த்தர பிரதேசத்தில் ’பசுப் பாதுகாப்பு’ இந்துத்துவ கும்பலால் போலீசு அதிகாரி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். உ.பி.யின் புலந்த்சாகர் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட இந்துத்துவ கிரிமினல்களைக் கொண்ட கும்பல் ஒன்று நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் போலீசு அதிகாரி சுபோத் குமார் சிங் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

திங்கள்கிழமை காலை புலந்தசாகர் மாவட்டத்தில் உள்ள மகாவ் என்ற கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் வெட்டப்பட்ட மாட்டின் மிச்சங்கள் இருந்ததாகவும் இதைக் கண்ட ஊர்மக்கள் ‘கொதித்தெழுந்து’, இந்துத்துவ மாட்டிறைச்சி கும்பலை போராட அழைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. காலை 10 மணியளவில் கிட்டத்தட்ட 400 பேர் ஒன்றுதிரண்டு, சிங்கார்வாடி காவல்நிலையத்தை முற்றுகை இட்டிருக்கின்றனர். போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பி, நெடுஞ்சாலையையும் முடக்கியுள்ளனர்.

வன்முறைக் கும்பலைக் கூட்டிய வி.எச்.பி. கிரிமினல் யோகேஷ் ராஜ்

கும்பலை கட்டுப்படுத்த போலீசு வரவழைக்கப்பட்டு, கலைந்துபோகச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் வெறி கொண்ட கும்பல் கலையவில்லை.  கற்களை வீசியும் வாகனங்களை கொளுத்தியும் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. அப்போது, கும்பலைக் கட்டுப்படுத்த வேறொரு போலீசு நிலையத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சுபோத் குமார் சிங்கை அக்கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதில் காயமடைந்தவரை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனத்தை வழிமறித்த கும்பல், கண்மூடித்தனமாக சுட்டத்தில் சுபோத் குமார் சிங் குண்டடிபட்டு இறந்தார்.

படிக்க:
♦ கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?
♦ சட்டப்பூர்வமாகும் பசுப் பாதுகாப்பு காவி குண்டர் படை !

இந்த வன்முறை சுபோத் குமார் சிங்கை கொல்வதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையாக இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. முதலாவதாக உ.பி. மாநிலத்தை ஆள்வது பாஜக. அதன் முதலமைச்சராக இருப்பவர் கும்பல் வன்முறைக்கு பெயர் போன ஆதித்யநாத். இவர் பதவியேற்றதிலிருந்தே சிறுபான்மையினர், தமக்கு வேண்டாதவர்கள் என நூற்றுக்கணக்கானோரை போலி என்கவுண்டர்கள் நடத்தி கொன்று குவித்து சாதனை படைத்தவர். போலீசை முழுக்க முழுக்க தமது கைக்குள் வைத்திருப்பவர். ஆட்சியும், போலீசும், இந்துத்துவக் கும்பலும் தங்கள் கையில் இருக்கும்போது, ஆதித்யநாத்துக்கு தெரியாமல் இந்துத்துவக் கும்பல் வன்முறையில் இறங்குமா?

கொல்லப்பட்ட அதிகாரி சுபோத்குமார் சிங்

இரண்டாவதாக, இந்தக் கொலையை இந்துத்துவ கும்பல்கள் செய்திருப்பதற்கான காரணம் இருக்கிறது. கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார், கடந்த 2014-ம் ஆண்டு மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி அடித்துக்கொல்லப்பட்ட அக்லக் வழக்கை விசாரித்த போலீசு அதிகாரி. இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த போதே, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். அக்லக் வீட்டு குளிர்பதன பெட்டியில் இருந்த இறைச்சியை உடனடியாக பரிசோதனைக்கு அனுப்பி, முதல் ஆய்வில் அது ஆட்டிறைச்சிதான் என வெளி உலகுக்கு தெரிந்ததற்குக் காரணம் இவர். இதனால்  இந்துத்துவக் கும்பலின் வெறுப்பை சம்பாதித்திருந்தார்.

மேலும், சுபோத் குமார் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது அவர் தற்செயலாக குண்டடிபட்டு இறந்திருக்கலாம் என்பதைவிட, திட்டமிட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்காக சாட்சியங்களே அதிகமாக உள்ளன.

  • கும்பலால் தாக்கப்பட்ட சுபோத் குமாரை ஏற்றிக்கொண்டு சென்ற கார் டிரைவருக்கு எந்த அடியும் படவில்லை. ஆனால் அந்தக் கார் முழுவதும் குண்டுகளால் துளைக்கப்பட்டிருக்கிறது.
  • டிரைவரைத் தவிர, சுபோத் குமார் கொல்லப்பட்ட நேரத்தில் எந்த போலீசு அதிகாரியும் சம்பவ இடத்தில் இல்லை. அவருடைய துப்பாக்கியும் செல்போனும் திருடப்பட்டுள்ளன.
  • உயிரிழந்து தலைகீழாக வண்டியிலிருந்து தொங்கும் அவருடைய உடலை வெறி பிடித்த கும்பல் படம் பிடிக்கிறது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டபடி இருக்க,’அவனை சுட்டுக்கொல்லுங்கள்’ என பின்னணியில் பேசுவதும் பதிவாகியுள்ளது.
திட்டமிட்டு உருவாக்கபப்ட்ட வன்முறையில் எரிக்கப்பட்ட வாகனங்கள்

போலீசை ஏவி சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்ட கொலைகளை அரங்கேற்றும் சாமியார் ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஒரு போலீசு அதிகாரி கொல்லப்படுகிறார் எனில் நிச்சயம் இது திட்டமிடப்பட்டதாகத்தான் இருக்கும் என சமூக ஊடகங்களில் பத்திரிகையாளர்கள் பலர் எழுதி வருகின்றனர்.

பல தரப்பினரிடமிருந்து வந்த கடுமையான எதிர்வினைகளைத் தொடர்ந்து சுபோத் குமாரின் மரணத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 30 லட்சம் நிதியை சுபோத் குமாரின் குடும்பத்துக்கு அறிவித்திருக்கிறார் தன் மாநிலத்தை வன்முறை காடாக்கிவிட்டு தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் ஆதித்யநாத்.

படிக்க:
♦ யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு அருகே கோரக்பூர் அரசு மருத்துவர் கானின் தம்பி சுடப்பட்டார் !
♦ குலாம் அகமதுவைக் கொன்ற யோகி ஆதித்யநாத்தின் ஹிந்து யுவ வாகினி

சுபோத் குமார் சிங் கொலையில் வி.எச்.பியைச் சேர்ந்த யோகேஷ் ராஜ் என்பவர் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர்தான் மகாவ் கிராமத்தில் 25 பசுக்களின் மிச்சங்கள் கிடைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தவர்.

தங்களுக்கு எதிராக இருக்கும் நேர்மையான நீதிபதிகளை, அதிகாரிகளை, போலீசை, வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் சக மனிதர்களை கொன்று குவிப்பதில் இந்துத்துவ கும்பல் முனைப்பாக உள்ளது. பாசிச வெறி பிடித்த இந்தக் கும்பலை துடைத்தெறிவதை மக்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

செய்தி ஆதாரம்:

♦ Investigating officer of Akhlaq lynching case shot dead during mob protest against cow slaughter in
♦ 4 Arrested In UP Cop Murder; Main Accused Had Complained Of Cow Killing

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க