முகப்புசெய்திஇந்தியாசபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !

சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓவராக சவுண்டு விட்டவர் ராகுல் ஈஸ்வர். யார் இவர்...?

-

பரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததும் இந்துத்துவ வலதுசாரி இயக்கங்கள் இதுதான் வாய்ப்பு என இந்த விவகாரத்தை இறுகப் பிடித்துக்கொண்டன. மக்களிடம் அடிப்படைவாத எண்ணங்களை திணித்து கேரள மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த விஷ விதையை பரவவிட்டதில் முக்கிய பங்காற்றிய நபர் ராகுல் ஈஸ்வர்.

ராகுல் ஈஸ்வர்

சபரிமலை தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த (பெண்வழி உறவு) ராகுல் ஈஸ்வர், ‘அய்யப்ப தர்ம சேனா’ என்ற பெயரில் சபரிமலை பக்தர்கள் அமைப்பொன்றை நடத்தி வருகிறார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்த ராகுல் ஈஸ்வர், தன்னை காந்தியவாதியாகவும் மைய (!) வலதுசாரி எனவும் கூறிக்கொள்கிறார். அதோடு, அனைத்து மதத்துக்கு ஆதரவான ‘இந்து’ எனவும் கூறுகிறார்.

லண்டன் ஸ்கூலில் எகனாமிக்ஸ் படித்த ராகுலுக்கு இந்துத்துவத்தை வளர்ப்பதில்தான் ஈடுபாடு. 2007-ஆம் ஆண்டும் எம்.எஃப் உசைனுக்கு கேரள அரசு விருது அளித்தது. உசைன் இந்து கடவுள்களை அவமதித்ததாகக்கூறி அவருக்கு விருதளிப்பதை எதிர்த்து ராகுல் ஈஸ்வர் முதல் களம் கண்டார்.

படிக்க :
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

அடுத்து, 2012-ல் மகரஜோதி ஏற்றும் உரிமையை தங்களிடமிருந்து கேரள தேவசம் போர்டு பறித்துக் கொண்டதாகக் கூறி மலை அரயா என்ற பழங்குடி பிரிவினர் போராட்டம் நடத்தினர். அதை பல இந்துத்துவ அமைப்புகள் ஆதரித்தன. சுமார் ஆயிரம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராகுல் ஈஸ்வர் கைதானார்.

2015-ல் உ.பி. மாநிலம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக்கூறி அக்லக் என்ற முதியவர் கொல்லப்பட்டதை எதிர்த்து கேரள மாநில கல்லூரிகளில் மாட்டிறைச்சி திருவிழா நடந்தது.  மிலது இ ஷெரிப் மெமோரியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய விழாவை எதிர்த்து ஈஸ்வர் கொடுத்த புகாரின் பேரில் 25 மாணவர்கள் கைதாகினர்.

அனைத்து மதத்தினருக்கும் ஆதரவான காந்தியவாதி ராகுல் ஈஸ்வர், 2017-ஆம் ஆண்டு கேரள மீடியாக்களின் பேசுபொருளான லவ் ஜிகாத் – ஹாதியா விவகாரத்தில் ஹாதியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அதன்பின், ஹாதியா, தன் அம்மாவுடன் இசுலாம் மதத்தை பின்பற்றவும் இசுலாமியரை மணக்கவும் தனக்கு உரிமையுண்டு என பேசிய உரையாடலை பொதுவெளியில் விட்டார்.

நேரத்துக்கு தகுந்த வேடம் போடுவதில் சங்கிகளின் டிசைன் ஒரேமாதிரியானது. ஹாதியா விவகாரத்தில் உரிமை பேசிய ராகுல், சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்கிறார்.

சங்கிகள் முன்னெடுத்த சபரிமலைப் போராட்டத்தை தன்னுடைய ஓட்டுபொறுக்கி அரசியலுக்காக காங்கிரஸ் பெரும்திரள் போராட்டமாக மாற்றியது. ஒரு வார காலம் சபரிமலை போராட்டக்களமாக காட்சியளித்தது. வெளிமாநிலங்களிலிருந்தெல்லாம் ஆட்களை இறக்கினார்கள் சங்கிகள். ‘மைய வலதுசாரி’யான ராகுல் ஈஸ்வர் உற்சாகம் கொண்டு, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழைவதைத் தடுக்க, 20 ஐயப்ப பக்தர்கள் சன்னதியில் கழுத்தை அறுத்து ரத்தம் சிந்த தயாராக இருக்கிறார்கள் என்றார்.

