சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

டாஸ்மாக்கிலே தனி கிளாஸ் பாரிலே... மாலை கழுத்திலே… மட்டன் சுக்கா வாயிலே பீடி சிகரெட்… சாமி சரணம்… தப்பில்லே... பொண்டாட்டி வந்தா மட்டும்… புலி அடிக்குமாம் காட்டிலே !

#ayyappa #ReadyToWait #sabarimala #SabarimalaTemple

பரிமலையில் பெண்கள் நுழையலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், சங்க பரிவாரக் கும்பல், சபரிமலையில் பக்தர்களைச் சுரண்டித் தின்னும் தந்திரி குடும்பம்,   கேரளத்தின் பழமையின் அடையாளமான அரச குடும்பம் ஆகியவற்றின் ‘புனித’க் கூட்டு பெண்கள் நுழைவுக்கு எதிராக வெறியாட்டம் ஆடத் தொடங்கியிருக்கிறது.

சபரிமலையில் நடை திறக்கபட்ட பிறகு அங்கு சென்ற பல பெண்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி தாக்கத் தொடங்கியது சங்கப் பரிவாரக் கும்பல். இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் என வட இந்திய சங்க பரிவாரக் கும்பலை களத்தில் இறக்கி விட்டு இந்தத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதல்களை பக்தர்கள் போராட்டம் என செய்தி போட்டு சங்க பரிவாரத்திற்கு தனது சேவையை செவ்வனே செய்தன தமிழ் இந்து போன்ற பத்திரிகைகள். இதே பத்திரிகைதான் தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலவரக்காரர்கள் என எழுதியது.

1970-களுக்கு முன்னர் அனைவரும் சென்ற கோவில் என்பதில் தொடங்கி ஆகம விதிகள் எதுவும் இல்லாத மலைக் கோவில் தான் ஐயப்பன் கோவில் என்பது வரையில் பல்வேறு ஆதாரப் பூர்வமான விவரங்கள் சொல்லப்பட்டும், இது நம்பிக்கை சார்ந்த விசயம் எனக் குதிக்கின்றனர் சங்கிகள். சபரி மலைக்கு பெண்கள் தீட்டு என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் குரல் என்பதை அம்பலப்படுத்தி வெளிவந்திருக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல், “சபரி மலைக்கு வந்தா தீட்டா?”

பாடல் வரிகள்:

சபரிமலைக்கு வந்தா  தீட்டா தீட்டா?
எங்களைத் தடுக்க  தனி பூட்டா பூட்டா?
கடவுளின் நாட்டிலே … பெண்களை தடுக்குறே
gods  –  own country      ladies no entry
எந்தா  நியாயம் பறையூ சேட்டா சேட்டா!

அய்யப்பன் பிரம்மச்சாரி அவருக்கும் டவுட்டில்ல
ஆம்பிளை சாமிக மேல எங்களுக்கும் டவுட்டில்ல
ஆர்எஸ்எஸ் சங்கிகதான் ஆடுதுங்க  நடுவுல
உன் மேல டவுட்டுன்னா –  நீஇருந்துக்க வூட்டுல!

நாலுமணிக்கு   எழுப்பிவுட்டு
நானும் உன்கூட விரதமிருந்து
விடிய விடிய பஜனை பாட்டு
பட்டாளத்துக்கே ஆக்கிப்போட்டு
மகளிர் குழுவில் சீட்டு போட்டு
திரும்பும் வரைக்கும் விளக்கு போட்டு
திங்கிறதெல்லாம்  தின்னுபுட்டு
மலைக்கு மட்டும்…    பொம்பளை தீட்டு…

டாஸ்மாக்கிலே  தனி கிளாஸ் பாரிலே
மாலை கழுத்திலே… மட்டன் சுக்கா வாயிலே
பீடி சிகரெட்டு… சாமி சரணம், தப்பில்லே
பொண்டாட்டி வந்தா மட்டும்… புலி அடிக்குமாம் காட்டிலே!

மாராப்பு போட்டதுக்கு
மார்பை  அறுத்த  நாடு
மார்பை மறைப்பதற்கு
முலை வரி போட்ட நாடு
நாயர்  குல பெண்களை
நம்பூதிரிகள்  சிதைத்த  நாடு
அது கடவுளின் சொந்த நாடு…
தொடருது சாபக்கேடு!

