த்தர பிரதேச மாநிலத்தில் மாடுகள் வெட்டப்பட்டதாகக் கூறி வன்முறையில் இறங்கிய காவி கும்பல், போலீசு அதிகாரி சுபோத் குமார் சிங்கை சுட்டுக் கொன்றது. இந்த வன்முறையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் ஒருவரும் கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில், கொலை மற்றும் வன்முறை சம்பவங்களைத் தலைமையேற்று நடத்திய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த யோகேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

யோகேஷ்ராஜ் (நீல நிற உடை அணிந்திருப்பவர்)

டிசம்பர் 3-ம் தேதி நடத்திய வன்முறை-கொலைவெறி ஆட்டத்தைத் தொடர்ந்து காணாமல் போன யோகேஷ் ராஜ், புதன்கிழமை இரவு உ.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக ஓடிப்போய் ஒளிந்துகொண்டு, இந்த வன்முறைகளுக்கும் எனக்கும் தொடர்ப்பே இல்லை என சத்தியம் செய்த இவர், தற்போது வன்முறையில் ஈடுபட்டதையும் காவல் நிலையத்தின் மீது கல்லெறிந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

மகாவ் என்ற கிராமத்தில் மாடுகளை வெட்டியதாகக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட 27 தெரிந்த நபர்களின் பெயர்களும், 50-60 முகம் தெரியாத நபர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் யோகேஷ் ராஜ் உள்ளிட்ட 31 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

படிக்க:
♦ அக்லக் வழக்கை விசாரித்த அதிகாரி சுபோத் குமாரை கொன்ற இந்துமதவெறியர்கள் !
♦ சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !

சில நாட்களுக்கு முன்னதாக கலுவா என்பவர், போலீசு அதிகாரி சுபோத் சிங்கை கோடாரியால் வெட்டிய குற்றத்துக்காக கைது செய்யபட்டார். அவருடைய இடத்திலிருந்து சுபோத் சிங்கை வெட்டிய கோடாரியும் கைப்பற்றப்பட்டது.

கொல்லப்பட்ட அதிகாரி சுபோத்குமார் சிங்

கோடாரியால் வெட்டப்பட்ட சுபோத் சிங்கை, பிரசாந்த நட் என்ற டெல்லியைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர், அவரிடமிருந்த துப்பாக்கியை பறித்து அவரைச் சுட்டிருக்கிறார். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலும் மற்ற குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரசாந்த நட், சுபோத் சிங்கை சுட்டது உறுதியானது.

இதனிடையே யோகேஷ் ராஜ், மாட்டை வெட்டியவர்கள் என புகார் அளித்திருந்தவர்கள் அப்பாவிகள் என சிறப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மாட்டை வெட்டிய வழக்கில் தாமாக முன்வந்து ஒருவர் சரணாகியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. வயதாகி கைவிடப்பட்ட மாடுகள், விவசாய நிலங்களில் புகுந்து கபளிகரம் செய்து விடுகின்றன. இதனால் இரவு முழுவது விளை நிலங்களில் விவசாயிகள் காவல் காக்கின்றனர்.  ஒரு சிலர் அவைகளை துப்பாக்கியால் சுட்டும் விரட்டுவதுண்டு; அடித்தும் விரட்டுவதுண்டு. மத பாகுபாடு இன்றி மாடுகளை இப்படித்தான் இந்துக்களும் விரட்டுகிறார்கள். இதை அரசியல் காரணத்துக்காக பயன்படுத்த திட்டமிட்ட காவி கும்பல், வன்முறை வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது. அதனை வைத்து போலீசு அதிகாரி சுபோத் குமார் சிங்கை திட்டமிட்டுப் படுகொலை செய்திருக்கிறது.


கலைமதி
செய்தி ஆதாரம்: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க