Saturday, March 15, 2025
முகப்புசெய்திஇந்தியாஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !

ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !

காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பது என்ற சங்க பரிவாரத்தின் வெகுநாள் பிரகடனத்தை இன்று நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு.

-

ம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்கும் பிரிவு 370, சட்டப் பிரிவை ரத்து செய்வதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார் அமித்ஷா. இச்சட்டப்பிரிவை ரத்து செய்து இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியைத் தனியாகப் பிரித்து, தனி யூனியன் பிரதேசமாகவும், எஞ்சியுள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவித்துள்ளது மத்திய அரசு.

காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பது என்ற சங்க பரிவாரத்தின் வெகுநாள் பிரகடனத்தை இன்று நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. கடந்த ஒரு மாதத்தில் அனைத்து மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து ஒரே நாடு என்ற முழக்கத்தின் பேரில் பல்வேறு சட்டத் திருத்தங்களையும், புதுப் புது சட்டங்களையும் நிறைவேற்றியது மத்திய பாஜக அரசு.

இந்தச் சட்டங்களின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்யும் உத்தரவை 05-08-2019 அன்று நிறைவேற்றியுள்ளது.

இந்திய அரசியல்சாசன சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிபடுத்துகிறது. காஷ்மீர் மாநிலத்திற்குத் தனியான அரசியல் அமைப்புச் சட்டம் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இச்சட்டப் பிரிவின்படி இராணுவம், வெளியுறவுத்துறை மற்றும் தொலைதொடர்பு ஆகிய துறைகளைத் தவிர்த்து பிற துறைகளில் இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களும் உத்தரவுகளும், காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு காஷ்மீர் மாநில அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக தனது முடிவை அமல்படுத்த முடியாது. அதே போல மத்திய அரசு காஷ்மீரில் நிதி அவசரநிலையைப் பிரகடனம் செய்வதற்கும் அதிகாரம் இல்லை. இந்த சட்டப் பிரிவைத்தான் தற்போது நீக்கி உள்ளது பாஜக அரசு.

படிக்க:
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
♦ காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !

சட்டப் பிரிவு 370(1)(C)-க்கு உட்பட்டுதான், ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்திய அரசியல்சாசன சட்டப்பிரிவு 1-ன் படி உள்ள இந்திய ஒன்றியத்தின் கீழ் உள்ள மாநிலங்களின் பட்டியலில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆகவே பிரிவு 370-ஐ நீக்கினால், காஷ்மீர் இந்திய யூனியனில் இருந்து தானாக வெளியேறியதாகவே கருதப்படும். அத்தகைய சிக்கலைத் தவிர்ப்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியைத் தனியாக சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் (உ.ம் சண்டிகர்), இதர ஜம்மு காஷ்மீர் பகுதியை சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாகவும் (உ.ம் டில்லி, புதுச்சேரி) அறிவித்துள்ளது மத்திய அரசு.

இது அம்மாநிலத்தில் கடும் பதட்ட சூழலை ஏற்படுத்தும் என்பதை அறிந்து வைத்திருக்கும் பாஜக, கடந்த ஜுலை 26-ம் தேதி தொடங்கி அங்கு படிப்படியாக படையணிகளை குவித்துவந்தது. கடந்த சனிக்கிழமை (03-08-2019) முதல் முக்கியமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. கடந்த ஞாயிறு (04-08-2019) இரவு முதல் காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களான மெக்பூபா முப்தி மற்றும் ஓமர் அப்துல்லா உள்ளிட்டோரை வீட்டிலேயே சிறைவைத்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தில் இணையச் சேவையை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.

இந்த இச்சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதை காஷ்மீர் மாநிலக் கட்சிகளான, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துள்ளன. நாடாளுமன்றத்தில் காங்கிரசு கட்சி அமித்ஷாவின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

370 பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் பிரிவு 35A-வும் ரத்தாகிறது. இதன் காரணமாக காஷ்மீர் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளும் ரத்தாகின்றன. குறிப்பாக காஷ்மீரில் உள்ள சொத்துக்களை வெளிமாநிலத்தவர் யாரும் வாங்க முடியாது. இது பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் மிகப்பெரும் உறுத்தலாக பன்னெடுங்காலமாக இருந்துவந்த விசயம். தற்போது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததன் மூலம் தனது எஜமானர்களுக்கு காஷ்மீரையும் திறந்து விட்டிருக்கிறார் மோடி.

