privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாவிவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

விவசாய பொருள்களுக்கு 0% ஜி.எஸ்.டி வரி என அறிவித்துவிட்டு அவர்களிடமிருந்து ரூ. 15000 கோடி ஜி.எஸ்.டி.-யைக் கறந்த மோடி அரசின் நரித்தனம் !

-

பெருவாரியான உற்பத்தியும் விலையில் நிச்சயமற்றதன்மையும் கொண்ட தொழில் விவசாயம். விவசாயத்தின் விளைபொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது மத்திய அரசு. விவசாய விளைபொருளுக்கு வரிவிலக்கு அளித்திருக்கும் மத்திய அரசு விவசாயிகள் பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 15,000 கோடி வரியாகக் கட்டுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா ?

புதுடில்லியைச் சேர்ந்த தெற்காசிய உயிரிதொழில்நுட்ப மையத்தின் நிறுவன இயக்குனர் பகிரத் சவுத்ரி இது குறித்து விரிவாகக் கூறுகிறார். பயிர்களை அழிக்கும் அந்துப் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் கருவியின் பெயர் “பெரொமோன் ட்ராப்” (Pheromone Trap). இது அந்துப் பூச்சுகளில் ஆண் இனத்தை ஈர்க்க பெண் இனம் வெளியிடும் வாசனையை செயற்கையாக உருவாக்கவல்ல கருவியாகும். இந்த வாசனையை வைத்து இதனை நோக்கி வரும் ஆண்பூச்சிகள் இந்த பொறியில் சிக்கிவிடும். இந்தப் பொறியை வாங்குகையில் அதற்கான ஜி.எஸ்.டி வரியாக 18%-ஐ செலுத்துகிறார் ஒரு விவசாயி.

இது மட்டுமல்ல, பிற விவசாயக் கருவிகளான, கண்கண்ணாடி, கையுறை, முகமூடி ஆகியவற்றிற்கும், உரம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவைக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. உயிரியல் பூச்சிக் கொல்லிகளுக்கு குறைந்தபட்ச வரியாக 5% முதல் 12% வரை வரிவிதிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட ஈர்ப்பு பொறிகள் 50 எண்ணங்கள் மற்றும் அதற்கான வாசனைகிளப்பிகளின் விலை ரூ.2540 ஆகும். அதில் ஜி.எஸ்.டி மட்டும் ரூ.387.46 ஆகும். இது குறித்து விரிவாகப் பார்க்கையில், விதைகள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்கள் ஆகியவற்றைத் தவிர விவசாயத்துக்கான பிற மூலப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் வரி விதிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் மானியம் அளிக்கப்படும் உரங்களுக்கும் கூட 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது.

படிக்க:
மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !
♦ ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !

பொதுவாக ஜி.எஸ்.டி வளையத்திற்குள் வரும் பிற தொழில்புரிவோரைப் பொறுத்தவரையில், தாங்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி செலுத்துவார்கள். அதே போல தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கும் அதற்கான ஜி.எஸ்.டி வரியை பெற்றுக் கொள்வார்கள். பொருட்களை வங்கிய தொகைக்கும் விற்ற தொகைக்கும் உள்ள வேறுபாட்டுத் தொகையை ஆடிட்டர் மூலமாக ஜி.எஸ்.டி கணக்கை முடித்து முறையாக அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

farmer

ஆனால் நடைமுறையில் இது சாத்தியமல்ல. ஒரு விவசாயி, பயிர் வைப்பதற்கு போட்ட மூலதனத்தை திரும்ப எடுப்பதற்கே வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கையில், எப்படி ஒரு விவசாயியால் ஆடிட்டருக்கு செலவழிக்க முடியும்?

மேலும் சௌத்ரி கூறுகையில், “கடந்த 2018 – 2019-ம் ஆண்டில், சுமார் 16,628 கோடி மதிப்பிலான விவசாயத்துக்கான இரசாயன இடுபொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் மட்டும் சராசரியாக 18% ஜி.எஸ்.டி என எடுத்துக்கொண்டு கணக்கிட்டால், சுமார் ரூ. 2,356 கோடி தொகையை ஜி.எஸ்.டி வரியாக விவசாயிகளிடம் பெறுகிறது அரசு. மொத்தத்தில், டிராக்டர், மோட்டார் பம்ப் தொடங்கி இரசாயன மருந்துகள் வரை அனைத்து விவசாயப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி சராசரியாக ரூ.15,000 கோடியாக இருக்கிறது” என்கிறார்.

சிறு தொழிலை அழிப்பதற்காக மோடி அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி, விவாயிகளின் கடன் சுமையையும் அதிகரிக்கிறது. அதன் மூலம் அவர்களை விவசாயத்தை விட்டு வெளியேற்றுகிறது. இது குறித்து சவுத்ரி போன்றோர் முன் வைக்கும் தீர்வுகளையாவது மோடி அரசு நிறைவேற்றும் என எண்ணிக் கொண்டிருந்தால், நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.


தமிழாக்கம் : நந்தன்

செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க