பாடல் காணொளி:

Lyrics – English

They say we pollute the temple
They say we should be stopped – to save the God
This is God’s own country – Ladies.. No entry !
Is it fair ? Tell me chetta (brother) !

Lord Ayyappa is a brahmachari –
He is not afraid of us
Not doubtful of his celibacy
The male devotees –
We do not doubt their vow of celibacy either
Sanghis, if you are threatened by our presence
You better stay at home – Do not raise a ruckus

My dear husband,
Here is the story of your pilgrimage…
At 4 in the morning – I wake you up
With you – I observe all your vratas
You come in dozens for the nithya pooja
sing bhajans all through the night
I cook the feast – all of you eat heartily
No pollution then.
but for the temple, women are polluted.

Liquor does not pollute –
Bars provide ‘holy glasses’ for the Ayyappanmar.

occasional mutton sukka – also not a pollutant
smoking, no bar – these are modern days.

A mensurating wife ? No entry
She may risk losing her life
to the tigers of sabari hills

You say its all about tradition
The tradition that cut off the breasts of our women
for wearing the upper cloth
Your tradition of breast tax
The tradition that gave licence to the namboodiri brahmins
to ruin nair women at will

This is not tradition, but a curse –
The curse that continues to chase
the Gods own country.

Song Video:

படிக்க:
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

27 மறுமொழிகள்

 1. வரி ஒண்ணொண்ணும் தீயாத் தெரிக்கிது
  இதுல்ல பாட்டு.
  அருமையோ அருமை.

 2. //நாலுமணிக்கு எழுப்பிவுட்டு
  நானும் உன்கூட விரதமிருந்து
  விடிய விடிய பஜனை பாட்டு
  பட்டாளத்துக்கே ஆக்கிப்போட்டு
  மகளிர் குழுவில் சீட்டு போட்டு
  திரும்பும் வரைக்கும் விளக்கு போட்டு
  திங்கிறதெல்லாம் தின்னுபுட்டு
  மலைக்கு மட்டும்… பொம்பளை தீட்டு…//

  அப்படின்னு ஐயப்பன் மீது நம்பிக்கை கொண்ட பெண்கள் கேட்கட்டும், பிறகு மற்றதை பேசி கொள்ளலாம் … மற்றபடி உங்கள் பெண் தோழர்கள் கேட்பதெல்லாம் விஷயமே அல்ல, விட்டால் உங்கள் பெண் தோழர்களுக்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு அனுப்பி விடுவீர்கள் போல …..

  • சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுமுகசாமி என்ற பக்த அடியார் தேவாரம் பாடச்சென்ற போது கோவிலை சேர்ந்த பார்ப்பன ரவுடிகள் வயதுக்கு கூட எந்த பரிவும் காட்டாமல் அடித்து தூக்கி வீசினர்.அந்த சமயத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் பிற ஜனநாயக அமைப்புகளை திரட்டி போராட்டத்தின் மூலம் தேவாரத்தை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் பட விளைந்த போது எந்த “பக்தாசும்” இந்த பார்ப்பன நாட்டாண்மையை எதிர்த்து பாடுவதற்கு வரவில்லை.அப்போதும் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தோழர்கள்தான் சன்னதியில் தேவாரம் பாடி பக்த்தர்களின் ‘நியாயமான உரிமையை’ நிலைநாட்டினர்.

   • ஒன்றோடொன்று சம்மந்தமில்லாத உளறல்.. பதில் அளிப்பது கால விரயம்

    • இரண்டுக்கும் உள்ள சம்பந்தத்தை புரிந்து கொள்ள முடியாத மூடரா நீங்கள் ?

    • rebecca mary உங்கள் மூளையில் பார்ப்ப்னீய கொழுப்பு ஆக்கிரத்துள்ளது.உங்களால் புரிந்து கொள்ள முடியாது 😷

  • இதே மாதிரி இந்துக்கள் விசயத்தில் நீங்கள் எப்படி தலையிடலாம் என்று கேட்கலாமா “ரெபெக்கா மேரி” ?

