என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ

லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்கிறார்.

7

டந்த ஜனவரி 19 மற்றும் 20-ம் தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியும், மாற்று ஊடக மையமும் இணைந்து ”வீதி விருது வழங்கும் விழா” ஒன்றை நடத்தியது. விழாவின் ஒரு பகுதியாக ஓவியர் முகிலனின் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், இதற்காக லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கிகள் பல பெயர்களின் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து தோழர் முகிலனின் அந்த ஓவியங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதுவரை அந்த ஓவியங்களை பார்க்காதவர்களும், அறிந்தவர்களும் முகிலனை ஆதரித்தனர். மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். – பாஜக தரப்பு நபர்கள் முகிலனுக்கு மிரட்டல் விடுத்ததோடு அந்த ஓவியங்கள் இந்து மதத்தை – பெண்களை இழிவுபடுத்துவதாக அவதூறு பிரச்சாரத்தையும், வன்மத்தையும் கட்டவிழ்த்து விட்டனர்.

உண்மையில் அந்த கண்காட்சியில் கார்ப்பரேட் சுரண்டல், மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் உள்ளிட்டு 34 ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. மோடியை விமர்சிக்க கூடாது என்பதையே பெண்கள் மீதான அவதூறு என சங்கிகள் திசைதிருப்பினர்.

இது தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்தார். தனது பின்னணி, தனது சமூக அரசியல் பார்வை விரிந்த வரலாறு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் வரைந்த வலி நிறைந்த ஓவியங்கள், அரசியல் போராட்டங்களில் கலைஞனின் பங்கு என விரிந்த அளவில் முகிலன் உணர்ச்சிகரமாக பேசுகிறார். தனது ஓவியங்களில் இருக்கும் ‘மூர்க்கம்’ ஏன் என்பதையும் விளக்குகிறார். சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், உழைக்கும் மக்கள் மீது நடக்கும் மூர்க்கமான தாக்குதலை மென்மையாக எப்படி வரைய முடியும், சாதாரண மக்களிடம் இருக்கும் திரிசூலத்தை இந்துத்துவம் எப்படி அரசியல் ஆயுதமாக பயன்படுத்திகிறது என்பதையும் விளக்குகிறார். தொடர்ந்து தனது தூரிகை மக்களுக்கான ஓவியங்களை படைப்பாகத் தரும் என்கிறார். இந்துத்துவ வெறியர்களின் மிரட்டலுக்கு பணியமாட்டேன் என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

#LoyolaControversy #LoyolaCollege  #Loyolaart #BJPFails

முழுமையான நேர்காணலை பாருங்கள், பகிருங்கள்!!

 

நேர்காணல்:

மு.வி.நந்தினி

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.