குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 2

அமனஷ்வீலி

பூர்வாங்க அறிமுகம்

ன் குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை நான் கையோடு வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையுடனும் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவர்களின் புகைப்படங்களை எடுக்கிறேன். அவற்றை மேசை மீது வரிசையாக வைக்கிறேன். இதோ என் வகுப்பு!

பறவைகளின் கீதமும் கணீரென்ற சிரிப்பும் என் காதுகளில் ஒலிக்கின்றன. என்ன இது? குழந்தைகளின் சத்தமா? இதை சத்தம் என்று சொல்ல முடியாது. குழந்தைகளின் இந்த சத்தத்தில், இன்னிசைக் குழுவின் வாத்தியங்கள் சுருதி கூட்டப்படுவதை ஒத்த ஒலிகளைக் கேட்க ஆசிரியனுக்கே உரிய காது வேண்டும், எதிர்கால வாழ்க்கை எனும் சிம்பனி இசையை ரசித்த உணர்வு அப்போது ஏற்படும்.

பறவைகள் சத்தம் போடுகின்றன, கூச்சலிடுகின்றன என்று நாம் கூறுவதில்லை அல்லவா. அவை பாடுவதாக ஏன் நமக்குத் தோன்ற வேண்டும்? பாடுவதைத் தவிர அவற்றிற்கு வேறு கவலைகள் கிடையாதா? அதேபோல்தான் குழந்தைகளாலும் சத்தம் போட முடியாது. பள்ளியில் நிறைந்திருக்கும் அந்த குழந்தைகளின் விசேஷ ஒலியைச் சித்தரிக்க நான் அறிந்த வார்த்தைகளிலேயே “ஷிரியாமூலி” என்ற ஜார்ஜிய சொல்தான் மிகப் பொருத்தமானதென எனக்குத் தோன்றுகிறது. இது பறவைகள், குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான ஒலிக் கலவையை குறிக்கிறது. மனிதர்களின் சாதாரணமான பேச்சொலியை குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான, உற்சாகமான சத்தத்திலிருந்து பிரிப்பதற்காக நம் முன்னோர்கள் இச்சொல்லைக் கண்டுபிடித்தனர்.

பறவைகள் சத்தம் போடுகின்றன, கூச்சலிடுகின்றன என்று நாம் கூறுவதில்லை அல்லவா. அவை பாடுவதாக ஏன் நமக்குத் தோன்ற வேண்டும்? பாடுவதைத் தவிர அவற்றிற்கு வேறு கவலைகள் கிடையாதா? அதேபோல்தான் குழந்தைகளாலும் சத்தம் போட முடியாது.

என்னுடைய முப்பத்தாறு குழந்தைகளின் புகைப்படங்களை நான் பார்க்கிறேன், என் காதுகளில் வாத்தியங்கள் சுருதி கூட்டுகின்றன, இந்த இசையை, இந்தக் குழந்தைகளின் “ஷிரியாமூலியை” எப்போது கேட்போம் மனது துடிக்கிறது.

”ஷிரியாமூலியை” என்னால் புரிந்து கொள்ள முடிகிறது; குழந்தைகளின் மீதான என் அன்பிற்கு இதுதான் நிரூபணம்; சிம்பனி இசைக்கு முன் இவ்வாறாக வாத்தியங்கள் சுருதி கூட்டப்படுவது, இந்த குழந்தைகளின் ”ஷிரியாமூலி” என் காதுகளுக்கு இனிமையாக உள்ளதால் நானே கல்வி கற்பவனாக, வளர்க்கப்படுபவனாக மாற முடியும். நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் அது உங்கள் விஷயம், என்னால் இப்படிக் கூற முடியும்:

குழந்தைகளின் ”ஷிரியாமூலி” யாருக்குப் பிடித்துள்ளதோ அவருக்கு ஆசிரியர் தொழிலின் மீது நாட்டம் உண்டு, இதன் மீது யார் தீவிர ஆர்வம் காட்டுகிறாரோ அவர் தன் தொழில் ரீதியான மகிழ்ச்சியை அடைவார்.

எப்படிப்பட்ட அழகிய குழந்தைகள், எவ்வளவு புன்சிரிப்புகள்! பள்ளி துவங்கும் முன் தம் மகிழ்ச்சியை காட்டிக் கொள்வதற்காக மட்டுமா இவர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்?

குழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களுடைய புன்முறுவல்கள் ஒரு மகிழ்ச்சி கலந்த பதட்டத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன. நீங்கள் உங்கள் ஆசிரியரின்பால் பெரிதும் தாராளமாய் இருக்கின்றீர்கள், ஆசிரியரை நம்புகின்றீர்கள். நீங்கள் இன்னமும் என்னைப் பார்த்ததுகூட இல்லை. அதற்குள் இவ்வளவு அழகாக புன்முறுவல் பூக்கின்றீர்கள், மிகவும் நம்பிக்கையுடன் என்னை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?

பல்வேறு விஞ்ஞானங்களை நான் உங்களுக்குச் சொல்லித் தர வேண்டுமா? நான் கொடியவனாக, கண்டிப்பானவனாக இருந்து, ஒவ்வொரு செய்கைக்கும் தண்டித்து, உங்களைப் பார்த்துக் கத்தினால் என்ன செய்வீர்கள்? எப்படியிருந்தாலும் நீங்கள் விஞ்ஞானத்தின் மீது அக்கறை காட்டுவீர்களா? இல்லை, இது இப்படி நடக்காது என்று எனக்கு நிச்சயம் தெரியும். ஆசிரியரையும் ஆசிரியரின் விஞ்ஞானத்தையும் அவரது ஞானத்தையும் நல் விருப்பங்களையும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். சரி, உங்களுடைய புன்முறுவல்களின் பொருள்தான் என்ன? இவற்றிலிருந்து நான் என்ன முடிவிற்கு வருவது?

“நாங்கள் பிறந்ததிலிருந்தே நல்லவர்கள், எங்களைக் கொடியவர்களாக ஆக்காதீர்கள்!”
உங்களில் யாருக்கு இப்படிச் சொல்ல துணிவுள்ளது? அஞ்ச வேண்டாம், ஒளிவு மறைவின்றி சொல்லுங்கள்.

என் கரத்தில் கிடைத்த முதல் புகைப்படத்தை எடுக்கிறேன். என்னைப் பார்த்து சிரிக்கும் அச்சிறுமியின் புகைப்படத்தின் பின் ”தேயா” என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இம் முகத்தை நினைவில் வைத்து, நாளை இச்சிறுமியை பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டும். ஒருவேளை நீ இப்படிச் சொல்லியிருப்பாயோ?

இன்னொரு புகைப்படத்தை எடுக்கிறேன். ”கோச்சா” என்று அதன் பின் எழுதப்பட்டுள்ளது. என்ன சுருட்டையான தலைமுடி. முடியை வெட்டுமாறு நான் பெற்றோர்களிடம் சொல்லப் போவதில்லை. அப்படியே இருக்கட்டும். இதிலென்ன தப்பு? கோச்சா கணீரென சிரிக்கிறான். ”பார், நான் நாளை உன்னை முப்பத்தாறு குழந்தைகளின் மத்தியில் அடையாளம் கண்டு கொள்வேன். நீ வம்புக்கிழுக்கும் குணமுள்ளவனா? முரண்டு பண்ணமாட்டாயே?”

“நியா” என்று அடுத்த புகைப்படத்தின் பின் எழுதப்பட்டுள்ளது. அவள் புன்முறுவல் பூக்கிறாள், இல்லையில்லை, சிரிக்கிறாள், முன் பற்களில் ஒன்றுகூட இல்லாதது எனக்கு நன்கு தெரிகிறது. பல ஒலிகளை சரியானபடி உச்சரிப்பது அவளுக்கு அனேகமாக கடினமாக இருக்கும். ஆனால் வேறு எந்தக் குழந்தையும் இவளை கேலி செய்ய நான் விட மாட்டேன். அதற்குள் பற்கள் முளைத்து விடும். ”நியா, நீ கோள் சொல்ல மாட்டாயே? ஒருவர் மீது ஒருவர் கோள் சொல்வது நம் வகுப்பில் கூடவே கூடாது. இதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”

அச்சிறுவனுக்கு சற்றே நீண்ட தாடை. கண்கள் கூர்மையானவை, ஏதோ கள்ள சிந்தனை, ஒரு கண்டிப்பான புன்சிரிப்பு. ”சாஷா” என்று பின்புறம் எழுதப்பட்டிருந்தது. இரு இரு, நீ அந்த சாஷாவா? நீ பிறக்கும் முன்னரே உன் தாய் உன்னை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று முடிவு செய்தாள். ஆறு ஆண்டுகளுக்கு முன் உன் தாயை நான் வேலை விஷயமாகச் சந்தித்தேன். அப்போது என் ஆசிரியர் பயிற்சி நோக்கங்களைப் பற்றி, குழந்தைகளுடனான என் வேலையைப் பற்றிக் கூறினேன். “நான் என் குழந்தையை உங்கள் வகுப்பிற்கு அனுப்புவேன்” என்று அவள் அப்போது கூறினாள். நீ நன்கு அறிமுகமானவன். ஆனால் நாளை முதன் முதலாக நாம் கைகுலுக்கிக் கொள்வோம்.

”போன்தோ”. சற்றே தலையை சாய்த்தபடி, களங்கமற்ற புன்முறுவல். “எங்களை கொடியவர்களாக ஆக்காதீர்கள் என்று ஒருவேளை நீதான் என்னை கேட்டாயோ? சரி, நீ உண்மையில் அன்பானவனா? மிட்டாயை இன்னொருவனுடன் பகிர்ந்து கொள்வாயா? தோழிக்கு விட்டுக்கொடுப்பாயா? பலவீனமானவனைப் பாதுகாப்பாயா? மிக்க நன்று!”

இது யார்? ”ஏல்லா”. சற்றே குண்டான சிறுமி. ஆனால், அவள் சிரிக்கிறாளா, கவிதை படிக்கும் தருணத்தில் புகைப்படக்காரர் படமெடுத்துள்ளாரா என்று புரியவில்லை. ”ஏல்லா, உனக்கு நிறைய கவிதைகள் தெரியுமா? பத்து வரை எண்ணத் தெரியுமா? படிக்கத் தெரியுமா? இவையெல்லாம் உனக்குத் தெரிந்தால் நான் உன்னுடன் என்ன செய்வது? பள்ளியின் மீதான ஆர்வம் போகாமலிருக்க வேறு விஷயங்களைச் சொல்லித்தரவா? சரி, பார்ப்போம்.”

குழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களுடைய புன்முறுவல்கள் ஒரு மகிழ்ச்சி கலந்த பதட்டத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன. நீங்கள் உங்கள் ஆசிரியரின்பால் பெரிதும் தாராளமாய் இருக்கின்றீர்கள், ஆசிரியரை நம்புகின்றீர்கள். நீங்கள் இன்னமும் என்னைப் பார்த்ததுகூட இல்லை. அதற்குள் இவ்வளவு அழகாக புன்முறுவல் பூக்கின்றீர்கள், மிகவும் நம்பிக்கையுடன் என்னை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?

குழந்தைகளை இருக்கைகளில் அமர்த்துவதைப் போன்றே புகைப்படங்களை வரிசையாக வைக்கிறேன். கீகா, அனேகமாக நீ உயரமானவன் என்று நினைக்கிறேன். லேலாவும் உயரமானவள். இவர்களைக் கடைசி மேசையில் உட்கார வைக்கலாம். மாரிக்கா முதல் வரிசையில் இடது புறமாக உட்காரட்டும். விக்டரை ஜன்னலருகே உட்கார வைப்பேன்… என் மேசையில் வகுப்பறையின் காட்சி நிழலாடுகிறது. நான் கரும்பலகையருகே நிற்கிறேன். இன்னமும் என்ன வேண்டும்?

”குழந்தைகளே, நீங்களனைவரும் நல்லவர்கள் என்று நீங்களா என்னிடம் சொன்னீர்கள்?” நான் என்னுள்ளேயே கேட்டுக் கொள்கிறேன்.

”ஆமாம்” என்று என் காதுகளில் ஒருமித்த பதில் ஒலித்ததைப் போலிருந்தது.
”குழந்தைகளே, உங்களைக் கொடியவர்களாக மாற்ற வேண்டாம் என்று நீங்களா என்னை கேட்டுக் கொண்டீர்கள்?”

”ஆமாம்… ஆமாம்!”

