ரூ.55 – ரூ.150 தான் எங்கள் சம்பளம்!
எங்க நிலத்தை ஆக்கிரமிச்சிட்டாங்க!
குமுறும் மாற்றுத்திறனாளிகள்
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிராமத்தில் அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக நபர் ஒருவருக்கு 2.5 சென்ட் என்ற அளவில் இலவச பட்டா 01.04.15 அன்று வழங்கப்பட்டது. அதில் 12 பேர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளனர்.
இன்று வரையும் அந்த பட்டாவில் இந்த மாற்றுத்திறனாளிகள் பெயர்கள்தான் இருக்கின்றது.
மாற்றுத்திறனாளிகள் அந்த இடத்தில் கம்பி வேலி போட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி ஒருவர் அந்த இடத்தில் கட்டிடத்தை எழுப்பிய நிலையில் தொடர்ந்து கட்டிடம் கட்ட பணம் இல்லாததால் அந்தக் கட்டடத்தை பாதியளவில் நிறுத்தியிருக்கிறார். ஆனால் சில ஆக்கிரமிப்பாளர்கள் இந்த வேலியை பிடுங்கி, அந்த கட்டடத்தை இடித்து வீடு கட்டியுள்ளனர். நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு குறித்து மாற்றுத்திறனாளிகள் கேட்டபோது “நீ நொண்டி, கண் தெரியாத நீ எல்லாம் என்ன செஞ்சிரப்போற ஓடிரு, உன்னை கொன்றுவேன்” என்று அவர்களை மிரட்டியுள்ளார்கள். இதனால் மாற்றுத்திறனாளிகள் தங்கள் நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சியர்,துணை ஆட்சியர், தாசில்தார், விஏஓ, போலீஸ் என பலரிடமும் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் இன்று வரை இவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
அரசு கொடுத்த நிலத்திற்கான உரிய ஆவணம் இருந்தும் அதை மீட்டுக் கொடுக்க அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அரசுத் துறைகளின் படிக்கட்டுகளில் இன்றுவரை ஏறிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
அரசு தலையிட்டு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அவர்களுக்கே மீட்டுத் தர வேண்டும் என்று நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
தகவல்
மக்கள் அதிகாரம், நெல்லை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube