ந்துத்துவ சாமியார் யோகி ஆதித்யநாத் அரசாங்கம், மருத்துவர் கஃபீல் கானை விடாது துரத்திக்கொண்டிருக்கிறது.

அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேசியதாகக் கூறி, மருத்துவர் கஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது உ.பி. அரசு.

வெள்ளிக்கிழமை கஃபீல் கானின் ட்விட்டர் பக்கத்திலிருந்து அவருடைய மனைவி டாக்டர் சமிஸ்தா கான், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், காரணமே இல்லாமல் கஃபீல் கானை போலீசு துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மருத்துவர் கஃபீல் கான்

டிசம்பர் 13-ம் தேதி இந்திய குற்றவியல் பிரிவு 153 ஏ கீழ் இரு பிரிவினரிடையே பகைமையை வளர்ப்பதாகக் கூறி மும்பையில் கான் மீது வழக்கு பதியப்பட்டது. அதன் பேரில் கைதான அவர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

பிப்ரவரி 10-ம் தேதி பிணை கிடைத்தபோது, மதுரா சிறையில் அவர் கைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் டிசம்பர் 12-ம் தேதி அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் பேசியபோது, முசுலீம் மாணவர்களை தூண்டும்விதமாகப் பேசியதாக அவர் மீது NSA கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை பலர் கண்டித்துள்ளனர். இயக்குநர் அனுராக் காஷ்யப் எதற்காக இந்த சட்டத்தின் கீழ் வழக்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘இந்த மசோதாக்கள் மற்றும் சட்டங்கள் அனைத்தும் எதிர்ப்பை அடக்குவதற்காக அரசாங்கத்தின் கருவிகள். அதனால்தான் எந்த சட்டங்களையும் நாங்கள் நம்பவில்லை. அவர்களுடைய நோக்கங்கள் இருண்டவை; மோசமானவை என கூறியுள்ளார்.

படிக்க :
ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !
♦ நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !

அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ், உ.பி. அரசு காஷ்மீர் அடக்குமுறை வழிகளைப் பின்பற்றுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பலிவாங்கிய அரசு மருத்துவமனை முறைகேட்டை வெளிகொண்டுவந்த மருத்துவர் கஃபீல் கானை, இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் அரசு துரத்தி துரத்தி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஆதித்யநாத் அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போர் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்துக்கு அடுத்தபடியாக இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக உத்தரப் பிரதேசத்தை மாற்றி வருகிறது யோகி அரசு!


கலைமதி
நன்றி :  த க்விண்ட். 

2 மறுமொழிகள்

  1. இருண்ட காலம். சமூகத்தில் அறியப்பட்ட ஒரு பிரபலமான மனிதருக்கே இதுதான் நிலைமை என்றால் சாதாரண மக்களின் கதி என்னவாகும்? சாமியார் என்றால் முற்றும் துறந்தவர் அல்லவா? பற்றற்றவர் அல்லவா? இந்த ‘சாமியார்’ ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் போது எப்படி சாமியாராக இருக்க முடியும்? ஊரை ஏமாற்றும் இந்த மோசடிகளை தொடர்ந்து அம்பலப் படுத்துவோம். பார்ப்பன பாசிச கும்பலை ஒழித்துக் கட்டாமல் மக்களுக்கு விடிவு இல்லை. வெறும் ரௌடி அல்ல. பார்ப்பன பாசிச கும்பல்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க