   • எங்கள் குடும்பத்திலும் இந்துக்கள் இருக்கிறார்கள் ….அதைவிட முக்கியம் எனக்கும் இந்து மதத்தின் மீது மதிப்பும் நம்பிக்கையும் பற்றும் உள்ளது …

    • ஆகா . . . ! உங்கள் இந்துமதப் பற்றுதலைத்தான் நாங்கள் ஆண்டாள் சர்ச்சையிலேயே கண்டோமே . . . !
     சங்கிகளையும் விஞ்சியதல்லவா உங்கள் இந்து மதப்பற்று !
     உங்களைப் போன்றவர்களை சங்கிகள் கொண்டாடுவார்கள். அவர்களுடைய இந்து ராஜியத்தில் ஒரு கிருத்துவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரண மங்கையல்லவா நீங்கள் . . . . !

     • ரெபெக்கா,
      உங்களுக்காவது இந்து மதத்தின் மீது பற்று. ஆனால் எங்கள் தோழர்களுக்கு சாமானிய இந்து மக்கள் மீது பற்று. மதத்தின் மீது பற்று வைக்கும் உங்களைப் போன்றவர்கள் அதன் ஒடுக்குமுறைக்கு துணை நிற்பவர்கள். ஆனால் எங்கள் தோழர்கள் இந்து மக்களின் விடுதலைக்கு போராடுபவர்கள்.

      • //எங்கள் தோழர்களுக்கு சாமானிய இந்து மக்கள் மீது பற்று. //

       LOL…. உங்கள் “தோழர்கள்” ஆடிய ஆட்டத்திலேயே தெரிகிறது ….:‑) :‑) .

       • அம்பலப்பட்டுவிட்டதால் ஏளனம் செய்கிறீர்கள் . . .
        உங்களின் பிறிதொரு நாவினால் இதே “தோழர்களை” நீங்கள் மதித்த தருணங்களும் உண்டு . .
        இரண்டு நாக்குகள் எதற்கு உங்களுக்கு ?
        பிறிதொரு நாவை அறுத்துக் கொள்ளுங்கள் . .

        • எங்கு உங்களுக்கு மரியாதை தரவேண்டுமோ அங்கு உங்களுக்கு மரியாதை தரப்படும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நீங்கள் இருக்கும் வரை தான் மரியாதை மதிப்பெல்லாம் … மேலும் , உங்கள் கேள்விகளுக்கான கோட்டா முடிந்து விட்டது.. இனி உங்களுக்கு பதில் தரப்படமாட்டாது ..

         • rebecca mary உங்களது மரியாதையின் அளவு இருக்கட்டும்.உங்களது விமர்சனம் இல்லை அவதூறுகள் யாருக்காக? RSS ன் சொம்பு தூக்கியாக உள்ளீர்களே அதை முதலில் உணர்ந்து எழுதுங்கள்… மானம் கெட்ட வேலை ஏன்?

          • மானம் கெட்டவர்கள் யார்?, சோரம் போனவர்கள் யார் ?என்பதெல்லாம் அப்சல் குரு, அஜ்மல் கசாப் விஷயத்திலேயே தெரிந்து விட்டது. மானம் ஈனத்தை பற்றி நீங்கள் பேசுவது தான் உண்மையில் அசிங்கம் … அடுத்தமுறை ஒழுங்காக பேசினால் பதில் தரப்படும். இல்லை என்றால் உங்களை அஃறிணையாக பிறவியாக பாவித்து கடந்து தான் நான் செல்ல முடியும் ..

  • மனிதன் 😬 வினவின் பழய கட்டுரைகளை படித்து பாருங்கள்.இஸ்லாமிய பயங்கரவாதம், அடிப்படைவாதத்திற்க்கு எதிரான பல்வேறு செயல்பாடுகளின் பதிவை அறியலாம்…

 3. rebecca mary அவர்களே, மக்களின் பிறப்பிலேயே உயர்வு தாழ்வு பாராட்டி,மனிதகுலத்தின் பெரும்பகுதி மனிதர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், பெண்களை தாழ்வினும் தாழ்வாக மிக மிக இழிவாக கருதும் “இந்துமதம்”என்ற பார்ப்பன மதத்தை உயர்வாக கருதுவதுடன் அதற்க்காக வக்காலத்து வாங்கும் உங்களது கருத்தைத்தான் விமர்சனம் செய்கிறோம் அதுவே புரியவில்லை உங்களுக்கு!!!

