ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு நினைவேந்தல் | நேரலை | Live Streaming

தூத்துக்குடி படுகொலை என்பது இன்னொரு ஜாலியன் வாலாபாக். அது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்றால் தூத்துக்குடி போராட்டம் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிரான போராட்டம்.

♦ ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நினைவிடம் அமை !
♦ படுகொலைக்குக் காரணமான போலீசாருக்கு கொலை குற்றத்தில் தண்டனை வழங்கு !
♦ ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

22-05-2019 புதன்கிழமை
காலை 11.00 மணி

வள்ளுவர் கோட்டம், சென்னை

வினவு நேரலை :

#May22Martyrs #BanSterlite #ThoothukudiMassacre

தூத்துக்குடி படுகொலை என்பது இன்னொரு ஜாலியன் வாலாபாக். அது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்றால் தூத்துக்குடி போராட்டம் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிரான போராட்டம். ஆகவே, ஜாலியன் வாலாபாக் நினைவு நாளைப் போலவே, 2019 மே 22 அன்று தூத்துக்குடி போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் படங்களை வீதிகள்தோறும் வைத்து, ஜல்லிக்கட்டு மக்கள் எழுச்சியைப் போல தமிழகமே அந்தத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். ஜாலியன் வாலாபாக் போன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளுக்கும் தூத்துக்குடியில் நினைவிடம் அமைக்க போராட வேண்டும்.

வேதாந்தா என்பது பல நாடுகளின் அரசுகளையே விலை பேசுகின்ற பன்னாட்டு நிறுவனம், மோடி அரசைத் தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனம். அத்தகையதொரு நிறுவனத்தை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொலைகார நிறுவனத்தை மண்டியிட வைத்த இந்தப் போராட்டத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் வியந்து பாராட்டுகிறார்கள். தங்கள் இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிர வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள்.

அந்தத் தியாகிகளை கவுரவிக்க , ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்றுவதற்கு தூத்துக்குடி மக்களுக்குத் தமிழகமே துணை நிற்கும் என்பதை உணர்த்த இன்று (மே 22) தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

நினைவஞ்சலி கூட்டம் நடத்துவதற்குக் கூட அனுமதிக்க மறுக்கிறது அடிமை எடப்பாடியின் எடுபிடி போலீசு. மக்கள் அதிகாரம் சார்பாக மதுரை மற்றும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுத்ததோடு, மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணியாளர்களையும் நேற்று (21.05.2019) நள்ளிரவில் தடுப்புக் காவலில் கைது செய்திருக்கிறது போலீசு.

தமிழக மக்களே,
போலீசின் இந்த அத்துமீறலுக்கு அடிபணிய மறுப்போம் ! ஒவ்வொரு  ஊர்களிலும் ஒன்று கூடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவோம் !


மக்கள் அதிகாரம்,
சென்னை,
தொடர்புக்கு: 91768 01656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க