வகுப்பு எப்படி அமையும் என்பதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது எல்லா முகங்களையும் பெயர்களையும் இன்னொரு முறை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். இது, அனேகமாக மாக்தாவாக இருக்க வேண்டும். புகைப்படத்தைத் திருப்புகிறேன். சரிதான்…. இது தாத்தோ. இல்லை, தப்பு, இது தேன்கோ. தாத்தோ இதோ… சரி பார்க்கிறேன். சரி… இது தேக்கா… இது…

என் குழந்தைகள் அனேகமாக இந்நேரம் உறங்குவார்கள். நேரமாகி விட்டது. ஆனால் அவர்களுக்கு உறக்கம் வருமா? நாளை செப்டெம்பர் 1-ஆம் தேதியாக இருக்கையில் அவர்களால் அமைதியாக உறங்க முடியுமா! ஒருவேளை பெரியவர்கள் அனைவரும் -அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி – காலையில் விழிப்பு வராமல் உறங்கி விட்டால் என்ன செய்வது! குழந்தைகளை யார் எழுப்புவது? முதல் வகுப்பைத் தவறவிட்டு விடலாமே. தாமதமாக செல்லக்கூடாது. அதிகாலையில் விழிக்காமல் இருப்பதை விட தூங்காமலே இருப்பது நல்லது. இது விளையாட்டா என்ன! ஆறு வயதுக் குழந்தை பள்ளிக்குச் செல்லப் போகிறான்! அப்பாவும் அம்மாவும் அவனை உறங்கச் சொல்லுகின்றனர், கடிகாரங்களில் விழிப்பு மணியை சரி செய்கின்றனர்….

படிக்க:
எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !

ஒவ்வொரு வருங்காலப் பள்ளி மாணவனுக்கும் நான் ஒரு வாரம் முன் அனுப்பிய வாழ்த்துக் கடிதங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமென எண்ணுகிறேன். அம்மாவையோ அப்பாவையோ, தாத்தாவையோ பாட்டியையோ இதைப் படித்துக் காட்டுமாறு பன்முறை அவர்கள் நச்சரித்திருப்பார்கள். நான் எழுதியது இதுதான்:

அன்புள்ள….. வணக்கம்.

நான் உன் ஆசிரியர். என் பெயர் ஷல்வா அலெக்சாந்தரவிச். நீ பள்ளிக்குச் செல்லப்போகிறாய், பெரியவனாகி விட்டாய். வாழ்த்துக்கள்.

நீயும் நானும் நல்ல நண்பர்களாவோம், வகுப்பில் உள்ள அனைவருடனும் நீ நட்புக் கொள்வாய் என்று நம்புகிறேன். உன் வகுப்பில் எவ்வளவு சக தோழர்கள் தெரியுமா? முப்பத்தைந்து பேர்கள். நம் பள்ளிக் கட்டிடம் பெரியது, நான்கு மாடிகள், இடைவழிகள் எல்லாம் உள்ளன. நீதான் பெரியவன் அல்லவா, எனவே நீயேதான் உன் வகுப்பைக் கண்டுபிடிக்க வேண்டும். எப்படிக் கண்டுபிடிப்பது என்று நினைவில் வைத்துக்கொள். சிவப்பு நிற அம்புக் குறிகள் இருக்கும். அவற்றைப் பின் தொடர்ந்து வந்தால் உன் வகுப்புக்கு வரலாம். வகுப்பறையின் கதவில் பறவையின் படம் வரையப்பட்டிருக்கும். வழிதெரியாவிடில் கவலைப்படாதே, இடைவெளிகளில் நிற்கும் பயனீர்கள் கண்டிப்பாக உனக்கு உதவி புரிவார்கள்.

உன்னுடன் அறிமுகம் செய்து கொள்ள வகுப்பறையில் உனக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன்.

– ஆசிரியர்.

பல குழந்தைகளின் தலையணை அடியில் இந்தக் கடிதங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க வேண்டுமா என்ன? வண்ணத்தாளில் அவனுக்கென்றே எழுதப்பட்டு பள்ளியிலிருந்து, முதல் ஆசிரியரிடமிருந்தல்லவா இக்கடிதம் வந்துள்ளது!

இந்த முதல் ஆசிரியர் எப்படிப்பட்டவர்?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!