தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்த போராளிகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று (22-05-2024) செலுத்தப்பட்டது.
நெல்லை
விருத்தாச்சலம்
கடலூர் மண்டலம் விருத்தாசலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தோழர் பாலு தலைமையில் ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்ற வேண்டும். ஜெகதீசன் அறிக்கையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தோழர்கள் மற்றும் நண்பர்கள் கொண்டனர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்
தோழர்களுக்கு செவ்வணக்கம்!
இன்று (22.5.2024) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் சார்பாக, காஞ்சிபுரம் பகுதியில் அய்யங்கார்குளம் மற்றும் நெமிலி-பனப்பாக்கம் ஆகிய இடங்களில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தியாகிகளான போராளிகளுக்கு ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
காலை 11 மணி அளவில் நெமிலி-பனப்பாக்கம் பகுதியிலும், மாலை 5:30 மணி அளவில் அய்யங்கார்குளம் பகுதியிலும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பகுதி மக்கள் பலரும் கலந்து கொண்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்ட பின், முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “கார்ப்பரேட்டுக்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டத்தில் தியாகிகளான போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்” என்றும், “வேதாந்தாவின் கையாளாக செயல்பட்டு சொந்த நாட்டு மக்களையே காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற போலீசையும், உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளையும் அருணா ஜெகதீசன் ஆணையக் குழு பரிந்துரைத்தபடி உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்றும், “ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டை விட்டு நிரந்தரமாக தூக்கி எறிய சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாலை அய்யங்கார்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோழர் திலகவதி மக்கள் அதிகாரம் கண்டன உரையாற்றினார்.
தனது கண்டன உரையில், “ஒன்றியத்தை ஆளும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் , வேதாந்தா, அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை தாரைவார்க்கக்கூடிய பல்வேறு திட்டங்களை திணித்து வருகிறது. கார்ப்பரேட் கொள்கைகளில் இதற்கு பாஜக அல்லாத பல்வேறு மாநில அரசுகளும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன. இதற்கு சான்றாக, தமிழ்நாட்டில் பரந்தூர் விமான நிலையம், மேல்மா சிப்காட், எண்ணூர் துறைமுகம் என அடுக்கிக் கொண்டே போகலாம். திராவிட மாடல் என்ற பெயரில் இயங்கும் தமிழ்நாடு அரசும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.
மின்சாரம், துறைமுகங்கள், கல்வி குழுமங்கள் தொலைத் தொடர்புத்துறை என நாட்டின் பல்வேறு துறைகளையும் அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலுக்கு சூறையாடக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலை வீழ்த்த மக்கள் எழுச்சியை உருவாக்குவதே நமது உடனடிக் கடமையாக உள்ளது. பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்று அரசு கட்டமைப்பு தான் கார்ப்பரேட் சூரையாடல்களில் இருந்து மக்களை விடுவிக்கும் ஒரே மாற்று” – என்பதை வலியுறுத்தினார்.
நன்றி,
இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்பு குழு)
மக்கள் அதிகாரம்
காஞ்சிபுரம் மாவட்டம்.
9786076201
மதுரை
தூத்துக்குடி தியாகிகளின் 6-ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
மதுரையில் நினைவேந்தல் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது…
ஆரியப்பட்டி
மே 22 6 ஆம் ஆண்டு நினைவு தினம்.
தோழர் ஜெயராமனுக்கும், ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கும் ஆரியப்பட்டியில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.
ம.க.இ.க-பு.மா.இ.மு-
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டபம்