  மனிதர்களை நீங்கள் குறிப்பிடும் அஃகிறிணையை விட கேவலமாக கருதும் சனாதனத்தை விட கேவலம் ஏதேனும் உண்டா?
  தாங்கள் என்ன வகையிலும் காரணம் கூறி தப்பிக்க முயற்சி செய்யாமல் இந்துமத மேன்மைகளை பட்டியல் இடுங்களேன் பார்க்கலாம்?

  • நண்பர் முரளி கார்த்திகேயன் அவர்களே இந்த ரெபேக்கா மேரி என்ற நபர் கிறித்தவ பெயரில் ஓளிந்த இந்துதுவ சங்கி. பெண்கள் இவரிடம் முறையிட்டால் மட்டுமே அவர்களின் கோரிக்கையாக எடுப்பாராம்.கேள்விகளுக்கு கோட்டா வைத்துள்ளராம்.என்ன அகங்காரம். தனது அடிமைத்தனத்தை தானே உணராத ஜென்மமோ? இவரது இணையர் நிச்சயம் நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலி என்று நினைப்பார்.

   • pravda ரெபேக்கா மேரி என்ற நபர் கிறித்தவ பெயரில் ஓளிந்த இந்துதுவ சங்கி. பெண்கள் இவரிடம் முறையிட்டால் மட்டுமே அவர்களின் கோரிக்கையாக எடுப்பாராம்.கேள்விகளுக்கு கோட்டா வைத்துள்ளராம்.என்ன அகங்காரம். ///
    மிகவும் சரியான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் நன்றி 🙏

   • pravda அவர்களே நீங்கள் குறிப்பிட்டது போல rebecca mary அவர்கள் பச்சை இந்துதான்!அவரது PROFILE PICTUREஐ பார்த்தாலே புரியும்!
    PROFILE PICTURE சிறிது நேரத்திற்கு முன்புதான் இடுகை செய்யப்பட்டுள்ளது…

    • Lol…. அப்படியா .. ஏன் சிகப்பு, கருப்பு, வெள்ளை இந்துவாக இருக்க கூடாதா.. பச்சையாக தான் இருக்க வேண்டுமா …

 4. உண்மை Pravda அவர்களே !
  இவர் கிருத்துவ பெயரில் உள்ள சங்கி என்பது சிந்திக்க வைக்கிறது.
  இவர் ஏற்கனவே சிலமுறை வந்து குறிப்பாக ஆண்டாள் விசயத்தில் நம் தோழர்களிடம் உதை வாங்கி ஓடியவர்தான்.
  கிரிமினல் ஜெயாவிற்கு நிகரான ஆணவம் கொண்டவர்.

 5. என்ன வினவு… யு ட்யூபில் வாசகர்கள் இந்த பாடலுக்கு உங்களை கழுவி கழுவி ஊத்தி இருக்கிறார்கள் போல … சும்மா சொல்ல கூடாது, நல்லா வச்சு செஞ்சிருக்காங்க ..

  • Rebecca Mary
   நீங்கள் உண்மையிலேயே இந்த பெயருக்கு உரியவராக இருந்தால், அவர்கள் தோழர்கள் பொட்டு இல்லாமல் இருப்பதால் கிருத்துவர்கள் என்று எண்ணி வசைபாடுகிறார்கள். அது உங்களை கோபமூட்டவில்லையா ?

   நிற்க. ஒருவேளை நீங்கள் சங்கியாக இருப்பின், தவறிப்போய் ஏதோ ஒரு நியாயத்திற்காக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் இங்கு தோழர்களுக்கு நேர்வதுபோல் சுஷ்மா ஸ்வராஜுக்கு நேர்ந்ததுபோல் உங்களுக்கும் நேரும் என்பது உண்மைதானே !

 6. rebecca mary அவர்கள் நிச்சயமாக RSS சங்கிதான் அவரது அசாத்திய வாததிறமையை காணும் போது புரிகிறது.மைய்யமான விசயத்திலிருந்து விலகி சம்பந்தமில்லாத சிறிய விசயத்தை வைத்து ( Ex:வடிவேலுவின் என்னத்த கையபுடுச்சு இழுத்தாங்க) திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபடுகிறார்.எச்ச.ராஜா போல அடவடித்தனமான… திமிரான… மூடத்தனமே இவரது வாதமாக உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க