மம் கொண்டு வெறுப்பை கக்குவது சரியாக்கப்படவில்லை…

    நிச்சயம் பாகிஸ்தானை விட இந்தியா அனைத்து வகையிலும் உயர்ந்த தேசம் தான்…

   • பசு கொலை கூட ஒரு aberration என்று சொல்ல கூடிய விதிவிலக்கு தான், நிச்சயம் பசுக்கொலைகள் இந்த தேச மக்களின் மனநிலையை குறிக்கும் குறியீடு அல்ல… இந்த மாதிரியான விஷயங்கள் கூட இருக்க கூடாது, அது பற்றி நீங்கள் விமர்சனம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பாகிஸ்தானை விட இந்தியாவை மட்டமான தேசம் என்பது போல் சொல்வதை ஏற்க முடியாது.

   • யாருக்கு யார் சொம்படிக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். நீங்கள் மட்டும் என்ன யோகியமா ? அந்த “சித்த வைத்திய கட்சியின்” சொம்பு தானே வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க