privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாநாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !

நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !

“அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் பெண்கள் மீது பயங்கரவாதிகள், துரோகிகளென்று முத்திரை குத்தப்பட்டால் அதைக் கண்டு அமைதியாக இருக்க மாட்டோம்”

-

நாட்டில் தற்போது பெருகிவரும் வன்முறைச் சூழலைக் கண்டித்து 170-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பெண்ணிய சமூக செயற்பாட்டளர் குழுக்கள் கடந்த திங்கள் (03-02-2020) அன்று மோடிக்குத் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர். இக்கடிதத்தில் பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளையும், டில்லியில் நடைபெறவிருக்கும் தேர்தலை ஒட்டிய அவர்களது பரப்புரைகளில் வெளிப்படும் பாலியல் வன்முறை அச்சுறுத்தல்களைக் குறித்தும் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

அக்கடிதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய திட்டங்களுக்கு எதிராகப் போராடும் பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறு தங்களது கட்சித் தொண்டர்களை பாஜக தலைவர்கள் வற்புறுத்துவதன் மூலம், ஒரு வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் இந்தியப் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பல்வேறு பெண்ணிய, பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் இந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டில்லி சஹீன் பாக் பகுதியில் போராடிக் கொண்டிருப்பவர்கள், அப்பகுதியில் இருப்பவர்களின் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் உள்ள பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொலை செய்துவிடுவார்கள், என்று பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா கடந்த வாரத்தில் பேசியதை சுட்டிக் காட்டி, இந்தப் பேச்சு மிரட்டும்படியானதாகவும், அச்சமூட்டும்படியானதாகவும், பெண்களை பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும்படியானதாகவும் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

“பாஜக-வுக்கு ஓட்டளியுங்கள் ! இல்லையெனில் பாலியல் வன்முறை செய்யப்படுவீர்கள் !” என்ற பாணியிலான பாஜக-வின் டெல்லி தேர்தல் பரப்புரைகளைச் சுட்டிக் காட்டி, அதுதான் டில்லி பெண்களுக்கு பாஜக சொல்லவரும் தேர்தல் செய்தியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், “தற்போது பாஜக இந்தியாவின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை வெளிப்படையாகவே ஆபத்திற்குள்ளானதாக மாற்றுகிறதா ? உங்கள் கட்சி இவ்வளவு கீழ்த்தரமானதுதானா ?” என்று கடுமையாக விமர்சனத்தை தங்களது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

படிக்க:
♦ அடிமாட்டு விலைக்கு ஏர் இந்தியா விற்பனை : கார்ப்பரேட் அடிமை அரசு !
♦ CAA எதிர்ப்புப் போராளிகள் பாலியல் வன்முறையாளர்களாம் ! பாஜக எம்பி பேச்சு !

“உங்களது கட்சி உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட வன்முறைச் சூழல், ‘ராம்பக்தன்’ கோபாலை ஜாமியா கல்லூரியின் அப்பாவி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டியுள்ளது. உங்கள் கட்சியால் பரப்பப்படும் வெறுப்பை ஆயுதமாக்கிக் கொண்ட மற்றொரு தீவிரவாதி பிப்ரவரி 1 அன்று ஷாஹின் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதை வரலாறு பதிவு செய்யும். இந்தியா இதை மன்னிக்காது திரு பிரதமமந்திரி அவர்களே.” என்றும் அக்கடிதத்தில் மோடியைச் சாடியுள்ளனர்.

ஷாஹின் பாக் போராளிகளை மிரட்டும் பாஜக தலைவர்கள். அனுராக் தாகூர், அமித் ஷா, பர்வேஸ் வர்மா.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பெரும் கூட்டத்தின் முன், “துரோகிகளை சுட்டுத்தள்ளுங்கள்” என்று கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் அக்கடிதம், அமைச்சரால் துரோகிகளாக சித்தரிக்கப்படுபவர்களும், சுடப்பட்டவர்களும் , ஷாஹின் பாக்கில் அமைதியாகப் போராடி வரும் அப்பாவிப் பெண்களே என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், உ.பி. -யின் ரவுடி முதல்வர் யோகி ஆதித்யநாத் “அவர்கள் வார்த்தைகளின் மூலம் புரிந்து கொள்ளவில்லை என்றால், தோட்டாக்கள் மூலம் நாம் அவர்களுக்குப் புரிய வைப்போம்” என்று கூறியதையும், அமித்ஷா தனது தேர்தல் பரப்புரையின்போது, “தேர்தல் இயந்திரத்தில் டில்லி மக்கள் அழுத்தும் பொத்தான், போராடும் பெண்களுக்கு மின்சார அதிர்வைத் தர வேண்டும்” எனக் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி கண்டித்துள்ளனர்.

“இந்த நாட்டுப் பெண்கள், நாட்டின் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் என்றும் துரோகிகளென்றும் முத்திரை குத்தப்பட்டால் அதைக் கண்டு அமைதியாக இருக்க மாட்டோம்.” என்று மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோடி மஸ்தானின் பாசிசம், அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் கிளர்ந்தெளச் செய்துள்ளது. அந்த வகையில் இன்று தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற திட்டங்களுக்கு எதிராக பெண்களே வீதியில் இறங்கியுள்ளனர். பாசிச ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தப் போரில் பெரும்பானமையினரை தனக்கு எதிராகவே அணிசேர்த்திருக்கிறது இந்த மோடி அரசு !

நந்தன்
நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க