பிரிவு 370 நீக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குறிப்பிடுகையில் “மத்திய அரசு சட்டப்பிரிவு 35A மீது கைவைப்பது, எரியும் நெருப்பில் வெடிமருந்தைக் கொட்டுவதைப் போன்றது. பிரிவு 35A மீது யாரேனும் கைவைக்க முயற்சித்தால், கை மட்டுமல்ல மொத்த உடலும் எரிந்து சாம்பலாகும்” என்றும் எச்சரித்துள்ளார் மெகபூபா முப்தி.

இதனையொட்டி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முப்தியைக் கைது செய்யவேண்டுமென பொங்கியிருக்கிறது சிவசேனா கட்சி. இச்சட்டப் பிரிவு நீக்கத்திற்கு சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

தனது இந்து ராஷ்டிரக் கனவுக்கும், ஏகாதிபத்திய நலன்களுக்கும் மாநிலங்களின் சுய ஆட்சி உரிமை பாதகமாக உள்ள சூழலில் பல்வேறு சட்டதிருத்தங்களின் மூலம் அனைத்து மாநில உரிமைகளையும் பறித்துக் கொண்ட பாஜக, இறுதியாக வெகுநாளாக தக்க வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் தன்னாட்சி உரிமையையும் பறித்து விட்டது.

போர்க்குணமிக்க காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமையையே திட்டமிட்டு படைகளைக் குவித்து நசுக்கிய பாஜகவிற்கு, இதர மாநிலங்களெல்லாம் எம்மாத்திரம் ? இது காவி கார்ப்பரேட் பாசிச ஆட்சியின் ஒரு வெள்ளோட்டம்தான் ! நாடு முழுவதும் இனி அன்றாடம் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிதான் நிலவும் என்பதற்கான முன்னறிவிப்பு இது !


நந்தன்

(பின்குறிப்பு : இந்த கட்டுரை 06-08-2018 அன்று பிரிவு 35A குறித்த தகவல்களை இணைத்து மேம்படுத்தப்பட்டது)

  1. மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் கட்சிகள் குடும்ப அரசியல் அராஜகம், ஊழல் என சீரழிந்து போனதால் வந்த வினை இது. இன்னும் என்னென்ன கொடுமைகள் நடைபெறப் போகின்றனவோ!

    • பெரியசாமி சார்,

      சரியான பார்வை. உங்களுடைய பொதுவான எதிர்கருத்தான திமுக வை மட்டும் குறைகாணாமல் அனைத்து குடும்ப அரசியல் கட்சிகளையும் காரணமாகக் குறிப்பிட்டுள்ளது.

      உங்களுடைய பொதுவான வசை தி.மு.க வைக் குற்றம் சாட்டியே இருக்கும். இம்முறை எல்லா குடும்ப கட்சிகளையும் காரணமாகியிருக்கிறீர்கள்.

      /இன்னும் என்னென்ன கொடுமைகள் நடைபெறப் போகின்றனவோ!/

      சோவியத் யூனியனுக்கு நேர்ந்த கதி, இந்திய யூனியனுக்கும் நேரலாமோ?

      காலம் கண்டிப்பாக பதில் சொல்லாது.

      காஷ்மீரிகளுடைவும், மற்றும் அயல்நாடுகளுடைய எதிர்வினைகளுமே பதில்சொல்லக்கூடும்.

  2. காஷ்மீரை வைத்து எவ்வுளவு அநியாயங்களை நீங்கள் செய்திர்கள், பாக்கிஸ்தான் வாழ்க இந்தியா ஒழிக என்று JNUவில் ஆர்ப்பாட்டம் செய்த போது ஒட்டு மொத்த இந்தியாவும் கம்யூனிஸ்ட்களை வெறுத்தது. காஷ்மீரை வைத்து இந்தியாவை உடைக்கலாம் என்று நீங்கள் (பகல்) கனவு கண்டீர்கள் மோடி அதை தகர்த்து விட்டார்.

    காஷ்மீர், மாநில உரிமை அது இது என்று சொல்லி சில காலத்திற்கு நீங்கள் வன்முறையில் இறங்கலாம் ஆனால் அதற்கு இந்திய மக்களின் ஆதரவு இருக்காது…

    இன்னும் சொல்ல போனால் காஷ்மீரில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு இப்போது தான் ஒரு விடிவு காலமே பிறந்து இருக்கிறது.

    • ஜோசப் அருள்,

      தயவு செய்து கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
      முஸ்லீம் மதத்தவர்களைப்போலவே கிறித்தவர்களையும் ‘ஜெய் சிரீராம்’ கோசமிடச்சொல்லி, அவ்வாறு கோசமிடவில்லையென்றால் அவர்கள்மீது வன்முறை பிரயோகிப்படக்கூடுமென்கிற நிலைக்கு மாறாதா?.
      அந்நிலையேற்பட்டால் உங்களுடைய கருத்து மேலே குறிப்பிட்டுள்ள மாதிரியாகத்தான் இருக்குமா?

