social-contradictionsஇதயத்தை மீட்டும் இசையின் ‘இரைச்சலில்’ நெஞ்சைத் துளைக்கும் தோட்டாக்களின் சத்தங்கள் கேட்பதில்லை

social-contradictions’சுதந்திர’ தேவிகளின் கையிலிருக்கும் சுடர்கள்தான் உலகம் முழுவதும் ஏவுகணைகளைப் பற்றவைக்கின்றன.

social-contradictionsபேரரசு(சி)களின் தலைப்பாகை ராஜ்ஜியங்களை எளியோரின் தலைக்கட்டுகள்தான் இறுகப் பற்றியிருக்கின்றன. பின்னது இருந்தால்தான் முன்னது நீடிக்கும்.

social-contradictionsகாமிக்ஸ் நாயகர்களால் மயக்கப்படும் கண்களுக்கு போர்களின் விளைவுகள் தெரிவதில்லை

social-contradictionsதமது இளம்பிஞ்சுகளின் வேதனைகளால் வெதும்பும் தாய்மார்களின் கண்ணீரை, மறைத்து விடுகின்றது லேடி காகா-க்களின் ஆனந்தக் கண்ணீர்.

social-contradictionsதமது அழகின் அங்கீகாரத்துக்காக பூனை நடை நடக்கும் நுகர்வுப் பண்டங்களை (’அழகிகளை’) வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுக்கும் கருவிகள், தம்மை மனிதர்களாக அங்கீகரிக்கக் கோரி இடம்பெயரும் அகதிகளைச் சீண்டுவதில்லை.

social-contradictionsபறவைகள் எட்டும் வானின் உச்சம் கண்டு மனம் கிளர்ச்சி அடையலாம். ஆனால், போர்வெறி கொண்ட இந்த இயந்திரப் பறவைகளின் வெடிகுண்டு எச்சங்கள், எளியோரின் வாழ்வை அழிக்கின்றன.

ஒருபாதி உலகம் போதைவெறியின் பிடியில் … மறுபாதி உலகம் போர்வெறியின் பிடியில் …

ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் காடுகளின் சரிவிலும் வீழ்ச்சியிலும்தான் ஏகாதிபத்தியங்களின் வளம் ஏற்றத்தில் ஒய்யாரமாய் வீற்றிருக்கிறது.

ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரக் குமிழ்கள் உடையும் ஒவ்வொரு தருணமும் பல நாடுகளின் அமைதி உடைக்கப்படுகிறது.

சிலரது ரம்மியமான மாலைப் பொழுதுகள், பலருக்கு தாக்குதல் அச்சமூட்டும் இரவுக்கான முன்னறிவிப்புகளாகின்றன.

கிரிமினல்களின் கைகளிலிருந்து தனிநபர்களைக் காக்கும் சூப்பர்மேன்களுக்கு ஏனோ ஏகாதிபத்தியப் கிரிமினல்களின் கைகளிலிருந்து அகதிகளைக் காப்பதற்கு வக்கில்லை.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கூச்சல்கள் அல்ல, மரணத்தை எதிர்நோக்கும் முழக்கங்கள் !

(வளரும் நாடுகளின்) காலிலிருந்து நெஞ்சு வரை உறிஞ்சப்பட்ட இரத்தமும் சதையும் மகிழ்ச்சியும்தான் (ஏகாதிபத்திய ) தலையின் போஷாக்கும் புஷ்டியும் சிரிப்பும் !

பெருமிதத்தின் அமைதி புன்னகையாகவும், ஏக்கத்தின் அமைதி கண்ணீராகவும் வெளிப்படும் தருணம்

நன்றி : படங்கள் – உகர்கேலன்

– நந்தன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க