சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி

பெண்களின் மாத ஒழுங்கு (மாத விடாய்) ரத்த வாடைக்கு வன விலங்குகள் வருமாம். எஸ்.வி.சேகரும், எச்ச ராஜாவும் வாயத் தொறந்தா அடிக்காத ரத்த வாடையா பெண்களோட மாத ஒழுங்கில அடிக்குது?

பரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது  என ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் அழிச்சாட்டியங்களை தோலுரிக்கிறார், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை.சண்முகம்.

கிட்டத்தட்ட 1970 வரை ஆண் – பெண் வேறுபாடின்றி சாதாரணமாக சென்று வழிபட்டிருக்கிறார்கள். எந்த சாஸ்திர விரோதமோ, ஆகம விரோதமோ இல்லாத ஒரு மலைக்கோயில் சபரிமலை ஐயப்பன் கோயில். இப்போது திடீரென ஆகமத்திற்கு ஆகாது என்கிறார்கள் இந்துத்துவவாதிகள்.

இன்னும் பலரோ, காலங்காலமாக இருந்து வந்த பழக்கம் என்கிறார்கள். காலங்காலமாக இருந்ததனால், உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? காலங்காலமா தேவதாசி முறையும்தான் நமது நாட்டில் இருந்தது. அதற்காக நம் வீட்டு பெண்ணை தேவதாசி முறைக்கு விடுறேன்னு ஒருத்தர் விடுவோமா? இது இந்து மதத்துல இருந்தது. மத உரிமைன்னு சொன்னா செருப்ப கழட்டி அடிக்க மாட்டோம்?

படிக்க:
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

பெண்களின் மாத ஒழுங்கு (மாத விடாய்) ரத்த வாடைக்கு வன விலங்குகள் வருமாம். எஸ்.வி.சேகரும், எச்ச ராஜாவும் வாயத் தொறந்தா அடிக்காத ரத்த வாடையா பெண்களோட மாத ஒழுங்கில அடிக்குது?

பெண்கள் வந்தா தெய்வக் குத்தமாகிடும்னு சொல்றாங்க .. அது தெய்வக்குத்தமா ? இல்லை பாப்பாரக் குத்தமா ?

ஆண்டவனே பெண்களின் பூஜையை ஏத்துக்கும் போது, பெண்கள் நுழையும் உரிமையைப் பறிக்க இவனுங்க யாரு? ஆண்டவனவிட பெரிய ஆளா? மலைக்கு மாலை போட்டுப் போற ஒவ்வொரு ஆணும், “ எம்பொண்டாட்டிய சாமி கும்பிடக்கூடாதுனு சொல்ல நீ யாருடானு?” இந்த இந்துத்துவக் கும்பலிடம் கேட்கனும்.

மாலைபோட்ட நாள் தொடங்கி, திரும்பி வீட்டுக்கு வரும் வரையில், காலையிலிருந்து பூஜை புனஸ்காரம் செஞ்சி, வீட்டை சுத்தம் செய்து, விரதத்துக்கு உணவு செய்யும் நம் வீட்டுப் பெண்கள் அந்த ஐயப்பனை தரிசிக்கக் கூடாதுன்னா, ஐயப்ப பக்தர்களே.. நீங்களே சொல்லுங்க, இது அந்த சாமிக்கே அடுக்குமா?

சபரி மலையில் பெண்கள் நுழையக் கூடாது எனச் சொல்வது ஐயப்பனின் குரல் அல்ல! ஆர்.எஸ்.எஸ்.-ன் குரல்!

#SabarimalaTemple, #ayyappa, #sabarimala, #ReadyToWait

தோழர் துரை சண்முகத்தின் முழுமையான உரை காணொளியில் காண …

பாருங்கள்! பகிருங்கள்!!

8 மறுமொழிகள்

 1. கேரளாவில் லட்சக்கணக்கான பெண்கள் போராட்டாத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்!! இதனை அனைவரும் அறிவார்கள். இவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஎஸ். இயக்கத்தை சேர்ந்தவர்களா? அப்படியானால் இந்நேரம் பா.ஜ.க. எப்போதே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும்!!! காம்ராடுகள் ஒழியப்போவதற்கு இது ஒரு அறிகுறி மட்டுமே!! அதுமட்டுமல்லாது நக்சலைட்டுகளும் ஒடுக்கப்படுவார்கள்!!!மக்களின் எழுச்சியை கேவலப்படுத்துவது சரியல்ல!! ஒரு 5 பேர் கூடி கோசமிட்டால் அது மக்களின் வெற்றி என்று ஊளையிடும் உங்களைப்போன்ற தீயசகதிகளுக்கு கேரளா மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள்!!

  • நக்சலைட்டுகளும் ஒடுக்கப்படுவார்கள்!!!//
   இந்த டயலாக் 1980களில் எம்.ஜி.ஆர் என்ற பாசிச கோமாளியின் ஆட்சியில் தேவாரம் என்ற DGP கூவியதுதான்.இப்போது மறுஒலி_ஒளி பரப்பு…!

 2. கோட்டி தனமாக பேசிக் கொண்டிருக்கிறார் துரை சண்முகம்..

  2014 இல் ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டபோது போராட்டத்தை முதலில் முன்னெடுத்தவர்கள் அனைவரும் மாடு வளர்ப்போர்கள் மற்றும் மாடு பிடி வீரர்கள் மட்டும்தான்.. 2017 வரை அது வெகு மக்கள் பண்பாட்டு போராட்டமாக மாறவில்லை. அதே போன்று சபரிமலை கோவிலுக்குள் போக வேண்டுமென்று எந்த இந்து மதத்தை சேர்ந்த பெண்ணும் கேட்கவில்லை. இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட எந்த பெண்ணும் நாங்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டும், ஐயப்பனை கண்ணார தரிசிக்க வேண்டும் இந்த பாவி ஆண்கள் விட மறுக்கிறார்களே, எங்களுக்காக யாருமில்லையா? என்று யாரும் கண்ணீர் விடவில்லை. ஆகவே முற்போக்குகள் என்று தங்களை அழைத்து கொள்ளும் நாத்திகர்கள் இந்த விடயத்தில் மூக்கை நுழைப்பது தேவை இல்லாத ஒன்றுதான் ..

  மேலும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டாம் என்று லட்சக்கணக்கான இந்து பெண்கள் பெரியளவில் கேரளாவில் முழுவதிலும் போராட்டம் நடத்துகிறார்கள்.. அந்த கூட்டத்தை பார்த்தால் அது என்னவோ ஆர்.எஸ்.எஸ் திரட்டிய கூட்டம் போல் தெரியவில்லை .. கேரள ஹிந்துக்களே தாங்களாக முன்வந்து தன்னெழுச்சியாக போராடுகிறார்கள்.

 3. rebecca mary சதி எனும் பார்ப்பனீய கொடூரத்தைக்கூட ஒழிக்க வேண்டும் என்று எந்த பெண்ணும் அந்தக்காலத்தில் கேட்க்கவில்லை.ஆனால் இந்தியாவை சுரண்ட வந்த வெள்ளைக்காரனில் நல்லெண்ணம் இருந்த ஆண் அதிகாரி ஒருவன்தான் சதியை தடை செய்தான்.பெண்கள் அந்த காலகட்டத்தில் கேட்க்கவில்லை என்பதால் சதியை நியாயப்படுத்த முடியுமா?

  • தவறான வாதம் .. பெண்கள் கேட்கவில்லை என்பதை தாண்டி, உச்சநீதி மன்ற தீர்ப்பை கண்டித்து பெண்களே லட்சகணக்கில் திரளாக எதிர்க்கிறார்கள் என்று தான் கூறினேன் .. சதி வேண்டுமென்று எந்த பெண்ணும் அப்போது வெள்ளையன் போட்ட சட்டத்தை எதிர்த்து போராடவில்லை . ஆகவே சதியையும், சபரிமலை விவகாரத்தையும் இணைத்து மோசடி செய்ய வேண்டாம். மேலும் சதி என்பது மூட நம்பிக்கை கிடையாது, பின்னாளில் மூட நம்பிக்கையாக மாற்ற பட்ட ஒன்று, அதை பற்றி விரிவாக வேறொரு தளத்தில் பேசலாம் …

   • rebecca :சதி என்பது மூட நம்பிக்கை கிடையாது, பின்னாளில் மூட நம்பிக்கையாக மாற்ற பட்ட ஒன்று//
    என்று எழுதுவதின் மூலம் சதி எனும் கொடூரத்தை நியாயப்படுத்தும் போக்கு உள்ளது.உங்களது மனம் எத்தனை வக்கிரமான கொடூரமானது?

    • ரெபெக்கா கிட்ட முரளி சிக்கிட்டாரு . . . !
     என்ன ஆகப்போறாரோ தெரியல . . . !!
     பயந்து வருது . . . !!!

 4. உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் தான் வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்பதற்காக பக்தர்கள் என்ற போர்வையில் பெண்களை அனுப்பி கொண்டு இருக்கிறீர்கள். அவர்களை சபரிமலையில் பக்தர்கள் தடுக்கிறார்கள்… நீங்கள் எவ்வுளவு தான் RSS பிஜேபி என்று கதை அலைந்தாலும் உண்மையை மறைக்க முடியாது, ஹிந்துக்களின் ஒற்றுமை உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தென்னகத்தில் பிஜேபி வளர்ச்சிக்கு உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களின் ஹிந்து மத எதிர்ப்பு தான் காரணமாக இருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க