      • உங்களது பிரச்னை ஜெய் ஸ்ரீராமா இல்லை காஷ்மீரா ? நம் தனிப்பட்ட மதத்தை விட தேசம் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம்.

        உங்களை போன்றவர்கள் அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள் தேசத்தை விட மதம் முக்கியம் என்று நீங்கள் நினைப்பதால் தான் பல பிரச்சனைகள் உருவாகிறது.

        • ம்ம்.. ‘தேசம்’ என்பதைப்பற்றிய கருத்தில் உங்களுக்கும் எனக்குமுள்ள புரிதல் வித்தியாசமானது.

          ஒரு தேசத்துகுள் பல மதங்கள் இருக்கலாம், ஆனால் ஒரே மதம்தான் தேசத்துக்குள் இருக்க வேண்டுமெனில், அது தேசம் என்ற இலக்கணத்துக்குள் வருமா?

          • உங்களின் வாதம் தவறு.

            டெல்லி செங்கோட்டையில் மீண்டும் இஸ்லாமிய கோடி பறக்க வேண்டும் என்று சொல்பவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும் ? காஷ்மீர் பிரச்னை அரசியல் பிரச்னை அல்ல அது மதம் சார்ந்த பிரச்னை, இந்தியாவின் அரசியல் சட்டம் ஷரியாட் சட்டப்படி இல்லை அதனால் பிரிவினை வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் சரி.

            உங்களின் இஸ்லாமிய மதவெறிக்கு மற்றவர்களை குறை சொல்வது சரியல்ல.

            • டெல்லி செங்கோட்டையில் மீண்டும் இஸ்லாமிய பறக்க வேண்டுமென்று எந்தக் காஷ்மீரியும், சொல்லவில்லை. அதேபோல இந்திய யூனியனில் இணைந்தது முதல் இன்றுவரை காஷ்மீர் ஒரு அரசியல் பிரச்னைதான். தீவிரமான மதவெறி பிடித்துள்ளது தற்போதைய ஆள்வோருக்குத்தான்.

              • ஹுரியட் தலைவர் கிலானி மிக தெளிவாக காஷ்மீர் பிரச்னை மத பிரச்னை தான் என்று தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்… இந்த பேட்டி Outlook பத்திரிகையில் கொடுக்கப்பட்ட தேதி 28 அக்டோபர் 2010 (அதாவுது காங்கிரஸ் ஆட்சி காலத்தில்)

                Q. But do you really see Indian Hindus and Muslims as two separate ‘nations’? After all, they share so much in common.

                Ans: They are totally separate nations. There is no doubt at all about this. Muslims believe in just one God, but Hindus believe in crores of gods.

                Islam, as I said, is a complete way of life. No other path is acceptable to God. So, in the absence of an Islamic polity, it is difficult for Muslims to lead their lives entirely in accordance with the rules of Islam, which apply to social affairs as much as they do to personal affairs. For instance, Muslims in Kashmir under Indian rule live in a system where alcohol, interest and immorality are rife, so how can we lead our lives completely in accordance with Islam? Of course, Muslim minorities are Muslims, too, but their duty must be to work to establish an Islamic dispensation in the lands where they live so that they can lead their lives fully in accordance with Islam and its laws. Missionary work to spread Islam is as much of a duty as is praying and giving alms to the poor.

                காஷ்மீர் தலைவர் கொடுத்த பேட்டி இது… இஸ்லாமிய சட்டம் இல்லாத நாட்டில் முஸ்லிம்கள் வாழ முடியாது என்பதே இந்த பேட்டியின் சாராம்சம். பாக்கிஸ்தான் அரசு ஹுரியட் அமைப்பை தான் அங்கீகரித்து இருக்கிறார்கள்.

                டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமிய கோடி பறக்க வேண்டும் என்று பல வருடங்களாகவே
                இஸ்லாமிய அமைப்புகள் சொல்லி கொண்டு இருப்பது தான், இது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது, யாருக்கும் தெரியாத விஷயமும் கிடையாது இந்தியாவை ஒற்றை மத (இஸ்லாமிய) தேசமாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இந்தியாவில் மட்டும் அல்ல பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் என்று பல இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் அமைப்புகளின் நோக்கமும் இது தான்.

  3. 2 பேர் ஆசைப்பட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். 140 கோடி மக்களால் எதுவும் செய்ய இயலாது. வாழ்க ஜனநாயகம்!

    இதில் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்றத்தை பெரிதாக்கி 24 தொகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்காக ஒதுக்கியுள்ளார்கள். பாகிஸ்தானிடம் இருந்து அதை கைப்பற்றிய பிறகு உபயோகிப்பார்களாம்! இன்னும் என்ன என்னவெல்லாம் செய்வார்களோ!