படிக்க :
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
சபரிமலை பெண்களை நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !

கலவரத்தை தூண்டும்விதமாக பேசியதாக வழக்குப் போட்டு ஈஸ்வரை கைது செய்தது கேரள அரசு. தற்போது பிணையில் வந்திருக்கும் அவரை, தந்திரி குடும்பம் கடுமையாக சாடியுள்ளது. இதுநாள் வரை தந்திரி குடும்பத்தை சார்ந்தவன் எனக்கூறிக்கொண்டு பிழைப்பு நடத்திய ராகுல் ஈஸ்வருக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்ப்பும் இல்லை என தந்திரியே விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆண்வழி மரபை பின்பற்றும் தந்திரி குடும்பத்தில், பெண் வழி உறவில் பிறந்த ராகுல் தங்களின் பிரதிநிதியாக பேசுவதை நிறுத்த வேண்டும் எனவும் பேசியிருக்கிறார். சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்கிறார் ராகுல் ஈஸ்வர், பெண்வழியில் பிறந்ததால் தந்திரி குடும்பத்துக்குள் நுழையவே முடியாது என்கிறார்கள் தந்திரிகள். புயலாக புறப்பட்ட ‘மைய வலதுசாரி’யின் நிலைமை இப்போது கவலைக்கிடமாக உள்ளது.

அசிங்கப்பட்டு காறிதுப்பப்படும் வலதுசாரிகளுக்கு சங்கிகள் பதவியும் பாராட்டும் அளிப்பதும் இந்திய வரலாற்றில் நடந்துவரும் விஷயம். எனவே, கூடிய விரைவில் மோடியும், அமித்-ஷாவும் ராகுலை கட்டியணைத்து கேரள பாஜக-வில் இணைத்து கொள்ளும் காட்சியைப் பார்க்கலாம்.

செய்தி ஆதாரம்:
Sabarimala: Supreme priest’s grandson detained and released 
Arrested for Sabarimala remark, Rahul Easwar was earlier in news for supporting Hadiya

  1. //சங்கிகள் முன்னெடுத்த சபரிமலைப் போராட்டத்தை தன்னுடைய ஓட்டுபொறுக்கி அரசியலுக்காக காங்கிரஸ் பெரும்திரள் போராட்டமாக மாற்றியது….//

    என்ன வினவு .. சென்னையில் நீங்கள் நடத்திய கருத்துக்கணிப்பிலேயே, பெண்கள் 65 விழுக்காடு(இதில் எனக்கு சந்தேகம் உண்டு 95 % இருக்கும், நீங்கள் 25 முதல் 30 % வரை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள் என்பதே என் நம்பிக்கை) பெண்கள் சபரிமலைக்கு செல்வது கூடாது தான் என்று வாக்களித்திருக்கிறார்கள். எந்த சங்கி சொல்லி அவர்கள் உங்களுக்கு எதிராக வாக்களித்தார்கள். சென்னையிலேயே, பெரியார் மண்ணிலேயே இப்படி என்றால், அங்கே மலையாள தேசத்திலே சபரிமலை இருக்கும் மண்ணில் உள்ள ஹிந்து நம்பிக்கை கொண்ட பெண்களை பற்றி கேட்கவா வேண்டும். இதனை நடத்தியது பொது மக்கள் தான். அதிலும் கேரள பெண்கள் மிகவும் அறிவானவர்கள். அப்படி எல்லாம் அவர்கள் லட்சக்கணக்கில் சங்கிகள் கூப்பிட்டதும் வீதிக்கு வந்து விடமாட்டார்கள்.

    இந்த விடயத்தில் சங்கிகள் காங்கிரஸ்காரர்கள் உள்ளே புகுந்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள் அவ்வளவே.. மற்றபடி இது முழக்க முழுக்க கேரள இந்துக்கள் நடத்தும் போராட்டமே.. இந்த உண்மை உங்களுக்கும் தெரியும், ஆனால் இந்த உண்மையை தெரிந்தே உங்களின் சித்தாந்த லாபத்திற்காக நீங்கள் மறைக்கிறீர்கள்….

  2. இவன் ஒரு மோடு முட்டி, கேரளா ஆத்திகர்களே இவனை காறித்துப்புகிறார்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க