privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாசஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !

சஞ்சீவ் பட்டுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி, தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவை நீராகரித்த குஜராத் உயர்நீதிமன்றம்.

-

டுப்பு காவல் மரண வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னால் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், அவருக்கு நீதிமன்றங்கள் மீது குறைந்த அளவே நம்பிக்கை இருக்கிறது என்று கூறி, தண்டனையை ரத்து செய்ய மறுத்திருக்கிறது.

செப்டம்பர் 25-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவில் சஞ்சீவ் பட், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை தண்டனை பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sanjiv-bhatts-plea-rejected-by-gujarat-high-courtசஞ்சீவ் பட் குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் கூறிய அனுமானங்களை அரசு வழக்கறிஞர் மிதேஷ் அமீன் சுட்டிக்காட்டியதை எடுத்துக்கொண்டார் நீதிபதி திரிவேதி.

“…விண்ணப்பதாரருக்கு நீதிமன்றங்கள் மீது மரியாதை குறைவாக உள்ளது. சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதும் நீதிமன்றத்தை அவதூறு செய்து வந்ததும் தெரியவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தாக்கல் செய்த சில மனுக்கள் குறித்து திரு. அமீன் சமர்பித்த சில அவதானிப்புகள் இதை உறுதிபடுத்துகின்றன. குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிராக சஞ்சீவ் ராஜேந்திர பட் வழக்கில், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நீதிமன்றமும்கூட மனுதாரருக்கு உண்மையின்பால் மிகக்குறைந்த நம்பிக்கையே உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது…” என நீதிபதி தனது உத்தவில் குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சீவ் பட்-ன் சட்டஆலோசகர் பி.பி. நாயக், இந்த மனு விசாரணையின்போது, ‘களங்கம் உண்டாக்குகிற விசாரணை’ என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதுகுறித்து பதிவு செய்திருக்கிற நீதிபதி, “இந்த வழக்கு களங்கம் உண்டாக்குகிற வழக்கா அல்லது வழக்கு விசாரணையில் சில சாட்சிகள் விசாரிக்கவில்லையா அல்லது பிற குறைபாடுகள் உள்ளதா என்பவை மேல்முறையீட்டின்போது பரிசீலிக்க வேண்டிய விசயங்கள்.

இந்தக் கட்டத்தில் நீதிமன்றம் பதிவில் உள்ள ஆதாரங்களையும் அமர்வு நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளையும் பரிசீலித்தபின், இ.த.ச. பிரிவு 302-ன் கீழ் விண்ணப்பதாரரின் தண்டனை குறித்து திருப்தி அடைந்தது. தற்போதுள்ள விண்ணப்பத்தை கருத்தில் கொள்ள எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே, தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது…” என தெரிவித்துள்ளார்.

படிக்க:
நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !
♦ நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

1990, அக்டோபர் 30-ம் தேதியிட்ட வழக்கில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சஞ்சீவ் பட் மற்றும் பிரவீன்சிங் ஸாலா இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஐவர் இந்த வழக்கில் தண்டனை பெற்றனர்.

ஜாம்நகர் மாவட்டத்தில் கூடுதல் போலீசு கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட் மற்றும் இதர போலீசார், பாஜக – வி.எச்.பி நடத்திய தேசிய அளவிலான முழுஅடைப்பின்போது கலவரத்தை தூண்டியதாகக் கூறி 133 பேரை கைது செய்தனர். ரத யாத்திரை சென்ற அத்வானி கைது செய்யப்பட்டதை எதிர்த்து முழு அடைப்பு நடந்தது.

கைது செய்யப்பட்ட 133-ல் பிரபுதாஸ் என்பவரும் ஒருவர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைதான அவர், காவல் சித்ரவதைகளால் இறந்ததாக கூறி, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குஜராத் படுகொலைகளில் மோடி-அமித் ஷாவுக்கு உள்ள பங்கு குறித்து உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்ட காரணத்தாலேயே அவரை பழிவாங்கத் துடிக்கொண்டிருந்தது காவி கும்பல். அவரை சிக்க வைக்க பல்வேறு வழக்குகளை போட்டது. இதில், கிட்டத்தட்ட முப்பதாண்டுகால வழக்கை தூசி தட்டிய இந்துத்துவ கும்பல், அவருக்கு ஆயுள் தண்டனையும் வாங்கிக் கொடுத்துள்ளது. காவிகள் சொல்லும் ‘உண்மை’களை ஏற்கிற காவிமன்றங்கள், சஞ்சீவ் பட் கூறும் உண்மையை காண மறுக்கின்றன.


கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க