மே 22 தியாகிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்த்த ஆதரவு கோரி  வணிகர் சங்கங்களின் பேரவையிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை !

தூத்துக்குடியில் 05.05.2019 அன்று வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக 36-வது மாநில மாநாடு (சுதேசி பொருளாதார மாநாடு) நடைபெற்றது. அதில் வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர், ஐயா வெள்ளையன் அவர்களிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக மே -22 அன்று, அவரது தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி நடத்த வேண்டும் என்றும், அன்று ஒரு நாள் முழு கடையடைப்பு செய்யவேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஐயா பழ. நெடுமாறன் அவர்களையும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் சந்தித்தனர். அவர்களிடமும் நினைவஞ்சலி நடத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று ஐயா பழநெடுமாறன் அவர்கள் மே 22 அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவஞ்சலி நடத்துவதாக கூறியுள்ளார்.

தூத்துக்குடியின் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க ஸ்டெர்லைட் எனும் நாசகார ஆலைக்கு எதிராகப் போராடி தங்கள் உயிரை அர்ப்பணித்த தியாகிகளுக்கு அனைத்து கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இப்படிக்கு,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
தூத்துக்குடி. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க