    • பிஜேபியின் தேர்தல் அறிக்கையிலேயே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்கள், இந்திய மக்களும் அதற்கு ஆதரவு கொடுத்து பிஜேபியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், குறிப்பாக ஜம்மு லடாக் பகுதி மக்களும் பிஜேபியை ஆதரித்து இருக்கிறார்கள். அதனால் இது இரு தனிப்பட்ட நபர்களின் விருப்பம் என்று சொல்வதை விட ஒட்டு மொத்த இந்திய மக்களின் விருப்பம் கனவு என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

      மேலும் சிறப்பு அந்தஸ்து கொடுத்ததால் காஷ்மீரிகள் (முஸ்லிம்கள்) இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கவில்லை அவர்களுக்கு தேசத்தை விட அவர்களின் மதம் முக்கியமாக இருந்து வருகிறது.

      நீங்கள் எங்களில் ஒருவர் இல்லை நீங்கள் தனி என்று அவர்களை சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் பிரித்து மதவாத அரசியல் செய்த அனைத்து அரசியல் அமைப்புகளும் (காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்கள், இந்திய இஸ்லாமிய அமைப்புகள்) தற்போதைய நிலைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

  4. சிறப்பு அந்தஸ்து என்று கூற தெரிந்தவர்களுக்கு அதன் உண்மையான அர்த்தம் புரியாமல் பாேனது தான் வேடிக்கை … ! திரு வல்லபாய் படேல் ..திரு. காேபாலசாமி அய்யங்கார் …திரு.ஷேக் அப்துல்லா ஆகிய .மூவர் சேர்ந்து உருவாக்கியது தான் இந்த சட்டப்பிரிவு …! மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதை ” சிறப்பு அந்தஸ்து .” என்று பெயர் வைத்த அந்த மூவரின் பெருந்தன்மை இன்று காலாவதியாக்கி …மக்களின் உணர்வுகளுக்கு சமாதி கட்டி விட்டார்கள் …வாழ்க ஜனநாயகம் …! இது பாேல இன்னும் பலதையும் நூறு நாட்களுக்குள் புகுத்தி சமதர்ம நாடாக ஔிர வைக்க பாேகிறார்கள் …. இந்தியா ஔிர்கிறது ….?

    • காஷ்மீரில் இஸ்லாமிய மதவாதிகள் மட்டுமே மக்கள் இல்லை அங்கே புத்த மதத்தை சேர்ந்தவர்களும், ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள், இஸ்லாமிய மதவாதிகளின் வெறித்தனத்திற்கு எல்லோரும் ஏன் பலியாக வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

      • அடடா …என்ன அற்புதமான மறுமாெழி …? நிதானத்தில் இல்லாத ஒரு ஆளா நீங்கள் ..! என்னுடைய பதிவுக்கு மதத்தை துணைக்கு இழுத்துவந்து கிறுக்குகிற ..எப்பாேதும் மதத்தையே நினைத்து திரிகிற ஆசாமியா நீங்கள் … உணர்வுக்கும் ..மதத்திற்கும் முடிச்சு பாேடும் அரை வேக்காடு…! உன் பதில் எனக்கு தேவையில்லாதது …!

  5. காஷ்மீரின் சிறப்பு சட்டமான 370 ஐ என்பது மாநில சுயாட்சி, இது காஷ்மீர் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு இது போன்ற சிறப்பு சட்டம் மிக மிக தேவை.

    அந்த சட்டத்தின் மிக முக்கியமான அம்சம், மத்தியஅரசு அதன் எந்த திட்டங்களையும் அந்த மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அங்கே நடைமுறை படைத்த முடியாது. இப்போது தமிழநாட்டில் மீத்தேன், HydroCarbon நியூட்ரினோ போன்ற திட்டங்களை மக்கள் மீது திணிப்பதை போன்று அங்கு திணிக்க முடியாது.. சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து மத்திய அரசின் எந்த ஒரு சட்டத்தையும் ரத்து செய்ய முடியும் .. இது போன்றதொரு சிறப்பு சட்டம், தமிழகத்திற்கு இப்போது மிக மிக அவசியமான ஒன்று.. Artilce 370 என்பது தான் உண்மையான கூட்டாட்சி தத்துவத்தின் வெளிப்பாடு ..

  6. இருக்கக்கூடிய குறைந்தபட்ச மாநில சுயாட்சியையும் மாநில கட்சிகள் தங்களுடைய குடும்ப அரசியல் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மூலம் சீரழித்தனர். இப்போது எல்லாவற்றுக்கும் மிகப்பெரிய கேடு வந்து சேர்ந்திருக்கிறது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க